Sooratun anzalnaahaa wa faradnaahaa wa anzalnaa feehaaa Aayaatim baiyinaatil la'allakum tazakkaroon
(மனிதர்களே! இது) ஓர் அத்தியாயம். இதனை நாமே இறக்கி (இதிலுள்ள சட்ட திட்டங்களை) நாமே விதித்துள்ளோம். அன்றி, இதனைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு தெளிவான வசனங்களையே நாம் இதில் இறக்கி வைத்தோம்.
Azzaaniyatu wazzaanee fajlidoo kulla waahidim minhumaa mi'ata jaldatinw wa laa taakhuzkum bihimaa raafatun fee deenil laahi in kuntum tu'minoona billaahi wal Yawmil Aakhiri wal yashhad 'azaabahumaa taaa'ifatum minal mu'mineen
விபச்சாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில் அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கும் (தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு தொகையினர் அதன் சமீபமாக இருக்கவும்.
Azzaanee laa yankihu illaa zaaniyatan aw mushrikatanw wazzaaniyatu laa yankihuhaaa illaa zaanin aw mushrik; wa hurrima zaalika 'alal mu'mineen
(கேவலமான) ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணை அன்றி (மற்றெவளையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. (அவ்வாறே) ஒரு விபச்சாரி (கேவலமான) ஒரு விபச்சாரனை அல்லது இணை வைத்து வணங்கும் ஓர் ஆணையன்றி (மற்றெவனையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது.
Wallazeena yarmoonal muhsanaati summa lam yaatoo bi-arba'ati shuhadaaa'a fajlidoohum samaaneena jaldatanw wa laa taqbaloo lahum shahaadatan abadaa; wa ulaaa'ika humul faasiqoon
எவனேனும் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவன் கொண்டு வராவிட்டால் அவனை நீங்கள் எண்பது கசையடிகள் அடியுங்கள். பின்னர், அவன் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக இத்தகையவர்கள் பெரும் பாவிகள்.
Illal lazeena taaboo mim ba'di zaalika wa aslahoo fa innal laaha Ghafoorur Raheem
ஆயினும், (இவர்களில்) எவரேனும் இதற்குப் பின்னர் (தங்கள் குற்றங்களிலிருந்து) விலகி கைசேதப்பட்டு மன்னிப்பு கோரி(த் தங்கள்) நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான்.
Wallazeena yarmoona azwaajahum wa lam yakul lahum shuhadaaa'u illaaa anfusuhum fashahaadatu ahadihim arb'u shahaadaatim billaahi innahoo laminas saadiqeen
எவர்கள் தங்கள் மனைவிகள் மீது (விபச்சாரத்தைக் கொண்டு) குற்றம்கூறித் தங்களையன்றி அவர்களிடம் (நான்கு) சாட்சிகள் இல்லாமல் இருந்தால் அதற்காக அச்சமயம் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி,
Wal khaamisatu anna la'natal laahi 'alaihi in kaana minal kaazibeen
ஐந்தாவது முறை (இவ்விஷயத்தில்) தான் பொய் சொல்வதாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகுக! என்றும் அவன் சத்தியம் செய்து கூறவேண்டும்.
Wa yadra'u anhal 'azaaba an tashhada arba'a shahaa daatim billaahi innahoo laminal kaazibeen
(அவனுடைய மனைவி குற்றமற்றவளாயினும் அவள்மீது குற்றம் திரும்பினால்) அவள் தன் மீது விதிக்கப்படவேண்டிய தண்டனையைத் தட்டிக் கழிப்பதற்காக (அவள் அதனை மறுத்து) நிச்சயமாக(த் தன்னுடைய) அ(க்கண)வன் பொய்யே கூறுகிறான் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து,
Wal khaamisata anna ghadabal laahi 'alaihaaa in kaana minas saadiqeen
ஐந்தாவது முறை மெய்யாகவே அவன் (இவ்விஷயத்தில்) உண்மை சொல்லியிருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாகுக! என்றும் அவள் கூறவேண்டும். (இதன் மூலம் அவள் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனை நீக்கப்பட்டுவிடும்.)
Wa law laa fadlul laahi 'alaikum wa rahmatuhoo wa annal laaha Tawwaabun Hakeem
அல்லாஹ்வினுடைய அருளும், அவனுடைய கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்து, அல்லாஹ் பாவங்களை மன்னிப்பவனாகவும் ஞானமுடையவனாகவும் இல்லாதிருந்தால் (உங்கள் குடும்ப வாழ்க்கையே சிதறி நீங்கள் பல துன்பங்களுக்குள்ளாகி இருப்பீர்கள்).
القرآن الكريم: | النور |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | An-Nur |
ஸூரா: | 24 |
வசனம்: | 64 |
Total Words: | 1317 |
Total Characters: | 5596 |
Number of Rukūʿs: | 9 |
Classification (Revelation Location): | மதனீ |
Revelation Order: | 102 |
Starting from verse: | 2791 |