Skip to main content

أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
أَنَّا
நிச்சயமாக நாம்
خَلَقْنَا
நாம் படைத்ததை
لَهُم
அவர்களுக்கு
مِّمَّا عَمِلَتْ
செய்தவற்றிலிருந்து
أَيْدِينَآ
நமது கரங்கள்
أَنْعَٰمًا
கால்நடைகளை
فَهُمْ
அவர்கள்
لَهَا
அவற்றுக்கு
مَٰلِكُونَ
உரிமையாளர்களாக

Awalam yaraw annaa khalaqnaa lahum mimmaa 'amilat aideenaaa an'aaman fahum lahaa maalikoon

நம்முடைய கரங்கள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக அவர்களுக்காக கால்நடைகளை நாம் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இன்னும் அவர்கள் அவைகளுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றார்கள்.

Tafseer

وَذَلَّلْنَٰهَا
நாம் அவற்றை பணியவைத்தோம்
لَهُمْ
அவர்களுக்கு
فَمِنْهَا
அவற்றில்
رَكُوبُهُمْ
அவர்களின் வாகனங்களும்
وَمِنْهَا
இன்னும் அவற்றில் இருந்து
يَأْكُلُونَ
அவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள்

Wa zallalnaahaa lahum faminhaa rakoobuhum wa minhaa yaakuloon

அவைகளை அவர்களுக்குக் கீழ்ப்படியும்படிச் செய்து கொடுத்தோம். அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவைகளும் அவைகளில் இருக்கின்றன; புசிக்கக் கூடியவைகளும் அவைகளில் இருக்கின்றன.

Tafseer

وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
فِيهَا
இவற்றில்
مَنَٰفِعُ
பலன்கள்
وَمَشَارِبُۖ
குடிபானங்களும்
أَفَلَا يَشْكُرُونَ
அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

Wa lahum feehaa manaa fi'u wa mashaarib; afalaa yashkuroon

அவர்கள் குடிக்கக்கூடிய (பால் போன்ற)வைகளும் இன்னும் பல பயன்களும் அவைகளில் இருக்கின்றன. (இவைகளுக் கெல்லாம்) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

Tafseer

وَٱتَّخَذُوا۟
அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
ءَالِهَةً
பல கடவுள்களை
لَّعَلَّهُمْ يُنصَرُونَ
தாங்கள் உதவி செய்யப்படுவதற்காக

Wattakhazoo min doonil laahi aalihatal la'allahum yunsaroon

எனினும், அல்லாஹ் அல்லாதவைகளாலும் தங்களுக்கு உதவி கிடைக்குமென்று அவைகளை அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்!

Tafseer

لَا يَسْتَطِيعُونَ
அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
نَصْرَهُمْ
உதவுவதற்கு அவர்களுக்கு
وَهُمْ
இன்னும் அவர்கள்
لَهُمْ
அவர்கள் முன்
جُندٌ
ராணுவமாக
مُّحْضَرُونَ
தயாராக இருக்கின்ற

Laa yastatee'oona nasrahum wa hum lahum jundum muhdaroon

அவைகளால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆயினும், அவைகள் இவர்களுக்கு (எதிரிடையான) படையாகக் கொண்டு வரப்படும்.

Tafseer

فَلَا يَحْزُنكَ
ஆகவே உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம்
قَوْلُهُمْۘ
அவர்களின் பேச்சு
إِنَّا نَعْلَمُ
நிச்சயமாக நாம் நன்கறிவோம்
مَا يُسِرُّونَ
அவர்கள் மறைத்து பேசுவதை(யும்)
وَمَا يُعْلِنُونَ
அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதை(யும்)

Falaa yahzunka qawluhum; innaa na'lamu maa yusirroona wa maa yu'linoon

(நபியே! "நீங்கள் பொய்யர்" என) அவர்கள் உங்களைப் பற்றிக் கூறுவது உங்களைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம்.

Tafseer

أَوَلَمْ يَرَ
பார்க்கவில்லையா?
ٱلْإِنسَٰنُ
மனிதன்
أَنَّا خَلَقْنَٰهُ
நிச்சயமாக நாம் அவனை படைத்துள்ளோம்
مِن نُّطْفَةٍ
ஓர் இந்திரியத் துளியில் இருந்து
فَإِذَا هُوَ
ஆனால், அவனோ
خَصِيمٌ
தர்க்கம் செய்பவனாக
مُّبِينٌ
தெளிவாக

Awalam yaral insaanu annaa khalaqnaahu min nutfatin fa-izaa huwa khaseemum mubeen

மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்கவில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகின்றான்.

Tafseer

وَضَرَبَ
விவரிக்கின்றான்
لَنَا
நமக்கு
مَثَلًا
ஓர் உதாரணத்தை
وَنَسِىَ
அவன் மறந்துவிட்டான்
خَلْقَهُۥۖ
தான் படைக்கப்பட்டதை
قَالَ
அவன் கூறுகின்றான்
مَن
யார்
يُحْىِ
உயிர்ப்பிப்பான்?
ٱلْعِظَٰمَ
எலும்புகளை
وَهِىَ رَمِيمٌ
அவை மக்கிப்போன நிலையில் இருக்கின்றபோது

Wa daraba lanaa maslanw-wa nasiya khalqahoo qaala mai-yuhyil'izaama wa hiya rameem

(மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக்கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகின்றான். அவன் தன்னை படைத்த(து யார் என்ப)தை மறந்துவிட்டு "உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?" என்று (ஓர் எலும்பை எடுத்து அதனை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கின்றான்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
يُحْيِيهَا
அவற்றை உயிர்ப்பிப்பான்
ٱلَّذِىٓ أَنشَأَهَآ
அவற்றை உருவாக்கியவன்தான்
أَوَّلَ
முதல்
مَرَّةٍۖ
முறை
وَهُوَ
இன்னும் அவன்
بِكُلِّ
எல்லா
خَلْقٍ
படைப்புகளையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Qul yuh yeehal lazeee ansha ahaaa awwala marrah; wa Huwa bikulli khalqin 'Aleem

(நபியே!) அதற்கு நீங்கள் கூறுங்கள்: "முதல் முறையில் அதனைப் படைத்தவன் எவனோ அவனே அதனை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன்.

Tafseer

ٱلَّذِى جَعَلَ
எவன்/ ஏற்படுத்துகின்றான்
لَكُم
உங்களுக்கு
مِّنَ ٱلشَّجَرِ
மரத்தில் இருந்து
ٱلْأَخْضَرِ
பச்சை
نَارًا
நெருப்பை
فَإِذَآ أَنتُم
அப்போது நீங்கள்
مِّنْهُ
அதில்
تُوقِدُونَ
நெருப்பை மூட்டிக்கொள்கிறீர்கள்

Allazee ja'ala lakum minash shajaril akhdari naaran fa-izaaa antum minhu tooqidoon

அன்றி, அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்கு நெருப்பை உண்டு பண்ணுகிறான். பின்னர், அதனைக் கொண்டு நீங்கள் (உங்களுக்கு வேண்டிய நெருப்பை) மூட்டிக் கொள்கின்றீர்கள்.

Tafseer