Skip to main content

وَكَيْفَ
எவ்வாறு
تَكْفُرُونَ
நிராகரிப்பீர்கள்
وَأَنتُمْ
நீங்களோ
تُتْلَىٰ
ஓதப்பட
عَلَيْكُمْ
உங்கள் மீது
ءَايَٰتُ ٱللَّهِ
வசனங்கள்/ அல்லாஹ்வின்
وَفِيكُمْ
உங்களுடன் இருக்க
رَسُولُهُۥۗ
அவனுடைய தூதர்
وَمَن
எவர்
يَعْتَصِم
பலமாகப் பற்றிக் கொள்கிறார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
فَقَدْ هُدِىَ
திட்டமாக நேர்வழி காட்டப்படுவார்
إِلَىٰ
பக்கம்
صِرَٰطٍ
ஒரு பாதை
مُّسْتَقِيمٍ
நேரானது

Wa kaifa takfuroona wa antum tutlaa 'alaikum Aayaatul laahi wa feekum Rasooluh; wa mai ya'tasim baillaahi faqad hudiya ilaa Siraatim Mustaqeem

நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிப்பவராக ஆகிவிட முடியும்? அல்லாஹ்வுடைய தூதர் உங்கள் மத்தியில் இருந்து கொண்டு அவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்துக் கொண்டும் இருக்கின்றார். ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டு விட்டார்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
حَقَّ
உண்மையான முறை
تُقَاتِهِۦ
அவனைஅஞ்சுதல்
وَلَا تَمُوتُنَّ
இன்னும் இறந்துவிடாதீர்கள்
إِلَّا وَأَنتُم
நீங்கள் இருந்தே தவிர
مُّسْلِمُونَ
முஸ்லிம்கள்

Yaaa ayyuhal lazeena aamanut taqul laaha haqqa tuqaatihee wa laa tamoontunna illaa wa antum muslimoon

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்.

Tafseer

وَٱعْتَصِمُوا۟
இன்னும் பற்றிப்பிடியுங்கள்
بِحَبْلِ
கயிற்றை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
جَمِيعًا
அனைவரும்
وَلَا تَفَرَّقُوا۟ۚ
இன்னும் பிரிந்து விடாதீர்கள்
وَٱذْكُرُوا۟
இன்னும் நினைவு கூருங்கள்
نِعْمَتَ
அருளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْكُمْ
உங்கள் மீது
إِذْ كُنتُمْ
போது/இருந்தீர்கள்
أَعْدَآءً
எதிரிகளாக
فَأَلَّفَ
இணக்கத்தை ஏற்படுத்தினான்
بَيْنَ
மத்தியில்
قُلُوبِكُمْ
உள்ளங்கள்/உங்கள்
فَأَصْبَحْتُم
ஆகவே ஆகிவிட்டீர்கள்
بِنِعْمَتِهِۦٓ
அவனுடைய அருட் கொடையால்
إِخْوَٰنًا
சகோதரர்களாக
وَكُنتُمْ
இன்னும் இருந்தீர்கள்
عَلَىٰ شَفَا
ஓரத்தில்
حُفْرَةٍ
ஒரு குழியின்
مِّنَ ٱلنَّارِ
நரகத்தின்
فَأَنقَذَكُم
காப்பாற்றினான் உங்களை
مِّنْهَاۗ
அதிலிருந்து
كَذَٰلِكَ
இவ்வாறு
يُبَيِّنُ
தெளிவுப்படுத்துகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْ
உங்களுக்கு
ءَايَٰتِهِۦ
தன் வசனங்களை
لَعَلَّكُمْ تَهْتَدُونَ
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக

Wa'tasimoo bi Hablil laahi jamee'anw wa laa tafarraqoo; wazkuroo ni'matal laahi alaikum iz kuntum a'daaa'an fa allafa baina quloobikum fa asbah tum bini'matiheee ikhwaananw wa kuntum 'alaa shafaa hufratim minan Naari fa anqazakum minhaa; kazaalika yubaiyinul laahu lakum aayaatihee la'allakum tahtadoon

மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக் கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை காப்பாற்றிக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்திக் காண்பிக்கின்றான்.

Tafseer

وَلْتَكُن
இருக்கட்டும்
مِّنكُمْ
உங்களில்
أُمَّةٌ
ஒரு குழு
يَدْعُونَ
அழைக்கிறார்கள்
إِلَى
பக்கம்
ٱلْخَيْرِ
சிறந்தது
وَيَأْمُرُونَ
இன்னும் ஏவுகிறார்கள்
بِٱلْمَعْرُوفِ
நன்மையை
وَيَنْهَوْنَ
இன்னும் தடுக்கிறார்கள்
عَنِ ٱلْمُنكَرِۚ
பாவத்திலிருந்து
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்

Waltakum minkum ummatuny yad'oona ilal khairi wa yaamuroona bilma 'roofi wa yanhawna 'anil munkar; wa ulaaa'ika humul muflihoon

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.

Tafseer

وَلَا تَكُونُوا۟
ஆகிவிடாதீர்கள்
كَٱلَّذِينَ
எவர்கள் போல்
تَفَرَّقُوا۟
பிரிந்தார்கள்
وَٱخْتَلَفُوا۟
இன்னும் முரண்பட்டார்கள்
مِنۢ بَعْدِ
வந்த பின்னர்
جَآءَهُمُ
தங்களிடம்
ٱلْبَيِّنَٰتُۚ
தெளிவான அத்தாட்சிகள்
وَأُو۟لَٰٓئِكَ
இன்னும் அவர்கள்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
عَظِيمٌ
பெரியது

Wa laa takoonoo kallazeena tafarraqoo wakhtalafoo mim ba'di maa jaaa'ahumul baiyinaat; wa ulaaa'ika lahum 'azaabun 'azeem

எவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையவர்களுக்கே (மறுமையில்) மகத்தான வேதனையும் உண்டு.

Tafseer

يَوْمَ
நாள்
تَبْيَضُّ
வெண்மையாகும்
وُجُوهٌ
(சில) முகங்கள்
وَتَسْوَدُّ
இன்னும் கறுக்கும்
وُجُوهٌۚ
(சில) முகங்கள்
فَأَمَّا
ஆக
ٱلَّذِينَ
எவர்கள்
ٱسْوَدَّتْ
கறுத்தன
وُجُوهُهُمْ
அவர்களுடைய முகங்கள்
أَكَفَرْتُم
நிராகரித்தீர்களா?
بَعْدَ
பின்னர்
إِيمَٰنِكُمْ
நீங்கள் நம்பிக்கை கொள்ளுதல்
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
ٱلْعَذَابَ
வேதனையை
بِمَا كُنتُمْ
நீங்கள் இருந்த காரணத்தால்
تَكْفُرُونَ
நிராகரிக்கிறீர்கள்

Yawma tabyaddu wujoohunw wa taswaddu wujooh; faammal lazeenas waddat wujoohum akafartum ba'da eemaanikum fazooqul 'azaaba bimaa kuntum takfuroon

ஒருநாளில் சில முகங்கள் (சந்தோஷத்தால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கறுத்து (வாடியு)மிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்து (வாடி) இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) "நீங்கள் நம்பிக்கை கொண்டபின் (அதனை) நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, உங்கள் நிராகரிப்பின் காரணமாக நரக வேதனையை சுவைத்துக் கொண்டு இருங்கள்" (என்று கூறப்படும்.)

Tafseer

وَأَمَّا ٱلَّذِينَ
ஆக, எவர்கள்
ٱبْيَضَّتْ
வெண்மையாகின
وُجُوهُهُمْ
அவர்களுடைய முகங்கள்
فَفِى رَحْمَةِ
அருளில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
هُمْ
அவர்கள்
فِيهَا
அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Wa ammal lazeenabyadd at wujoohuhum fafee rahmatil laahi hum feehaa khaalidoon

எவர்களுடைய முகங்கள் (மகிழ்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாக இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ்வின் அருளில் தங்கிவிடுங்கள்" (என்று கூறப்படும்.) அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

Tafseer

تِلْكَ
இவை
ءَايَٰتُ
வசனங்கள்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
نَتْلُوهَا
ஓதுகிறோம் அவற்றை
عَلَيْكَ
உம்மீது
بِٱلْحَقِّۗ
உண்மையாகவே
وَمَا
இல்லை
ٱللَّهُ
அல்லாஹ்
يُرِيدُ
நாடுகிறான்
ظُلْمًا
அநியாயத்தை
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு

Tilka Aayaatul laahi natloohaa 'alaika bilhaqq; wa mal laahu yureedu zulmallil 'aalameen

(நபியே!) இவையனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். அவைகளை உண்மையாகவே நாம் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கின்றோம். அன்றி, அல்லாஹ் உலகத்தாருக்கு சிறிதளவும் அநியாயம் (செய்ய) நாட மாட்டான்.

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்விற்கு
مَا
எவை
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَمَا فِى
இன்னும் எவை/பூமியில்
وَإِلَى
பக்கம்
ٱللَّهِ
அல்லாஹ்
تُرْجَعُ
திருப்பப்படும்
ٱلْأُمُورُ
காரியங்கள்

Wa lillaahi maa fissamaawaati wa maa fil ard; wa ilal laahi turja;ul umoor

வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியதே! (இவை சம்பந்தமான) எல்லா காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்.

Tafseer

كُنتُمْ
இருக்கிறீர்கள்
خَيْرَ
சிறந்த(வர்கள்)
أُمَّةٍ
சமுதாயம்
أُخْرِجَتْ
வெளியாக்கப்பட்டது
لِلنَّاسِ
மக்களுக்காக
تَأْمُرُونَ
ஏவுகிறீர்கள்
بِٱلْمَعْرُوفِ
நன்மையைக்கொண்டு
وَتَنْهَوْنَ
இன்னும் தடுக்கிறீர்கள்
عَنِ ٱلْمُنكَرِ
தீமையை விட்டும்
وَتُؤْمِنُونَ
இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்
بِٱللَّهِۗ
அல்லாஹ்வை
وَلَوْ ءَامَنَ
நம்பிக்கைகொண்டால்
أَهْلُ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்கள்
لَكَانَ
உறுதி ஆகிவிட்டது
خَيْرًا
சிறந்ததாக
لَّهُمۚ
அவர்களுக்கு
مِّنْهُمُ
அவர்களில்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
وَأَكْثَرُهُمُ ٱلْفَٰسِقُونَ
இன்னும் அதிகமானவர்கள் அவர்களில்/பாவிகள்

Kuntum khaira ummatin ukhrijat linnaasi taamuroona bilma'roofi wa tanhawna 'anil munkari wa tu'minoona billaah; wa law aamana Ahlul Kitaabi lakaana khairal lahum minhumul mu'minoona wa aksaruhumul faasiqoon

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.

Tafseer