Skip to main content

وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
أَخَا
சகோதரரை
عَادٍ
ஆது சமுதாயத்தின்
إِذْ أَنذَرَ
அவர் எச்சரித்த சமயத்தை
قَوْمَهُۥ
தனது மக்களை
بِٱلْأَحْقَافِ
மணல் பாங்கான இடத்தில்
وَقَدْ
திட்டமாக
خَلَتِ
சென்றுள்ளனர்
ٱلنُّذُرُ
எச்சரிப்பாளர்கள்
مِنۢ بَيْنِ
இவருக்கு முன்னரும்
وَمِنْ خَلْفِهِۦٓ
இவருக்கு பின்னரும்
أَلَّا تَعْبُدُوٓا۟
நீங்கள் வணங்காதீர்கள்
إِلَّا ٱللَّهَ
அல்லாஹ்வை அன்றி
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
عَلَيْكُمْ
உங்கள் மீது
عَذَابَ
தண்டனையை
يَوْمٍ
நாளின்
عَظِيمٍ
பெரிய(து)

Wazkur akhaa 'Aad, iz anzara qawmahoo bil Ahqaafi wa qad khalatin nuzuru mim baini yadaihi wa min khalfiheee allaa ta'budooo illal laaha inneee akhaafu 'alaikum 'azaaba Yawmin 'azeem

(நபியே!) நீங்கள் (ஹூத் நபியாகிய) "ஆது" உடைய சகோதரரை நினைத்துப் பாருங்கள். அவருக்கு முன்னும், பின்னும் தூதர்கள் பலர் (அவர்களிடம்) வந்திருக்கின்றனர். தன்னுடைய மக்களை (அவர்) "அஹ்காஃப்" என்ற (மணற்பாங்கான) இடத்தில் (சந்தித்து அவர்களை நோக்கி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்து "அல்லாஹ்வையன்றி (மற்றெவரையும்) நீங்கள் வணங்காதீர்கள். (வணங்கினால்,) நிச்சயமாக மகத்தான நாளின் வேதனை உங்கள் மீது இறங்கி விடுமென்று நான் பயப்படுகின்றேன்" (என்றார்).

Tafseer

قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
أَجِئْتَنَا
நீர் எங்களிடம் வந்தீரா?
لِتَأْفِكَنَا
எங்களை திருப்புவதற்காக
عَنْ ءَالِهَتِنَا
எங்கள் தெய்வங்களை விட்டு
فَأْتِنَا بِمَا
எங்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதை எங்களிடம் கொண்டு வருவீராக!
إِن كُنتَ
நீர் இருந்தால்
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்

Qaaloo aji'tanaa litaa fikanaa 'an aalihatinaa faatinaa bimaa ta'idunaaa in kunta minas saadiqeen

அதற்கவர்கள், "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விடவா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? நீங்கள் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீங்கள் எங்களைப் பயமுறுத்தும் வேதனையை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
إِنَّمَا ٱلْعِلْمُ
அறிவெல்லாம்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்தான் இருக்கிறது.
وَأُبَلِّغُكُم
உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன்
مَّآ أُرْسِلْتُ
எதை/அனுப்பப்பட்டேன்
بِهِۦ
அதைக் கொண்டு
وَلَٰكِنِّىٓ
என்றாலும் நான்
أَرَىٰكُمْ
உங்களை கருதுகிறேன்
قَوْمًا
மக்களாக
تَجْهَلُونَ
நீங்கள் அறியாத(வர்கள்)

Qaala innamal 'ilmu indal laahi wa uballighukum maaa uriltu bihee wa laakinneee araakum qawman tajhaloon

அதற்கவர், (அவர்களை நோக்கி "உங்களுக்கு வேதனை எப்பொழுது அனுப்பப்படும் என்ற ஞான விஷயம்) எல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கின்றன. எவ்விஷயத்தை உங்களுக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேனோ, அதனையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். ஆயினும், நீங்கள் அறிவில்லாத மக்கள் என்று நான் எண்ணுகின்றேன்" என்று கூறினார்.

Tafseer

فَلَمَّا رَأَوْهُ
அவர்கள் அதை பார்த்த போது
عَارِضًا
அடர்த்தியான கார் மேகமாக
مُّسْتَقْبِلَ
முன்னோக்கி வரக்கூடிய(து)
أَوْدِيَتِهِمْ
தங்களது பள்ளத்தாக்கை
قَالُوا۟
கூறினார்கள்
هَٰذَا
இது
عَارِضٌ
அடர்த்தியான கார்மேகமாகும்
مُّمْطِرُنَاۚ
நமக்கு மழை பொழிவிக்கும்
بَلْ هُوَ
மாறாக இது
مَا ٱسْتَعْجَلْتُم
எதை/நீங்கள் அவசரமாகத் தேடினீர்கள்
بِهِۦۖ
அதை
رِيحٌ
(இது) ஒரு காற்றாகும்
فِيهَا
இதில் உள்ளது
عَذَابٌ
தண்டனை
أَلِيمٌ
வலி தரக்கூடிய(து)

Falammaa ra awhu 'aaridam mustaqbila awdiyatihim qaaloo haazaa 'aaridum mumtirunaa; bal huwa masta'jaltum bihee reehun feehaa 'azaabun aleem

பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, "இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்" என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) "அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது" (என்றும் கூறப்பட்டது).

Tafseer

تُدَمِّرُ
இது சின்னா பின்னமாக்கிவிடும்
كُلَّ شَىْءٍۭ
எல்லாவற்றையும்
بِأَمْرِ
கட்டளைப்படி
رَبِّهَا
தனது இறைவனின்
فَأَصْبَحُوا۟
ஆகிவிட்டனர்
لَا يُرَىٰٓ
பார்க்க முடியாதபடி
إِلَّا
தவிர
مَسَٰكِنُهُمْۚ
அவர்களின் வசிப்பிடங்களை
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
نَجْزِى
கூலி கொடுப்போம்
ٱلْقَوْمَ
மக்களுக்கு
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளான

Tudammiru kulla shai'im bi-amri Rabbihaa fa asbahoo laa yuraaa illaa masaakinuhum; kazaalika najzil qawmal mujrimeen

ஆகவே, அது தன் இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் அழித்து விட்டது. அவர்கள் இருந்த வீடுகளைத் தவிர, (அனைவரும் அழிந்து ஒருவருமே) காணப்படாமல் ஆகிவிட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
مَكَّنَّٰهُمْ
அவர்களுக்கு நாம் வசதியளித்தோம்
فِيمَآ
எதில்
إِن مَّكَّنَّٰكُمْ
உங்களுக்கு நாம் வசதியளிக்கவில்லை(யோ)
فِيهِ
அதில்
وَجَعَلْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
لَهُمْ
அவர்களுக்கு
سَمْعًا
செவியை(யும்)
وَأَبْصَٰرًا
பார்வைகளையும்
وَأَفْـِٔدَةً
உள்ளங்களையும்
فَمَآ أَغْنَىٰ
தடுக்கவில்லை
عَنْهُمْ
அவர்களை விட்டும்
سَمْعُهُمْ
அவர்களின் செவி(யும்)
وَلَآ
பார்வைகளும்
أَبْصَٰرُهُمْ
பார்வைகளும் அவர்களின்
وَلَآ أَفْـِٔدَتُهُم
அவர்களின் உள்ளங்களும்
مِّن شَىْءٍ
எதையும்
إِذْ كَانُوا۟
அவர்கள் இருந்தபோது
يَجْحَدُونَ
மறுப்பவர்களாக
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَحَاقَ
இன்னும் சூழ்ந்து கொண்டது
بِهِم
அவர்களை
مَّا كَانُوا۟
எது/இருந்தார்கள்
بِهِۦ
அதை
يَسْتَهْزِءُونَ
பரிகாசம் செய்பவர்களாக

Wa laqad makkannaahum feemaaa im makkannaakum feehi waj'alnaa lahum sam'anw wa absaaranw wa af'idatan famaaa aghnaa 'anhum samu'uhum wa laaa absaaruhum wa laaa af'idatuhum min shai'in iz kaanoo yajhadoona bi Aayaatil laahi wa haaqa bihim maa kaanoo bihee yastahzi'oon

உங்களுக்குச் செய்து கொடுக்காத வசதிகளையெல்லாம் நிச்சயமாக நாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம். அன்றி, நாம் அவர்களுக்குச் செவியையும் (கொடுத்தோம்.) கண்களையும் (கொடுத்தோம். சிந்திக்கக்கூடிய) உள்ளத்தையும் கொடுத்தோம். ஆயினும், அவர்கள் அல்லாஹ்வினுடைய வசனங்களை நிராகரித்ததன் காரணமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய உள்ளங்களும் அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்கவில்லை. அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த தண்டனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
مَا حَوْلَكُم
உங்களை சுற்றி உள்ளவற்றை
مِّنَ ٱلْقُرَىٰ
ஊர்களில்
وَصَرَّفْنَا
இன்னும் நாம் விவரித்தோம்
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்புவதற்காக

Wa laqad ahlaknaa ma hawlakum minal quraa wa sarrafnal Aayaati la'allahum yarji'oon

உங்களைச் சூழ்ந்து (வசித்து) இருந்த ஊரார்களையும் நிச்சயமாக நாம் அழித்துவிட்டோம். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி நம்மிடம்) திரும்பி வரும் பொருட்டுப் பல அத்தாட்சிகளை (ஒன்றன்பின் ஒன்றாக) நாம் காண்பித்து வந்தோம். (எனினும், அவைகளை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம்.)

Tafseer

فَلَوْلَا نَصَرَهُمُ
(அவர்கள்) இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா?
ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟
எவர்களை/எடுத்துக் கொண்டார்கள்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
قُرْبَانًا
வழிபாட்டுக்காக
ءَالِهَةًۢۖ
தெய்வங்களாக
بَلْ
மாறாக
ضَلُّوا۟
அவர்கள் மறைந்து விட்டனர்
عَنْهُمْۚ
இவர்களை விட்டு
وَذَٰلِكَ
இது
إِفْكُهُمْ
இவர்களின்பொய்(யும்)
وَمَا كَانُوا۟
இன்னும் எதை/இருந்தார்களோ
يَفْتَرُونَ
இட்டுக் கட்டுபவர்களாக

Falaw laa nasarahumul lazeenat takhazoo min doonil laahi qurbaanan aalihatam bal dalloo 'anhum' wa zaalika ifkuhum wa maa kaanoo yaftaroon

(அல்லாஹ்வுக்குத்) தங்களைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்கள் என்று அல்லாஹ் அல்லாதவைகளை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவைகளேனும் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? ஆனால், அவைகளெல்லாம் இவர்களை விட்டும் மறைந்து விட்டன. இவைகளெல்லாம் அவர்கள் கற்பனை செய்துகொண்டு பொய்யாகக் கூறியவைகள்தாம் (என்று தெளிவாகி விட்டது).

Tafseer

وَإِذْ صَرَفْنَآ
நாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக!/உம் பக்கம்
نَفَرًا
சில நபர்களை
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களின்
يَسْتَمِعُونَ
செவிமடுக்கின்றனர்
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
فَلَمَّا حَضَرُوهُ
அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது
قَالُوٓا۟
கூறினார்கள்
أَنصِتُوا۟ۖ
வாய்மூடி இருங்கள்!
فَلَمَّا قُضِىَ
முடிக்கப்பட்ட போது
وَلَّوْا۟
திரும்பினார்கள்
إِلَىٰ قَوْمِهِم
தங்களது சமுதாயத்தினர் பக்கம்
مُّنذِرِينَ
எச்சரிப்பவர்களாக

Wa iz sarafinaaa ilaika nafaram minal jinni yastami'oonal Quraana falammaa hadaroohu qaalooo ansitoo falammaa qudiya wallaw ilaa qawmihim munzireen

(நபியே!) இந்தக் குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உங்களிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) "நீங்கள் வாய் பொத்தி (இதனைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்" என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர்.

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
يَٰقَوْمَنَآ
எங்கள் சமுதாயமே!
إِنَّا سَمِعْنَا
நிச்சயமாக நாங்கள் செவியுற்றோம்
كِتَٰبًا
ஒரு வேதத்தை
أُنزِلَ
இறக்கப்பட்ட(து)
مِنۢ بَعْدِ
பின்னர்
مُوسَىٰ
மூஸாவிற்கு
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக்கூடிய
لِّمَا بَيْنَ
தனக்கு முந்தியவற்றை
يَهْدِىٓ
அது வழி காட்டுகிறது
إِلَى ٱلْحَقِّ
உண்மைக்கு(ம்)
وَإِلَىٰ طَرِيقٍ
பாதைக்கும்
مُّسْتَقِيمٍ
மிக நேரான

Qaaloo yaa qawmanaaa innaa sami'naa Kitaaban unzila mim ba'di Moosa musaddiqal limaa baina yadihi yahdeee ilal haqqi wa ilaa Tareeqim Mustaqeem

(அவர்களை நோக்கி) "எங்களுடைய இனத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கின்றது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகின்றது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகின்றது.

Tafseer