Wa lamanin tasara ba'da zulmihee fa ulaaa'ika maa 'alaihim min sabeel
எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அநியாயத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால், அதனால் அவர் மீது யாதொரு குற்றமுமில்லை.
Innamas sabeelu 'alal lazeena yazlimoonan naasa wa yabghoona fil ardi bighairil haqq; ulaaa'ika lahum 'azaabun aleem
குற்றமெல்லாம் அளவு மீறி மனிதர்கள் மீது அநியாயம் செய்து, நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்பவர்கள் மீதுதான். இத்தகையவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.
Wa laman sabara wa ghafara inna zaalika lamin 'azmil umoor
எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும்.
Wa mai yudlilil laahu famaa lahoo minw waliyyim mim ba'dih; wa taraz zaalimeena lammaa ra awul 'azaaba yaqooloona hal ilaa maraddim min sabeel
எவர்களையேனும் (அவர்களின் பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டால், அதற்குப் பின்னர் அவர்களை பாதுகாப்பவர் ஒருவரும் இருக்க மாட்டார். (நபியே!) வரம்பு மீறி அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் கண்ணால் கண்ட சமயத்தில் "இதிலிருந்து தப்ப ஏதேனும் வழி உண்டா?" என்று அவர்கள் கூறுவதை நீங்கள் காண்பீர்கள்.
Wa taraahum yu'radoona 'alaihaa khaashi'eena minazzulli yanzuroona min tarfin khaifiyy; wa qaalal lazeena aamanooo innal khaasireenal lazeena khasiroon anfusahum wa ahleehim Yawmal Qiyaamah; alaaa innaz zaalimeena fee'azaabim muqeem
அன்றி, சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (வேதனையைக்) கடைக்கண்ணால் பார்த்தவண்ணம் அவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படுவதையும் நீங்கள் காண்பீர்கள். அன்றி, நம்பிக்கை கொண்டவர் (அவர்களை நோக்கி) "எவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் (இம்மையில்) நஷ்டத்தைத் தேடிக்கொண்டார்களோ அவர்கள் மறுமையில் நிச்சயமாக முற்றிலும் நஷ்டத்தை அடைந்தவர்கள்தாம்" என்று கூறுவார்கள். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் தங்கிவிடுவார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
Wa maa kaana lahum min awliyaaa'a yansuroonahum min doonil laah; wa mai yudlilil laahu famaa lahoo min sabeel
அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய யாதொரு நண்பரும் (அந்நாளில்) அவர்களுக்கு இருக்கமாட்டார். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவர்களுக்கு(த் தப்ப) யாதொரு வழியுமில்லை.
Istajeeboo li Rabbikum min qabli any yaatiya Yawmul laa maradda lahoo minal laah; maa lakum mim malja iny yawma'izinw wa maa lakum min nakeer
அல்லாஹ்விடமிருந்து தட்டிக்கழிக்க முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். அந்நாளில் உங்களுக்குத் தப்புமிடம் கிடைக்காது. (உங்கள் குற்றத்தை) நீங்கள் மறுக்கவும் முடியாது.
Fa-in a'radoo famaaa arsalnaaka 'alaihim hafeezan in 'alaika illal balaagh; wa innaaa izaaa azaqnal insaana minnaa rahmatan fariha bihaa wa in tusibhum saiyi'atum bimaa qaddamat aydeehim fa innal insaana kafoor
(நபியே! இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும்) அவர்கள் (உங்களைப்) புறக்கணித்துவிட்டால், (அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனென்றால்,) அவர்களைப் பாதுகாப்பவராக நாம் உங்களை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம்முடைய தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உங்கள்மீது கடமை அல்ல. நம்முடைய அருளை மனிதன் சுவைக்கும்படி செய்தால், அதைப்பற்றி அவன் சந்தோஷப்படுகின்றான். அவனுடைய கரங்களே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவனுக்கு யாதேனுமொரு தீங்கு ஏற்படும் பட்சத்தில், நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாகி (இறைவனையே நிராகரிக்கவும் தலைப்பட்டு) விடுகின்றான்.
Lillaahi mulkus samaawaati wal ard; yakhluqu maa yashaaa'; yahabu limai yashaaa'u inaasanw wa yahabu limai yashaaa'uz zukoor
வானம், பூமி ஆகியவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக் குரியதே. இவற்றைத் தவிர, அவன் விரும்பியதையும் படைக்கின்றான். ஆகவே, அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான்.
Aw yuzawwijuhum zukraananw wa inaasanw wa yaj'alu mai yashaaa'u 'aqeemaa; innahoo 'Aleemun Qadeer
அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கின்றான். அன்றி, அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் (அவரவர்களின் தகுதியை) நன்கறிந்தவனும், (தான் விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.