Skip to main content

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ٱشْتَرَىٰ مِنَ
விலைக்கு வாங்கினான்/இருந்து
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
أَنفُسَهُمْ
உயிர்களை/அவர்களுடைய
وَأَمْوَٰلَهُم
இன்னும் செல்வங்களை/அவர்களுடைய
بِأَنَّ
பகரமாக/நிச்சயம்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلْجَنَّةَۚ
சொர்க்கம்
يُقَٰتِلُونَ
போர் புரிவார்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَيَقْتُلُونَ
கொல்வார்கள்
وَيُقْتَلُونَۖ
இன்னும் கொல்லப்படுவார்கள்
وَعْدًا
வாக்குறுதியாக
عَلَيْهِ
தன் மீது
حَقًّا
கடமையான
فِى ٱلتَّوْرَىٰةِ
தவ்றாத்தில்
وَٱلْإِنجِيلِ
இன்னும் இன்ஜீல்
وَٱلْقُرْءَانِۚ
இன்னும் குர்ஆன்
وَمَنْ أَوْفَىٰ
யார்/அதிகம் நிறைவேற்றுபவர்
بِعَهْدِهِۦ
தன் வாக்கை
مِنَ ٱللَّهِۚ
அல்லாஹ்வை விட
فَٱسْتَبْشِرُوا۟
ஆகவேமகிழ்ச்சியுறுங்கள்
بِبَيْعِكُمُ
விற்பனையைக் கொண்டு/உங்கள்
ٱلَّذِى
எது
بَايَعْتُم
விற்றுக் கொண்டீர்கள்
بِهِۦۚ
அதற்குப் பகரமாக
وَذَٰلِكَ هُوَ
இதுதான்
ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
வெற்றி/மகத்தானது

Innal laahash taraa minal mu'mineena anfusahum wa amwaalahum bi anna lahumul jannah; yuqaatiloona fee sabeelil laahi fa yaqtuloona wa yuqtaloona wa'dan 'alaihi haqqan fit Tawraati wal Injeeli wal Qur-aan; wa man awfaa be'ahdihee minal laah; fastabshiroo bibai'ikumul lazee baaya'tum bih; wa zaalika huwal fawzul 'azeem

அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்குச் சுவனபதி தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளை) கொள்வார்கள்; (அல்லது) கொள்ளப்பட்டு (இறந்து) விடுவார்கள். (இவ்விரு நிலைமைகளிலும் அவர்களுக்குச் சுவனபதி தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ் வாக்களித்துத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கின்றான். அல்லாஹ்வைவிட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த இவ்வர்த்தகத்தைப் பற்றி மகிழ்ச்சியடையுங்கள். நிச்சயமாக இது(வன்றோ) மகத்தான பெரும் வெற்றி!

Tafseer

ٱلتَّٰٓئِبُونَ
திருந்தியவர்கள்
ٱلْعَٰبِدُونَ
வணக்கசாலிகள்
ٱلْحَٰمِدُونَ
புகழ்பவர்கள்
ٱلسَّٰٓئِحُونَ
நோன்புநோற்பவர்கள்
ٱلرَّٰكِعُونَ
குனிபவர்கள்
ٱلسَّٰجِدُونَ
சிரம் பணிபவர்கள்
ٱلْءَامِرُونَ
ஏவக்கூடியவர்கள்
بِٱلْمَعْرُوفِ
நன்மையை
وَٱلنَّاهُونَ
இன்னும் தடுக்கக்கூடியவர்கள்
عَنِ ٱلْمُنكَرِ
பாவத்தை விட்டு
وَٱلْحَٰفِظُونَ
இன்னும் பாதுகாப்பவர்கள்
لِحُدُودِ
வரம்புகளை, சட்டங்களை
ٱللَّهِۗ
அல்லாஹ்வுடைய
وَبَشِّرِ
இன்னும் நற்செய்தி கூறுவீராக
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

At taaa'iboonal 'aabidoonal haamidoonas saaa'ihoonar raaki'oonas saajidoonal aamiroona bilma'roofi wannaahoona 'anil munkari walhaafizoona lihudoodil laah; wa bashshiril mu'mineen

பாவத்திலிருந்து விலகிக் கொண்டவர்களும்; (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும்; (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும்; (நோன்பு நோற்பவர்களும், மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பிரயாணம் செய்பவர்களும்; குனிந்து சிரம் பணிந்து (தொழுபவர்களும்;) நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும்; பாவமான காரியங்களை விலக்குபவர்களும்; அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சுவனபதி கிடைக்குமென்று நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

مَا كَانَ
தகுந்ததல்ல
لِلنَّبِىِّ
நபிக்கு
وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟
இன்னும் எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
أَن يَسْتَغْفِرُوا۟
அவர்கள் மன்னிப்புக் கோருவது
لِلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களுக்கு
وَلَوْ كَانُوٓا۟
அவர்கள் இருந்தாலும்
أُو۟لِى قُرْبَىٰ
உறவினர்களாக
مِنۢ بَعْدِ
பின்னர்
مَا تَبَيَّنَ
தெளிவாகிய
لَهُمْ
தங்களுக்கு
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
أَصْحَٰبُ
வாசிகள்
ٱلْجَحِيمِ
நரகம்

Maa kaana lin nabiyyi wallazeena aamanooo ai yastaghfiroo lilmushrikeena wa law kaanoo ulee qurbaa mim ba'di maa tabiyana lahum annahum Ashaabul jaheem

இணைவைத்து வணங்குபர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய பந்துக்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?)

Tafseer

وَمَا كَانَ
இருக்கவில்லை
ٱسْتِغْفَارُ
மன்னிப்புக் கோரியது
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
لِأَبِيهِ
தன் தந்தைக்கு
إِلَّا
தவிர
عَن مَّوْعِدَةٍ
ஒரு வாக்குறுதிக்காக
وَعَدَهَآ
அதை வாக்களித்தார்
إِيَّاهُ
அவருக்கு
فَلَمَّا تَبَيَّنَ
தெளிவான போது
لَهُۥٓ
அவருக்கு
أَنَّهُۥ
நிச்சயமாக அவர்
عَدُوٌّ
ஓர் எதிரி
لِّلَّهِ
அல்லாஹ்வுக்கு
تَبَرَّأَ
அவர் விலகிக் கொண்டார்
مِنْهُۚ
அவரிலிருந்து
إِنَّ إِبْرَٰهِيمَ
நிச்சயமாக இப்றாஹீம்
لَأَوَّٰهٌ
அதிகம் பிரார்த்திப்பவர்
حَلِيمٌ
பெரும் சகிப்பாளர்

Wa maa kaanas tighfaaru ibraaheema li abeehi illaa 'ammaw 'idatinw wa 'adahaaa iyyaahu falammaa tabaiyana lahooo annahoo 'aduwwul lillaahi tabarra a minh; inna Ibraaheema la awwaahum haleem

இப்ராஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரிய தெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக் காகவே அன்றி வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு எதிரி எனத் தெளிவாகத் தெரிந்ததும் அ(வருக்காக மன்னிப்புக் கோருவ)திலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் மிக இரக்கமும் அடக்கமும் உடையவராக இருந்தார்.

Tafseer

وَمَا كَانَ
இருக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
لِيُضِلَّ
வழிகெடுப்பவனாக
قَوْمًۢا
ஒரு கூட்டத்தை
بَعْدَ
பின்னர்
إِذْ هَدَىٰهُمْ
அவன்/நேர்வழிப்படுத்திய/அவர்களை
حَتَّىٰ
வரை
يُبَيِّنَ
விவரிப்பான்
لَهُم
அவர்களுக்கு
مَّا يَتَّقُونَۚ
எவற்றை/அவர்கள் தவிர்ந்து கொள்வார்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa maa kaanal laahu liyudilla qawmam ba'da iz hadaahum hatta yubaiyina lahum maa yattaqoon; innal laaha bikulli shai'in 'Aleem

ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்திய பின்னர், அவர்கள் தவறிழைக்கும்படி அவன் (விட்டு) விடமாட்டான். அவர்கள் விலகிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை என்பதை அவன் அவர்களுக்கு விபரமாக அறிவித்து வருவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَهُۥ مُلْكُ
அவனுக்கே/ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியின்
يُحْىِۦ
உயிர்ப்பிக்கிறான்
وَيُمِيتُۚ
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
وَمَا لَكُم
உங்களுக்கு இல்லை
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
مِن وَلِىٍّ
ஒரு பாதுகாவலர்
وَلَا نَصِيرٍ
ஓர் உதவியாளர் இல்லை

Innal laaha lahoo mulkus samaawaati wal ardi yuhyee wa yumeet; wa maa lakum min doonil laahi minw waliyyinw wa laa naseer

வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக் குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்கும்படியும் செய்கின்றான். ஆகவே, அல்லாஹ்வை அன்றி உங்களை பாதுகாப்பவர்களும் இல்லை; (உங்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை.

Tafseer

لَّقَد
திட்டவட்டமாக
تَّابَ
மன்னித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَى ٱلنَّبِىِّ
நபி மீது
وَٱلْمُهَٰجِرِينَ
இன்னும் முஹாஜிர்கள்
وَٱلْأَنصَارِ
இன்னும் அன்ஸாரிகள்
ٱلَّذِينَ
எவர்கள்
ٱتَّبَعُوهُ
அவரைப் பின்பற்றினார்கள்
فِى سَاعَةِ
காலத்தில்
ٱلْعُسْرَةِ
சிரமம்
مِنۢ بَعْدِ
பின்னர்
مَا كَادَ
நெருங்கியது
يَزِيغُ
வழிதவற
قُلُوبُ
உள்ளங்கள்
فَرِيقٍ
ஒரு பிரிவினரின்
مِّنْهُمْ
அவர்களில்
ثُمَّ
பிறகு
تَابَ
மன்னித்தான்
عَلَيْهِمْۚ
அவர்களை
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
بِهِمْ
அவர்கள் மீது
رَءُوفٌ
இரக்கமுள்ளவன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Laqat taabal laahu 'alan nabiyyi wal Muhaajireena wal Ansaaril lazeenat taba'oohu fee saa'atil 'usrati mim ba'di maa kaada yazeeghu quloobu fareeqim minhum summma taaba 'alaihim; innahoo bihim Ra'oofur Raheem

நபியின் மீது நிச்சயமாக அல்லாஹ் அருள் புரிந்தான். (அவ்வாறே) கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மீதும், அன்ஸார்கள் மீதும் (அருள் புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினருடைய உள்ளங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து, அவர்கள் மீது அருள்புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது பேரன்பும் கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.

Tafseer

وَعَلَى
மீது
ٱلثَّلَٰثَةِ
மூவர்
ٱلَّذِينَ
எவர்கள்
خُلِّفُوا۟
பிற்படுத்தப்பட்டனர்
حَتَّىٰٓ إِذَا
வரை/போது
ضَاقَتْ
நெருக்கடியானது
عَلَيْهِمُ
அவர்களுக்கு
ٱلْأَرْضُ
பூமி
بِمَا رَحُبَتْ
விசாலமாக இருந்தும்
وَضَاقَتْ
இன்னும் நெருக்கடியானது
عَلَيْهِمْ
அவர்கள் மீது
أَنفُسُهُمْ
ஆன்மாக்கள்/அவர்களின்
وَظَنُّوٓا۟
இன்னும் அவர்கள் உறுதி கொண்டனர்
أَن لَّا
அறவே இல்லை
مَلْجَأَ
ஒதுங்குமிடம்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
إِلَّآ إِلَيْهِ
தவிர/அவனிடமே
ثُمَّ
பிறகு
تَابَ
அவன் மன்னித்தான்
عَلَيْهِمْ
அவர்களை
لِيَتُوبُوٓا۟ۚ
அவர்கள் திருந்துவதற்காக
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ் அவன்தான்
ٱلتَّوَّابُ
மகா அங்கீகரிப்பவன்
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Wa 'alas salaasatil lazeena khullifoo hattaaa izaa daaqat 'alaihimul ardu bimaa rahubat wa daaqat 'alaihim anfusuhum wa zannnooo al laa malja-a minal laahi illaaa ilaihi summa taaba 'alaihim liyatooboo; innal laaha Huwat Tawwaabur Raheem

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்.) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் மிக்க கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனை விட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்து கொண்டனர். ஆதலால், அவர்கள் (பாவத்தில் இருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَكُونُوا۟
இன்னும் இருங்கள்
مَعَ
உடன்
ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்கள்

Yaaa aiyuhal lazeena aamanut taqul laaha wa koonoo ma'as saadiqeen

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்.

Tafseer

مَا كَانَ
தகுந்ததல்ல
لِأَهْلِ ٱلْمَدِينَةِ
மதீனாவாசிகளுக்கு
وَمَنْ
இன்னும் எவர்
حَوْلَهُم
அவர்களைச் சுற்றி
مِّنَ ٱلْأَعْرَابِ
கிராம அரபிகளில்
أَن يَتَخَلَّفُوا۟
அவர்கள் பின்தங்குவது
عَن رَّسُولِ
தூதரை விட்டு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلَا يَرْغَبُوا۟
இன்னும் அவர்கள் நேசிப்பது (தகுந்தது) இல்லை
بِأَنفُسِهِمْ
தங்கள் உயிர்களை
عَن نَّفْسِهِۦۚ
அவருடைய உயிரைவிட
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
لَا يُصِيبُهُمْ
அடையாது/அவர்களுக்கு
ظَمَأٌ
ஒரு தாகம்
وَلَا نَصَبٌ
ஒரு களைப்பு
وَلَا مَخْمَصَةٌ
ஒரு பசி
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلَا يَطَـُٔونَ
இன்னும் மிதிக்கமாட்டார்கள்
مَوْطِئًا
ஓர் இடம்
يَغِيظُ
கோபமூட்டும்
ٱلْكُفَّارَ
நிராகரிப்பாளர்களை
وَلَا يَنَالُونَ
இன்னும் அடையமாட்டார்கள்
مِنْ
இருந்து
عَدُوٍّ
ஓர் எதிரி
نَّيْلًا
ஒரு துன்பத்தை
إِلَّا
தவிர
كُتِبَ
எழுதப்பட்டது
لَهُم
அவர்களுக்கு
بِهِۦ
இவற்றுக்குப் பதிலாக
عَمَلٌ
செயல்
صَٰلِحٌۚ
நன்மையானது
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يُضِيعُ
வீணாக்க மாட்டான்
أَجْرَ
கூலியை
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோரின்

Maa kaana li ahlil Madeenati wa man hawlahum minal A'raabi ai yatakhallafoo 'ar-Rasoolil laahi wa laa yarghaboo bi anfusihim 'an nafsih; zaalika bi annahum laa yuseebuhum zama unw wa laa nasabunw wa laa makhmasatun fee sabeelil laahi wa laa yata'oona mawti'ai yagheezul kuffaara wa laa yanaaloona min 'aduwwin nailan illaa kutiba lahum bihee 'amalun saalih; innal laaha laa yudee'u ajral muhsineen

மதீனாவாசிகளாயினும் சரி அல்லது அவர்களைச் சூழ்ந்து வசிக்கும் கிராமத்து அரபிகளாயினும் சரி, அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் (பிரிந்து) பின் தங்குவதும்; (அல்லாஹ்வுடைய) தூதரின் உயிரைவிட தங்களின் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுமானதல்ல. ஏனென்றால், அல்லாஹ் வுடைய பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், கஷ்டம், பசி (ஆகியவைகளும்) நிராகரிப்பவர்களைக் கோபமூட்டும்படியான இடத்தில் கால் வைத்து, அதனால் எதிரியிடமிருந்து யாதொரு துன்பத்தையடைதல் ஆகிய இவையனைத்தும் அவர்களுடைய நன்மைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நன்மை செய்பவர்களின் (அழகிய பண்பாளர்களின்) கூலியை வீணாக்கி விடுவதில்லை.

Tafseer