Skip to main content

يُوصِيكُمُ
உங்களுக்கு உபதேசிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
فِىٓ أَوْلَٰدِكُمْۖ
பிள்ளைகளில் /உங்கள்
لِلذَّكَرِ
ஆணுக்கு
مِثْلُ
போன்று
حَظِّ ٱلْأُنثَيَيْنِۚ
பங்கு/இருபெண்கள்
فَإِن كُنَّ
அவர்கள் இருந்தால்
نِسَآءً
பெண்களாக
فَوْقَ
மேல்
ٱثْنَتَيْنِ
இரு பெண்கள்
فَلَهُنَّ
அவர்களுக்கு உண்டு
ثُلُثَا
மூன்றில் இரண்டு
مَا تَرَكَۖ
எது/விட்டுச் சென்றார்
وَإِن كَانَتْ
இருந்தால்
وَٰحِدَةً
ஒருத்தியாக
فَلَهَا
அவளுக்கு
ٱلنِّصْفُۚ
பாதி
وَلِأَبَوَيْهِ
இன்னும் அவருடைய தாய் தந்தைக்கு
لِكُلِّ وَٰحِدٍ
ஒவ்வொருவருக்கும்
مِّنْهُمَا
அவ்விருவரிலிருந்து
ٱلسُّدُسُ
ஆறில் ஒன்று
مِمَّا
எதிலிருந்து
تَرَكَ
விட்டுச் சென்றார்
إِن كَانَ
இருந்தால்
لَهُۥ
அவருக்கு
وَلَدٌۚ
பிள்ளை
فَإِن لَّمْ
இல்லையெனில்
لَّهُۥ
அவருக்கு
وَلَدٌ
பிள்ளை
وَوَرِثَهُۥٓ
இன்னும் அவருக்கு வாரிசானார்
أَبَوَاهُ
அவருடைய தாய் தந்தை
فَلِأُمِّهِ
அவருடைய தாய்க்கு
ٱلثُّلُثُۚ
மூன்றில் ஒன்று
فَإِن كَانَ
இருந்தால்
لَهُۥٓ
அவருக்கு
إِخْوَةٌ
சகோதரர்கள்
فَلِأُمِّهِ
அவருடைய தாய்க்கு
ٱلسُّدُسُۚ
ஆறில் ஒன்று
مِنۢ بَعْدِ
பின்னர்
وَصِيَّةٍ
மரண சாசனம்
يُوصِى
மரண சாசனம் கூறுகிறார்
بِهَآ
அதை
أَوْ دَيْنٍۗ
அல்லது கடன்
ءَابَآؤُكُمْ
உங்கள் தந்தைகள்
وَأَبْنَآؤُكُمْ
பிள்ளைகள்/உங்கள்
لَا تَدْرُونَ
அறியமாட்டீர்கள்
أَيُّهُمْ
அவர்களில் யார்
أَقْرَبُ
நெருங்கியவர்
لَكُمْ
உங்களுக்கு
نَفْعًاۚ
பலனளிப்பதில்
فَرِيضَةً
சட்டமாகும்
مِّنَ
இருந்து
ٱللَّهِۗ
அல்லாஹ்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
عَلِيمًا
நன்கறிந்தவனாக
حَكِيمًا
மகா ஞானவானாக

Yooseekumul laahu feee awlaadikum liz zakari mislu hazzil unsayayn; fa in kunna nisaaa'an fawqas nataini falahunna suhusaa maa taraka wa in kaanat waahidatan falahan nisf; wa li abawaihi likulli waahidim minhumas sudusu mimmma taraka in kaana lahoo walad; fa il lam yakul lahowaladunw wa warisahooo abawaahu fali ummihis sulus; fa in kaana lahoo ikhwatun fali ummihis sudus; mim ba'di wasiyyatiny yoosee bihaaa aw dayn; aabaaa'ukum wa abnaaa'ukum laa tadroona aiyuhum aqrabu lakum naf'aa; fareedatam minallaah; innal laaha kaana 'Aleeman Hakeemaa

உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆணன்றிப்) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்.) உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (ஆகவே இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்.)

Tafseer

وَلَكُمْ
உங்களுக்கு
نِصْفُ
பாதி
مَا تَرَكَ
எது/விட்டுச் சென்ற
أَزْوَٰجُكُمْ
உங்கள் மனைவிகள்
إِن لَّمْ
இல்லையென்றால்
لَّهُنَّ
அவர்களுக்கு
وَلَدٌۚ
பிள்ளை
فَإِن كَانَ
இருந்தால்
لَهُنَّ
அவர்களுக்கு
وَلَدٌ
பிள்ளை
فَلَكُمُ
உங்களுக்கு
ٱلرُّبُعُ
கால்
مِمَّا تَرَكْنَۚ
அவர்கள் விட்டுச் சென்ற
مِنۢ بَعْدِ
பின்னர்
وَصِيَّةٍ
மரண சாசனம்
يُوصِينَ
மரண சாசனம் செய்கின்றனர்
بِهَآ
அதை
أَوْ دَيْنٍۚ
அல்லது கடன்
وَلَهُنَّ
இன்னும் அவர்களுக்கு
ٱلرُّبُعُ
கால்
مِمَّا تَرَكْتُمْ
நீங்கள் விட்டுச் சென்ற
إِن لَّمْ
இல்லையென்றால்
لَّكُمْ
உங்களுக்கு
وَلَدٌۚ
பிள்ளை
فَإِن كَانَ
இருந்தால்
لَكُمْ
உங்களுக்கு
وَلَدٌ
பிள்ளை
فَلَهُنَّ
அவர்களுக்கு
ٱلثُّمُنُ
எட்டில் ஒன்று
مِمَّا
எதிலிருந்து
تَرَكْتُمۚ
விட்டுச் சென்றீர்கள்
مِّنۢ بَعْدِ
பின்னர்
وَصِيَّةٍ
மரண சாசனம்
تُوصُونَ
மரண சாசனம் கூறுகிறீர்கள்
بِهَآ
அதை
أَوْ دَيْنٍۗ
அல்லது கடன்
وَإِن كَانَ
இருந்தால்
رَجُلٌ
ஓர் ஆண்
يُورَثُ
வாரிசாக்கப்படுவான்
كَلَٰلَةً
வாரிசு இல்லாதவர்
أَوِ ٱمْرَأَةٌ
ஒரு பெண்
وَلَهُۥٓ
இன்னும் அவருக்கு
أَخٌ
சகோதரன்
أَوْ
அல்லது
أُخْتٌ
சகோதரி
فَلِكُلِّ وَٰحِدٍ
ஒவ்வொருவருக்கும்
مِّنْهُمَا
அவ்விருவரில்
ٱلسُّدُسُۚ
ஆறில் ஒன்று
فَإِن كَانُوٓا۟
அவர்கள் இருந்தால்
أَكْثَرَ
அதிகமாக
مِن ذَٰلِكَ
அதை விட
فَهُمْ
அவர்கள்
شُرَكَآءُ
பங்குதாரர்கள்
فِى ٱلثُّلُثِۚ
மூன்றில் ஒன்றில்
مِنۢ بَعْدِ
பின்னர்
وَصِيَّةٍ
மரண சாசனம்
يُوصَىٰ
மரண சாசனம் கூறப்படுகிறது
بِهَآ
அதை
أَوْ دَيْنٍ
அல்லது கடன்
غَيْرَ
அல்லாத
مُضَآرٍّۚ
நஷ்டம் ஏற்படுத்துபவர்
وَصِيَّةً
நல்லுபதேசம்
مِّنَ
இருந்து
ٱللَّهِۗ
அல்லாஹ்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَلِيمٌ
மகா சகிப்பாளன்

Wa lakum nisfu maa taraka azwaajukum il lam yakul lahunna walad; fa in kaana lahunna waladun falakumur rub'u mimmaa tarakna mim ba'di wasiyyatiny yooseena bihaaa aw dayn; wa lahunnar rubu'u mimmaa tarakum il lam yakul lakum walad; fa in kaana lakum waladun falahunnas sumunu mimmaa taraktum; mim ba'di wasiyyatin toosoona bihaaa aw dayn; wa in kaana rajuluny yoorasu kalaalatan awim ra atunw wa lahooo akhun aw ukhtun falikulli waahidim minhumas sudus; fa in kaanooo aksara min zaalika fahum shurakaaa'u fissulusi mim ba'di wasiyyatiny yoosaa bihaaa aw dainin ghaira mudaaarr; wasiyyatam minal laah; wallaahu 'Aleemun Haleem

உங்கள் மனைவி(கள் இறந்து அவர்)களுக்கு பிள்ளைகளும் இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்கு பிள்ளைகள் இருந்தாலோ அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் பாகம்தான் (கிடைக்கும்.) அதுவும் (அவருடைய) மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே! உங்களுக்குப் பிள்ளைகள் இல்லாத நிலைமையில் (நீங்கள் இறந்துவிட்டாலோ) உங்கள் மனைவிகளுக்கு நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் கால் பாகம்தான் (கிடைக்கும்.) உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலோ நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் எட்டில் ஒரு பாகம்தான் அவர்களுக்கு உண்டு. அதுவும் (உங்கள்) மரண சாஸனத்தையும், கடனையும் நீங்கள் கொடுத்த பின்னரே! (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இறந்து (அவர்களுக்கு) ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால், ஒவ்வொருவருக்கும் (இறந்தவர் விட்டுச் சென்றதில்) ஆறில் ஒரு பாகமுண்டு. இதற்கு அதிகமாக (அதாவது ஒருவருக்கு மேற்பட்டு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் அல்லது இரு சகோதரர்களும், இரு சகோதரிகளும்) இருந்தால் (சொத்தில்) மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் அனைவரும் சமமான பங்குதாரர்கள். இதுவும் (அவருடைய) மரண சாஸனம், கடன் ஆகியவைகளைக் கொடுத்த பின்னரே! எனினும், (இந்தக் கடன், மற்றும் மரண சாஸனத்தாலும் வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக இருக்க வேண்டும். (இது) அல்லாஹ்வுடைய நல்லுபதேசமாகும். அல்லாஹ் மிக அறிந்தவனும் பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

تِلْكَ
இவை
حُدُودُ
சட்டங்கள்
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
وَمَن يُطِعِ
எவர்/கீழ்ப்படிகிறார்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கு
يُدْخِلْهُ
நுழைப்பான்/அவரை
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
ஆறுகள்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَاۚ
அதில்
وَذَٰلِكَ ٱلْفَوْزُ
இதுதான்/வெற்றி
ٱلْعَظِيمُ
மகத்தானது

Tilka hudoodul laah; wa mai yuti'il laaha wa Rasoolahoo yudkhilhu Jannaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaa; wa zaalikal fawzul 'azeem

இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சுவனபதிகளில் சேர்க்கின்றான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அதிலேயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.

Tafseer

وَمَن
இன்னும் எவர்
يَعْصِ
மாறு செய்கிறார்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கு
وَيَتَعَدَّ
இன்னும் மீறுகிறார்
حُدُودَهُۥ
அவனுடைய சட்டங்களை
يُدْخِلْهُ
நுழைப்பான்/அவரை
نَارًا
நரகத்தில்
خَٰلِدًا فِيهَا
நிரந்தரமானவன்/அதில்
وَلَهُۥ
இன்னும் அவனுக்கு
عَذَابٌ
வேதனை
مُّهِينٌ
இழிவுபடுத்தக்கூடியது

Wa mai ya'sil laaha wa Rasoolahoo wa yata'adda hudoodahoo yudkhilhu Naaran khaalidan feehaa wa lahoo 'azaabum muheen

எவன் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, அவன் ஏற்படுத்திய வரம்புகளைக் கடக்கின்றானோ அவனை நரகத்தில் புகுத்திவிடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கிவிடுவான். இழிவுபடுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு.

Tafseer

وَٱلَّٰتِى
எவர்கள்
يَأْتِينَ
செய்கிறார்கள்/ வருகிறார்கள்
ٱلْفَٰحِشَةَ
மானக்கேடானதிற்கு
مِن
இருந்து
نِّسَآئِكُمْ
பெண்கள்/உங்கள்
فَٱسْتَشْهِدُوا۟
சாட்சியாக கொண்டு வாருங்கள்
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
أَرْبَعَةً
நான்கு (நபர்களை)
مِّنكُمْۖ
உங்களில்
فَإِن شَهِدُوا۟
அவர்கள் சாட்சியளித்தால்
فَأَمْسِكُوهُنَّ
தடுத்து வையுங்கள்/ அவர்களை
فِى ٱلْبُيُوتِ
வீடுகளில்
حَتَّىٰ يَتَوَفَّىٰهُنَّ
வரை/கைப்பற்றும்/அவர்களை
ٱلْمَوْتُ
மரணம்
أَوْ
அல்லது
يَجْعَلَ
ஆக்குவான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَهُنَّ
அவர்களுக்கு
سَبِيلًا
ஒரு வழியை

Wallaatee yaateenal faahishata min nisaaa'ikum fastashhidoo 'alaihinna arba'atam minkum fa in shahidoo fa amsikoohunna fil buyooti hatta yatawaffaa hunnal mawtu aw yaj'alal laahu lahunna sabeelaa

உங்கள் பெண்களில் எவளேனும் விபச்சாரம் செய்து விட்(டதாகக் குற்றம் சாட்டப்பட்)டால் (அக்குற்றத்தை நிரூபிக்க) அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள். அவர்கள் (அதனை உண்மைப்படுத்தி) சாட்சியம் கூறினால் மரணம் அவளுடைய காரியத்தை முடித்துவிடும் வரையில் அல்லது அல்லாஹ் அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரையில் அவளை வீட்டினுள் தடுத்து வைக்கவும்.

Tafseer

وَٱلَّذَانِ
இன்னும் இரு ஆண்கள்
يَأْتِيَٰنِهَا
அதைச் செய்தால்
مِنكُمْ
உங்களிலிருந்து
فَـَٔاذُوهُمَاۖ
துன்புறுத்துங்கள் அவ்விருவரையும்
فَإِن تَابَا
அவ்விருவரும் மன்னிப்புக் கோரினால்
وَأَصْلَحَا
இன்னும் திருத்திக் கொண்டால்
فَأَعْرِضُوا۟
புறக்கணித்துவிடுங்கள்
عَنْهُمَآۗ
அவ்விருவரை விட்டு
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
تَوَّابًا
பிழை பொறுப்பவனாக
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Wallazaani yaatiyaanihaa minkum fa aazoohumaa fa in taabaa wa aslahaa fa a'ridoo 'anhumaaa; innal laaha kaana Tawwaabar Raheema

உங்கள் ஆண்களில் இருவர் இத்தகைய காரியத்தைச் செய்துவிட்டால் அவ்விருவரையும் (நிந்தித்து, அல்லது அடித்துத்) துன்புறுத்துங்கள். அவ்விருவரும் (தங்கள் குற்றத்திற்காகப்) வருத்தப்பட்டு (அதிலிருந்து விலகி) ஒழுங்காக நடந்து கொண்டால் அவர்களைப் புறக்கணித்து (விட்டு) விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

إِنَّمَا ٱلتَّوْبَةُ
மன்னிப்பெல்லாம்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விடம்
لِلَّذِينَ
எவர்களுக்கு
يَعْمَلُونَ
செய்கிறார்கள்
ٱلسُّوٓءَ
தீமையை
بِجَهَٰلَةٍ
அறியாமையினால்
ثُمَّ
பிறகு
يَتُوبُونَ
திருந்தி திரும்புகின்றனர்
مِن قَرِيبٍ
அதிசீக்கிரத்தில்
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يَتُوبُ
பிழை பொறுப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِمْۗ
அவர்கள் மீது
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمًا
நன்கறிந்தவனாக
حَكِيمًا
மகா ஞானவானாக

Innamat tawbatu 'alallaahi lillazeena ya'maloonas sooo'a bijahaalatin summa yatooboona min qareebin faulaaika yatoobul laahu 'alaihim; wa kaanal laahu 'Aleeman Hakeemaa

எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதனை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கி விடுகின்றார்களோ அத்தகையவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَلَيْسَتِ
இன்னும் இல்லை
ٱلتَّوْبَةُ
பிழை பொறுப்பு
لِلَّذِينَ
எவர்களுக்கு
يَعْمَلُونَ
செய்கிறார்கள்
ٱلسَّيِّـَٔاتِ
கெட்டவைகளை
حَتَّىٰٓ
வரை
إِذَا حَضَرَ
வந்தால்
أَحَدَهُمُ
அவர்களில்ஒருவருக்கு
ٱلْمَوْتُ
மரணம்
قَالَ
கூறினார்
إِنِّى
நிச்சயமாக நான்
تُبْتُ
திருந்தி விடுகிறேன்
ٱلْـَٰٔنَ
இப்போது
وَلَا
கிடையாது
ٱلَّذِينَ
எவர்கள்
يَمُوتُونَ
இறக்கிறார்கள்
وَهُمْ
அவர்களோ
كُفَّارٌۚ
நிராகரிப்பாளர்களாக
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَعْتَدْنَا
ஏற்படுத்தினோம்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابًا
வேதனையை
أَلِيمًا
துன்புறுத்தக்கூடியது

Wa laisatit tawbatu lillazeena ya'maloonas saiyiaati hattaaa izaa hadara ahadahumul mawtu qaala innee tubtul 'aana wa lallazeena yamootoona wa hum kuffaar; ulaaa'ika a'tadnaa lahum 'azaaban aleemaa

எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது "இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்" என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்து விட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகின்றார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையவர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا يَحِلُّ
ஹலால் ஆகாது
لَكُمْ
உங்களுக்கு
أَن تَرِثُوا۟
நீங்கள்அனந்தரம் கொள்வது
ٱلنِّسَآءَ
பெண்களை
كَرْهًاۖ
பலவந்தமாக
وَلَا
தடுக்காதீர்கள்
تَعْضُلُوهُنَّ
தடுக்காதீர்கள் அவர்களை
لِتَذْهَبُوا۟
நீங்கள் செல்வதற்காக
بِبَعْضِ
சிலதைக் கொண்டு
مَآ
எதை/கொடுத்தீர்கள்
ءَاتَيْتُمُوهُنَّ
எதை/கொடுத்தீர்கள் அவர்களுக்கு
إِلَّآ
தவிர
أَن يَأْتِينَ
அவர்கள் செய்வது
بِفَٰحِشَةٍ
ஒரு மானக்கேடானதை
مُّبَيِّنَةٍۚ
பகிரங்கமானது
وَعَاشِرُوهُنَّ
இன்னும் வாழுங்கள் அவர்களுடன்
بِٱلْمَعْرُوفِۚ
நல்ல முறையில்
فَإِن
நீங்கள் வெறுத்தால்
كَرِهْتُمُوهُنَّ
நீங்கள் வெறுத்தால் அவர்களை
فَعَسَىٰٓ أَن
நீங்கள் வெறுக்கலாம்
شَيْـًٔا
ஒன்றை
وَيَجْعَلَ
இன்னும் ஆக்குவான்
ٱللَّهُ
அல்லாஹ்
فِيهِ
அதில்
خَيْرًا
நன்மையை
كَثِيرًا
அதிகமான

Yaaa aiyuhal lazeena aamanoo laa yahillu lakum an tarisun nisaaa'a karhan wa laa ta'duloohunna litazhaboo biba'di maaa aataitumoohunna illaaa ai yaateena bifaahishatim bubaiyinah; wa 'aashiroo hunna bilma'roof; fa in karihtumoohunna fa'asaaa an takrahoo shai'anw wa yaj'alal laahu feehi khairan kaseeraa

நம்பிக்கையாளர்களே! யாதொரு பெண்ணை (அவள் உங்களை விரும்பாது வெறுக்க, இறந்தவனுடைய பொருளாக மதித்து அவளைப்) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல. மேலும், பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி (உங்கள் மனைவியாக வந்த) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களை (உங்கள் வீட்டில்) நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள். மேலும், அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் பல நன்மைகளை வைத்திருக்கலாம்.

Tafseer

وَإِنْ أَرَدتُّمُ
நீங்கள் நாடினால்
ٱسْتِبْدَالَ
மாற்றுவதற்கு
زَوْجٍ
ஒரு மனைவியை
مَّكَانَ
இடத்தில்
زَوْجٍ
ஒரு மனைவி
وَءَاتَيْتُمْ
நீங்கள் கொடுத்தீர்கள்
إِحْدَىٰهُنَّ
அவர்களில்ஒருத்திக்கு
قِنطَارًا
குவியலை
فَلَا تَأْخُذُوا۟
எடுக்காதீர்கள்
مِنْهُ
அதிலிருந்து
شَيْـًٔاۚ
எதையும்
أَتَأْخُذُونَهُۥ
அதை எடுக்கிறீர்களா?
بُهْتَٰنًا
அபாண்டமாக
وَإِثْمًا
இன்னும் பாவமாக
مُّبِينًا
பகிரங்கமானது

Wa in arattumustib daala zawjim makaana zawjin wa aataitum ihdaahunna qintaaran falaa taakhuzoo minhu shai'aa; ataakhuzoonahoo buhtaannanw wa ismam mubeenaa

ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு (பொற்) குவியலைக் கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள் பறித்துக் கொள்ளலாமா?

Tafseer