Skip to main content

هَٰذَا هُدًىۖ
இதுதான்/நேர்வழி
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
عَذَابٌ
வேதனை
مِّن رِّجْزٍ
தண்டனை
أَلِيمٌ
வலி தரக்கூடிய(து)

Haazaa hudanw wal lazeena kafaroo bi aayaati Rabbihim lahum 'azaabum mir rijzin aleem

இவ்வேதம்தான் நேரான பாதை. ஆகவே, எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு மிக கடினமான துன்புறுத்தும் வேதனை உண்டு.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
سَخَّرَ
வசப்படுத்தினான்
لَكُمُ ٱلْبَحْرَ
உங்களுக்கு/கடலை
لِتَجْرِىَ
செல்வதற்காகவும்
ٱلْفُلْكُ فِيهِ
கப்பல்கள்/அதில்
بِأَمْرِهِۦ
அவனது கட்டளைப்படி
وَلِتَبْتَغُوا۟
நீங்கள் தேடுவதற்காகவும்
مِن فَضْلِهِۦ
அவனுடைய அருளிலிருந்து
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்

Allaahul lazee sahkhara lakumul bahra litajriyal fulku feehi bi amrihee wa litabtaghoo min fadlihee wa la'allakum tashkuroon

அல்லாஹ் கடலை உங்களுக்கு வசதியாக அமைத் திருக்கின்றான். அவன் கட்டளையைக் கொண்டு (பல தீவுகளுக்குக்) கப்பலில் சென்று (அதன் மூலம்) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கின்றீர்கள். (அதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!

Tafseer

وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
لَكُم
உங்களுக்கு
مَّا فِى
வானங்களில் உள்ளவற்றை(யும்)
وَمَا فِى
பூமியில் உள்ளவற்றையும்
جَمِيعًا
அனைத்தையும்
مِّنْهُۚ
தன் புறத்திலிருந்து
إِنَّ فِى
நிச்சயமாக இதில் உள்ளன
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்ற

Wa sakhkhara lakum maa fis samaawaati wa maa fil ardi jamee'am minh; inna feezaalika la Aayaatil liqawminy yatafakkaroon

அன்றி, (அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையுமே அவன் தன்னுடைய அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். கவனித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.

Tafseer

قُل
கூறுவீராக!
لِّلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களுக்கு
يَغْفِرُوا۟
அவர்கள் மன்னித்து விடட்டும்
لِلَّذِينَ لَا
ஆதரவு வைக்காதவர்களை
أَيَّامَ ٱللَّهِ
அல்லாஹ்வின் நடவடிக்கைகளை
لِيَجْزِىَ
இறுதியாக தண்டனை கொடுப்பான்
قَوْمًۢا
ஒரு கூட்டத்திற்கு
بِمَا كَانُوا۟
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு

Qul lillazeena aamanoo yaghfiroo lillazeena laa yarjoona ayyaamal laahi liyajziya qawmam bimaa kaanoo yaksiboon

(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுடைய தண்டனைகளை நம்பாத மக்களை நீங்கள் புறக்கணித்து (அவர்கள் விஷயத்தை அல்லாஹ்விடமே விட்டு) விடுங்கள். (நன்மையோ, தீமையோ செய்யும்) மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அவன் கொடுப்பான்.

Tafseer

مَنْ عَمِلَ
யார் செய்வாரோ
صَٰلِحًا
ஒரு நன்மையை
فَلِنَفْسِهِۦۖ
அது அவருக்குத்தான் நல்லது
وَمَنْ
எவர்
أَسَآءَ
தீமை செய்வாரோ
فَعَلَيْهَاۖ
அது அவருக்குத்தான் கேடாகும்
ثُمَّ
பிறகு
إِلَىٰ رَبِّكُمْ
உங்கள் இறைவனிடம்
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Maa 'amila saalihan falinafsihee wa man asaaa'a fa'alaihaa summa ilaa Rabbikum turja'oon

எவர் நன்மை செய்கின்றாரோ அது அவருக்கே நன்று. எவன் தீமை செய்கின்றானோ அது அவனுக்கே கேடாகும். பின்னர், நீங்கள் உங்கள் இறைவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களுக்கு
ٱلْكِتَٰبَ
வேதங்களை(யும்)
وَٱلْحُكْمَ
ஞானத்தையும்
وَٱلنُّبُوَّةَ
நபித்துவத்தையும்
وَرَزَقْنَٰهُم
இன்னும் அவர்களுக்கு நாம் வழங்கினோம்
مِّنَ ٱلطَّيِّبَٰتِ
நல்ல உணவுகளை
وَفَضَّلْنَٰهُمْ
அவர்களை மேன்மையாக்கினோம்
عَلَى ٱلْعَٰلَمِينَ
அக்கால மக்களைவிட

Wa laqad aatainaa Baneee Israaa'eelal Kitaaba walhukma wan Nubuwwata wa razaqnaahum minat taiyibaati wa faddalnaahum;alal 'aalameen

நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தையும், (ஞானத்தையும்,) அதிகாரத்தையும், நபிப்பட்டத்தையும் கொடுத்து மேலான உணவுகளையும் கொடுத்தோம். அன்றி, உலகத்தார் அனைவரிலும் அவர்களை மேலாக்கி வைத்தோம்.

Tafseer

وَءَاتَيْنَٰهُم
நாம் அவர்களுக்குக் கொடுத்தோம்
بَيِّنَٰتٍ
தெளிவான சட்டங்களை
مِّنَ ٱلْأَمْرِۖ
இந்த மார்க்கத்தின்
فَمَا ٱخْتَلَفُوٓا۟
அவர்கள் கருத்து வேறுபடவில்லை
إِلَّا مِنۢ
தவிர/அவர்களிடம் வந்த பின்னர்
ٱلْعِلْمُ
கல்வி
بَغْيًۢا
பொறாமையினால்
بَيْنَهُمْۚ
தங்களுக்கு மத்தியில்
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உமது இறைவன்
يَقْضِى
தீர்ப்பளிப்பான்
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
فِيمَا كَانُوا۟
அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில்

Wa aatainaahum baiyinaatim minal amri famakh talafooo illaa mim ba'di maa jaaa'ahumul 'ilmu baghyam bainahum; inna Rabbaka yaqdee bainahum Yawmal Qiyaamati feemaa kaanoo feehi yakhtalifoon

அன்றி, நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்துவிட்டனர். (நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டவைகளைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்.

Tafseer

ثُمَّ
பிறகு
جَعَلْنَٰكَ
உம்மை அமைத்தோம்
عَلَىٰ شَرِيعَةٍ
தெளிவான சட்டங்கள் மீது
مِّنَ ٱلْأَمْرِ
இந்த மார்க்கத்தினுடைய
فَٱتَّبِعْهَا
ஆகவே அதையே பின்பற்றுவீராக!
وَلَا تَتَّبِعْ
பின்பற்றாதீர்
أَهْوَآءَ
மன விருப்பங்களை
ٱلَّذِينَ لَا
அறியாதவர்களின்

Summa ja'alnaaka 'alaa sharee'atim minal amri fattabi'haa wa laa tattabi'ahwaaa'al-lazeena laa ya'lamoon

(நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே, அதனையே நீங்கள் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பத்தை நீங்கள் பின்பற்றாதீர்கள்.

Tafseer

إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَن يُغْنُوا۟
அறவே தடுக்க மாட்டார்கள்
عَنكَ
உம்மை விட்டு
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
شَيْـًٔاۚ وَإِنَّ
எதையும்/நிச்சயமாக
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
أَوْلِيَآءُ بَعْضٍۖ
நண்பர்கள்/சிலருக்கு
وَٱللَّهُ وَلِىُّ
அல்லாஹ்/நண்பன்
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களின்

Innahum lany yughnoo 'anka minal laahi shai'aa; wa innaz zaalimeena ba'duhum awliyaaa'u ba'dinw wallaahu waliyyul muttaqeen

நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உங்களுக்கு யாதொரு உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்களுள் சிலர், (அவர்களில்) சிலருக்குத்தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல.) அல்லாஹ், இறை அச்சமுடைய பரிசுத்தவான்களுக்கு நண்பன்.

Tafseer

هَٰذَا
இது
بَصَٰٓئِرُ
தெளிவான ஆதாரங்களும்
لِلنَّاسِ
மக்களுக்கு
وَهُدًى
நேர்வழியும்
وَرَحْمَةٌ
கருணையுமாகும்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يُوقِنُونَ
உறுதி கொள்கின்றனர்

Haazaa basaaa'iru linnaasi wa hudanw wa rahmatul liqawminy yooqinoon

இது மனிதர்களுக்கு நல்லுணர்ச்சியாகவும், நம்பக்கூடிய மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது.

Tafseer