Skip to main content

وَذَرْنِى
என்னையும் விட்டு விடுவீராக!
وَٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களையும்
أُو۟لِى ٱلنَّعْمَةِ
சுகவாசிகளான
وَمَهِّلْهُمْ
இன்னும் அவர்களுக்கு அவகாசம் தருவீராக !
قَلِيلًا
கொஞ்சம்

Wa zarnee walmukaz zibeena ulin na'mati wa mahhilhum qaleelaa

(நபியே! நீங்கள் அவர்களுக்குச் சிபாரிசு செய்யாது) என்னையும், என்னைப் பொய்யாக்கி வைக்கும் அந்தச் சுகவாசிகளையும் விட்டுவிடுங்கள். அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுங்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
لَدَيْنَآ
நம்மிடம்
أَنكَالًا
கை, கால் விலங்குகளும்
وَجَحِيمًا
சுட்டெரிக்கும்நரகமும்

Inna ladainaaa ankaalanw wa jaheemaa

நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்கு) விலங்குகளும் இருக்கின்றன; நரகமும் இருக்கின்றது.

Tafseer

وَطَعَامًا ذَا
உணவும்/தொண்டையில் சிக்கிக் கொள்ளும்
وَعَذَابًا
வேதனையும்
أَلِيمًا
வலி தரக்கூடிய

Wa ta'aaman zaa ghussa tinw wa'azaaban aleemaa

விக்கிக் கொள்ளக்கூடிய உணவும் (அவர்களுக்காக) இருக்கின்றது; துன்புறுத்தும் வேதனையும் இருக்கின்றது.

Tafseer

يَوْمَ
நாளில்
تَرْجُفُ
குலுங்குகின்ற
ٱلْأَرْضُ
பூமி(யும்)
وَٱلْجِبَالُ
மலைகளும்
وَكَانَتِ
ஆகிவிடும்
ٱلْجِبَالُ
மலைகள்
كَثِيبًا
மணலாக
مَّهِيلًا
தூவப்படுகின்ற

Yawma tarjuful ardu waljibaalu wa kaanatil jibaalu kaseebam maheelaa

அந்நாளில், பூமியும் மலைகளும் ஆட்டம் கொடுத்து (ஒன்றோடொன்று மோதி) மலைகள் சிதறுண்ட மண் குவியல்களாகி விடும்.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَرْسَلْنَآ
அனுப்பினோம்
إِلَيْكُمْ
உங்களிடம்
رَسُولًا
ஒரு தூதரை
شَٰهِدًا
சாட்சி கூறுகின்ற
عَلَيْكُمْ
உங்களைப் பற்றி
كَمَآ أَرْسَلْنَآ
நாம் அனுப்பியது போன்று
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுக்கு
رَسُولًا
ஒரு தூதரை

Innaa arsalnaaa ilaikum rasoolan shahidan 'alikum kamaaa arsalnaaa ilaa Fir'awna rasoolan

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் நம்முடைய ஒரு தூதரை அனுப்பி வைத்தோம். (மறுமையில்) அவர் உங்களுக்குச் சாட்சியாக வருவார். இவ்வாறே ஃபிர்அவ்னிடமும் முன்னர் ஒரு தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.

Tafseer

فَعَصَىٰ
மாறுசெய்தான்
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
ٱلرَّسُولَ
அந்த தூதருக்கு
فَأَخَذْنَٰهُ
ஆகவே, நாம் அவனை பிடித்தோம்
أَخْذًا
பிடியால்
وَبِيلًا
தாங்கிக் கொள்ள முடியாத

Fa'asaa Fir'awnur Rasoola fa akhaznaahu akhzanw wabeelaa

எனினும், ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். ஆகவே, நாம் அவனைப் பலமாகப் பிடித்துக்கொண்டோம்.

Tafseer

فَكَيْفَ
எப்படி?
تَتَّقُونَ
பயப்படுவீர்கள்
إِن كَفَرْتُمْ
நீங்கள் நிராகரித்தால்
يَوْمًا
ஒரு நாளை
يَجْعَلُ
ஆக்கிவிடுகின்ற
ٱلْوِلْدَٰنَ
பிள்ளைகளை
شِيبًا
வயோதிகர்களாக

Fakaifa tattaqoona in kafartum yawmany yaj'alul wildaana sheeba

நீங்கள் (இதனை) நிராகரித்துவிட்டால், எவ்வாறு நீங்கள் (நம்முடைய பிடியிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்? (நாம் பிடிக்கும்) அந்நாளில் (திடுக்கம்) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும்.

Tafseer

ٱلسَّمَآءُ
வானம்
مُنفَطِرٌۢ
வெடித்து பிளந்து விடும்
بِهِۦۚ
அதில்
كَانَ
ஆகும்
وَعْدُهُۥ
அவனுடைய வாக்கு
مَفْعُولًا
நிறைவேறியே

Assamaaa'u munfatirum bih; kaana wa'duhoo maf'oola

(அந்நாளில்) வானம் பிளந்துவிடும்; இது நடந்தே தீரவேண்டிய அவனுடைய வாக்குறுதியாகும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
هَٰذِهِۦ
இது
تَذْكِرَةٌۖ
ஓர் அறிவுரையாகும்
فَمَن
ஆகவே, யார்
شَآءَ
நாடுகின்றாரோ
ٱتَّخَذَ
ஏற்படுத்திக் கொள்ளட்டும்
إِلَىٰ رَبِّهِۦ
தன் இறைவன் பக்கம்
سَبِيلًا
ஒரு பாதையை

Inna haazihee tazkiratun fa man shaaa'at takhaza ilaa Rabbihee sabeelaa

நிச்சயமாக இது மிக்க நல்லுபதேசமாகும். ஆகவே, விரும்பியவர் தன் இறைவனிடம் செல்லக்கூடிய இவ்வழியைப் பிடித்துக்கொள்ளவும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உமது இறைவன்
يَعْلَمُ
அறிவான்
أَنَّكَ
நிச்சயமாக நீர்
تَقُومُ
நின்று வணங்குகிறீர்
أَدْنَىٰ
குறைவாக
مِن ثُلُثَىِ
மூன்றில் இரண்டு பகுதிகளைவிட
ٱلَّيْلِ
இரவின்
وَنِصْفَهُۥ
இன்னும் அதன் பாதி
وَثُلُثَهُۥ
இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி
وَطَآئِفَةٌ
ஒரு கூட்டமும்
مِّنَ ٱلَّذِينَ
உம்முடன் இருப்பவர்களில்
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
يُقَدِّرُ
நிர்ணயிக்கின்றான்
ٱلَّيْلَ
இரவை(யும்)
وَٱلنَّهَارَۚ
பகலையும்
عَلِمَ
நன்கறிவான்
أَن لَّن
அதற்கு சக்திபெறவே மாட்டீர்கள்
فَتَابَ
ஆகவே மன்னித்தான்
عَلَيْكُمْۖ
உங்களை
فَٱقْرَءُوا۟
ஓதுங்கள்!
مَا تَيَسَّرَ
இலகுவானதை
مِنَ ٱلْقُرْءَانِۚ
குர்ஆனில்
عَلِمَ
அறிவான்
أَن سَيَكُونُ
இருப்பார்(கள்)
مِنكُم
உங்களில்
مَّرْضَىٰۙ
நோயாளிகள்
وَءَاخَرُونَ
இன்னும் மற்றும் சிலர்
يَضْرِبُونَ
பயணம் செய்வார்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
يَبْتَغُونَ
தேடியவர்களாக
مِن فَضْلِ
அருளை
ٱللَّهِۙ
அல்லாஹ்வின்
وَءَاخَرُونَ
இன்னும் மற்றும் சிலர்
يُقَٰتِلُونَ
போரிடுவார்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
فَٱقْرَءُوا۟
ஆகவே, ஓதுங்கள்!
مَا تَيَسَّرَ
இலகுவானதை
مِنْهُۚ
அதிலிருந்து
وَأَقِيمُوا۟
இன்னும் நிலை நிறுத்துங்கள்!
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَأَقْرِضُوا۟
இன்னும் கடன் கொடுங்கள்!
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
قَرْضًا
கடனாக
حَسَنًاۚ
அழகிய
وَمَا تُقَدِّمُوا۟
நீங்கள் எதை முற்படுத்துகிறீர்களோ
لِأَنفُسِكُم
உங்களுக்காக
مِّنْ خَيْرٍ
நன்மையில்
تَجِدُوهُ
அதை பெறுவீர்கள்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
هُوَ
அது
خَيْرًا
மிகச் சிறப்பாகவும்
وَأَعْظَمَ
மிகப் பெரியதாகவும்
أَجْرًاۚ
கூலியால்
وَٱسْتَغْفِرُوا۟
இன்னும் பாவமன்னிப்புத் தேடுங்கள்
ٱللَّهَۖ
அல்லாஹ்விடம்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌۢ
மகா கருணையாளன்

Inna Rabbaka ya'lamu annaka taqoomu adnaa min sulusa yil laili wa nisfahoo wa sulusahoo wa taaa'ifatum minal lazeena ma'ak; wal laahu yuqaddirul laila wanna haar; 'alima al lan tuhsoohu fataaba 'alaikum faqra'oo maa tayassara minal quraan; 'alima an sa yakoonu minkum mardaa wa aakharoona yadriboona fil ardi yabtaghoona min fadlil laahi wa aakharoona yuqaatiloona fee sabeelil laahi faqra'oo ma tayassara minhu wa aqeemus salaata wa aatuz zakaata wa aqridul laaha qardan hasanaa; wa maa tuqadimoo li anfusikum min khairin tajidoohu 'indal laahi huwa khayranw wa a'zama ajraa; wastaghfirul laahaa innal laaha ghafoorur raheem.

(நபியே!) நிச்சயமாக நீங்களும், உங்களோடு இருப்பவர்களில் ஒரு கூட்டத்தினரும், சற்றேறக்குறைய இரவில் மூன்றில் இரண்டு பாகம் அல்லது பாதி அல்லது மூன்றில் ஒரு பாக நேரம் (இரவில் தொழுகையில்) நின்று வருகின்றீர்கள் என்பதை நிச்சயமாக உங்கள் இறைவன் அறிவான். இரவு பகலைக் கணக்கிட அல்லாஹ்வால்தான் முடியும். நீங்கள் அதனைச் சரிவரக் கணக்கிட முடியாதென்பதை அவன் அறிந்து (இருப்பதனால்தான், இரவில் இன்ன நேரத்தில், இவ்வளவு தொழவேண்டுமெனக் குறிப்பிட்டுக் கூறாது,) உங்களை அவன் மன்னித்து விட்டான். ஆகவே, (இரவில் நீங்கள் தொழுதால்) குர்ஆனில் உங்களுக்குச் சாத்தியமான அளவு ஓதுங்கள். ஏனென்றால், உங்களில் நோயாளிகள் இருக்கக்கூடுமென்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின் அரு(ளாகிய பொரு)ளைத் தேடி, பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியச் செல்ல வேண்டியதிருக்குமென்பதையும் அவன் நன்கறிவான். ஆதலால், (உங்கள் அவகாசத்திற்குத் தக்கவாறு கூட்டியோ குறைத்தோ) உங்களுக்குச் சௌகரியமான அளவே ஓதுங்கள். (ஆயினும்) தொழுகையை (தவறவிடாது) சரியாக நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (பொருள் நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு) அல்லாஹ்வுக்காக அழகான முறையில் கடனும் கொடுங்கள். நன்மையான காரியங்களில் எவைகளை நீங்கள் உங்களுக்காக, (உங்கள் மரணத்திற்கு முன்னதாகவே) செய்து வைத்துக் கொண்டீர்களோ அவைகளையே, மேலான நன்மை களாகவும் மகத்தான கூலியாகவும் நீங்கள் அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பையும் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer