Wa maa kaana lahoo 'alaihim min sultaanin illaa lina'lama mai yu minu bil Aakhirati mimman huwa minhaa fee shakk; wa Rabbuka 'alaa kulli shai'in Hafeez
எனினும், அவர்களை நிர்ப்பந்திக்க அவனுக்கு யாதொரு அதிகாரமும் இல்லை. ஆயினும், மறுமையை நம்பாத அவர்களில் (மறுமையை) நம்புபவர் எவர் என்பதை நாம் தெளிவாக அறிவித்து விடுவதற்காகவே இவ்வாறு நடைபெற்றது. உங்களது இறைவனே எல்லா பொருள்களையும் பாதுகாப்பவனாக இருக்கிறான்.
Qulid 'ul lazeena za'amtum min doonil laahi laa yamlikoona misqaala zarratin fissamaawaati wa laa fil ardi wa maa lahum feehimaa min shirkinw wa maa lahoo minhum min zaheer
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்வையன்றி எவைகளை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர்களோ அவைகளை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானத்திலோ பூமியிலோ அவைகளுக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. அன்றி, அவைகளை படைப்பதில் இவைகளுக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை. (அவைகளை படைப்பதில்) இவை அவனுக்கு உதவி செய்யவுமில்லை.
Wa laa tanfa'ush shafaa'atu 'indahooo illaa liman azina lah; hattaaa izaa fuzzi'a 'an quloobihim qaaloo maazaa qaala Rabbukum; qaalul haqq, wa Huwal 'Aliyul Kabeer
அவனுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர (மற்றெந்த மலக்கும்) அவனிடத்தில் பரிந்து பேசுவதும் பயனளிக்காது. (அல்லாஹ்வுடைய யாதொரு கட்டளை பிறக்கும் சமயத்தில் அவர்கள் பயந்து நடுங்குகின்றனர்.) அவர்களுடைய உள்ளத்தில் இருந்து நடுக்கம் நீங்கியதும் (அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி) "உங்கள் இறைவன் என்ன கட்டளையிட்டான்?" என்று கேட்பார்கள். அதற்கு மற்றவர்கள் "(இடவேண்டிய) நியாயமான கட்டளையையே இட்டான்; அவனோ மிக்க மேலானவனும் மிகப் பெரியவனும் ஆவான்" என்று கூறுவார்கள்.
Qul mai yarzuqukum minas samaawaati wal ardi qulil laahu wa innaaa aw iyyaakum la'alaa hudan aw fee dalaalim mubeen
(நபியே! நிராகரிக்கும் இவர்களை நோக்கி) "வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?" என்று கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன?) "அல்லாஹ்தான்" என்று (நீங்களே) கூறி "மெய்யாகவே நேரான வழியில் இருப்பவர் யார்? பகிரங்கமான தவறான வழியில் இருப்பவன் யார்? (நீங்களா அல்லது நானா?)" என்றும் கேளுங்கள்.
Qul laa tus'aloona 'ammaaa ajramnaa wa laa nus'alu 'ammaa ta'maloon
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நாங்கள் செய்யும் குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்; (அவ்வாறே) நீங்கள் செய்பவைகளைப் பற்றி நாங்கள் கேட்கப்பட மாட்டோம்"
Qul yajma'u bainanaa Rabbunaa summa yaftahu bainanaa bilhaqq; wa Huwal Fattaahul 'Aleem
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "முடிவில் (மறுமை நாளில்) நமதிறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான். அவன் தீர்ப்பளிப்பதில் மிக்க மேலானவனும் (அனைத்தையும்) மிக்க நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்."
Qul arooniyal lazeena alhaqtum bihee shurakaaa'a kallaa; bal Huwal Laahul 'Azeezul Hakeem
(அன்றி) "அல்லாஹ்வுக்கு இணையானவையென(க் கூறி) நீங்கள் அவனுக்குச் சமமாகச் சேர்த்து வைக்கின்றீர்களே அவைகளை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள்" (என்று கேட்டு "அவனுக்கு ஒருவருமே இணை) இல்லை. அவனோ அனைவரையும் மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வாகும்" என்று கூறுங்கள்.
Wa maaa arsalnaaka illaa kaaffatal linnaasi basheeranw wa nazeeranw wa laakinna aksaran naasi laa ya'lamoon
(நபியே!) நாம் உங்களை (இவ்வுலகத்தில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்ளவில்லை.
Wa yaqooloona mataa haazal wa'du in kuntum saadiqeen
(நபியே!) "நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் (விசாரணைக் காலம் என்று) நீங்கள் கூறும் வாக்குறுதி எப்பொழுது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர்.
Qul lakum mee'aadu Yawmil laa tastaakhiroona 'anhu saa'atanw wa la tastaqdimoon
அதற்கு நீங்கள் கூறுங்கள்: "உங்களுக்காக ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவுமாட்டீர்கள்; முந்தவுமாட்டீர்கள்."