Skip to main content

سَنُلْقِى
போடுவோம்
فِى قُلُوبِ
உள்ளங்களில்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
ٱلرُّعْبَ
திகிலை
بِمَآ أَشْرَكُوا۟
அவர்கள் இணைவைத்த காரணத்தால்
بِٱللَّهِ
அல்லாஹ்விற்கு
مَا لَمْ
எது/இறக்கவில்லை
بِهِۦ
அதற்கு
سُلْطَٰنًاۖ
ஓர் ஆதாரத்தை
وَمَأْوَىٰهُمُ
இன்னும் அவர்களுடைய தங்குமிடம்
ٱلنَّارُۚ
நரகம்தான்
وَبِئْسَ
கெட்டுவிட்டது
مَثْوَى
தங்குமிடம்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களின்

Sanulqee fee quloobil lazeena kafarur ru'ba bimaaa ashrakoo billaahi maa lam yunazzil bihee sultaana-nw wa maawaahumun Naar; wa bi'sa maswaz zaalimeen

நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் அதிசீக்கிரத்தில் நாம் திகிலை உண்டுபண்ணி விடுவோம். ஏனென்றால், அவர்கள் இணை வைப்பதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரமும் அவர்களுக்கு அளிக்காதிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம்தான். (நரகத்திலும்) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
صَدَقَكُمُ
உங்களுக்கு உண்மையாக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَعْدَهُۥٓ إِذْ
தன் வாக்குறுதியை/போது
تَحُسُّونَهُم
அவர்களை வெட்டி வீழ்த்துகிறீர்கள்
بِإِذْنِهِۦۖ حَتَّىٰٓ
அவனுடைய அனுமதியுடன்/வரை
إِذَا فَشِلْتُمْ
போது/கோழையாகி விட்டீர்கள்
وَتَنَٰزَعْتُمْ
இன்னும் தர்க்கித்தீர்கள்
فِى ٱلْأَمْرِ
கட்டளையில்
وَعَصَيْتُم
இன்னும் மாறு செய்தீர்கள்
مِّنۢ بَعْدِ
பின்னர்
مَآ أَرَىٰكُم
அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு
مَّا تُحِبُّونَۚ
எதை/விரும்புகிறீர்கள்
مِنكُم
உங்களில்
مَّن
எவர்
يُرِيدُ
நாடுகிறார்
ٱلدُّنْيَا
உலகத்தை
وَمِنكُم
இன்னும் உங்களில்
مَّن يُرِيدُ
எவர் / நாடுகிறார்
ٱلْءَاخِرَةَۚ
மறுமையை
ثُمَّ صَرَفَكُمْ
பிறகு/திருப்பினான்/உங்களை
عَنْهُمْ
அவர்களை விட்டும்
لِيَبْتَلِيَكُمْۖ
அவன் சோதிப்பதற்காக/உங்களை
وَلَقَدْ عَفَا
திட்டமாக மன்னித்தான்
عَنكُمْۗ
உங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
ذُو فَضْلٍ
அருளுடையவன்/மீது
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்

Wa laqad sadaqakumul laahu wa'dahooo iz tahussoo nahum bi iznihee hattaaa izaa fashiltim wa tanaaza'tum fil amri wa 'asaitum mim ba'di maaa araakum maa tuhibboon; minkum mai yureedud dunyaa wa minkum mai yureedul Aakhirah; summa sarafakum 'anhum sarafakum 'anhum liyabtaliyakum wa laqad 'afaa 'ankum; wallaahu zoo fadlin 'alal mu'mineen

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் கட்டளைப்படி (உஹுத் போரில்) நீங்கள் எதிரிகளை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் (உங்களுக்கு உதவி புரிந்து) அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிச்சயமாக நிறைவேற்றி வைத்தான். ஆனால், நீங்கள் விரும்பியதை (அதாவது வெற்றியை) அல்லாஹ் உங்களுக்குக் காண்பித்ததன் பின்னர் (நபியின் கட்டளைக்கு) மாறு செய்து அவ்விஷயத்தில் நீங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (நபி உங்களை நிறுத்தி வைத்திருந்த கணவாயிலிருந்து விலகி இறுதியில்) தைரியத்தை இழந்துவிட்டீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உண்டு. மறுமையை விரும்புபவர்களும் உண்டு. ஆகவே உங்களைச் சோதிப்பதற்காக (அவர்களைத் துரத்திச் சென்ற உங்களை) அவர்களைவிட்டு பின்னடையும்படி செய்தான். (இதன் பின்னரும்) நிச்சயமாக அல்லாஹ் உங்(களுடைய குற்றங்)களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருள் புரிபவனாக இருக்கின்றான்.

Tafseer

إِذْ تُصْعِدُونَ
சமயம்/வேகமாக ஓடுகிறீர்கள்
وَلَا تَلْوُۥنَ
நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள்
عَلَىٰٓ أَحَدٍ
ஒருவரையும்
وَٱلرَّسُولُ
தூதர்
يَدْعُوكُمْ
உங்களை அழைக்கிறார்
فِىٓ أُخْرَىٰكُمْ
உங்களுக்குஇறுதியில்
فَأَثَٰبَكُمْ
உங்களுக்கு கூலியாக்கினான்
غَمًّۢا
துயரத்தை
بِغَمٍّ
துயரத்தின்காரணமாக
لِّكَيْلَا تَحْزَنُوا۟
நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவே
عَلَىٰ مَا
மீது/எது
فَاتَكُمْ
உங்களுக்கு தவறியது
وَلَا مَآ
இன்னும் உங்களுக்கு ஏற்பட்டது
وَٱللَّهُ
அல்லாஹ்
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிந்தவன்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை

Iz tus'idoona wa laa talwoona 'alaaa ahadinw war Rasoolu yad'ookum feee ukhraakum fa asaabakum ghammam bighammil likailaa tahzanoo 'alaa maa faatakum wa laa maaa asaabakum; wallaahu khabeerum bimaa ta'maloon

(உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு பின்னால் இருந்தவாறு "(என்னிடம் வாருங்கள்!) வாருங்கள்" என்று உங்களை(க் கூவி) அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில் நீங்கள் ஒருவரையுமே திரும்பிப்பாராது வெருண்டோடிக் கொண்டிருந்ததையும் சிந்தித்துப் பாருங்கள். (நம் தூதருக்கும் நீங்கள் உண்டுபண்ணிய) இத்துயரத்தின் காரணமாக உங்களுக்கும் (தோல்வியின்) துயரத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான். ஏனென்றால், உங்களிடமிருந்து (யாதொரு பொருள்) தவறிவிட்டதைப் பற்றியும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தைப் பற்றியும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்துவிடாமல் இருப்பதற்(குரிய சகிப்புத் தன்மையை உங்களுக்கு உண்டுபண்ணுவதற்)காகவே (இத்தகைய கஷ்டத்தை உங்களுக்குக் கொடுத்தான்.) நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான்.

Tafseer

ثُمَّ أَنزَلَ
பிறகு/இறக்கினான்
عَلَيْكُم
உங்கள் மீது
مِّنۢ بَعْدِ
பின்னர்
ٱلْغَمِّ
துயரம்
أَمَنَةً
மன நிம்மதிக்காக
نُّعَاسًا
சிறு நித்திரையை
يَغْشَىٰ
அது சூழ்ந்தது
طَآئِفَةً
ஒரு வகுப்பாரை
مِّنكُمْۖ
உங்களில்
وَطَآئِفَةٌ
இன்னும் ஒரு வகுப்பார்
قَدْ أَهَمَّتْهُمْ
கவலையைத் தந்தன/அவர்களுக்கு
أَنفُسُهُمْ
ஆன்மாக்கள்/தங்கள்
يَظُنُّونَ
எண்ணுகின்றனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
غَيْرَ
அல்லாத
ٱلْحَقِّ
உண்மை
ظَنَّ
எண்ணத்தைப் போன்று
ٱلْجَٰهِلِيَّةِۖ
மடத்தனம்
يَقُولُونَ
கூறுகின்றனர்
هَل لَّنَا
நமக்கு உண்டா ?
مِنَ
இருந்து
ٱلْأَمْرِ
அதிகாரத்தில்
مِن شَىْءٍۗ
ஏதும்
قُلْ
கூறுவீராக
إِنَّ
நிச்சயமாக
ٱلْأَمْرَ
அதிகாரம்
كُلَّهُۥ
அது எல்லாம்
لِلَّهِۗ
அல்லாஹ்வுக்குரியதே
يُخْفُونَ
மறைக்கின்றனர்
فِىٓ أَنفُسِهِم
தங்களுக்குள்
مَّا لَا
எதை/வெளிப்படுத்த மாட்டார்கள்
لَكَۖ
உமக்கு
يَقُولُونَ
கூறுகின்றனர்
لَوْ كَانَ
இருந்திருந்தால்/நமக்கு
مِنَ ٱلْأَمْرِ
அதிகாரத்தி லிருந்து
شَىْءٌ
ஏதும்
مَّا قُتِلْنَا
எதுவும்/கொல்லப் பட்டிருக்க மாட்டோம்
هَٰهُنَاۗ
இங்கு
قُل
கூறுவீராக
لَّوْ كُنتُمْ
நீங்கள் இருந்தாலும்
فِى بُيُوتِكُمْ
உங்கள் வீடுகளில்
لَبَرَزَ
வெளியாகியே தீருவார்
ٱلَّذِينَ
எவர்கள்
كُتِبَ
விதிக்கப்பட்டது
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلْقَتْلُ
கொலை
إِلَىٰ
பக்கம்
مَضَاجِعِهِمْۖ
தாங்கள் கொல்லப்படும் இடங்கள்
وَلِيَبْتَلِىَ
இன்னும் பரிசோதிப்பதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
مَا
எவை
فِى
நெஞ்சங்களில்
صُدُورِكُمْ
நெஞ்சங்களில் உங்கள்
وَلِيُمَحِّصَ
இன்னும் பரிசுத்தமாக்க
مَا فِى
எவை/இல்/உள்ளங்கள்/உங்கள்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌۢ
மிக அறிபவன்
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளதை

Summa anzala 'alaikum mim ba'dil ghammi amanatan nu'aasai yaghshaa taaa' ifatam minkum wa taaa'ifatun qad ahammathum anfusuhum yazunnoona billaahi ghairal haqqi zannal jaahiliyyati yaqooloona hal lanaa minal amri min shai'; qul innal amra kullahoo lillaah; yukhfoona fee anfusihim maa laa yubdoona laka yaqooloona law kaana lanaa minal amri shai'ummaa qutilnaa haahunaa; qul law kuntum fee buyootikum labarazal lazeena kutiba 'alaihimul qatlu ilaa madaaji'ihim wa liyabtaliyal laahu maa fee sudoorikum wa liyumah hisa maa fee quloobikum; wallaahu 'aleemum bizaatis sudoor

(நம்பிக்கையாளர்களே!) இத்துயரத்திற்குப் பின்னர் (அல்லாஹ்) உங்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய நித்திரையை இறக்கி வைத்தான். உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினருக்கோ அவர்களுடைய கவலையே பெரிதாகி மடையர்கள் எண்ணுவதைப்போல அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாதவைகளை எல்லாம் (தவறாக) எண்ண ஆரம்பித்து "நம்மிடம் (இதற்குப் பரிகாரம் செய்ய) அதிகாரம் ஏதும் உண்டா?" என்று கேட்டனர். (இதற்கு) "எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுடையதே!" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (இவையன்றி) அவர்கள் உங்களுக்கு வெளியாக்காத பல விஷயங்களையும் தங்கள் மனதில் மறைத்துக் கொண்டு "நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால், இங்கு வந்து (இவ்வாறு) நாம் வெட்டப்பட்டிருக்க மாட்டோம்" எனவும் கூறுகின்றனர். (இதற்கு நபியே! அந்நயவஞ்சகர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்கள் வீட்டில் (தங்கி) இருந்தபோதிலும் எவர்கள் மீது வெட்டப்பட்டே இறக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தாங்கள் வெட்டப்பட வேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே தீருவார்கள்" என்றும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) அல்லாஹ் உங்கள் மனதிலுள்ளதைப் பரிசோதனை செய்வதற் காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்கு வதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படிச் செய்தான் என்றும் கூறுங்கள். உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
تَوَلَّوْا۟
திரும்பினார்கள்
مِنكُمْ
உங்களில்
يَوْمَ
நாள்
ٱلْتَقَى
சந்தித்தார்(கள்)
ٱلْجَمْعَانِ
இரு கூட்டங்கள்
إِنَّمَا ٱسْتَزَلَّهُمُ
சறுகச் செய்ததெல்லாம்/அவர்களை
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
بِبَعْضِ
சிலதின் காரணமாக
مَا
எவை
كَسَبُوا۟ۖ
செய்தார்கள்
وَلَقَدْ عَفَا
திட்டமாக மன்னித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَنْهُمْۗ
அவர்களை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
حَلِيمٌ
மகா சகிப்பாளன்

Innal lazeena tawallaw minkum yawmal taqal jam'aani innamas tazallahumush Shaitaanu biba'di maa kasaboo wa laqad 'afal laahu 'anhum; innnal laaha Ghafoorum Haleem

(நம்பிக்கையாளர்களே!) இரு கூட்டத்தாரும் (உஹுது போருக்காகச்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் அதிலிருந்து வெருண்டோடினார்களோ, (அவர்கள் நிராகரிப்பின் காரணமாக ஓடவில்லை.) அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக ஷைத்தான்தான் அவர்களுடைய கால்களைச் சறுக்கும்படிச் செய்தான். எனினும், அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَكُونُوا۟
ஆகாதீர்கள்
كَٱلَّذِينَ
போன்று/எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
لِإِخْوَٰنِهِمْ
சகோதரர்களுக்கு/ அவர்களுடைய
إِذَا ضَرَبُوا۟
அவர்கள் பயணித்தால்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
أَوْ
அல்லது
كَانُوا۟
இருந்தார்கள்
غُزًّى
போர் புரிபவர்களாக
لَّوْ كَانُوا۟
அவர்கள் இருந்திருந்தால்
عِندَنَا
நம்மிடமே
مَا مَاتُوا۟
அவர்கள் மரணித்திருக்க மாட்டார்கள்
وَمَا قُتِلُوا۟
இன்னும் அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்
لِيَجْعَلَ
ஆக்குவதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
ذَٰلِكَ
அதை
حَسْرَةً
கைசேதமாக
فِى قُلُوبِهِمْۗ
அவர்களுடைய உள்ளங்களில்
وَٱللَّهُ
அல்லாஹ்
يُحْىِۦ
வாழவைக்கிறான்
وَيُمِيتُۗ
இன்னும் மரணிக்க வைக்கிறான்
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Yaaa ayyuhul lazeena aamanoo laa takoonoo kallazeena kafaroo wa qaaloo li ikhwaanihim izaa daraboo fil ardi aw kaanoo ghuzzal law kaanoo 'indanaa maa maatoo wa maa qutiloo liyaj'alal laahu zaalika hasratan fee quloobihim; qallaahu yuhyee wa yumeet; wallaahu bimaa ta'maloona Baseer

நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் அவர்கள் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்" என்று கூறுகின்றனர். அவர்களுடைய உள்ளங்களில் (என்றென்றுமே) இதை ஒரு கடும் துயரமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் செய்கிறான். அல்லாஹ்வே உயிருடன் வாழச் செய்பவன்; மரணிக்கவும் செய்பவன். நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَلَئِن
قُتِلْتُمْ
நீங்கள் கொல்லப்பட்டால்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
أَوْ
அல்லது
مُتُّمْ
நீங்கள் இறந்தாலும்
لَمَغْفِرَةٌ
திட்டமாக மன்னிப்பு
مِّنَ
இருந்து
ٱللَّهِ
அல்லாஹ்
وَرَحْمَةٌ
இன்னும் கருணை
خَيْرٌ
மிகச் சிறந்தது
مِّمَّا يَجْمَعُونَ
எதைவிட/சேகரிக்கிறார்கள்

Wa la'in qutiltum fee sabeelil laahi aw muttum lamaghfiratum minal laahi wa rahmatun khairum mimmaa yajma'oon

அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்துவிட்டாலும் (அதற்காக) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும், அவனுடைய அன்பும் அவர்கள் சேகரித்து(க் குவித்து) வைத்திருக்கும் பொருள்களைவிட மிக மேலானதாக இருக்கும்.

Tafseer

وَلَئِن
مُّتُّمْ
நீங்கள் இறந்தால்
أَوْ
அல்லது
قُتِلْتُمْ
கொல்லப்பட்டீர்கள்
لَإِلَى
திட்டமாக பக்கம்
ٱللَّهِ
அல்லாஹ்
تُحْشَرُونَ
ஒன்று சேர்க்கப்படுவீர்கள்

Wa la'im muttum 'aw qutiltumla ilal laahi tuhsharoon

நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்துவிட்டாலும் அல்லது கொல்லப்பட்டாலும் (அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்?) அல்லாஹ்விடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer

فَبِمَا رَحْمَةٍ
கருணையினால்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
لِنتَ
மென்மையானீர்
لَهُمْۖ
அவர்களுக்கு
وَلَوْ كُنتَ
நீர் இருந்திருந்தால்
فَظًّا
கடுகடுப்பானவராக
غَلِيظَ
கடுமையானவராக
ٱلْقَلْبِ
உள்ளம்
لَٱنفَضُّوا۟
பிரிந்திருப்பார்கள்
مِنْ
இருந்து
حَوْلِكَۖ
உம் சுற்றுப் புறம்
فَٱعْفُ
ஆகவே மன்னிப்பீராக
عَنْهُمْ
அவர்களை
وَٱسْتَغْفِرْ
இன்னும் மன்னிப்புத் தேடுவீராக
لَهُمْ
அவர்களுக்காக
وَشَاوِرْهُمْ
இன்னும் ஆலோசிப்பீராக / அவர்களுடன்
فِى ٱلْأَمْرِۖ
காரியத்தில்
فَإِذَا عَزَمْتَ
(நீர்) உறுதிசெய்தால்
فَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பீராக
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ் மீது
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கிறான்
ٱلْمُتَوَكِّلِينَ
நம்பிக்கை வைப்பவர்களை

Fabimaa rahmatim minal laahi linta lahum wa law kunta fazzan ghaleezal qalbi lanfaddoo min hawlika fafu 'anhum wastaghfir lahum wa shaawirhum fil amri fa izaa 'azamta fatawakkal 'alal laah; innallaaha yuhibbul mutawak kileen

(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்.

Tafseer

إِن
உதவினால்
يَنصُرْكُمُ
உதவினால் உங்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
فَلَا
அறவே இல்லை
غَالِبَ
மிகைப்பவர்
لَكُمْۖ
உங்களை
وَإِن يَخْذُلْكُمْ
அவன் கைவிட்டால்/உங்களை
فَمَن ذَا
யார்/அவர்
ٱلَّذِى
எவர்
يَنصُرُكُم
உங்களுக்கு உதவுவார்
مِّنۢ بَعْدِهِۦۗ
அதற்குப் பின்னர்
وَعَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கவும்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்

Iny-yansurkumul laahu falaa ghaaliba lakum wa iny-yakhzulkum faman zal lazee yansurukum mim ba'dih; wa 'alal laahi falyatawakkalil mu'minoon

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர்கள் ஒருவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை கொள்ளவும்.

Tafseer