Skip to main content

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَتَّبِعُوا۟
பின்பற்றாதீர்கள்
خُطُوَٰتِ
அடிச்சுவடுகளை
ٱلشَّيْطَٰنِۚ
ஷைத்தானின்
وَمَن
யார்
يَتَّبِعْ
பின்பற்றுகிறானோ
خُطُوَٰتِ
அடிச்சுவடுகளை
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானின்
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவன்
يَأْمُرُ
ஏவுகிறான்
بِٱلْفَحْشَآءِ
அசிங்கத்தையும்
وَٱلْمُنكَرِۚ
கெட்டதையும்
وَلَوْلَا
இல்லாதிருந்தால்
فَضْلُ
அருளும்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَرَحْمَتُهُۥ
அவனது கருணையும்
مَا زَكَىٰ
தூய்மை அடைந்திருக்க மாட்டார்
مِنكُم
உங்களில்
مِّنْ أَحَدٍ
எவரும்
أَبَدًا
ஒரு போதும்
وَلَٰكِنَّ ٱللَّهَ
எனினும் அல்லாஹ்
يُزَكِّى
பரிசுத்தப்படுத்துகிறான்
مَن يَشَآءُۗ
தான் நாடியவரை
وَٱللَّهُ
அல்லாஹ்
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Yaaa aiyuhal lazeena aamanoo laa tattabi'oo khutuwaatish Shaitaan; wa many-yattabi' khutuwaatish Shaitaani fa innahoo yaamuru bilfahshaaa'i walmunkar; wa law laa fadlul laahi 'alaikum wa rahmatuhoo maa zakaa minkum min ahadin abadanw wa laakinnal laaha yuzakkee many-yashaaa'; wallaahu Samee'un 'Aleem

நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவட்டை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களையும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய அருளும், கிருபையும் உங்கள்மீது இல்லா திருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக இருக்க முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவனும் (அனைத்தையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَلَا يَأْتَلِ
சத்தியம் செய்ய வேண்டாம்
أُو۟لُوا۟ ٱلْفَضْلِ
செல்வம் உடையவர்கள்
مِنكُمْ
உங்களில்
وَٱلسَّعَةِ
இன்னும் வசதி
أَن يُؤْتُوٓا۟
அவர்கள் கொடுக்க
أُو۟لِى ٱلْقُرْبَىٰ
உறவினர்களுக்கு
وَٱلْمَسَٰكِينَ
இன்னும் வறியவர்களுக்கு
وَٱلْمُهَٰجِرِينَ
இன்னும் ஹிஜ்ரா சென்றவர்களுக்கு
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
وَلْيَعْفُوا۟
அவர்கள் மன்னிக்கட்டும்
وَلْيَصْفَحُوٓا۟ۗ
பெருந்தன்மையுடன் விட்டு விடட்டும்
أَلَا تُحِبُّونَ
விரும்ப மாட்டீர்களா?
أَن يَغْفِرَ
மன்னிப்பதை
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْۗ
உங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையுடையவன்

Wa laa yaatali ulul fadli minkum wassa'ati ai yu'tooo ulil qurbaa walmasaakeena walmuhaajireena fee sabeelillaahi walya'foo walyasfahoo; alaa tuhibboona ai yaghfiral laahu lakum; wal laahu Ghafoorur Raheem

உங்களில் செல்வந்தரும் (பிறருக்கு உதவி செய்ய) இயல்புடையவரும், தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ يَرْمُونَ
குற்றம் சுமத்துகிறார்களோ
ٱلْمُحْصَنَٰتِ
பத்தினிகள்
ٱلْغَٰفِلَٰتِ
அறியாத பெண்கள்
ٱلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கைகொண்ட பெண்கள்
لُعِنُوا۟
சபிக்கப்பட்டார்கள்
فِى ٱلدُّنْيَا
உலகத்திலும்
وَٱلْءَاخِرَةِ
மறுமையிலும்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு உண்டு
عَذَابٌ
தண்டனை
عَظِيمٌ
பெரிய

Innal lazeena yarmoonal muhsanaatil ghaafilaatil mu'minaati lu'inoo fid dunyaa wal Aakhirati wa lahum 'azaabun 'azeem

எவர்கள் கள்ளம் கபடில்லாத நம்பிக்கையாளரான கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் (இறைவனுடைய) சாபத்திற்குள்ளாவார்கள். அன்றி, அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.

Tafseer

يَوْمَ
நாளில்
تَشْهَدُ
சாட்சி பகரும்
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராக
أَلْسِنَتُهُمْ
அவர்களது நாவுகளும்
وَأَيْدِيهِمْ
அவர்களதுகரங்களும்
وَأَرْجُلُهُم
அவர்களதுகால்களும்
بِمَا كَانُوا۟
எதை/இருந்தனர்
يَعْمَلُونَ
செய்கின்றார்கள்

Yawma tashhhadu 'alaihim alsinatuhum wa aideehim wa arjuluhum bimaa kaanoo ya'maloon

(நபியே! ஒரு நாளை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.) அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் (கூட) அவர்களுக்கு விரோதமாக அவர்கள் செய்தவைகளைப் பற்றி சாட்சியம் கூறும்.

Tafseer

يَوْمَئِذٍ
அந்நாளில்
يُوَفِّيهِمُ
அவர்களுக்கு முழுமையாக தருவான்
ٱللَّهُ
அல்லாஹ்
دِينَهُمُ
அவர்களுடைய கூலியை
ٱلْحَقَّ
உண்மையான
وَيَعْلَمُونَ
இன்னும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்தான்
هُوَ ٱلْحَقُّ
உண்மையானவன்
ٱلْمُبِينُ
தெளிவானவன்

Yawma'iziny yuwaf feehimul laahu deenahumul haqqa wa ya'lamoona annal laaha Huwal Haqqul Mubeen

அந்நாளில் (அவர்களின் செயலுக்குத்தக்க) நீதமான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளனும் (அவர்களின் செயல்களை) வெளியாக்கிவிடக் கூடியவன்தான் என்பதை அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.

Tafseer

ٱلْخَبِيثَٰتُ
கெட்ட சொற்கள்
لِلْخَبِيثِينَ
கெட்டவர்களுக்கு உரியன
وَٱلْخَبِيثُونَ
இன்னும் கெட்டவர்கள்
لِلْخَبِيثَٰتِۖ
கெட்ட சொற்களுக்கு உரியவர்கள்
وَٱلطَّيِّبَٰتُ
இன்னும் நல்ல சொற்கள்
لِلطَّيِّبِينَ
நல்லவர்களுக்கு உரியன
وَٱلطَّيِّبُونَ
இன்னும் நல்லவர்கள்
لِلطَّيِّبَٰتِۚ
நல்ல சொற்களுக்கு உரியவர்கள்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
مُبَرَّءُونَ
நீக்கப்பட்டவர்கள்
مِمَّا يَقُولُونَۖ
இவர்கள் சொல்வதிலிருந்து
لَهُم
அவர்களுக்கு
مَّغْفِرَةٌ
மன்னிப்பும்
وَرِزْقٌ
அருட்கொடையும்
كَرِيمٌ
கண்ணியமான

Alkhabeesaatu lilkha beeseena walkhabeesoona lilkhabeesaati wattaiyibaatu littaiyibeena wattaiyiboona littaiyibaat; ulaaa'ika mubar ra'oona maimma yaqooloona lahum maghfiratunw wa rizqun kareem

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும்; கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும்; பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான)வர்கள்தாம் (இந்த நயவஞ்சகர்கள்) கூறும் குற்றங்குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர்.இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு; கண்ணியமான முறையில் உணவும் உண்டு.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَدْخُلُوا۟
நீங்கள் நுழையாதீர்கள்
بُيُوتًا
வீடுகளில்
غَيْرَ بُيُوتِكُمْ
உங்கள் வீடுகள் அல்லாத
حَتَّىٰ
வரை
تَسْتَأْنِسُوا۟
நீங்கள் அனுமதி பெறுகின்ற
وَتُسَلِّمُوا۟
இன்னும் நீங்கள் ஸலாம் கூறி
عَلَىٰٓ أَهْلِهَاۚ
அவ்வீட்டார்களுக்கு
ذَٰلِكُمْ
அதுதான்
خَيْرٌ
சிறந்தது
لَّكُمْ
உங்களுக்கு
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக

Yaaa aiyuhal lazeena aamanoo laa tadkhuloo buyootan ghaira buyootikum hatta tastaanisoo wa tusallimoo 'allaa ahlihaa; zaalikum khairul lakum la'allakum tazakkaroon

நம்பிக்கையாளர்களே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்துகொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதனை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக!

Tafseer

فَإِن لَّمْ
நீங்கள் காணவில்லையெனில்
فِيهَآ
அவற்றில்
أَحَدًا
ஒருவரையும்
فَلَا تَدْخُلُوهَا
அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள்
حَتَّىٰ يُؤْذَنَ
அனுமதி கொடுக்கப்படுகின்ற வரை
لَكُمْۖ
உங்களுக்கு
وَإِن قِيلَ
சொல்லப்பட்டால்
لَكُمُ
உங்களுக்கு
ٱرْجِعُوا۟
திரும்பி விடுங்கள்
فَٱرْجِعُوا۟ۖ
திரும்பி விடுங்கள்
هُوَ
அது
أَزْكَىٰ
மிக சுத்தமானது
لَكُمْۚ
உங்களுக்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Fa il lam tajidoo feehaaa ahadan falaa tadkhuloohaa hattaa yu'zana lakum wa in qeela lakumurji'oo farji'oo huwa azkaa lakum; wallaahu bimaa ta'maloona 'Aleem

அவ்வீட்டில் எவரையுமே நீங்கள் காணாவிடில், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரையில் அதில் நுழையாதீர்கள். (தவிர இச்சமயம் வீட்டில் நுழைய வேண்டாம்.) "நீங்கள் திரும்பிவிடுங்கள்" என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் மற்ற எவராலும்) உங்களுக்குக் கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் (தாமதிக்காது) திரும்பி விடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்து கொள்வான்.

Tafseer

لَّيْسَ عَلَيْكُمْ
உங்கள் மீது இல்லை
جُنَاحٌ
குற்றம்
أَن تَدْخُلُوا۟
நீங்கள் நுழைவது
بُيُوتًا
வீடுகளில்
غَيْرَ مَسْكُونَةٍ
வசிக்கப்படாத
فِيهَا
அவற்றில்
مَتَٰعٌ
பொருள்
لَّكُمْۚ
உங்களுக்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
يَعْلَمُ
நன்கறிவான்
مَا تُبْدُونَ
நீங்கள்வெளிப்படுத்துவதை
وَمَا تَكْتُمُونَ
நீங்கள் மறைப்பதை

Laisa 'alaikum junaahun ann tadkhuloo buyootan ghaira maskoonatin feeha mataa'ul lakum; wallaahu ya'lamu maa tubdoona wa maa taktumoon

(நம்பிக்கையாளர்களே!) குடியில்லாத யாதொரு வீட்டில் உங்களுடைய சாமான்கள் இருந்து (அதற்காக) நீங்கள் அதில் (அனுமதியின்றியே) நுழைந்தால் அது உங்கள்மீது குற்றமாகாது. நீங்கள் (உங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அல்லாஹ் நன்கறிவான்.

Tafseer

قُل
கூறுங்கள்
لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
يَغُضُّوا۟
அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்
مِنْ أَبْصَٰرِهِمْ
தங்கள் பார்வைகளை
وَيَحْفَظُوا۟
இன்னும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும்
فُرُوجَهُمْۚ
தங்கள் மறைவிடங்களை
ذَٰلِكَ
அது
أَزْكَىٰ
மிக சுத்தமானது
لَهُمْۗ
அவர்களுக்கு
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிந்தவன்
بِمَا يَصْنَعُونَ
அவர்கள் செய்வதை

Qul lilmu' mineena yaghuuddoo min absaarihim wa yahfazoo furoojahum; zaalika azkaa lahum; innallaaha khabeerum bimaa yasna'oon

(நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான்.

Tafseer