Skip to main content

فَرِحَ
மகிழ்ச்சியடைந்தனர்
ٱلْمُخَلَّفُونَ
பின்தங்கியவர்கள்
بِمَقْعَدِهِمْ
தாங்கள் தங்கியதைப் பற்றி
خِلَٰفَ رَسُولِ
மாறாக/தூதருக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَكَرِهُوٓا۟
இன்னும் வெறுத்தனர்
أَن يُجَٰهِدُوا۟
அவர்கள் போரிடுவதை
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களால்
وَأَنفُسِهِمْ
இன்னும் தங்கள் உயிர்களால்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَقَالُوا۟
கூறினர்
لَا تَنفِرُوا۟
புறப்படாதீர்கள்
فِى ٱلْحَرِّۗ
வெயிலில்
قُلْ
கூறுவீராக
نَارُ جَهَنَّمَ
நெருப்பு/நரகத்தின்
أَشَدُّ
மிகக் கடுமையானது
حَرًّاۚ
வெப்பத்தால்
لَّوْ كَانُوا۟
அவர்கள் இருக்க வேண்டுமே!
يَفْقَهُونَ
சிந்தித்து விளங்குபவர்களாக

Farihal mukhallafoona bimaq'adihim khilaafa Rasoolil laahi wa karihooo ai yujaahidoo bi amwaalihim wa anfusihim fee sabeelil laahi wa qaaloo la tanfiroo fil harr; qul Naaru jahannama ashaddu harraa; law kaanoo yafqahoon

(போருக்குச் செல்லாது) பின் தங்கிவிட்டவர்கள், அல்லாஹ்வின் தூதரு(டைய கட்டளை)க்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி சந்தோஷமடைகின்றனர். அன்றி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து போர் செய்வதை வெறுத்து (மற்றவர்களை நோக்கி) "இந்த வெப்பகாலத்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) "நரகத்தின் நெருப்பு (இதைவிட) கொடிய உஷ்ணமானது" என்று நீங்கள் கூறுங்கள். (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Tafseer

فَلْيَضْحَكُوا۟
அவர்கள் சிரிக்கட்டும்
قَلِيلًا
குறைவாக
وَلْيَبْكُوا۟
அவர்கள் அழட்டும்
كَثِيرًا
அதிகமாக
جَزَآءًۢ
கூலியாக
بِمَا كَانُوا۟
இருந்ததற்காக
يَكْسِبُونَ
செய்வார்கள்

Falyadhakoo qaleelanw walyabkoo kaseeran jazaaa'am bimaa kaanoo yaksiboon

(இம்மையில்) அவர்கள் வெகு குறைவாகவே சிரிக்கவும். ஏனென்றால், அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குப் பிரதிபலனாக (மறுமையில்) அதிகமாகவே அழவேண்டிய (திருக்கின்ற)து!

Tafseer

فَإِن رَّجَعَكَ
திருப்பினால்/உம்மை
ٱللَّهُ
அல்லாஹ்
إِلَىٰ طَآئِفَةٍ
ஒரு கூட்டத்திடம்
مِّنْهُمْ
அவர்களில்
فَٱسْتَـْٔذَنُوكَ
அனுமதி கோரினால்/உம்மிடம்
لِلْخُرُوجِ
வெளியேறுவதற்கு
فَقُل
கூறுவீராக
لَّن تَخْرُجُوا۟
அறவே புறப்படாதீர்கள்
مَعِىَ
என்னுடன்
أَبَدًا
ஒருபோதும்
وَلَن تُقَٰتِلُوا۟
இன்னும் அறவே போரிடாதீர்கள்
مَعِىَ
என்னுடன்
عَدُوًّاۖ
ஒரு எதிரியிடம்
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
رَضِيتُم
விரும்பினீர்கள்
بِٱلْقُعُودِ
உட்கார்ந்து விடுவதை
أَوَّلَ مَرَّةٍ
முதல் முறை
فَٱقْعُدُوا۟
ஆகவே உட்கார்ந்து விடுங்கள்
مَعَ ٱلْخَٰلِفِينَ
பின் தங்கி விடுபவர்களுடன்

Fa ir raja'akal laahu ilaa taaa'ifatim minhum fastaaa zanooka lilkhurooji faqul lan takhrujoo ma'iya abadanw a lan tuqaatiloo ma'iya 'aduwwan innakum radeetum bilqu'oodi awwala marratin faq'udoo ma'al khaalifeen

(நபியே!) நீங்கள் (போரில் வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்ப வரும்படி அல்லாஹ் செய்து (உங்களது வெற்றியையும், நீங்கள் கொண்டு வந்த பொருள்களையும் அவர்கள் கண்டு, உங்களுடன் மற்றொரு போருக்குப்) புறப்பட உங்களிடம் அனுமதி கோரினால் (அவர்களை நோக்கி) "நீங்கள் (போருக்கு) ஒருக்காலத்திலும் என்னுடன் புறப்படவேண்டாம். என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் நீங்கள் போர்புரிய வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் முதன் முறையில் (வீட்டில்) தங்கிவிடுவதையே விரும்பினீர்கள். ஆதலால் (இப்பொழுதும்) நீங்கள் (வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் இருந்து விடுங்கள்" என்று நபியே! நீங்கள் கூறுங்கள்.

Tafseer

وَلَا تُصَلِّ
தொழாதீர்
عَلَىٰٓ
மீது
أَحَدٍ
ஒருவர்
مِّنْهُم
அவர்களில்
مَّاتَ
இறந்தார்
أَبَدًا
ஒருபோதும்
وَلَا تَقُمْ
நிற்காதீர்
عَلَىٰ
அருகில்
قَبْرِهِۦٓۖ إِنَّهُمْ
அவருடைய புதைகுழிக்கு/நிச்சயமாக அவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَرَسُولِهِۦ
இன்னும் அவனுடைய தூதரை
وَمَاتُوا۟
இன்னும் இறந்தனர்
وَهُمْ فَٰسِقُونَ
அவர்களோ/பாவிகள்

Wa laa tusalli 'alaaa ahadim minhum maata abadanw wa laa taqum 'alaa qabriheee innahum kafaroo billaahi wa Rasoolihee wa maatoo wa hum faasiqoon

அன்றி, அவர்களில் எவர் இறந்துவிட்டாலும் அவர்கள் மீது ஒருபோதும் (ஜனாஸா) தொழுகையும் தொழாதீர்கள். அவர்களுடைய கப்ரில் (அவர்களுக்காக மன்னிப்புக்கோரி) நிற்காதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்துவிட்டதுடன் பாவிகளாகவே இறந்தும் இருக்கின்றனர்.

Tafseer

وَلَا تُعْجِبْكَ
ஆச்சரியப்படுத்த வேண்டாம்/உம்மை
أَمْوَٰلُهُمْ
செல்வங்கள்/அவர்களுடைய
وَأَوْلَٰدُهُمْۚ
இன்னும் பிள்ளைகள்/அவர்களுடைய
إِنَّمَا يُرِيدُ
நாடுவதெல்லாம்
ٱللَّهُ
அல்லாஹ்
أَن يُعَذِّبَهُم
வேதனை செய்வதற்கு/அவர்களை
بِهَا
அவற்றின் மூலம்
فِى ٱلدُّنْيَا
உலகில்
وَتَزْهَقَ
இன்னும் பிரிவதற்கு, அழிவதற்கு
أَنفُسُهُمْ
அவர்களுடைய உயிர்கள்
وَهُمْ
அவர்கள் இருக்க
كَٰفِرُونَ
நிராகரித்தவர்களாக

Wa laa tu'jibka amwaa luhum wa awlaaduhum; innamaa yureedul laahu ai yu'az zibahum bihaa fid dunyaa wa tazhaqa anfusuhum wa hum kaafiroon

அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய சந்ததிகளும் (அதிகரித்திருப்பது) உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். (ஏனென்றால்) அவற்றைக்கொண்டு இவ்வுலகிலேயே அவர்களைத் துன்புறுத்துவதையும், அவர்கள் (கர்வம்கொண்டு) நிராகரித்த வண்ணமே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.

Tafseer

وَإِذَآ أُنزِلَتْ
இறக்கப்பட்டால்
سُورَةٌ
ஓர் அத்தியாயம்
أَنْ ءَامِنُوا۟
என்று/நம்பிக்கை கொள்ளுங்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَجَٰهِدُوا۟
இன்னும் போரிடுங்கள்
مَعَ
உடன்
رَسُولِهِ
அவனுடயை தூதர்
ٱسْتَـْٔذَنَكَ
அனுமதி கோரினார்(கள்) /உம்மிடம்
أُو۟لُوا۟ ٱلطَّوْلِ
செல்வந்தர்கள்
مِنْهُمْ
அவர்களில்
وَقَالُوا۟
இன்னும் கூறுகின்றனர்
ذَرْنَا
விட்டுவிடுவீராக/எங்களை
نَكُن
இருக்கிறோம்
مَّعَ
உடன்
ٱلْقَٰعِدِينَ
உட்கார்ந்தவர்கள்

Wa izaaa unzilat Sooratun an aaminoo billaahi wa jaahidoo ma'a Rasoolihis taazanaka uluttawli minhum wa qaaloo zarnaa nakum ma'alqaa 'ideen

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுமாறு யாதொரு அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களிலுள்ள பணக்காரர்கள் (போர் புரிய வராதிருக்க) உங்களிடம் அனுமதிகோரி "எங்களை விட்டுவிடுங்கள்; (வீட்டில்) தங்கி இருப்பவர்களுடன் நாங்களும் தங்கிவிடுகின்றோம்" என்று கூறுகின்றனர்.

Tafseer

رَضُوا۟
திருப்தியடைந்தனர்
بِأَن يَكُونُوا۟
அவர்கள் ஆகிவிடுவதைக் கொண்டு
مَعَ ٱلْخَوَالِفِ
பின்தங்கிய பெண்களுடன்
وَطُبِعَ
முத்திரையிடப்பட்டது
عَلَىٰ
மீது
قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்கள்
فَهُمْ لَا
ஆகவே அவர்கள்/சிந்தித்து விளங்கமாட்டார்கள்

Radoo bi ai yakoonoo ma'al khawaalifi wa tubi'a 'alaa quloobihim fahum laa yafqahoon

(சிறியோர், முதியோர், பெண்கள் போன்ற போருக்கு வரமுடியாமல் வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்து விடவே விரும்புகின்றனர். அவர்களுடைய உள்ளங்கள் முத்திரையிடப்பட்டுவிட்டன. (ஆதலால் இதிலுள்ள இழிவை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

Tafseer

لَٰكِنِ
எனினும்
ٱلرَّسُولُ
தூதர்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
مَعَهُۥ
அவருடன்
جَٰهَدُوا۟
போரிட்டனர்
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களாலும்
وَأَنفُسِهِمْۚ
இன்னும் தங்கள் உயிர்களாலும்
وَأُو۟لَٰٓئِكَ لَهُمُ
அவர்களுக்குத்தான்
ٱلْخَيْرَٰتُۖ
நன்மைகள்
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்

Laakinir Rasoolu wal lazeena aamanoo ma'ahoo jaahadoo bi amwaalihim wa anfusihim; wa ulaaa'ika lahumul khairaatu wa ulaaa'ika humul muflihoon

எனினும் (அல்லாஹ்வுடைய) தூதரும், அவருடனுள்ள நம்பிக்கையாளர்களும் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். (இம்மை, மறுமையின்) நன்மைகள் அனைத்தும் இவர்களுக்கு உரியதே. நிச்சயமாக இவர்கள்தான் வெற்றியடைவார்கள்.

Tafseer

أَعَدَّ
ஏற்படுத்தினான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَهُمْ
அவர்களுக்காக
جَنَّٰتٍ
சொர்க்கங்களை
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَاۚ
அவற்றில்
ذَٰلِكَ
அதுதான்
ٱلْفَوْزُ
வெற்றி
ٱلْعَظِيمُ
மகத்தானது

A'addal laahu lahum Jannaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaa; zaalikal fawzul 'azeem

அல்லாஹ், அவர்களுக்காக சுவனபதிகளை தயார்செய்து வைத்திருக்கின்றான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள். இதுவோ மாபெரும் பாக்கியமாகும்.

Tafseer

وَجَآءَ
இன்னும் வந்தார்(கள்)
ٱلْمُعَذِّرُونَ
புகல் கூறுபவர்கள்
مِنَ ٱلْأَعْرَابِ
கிராமவாசிகளில்
لِيُؤْذَنَ
அனுமதி அளிக்கப்படுவதற்கு
لَهُمْ
தங்களுக்கு
وَقَعَدَ
இன்னும் உட்கார்ந்தார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
كَذَبُوا۟
பொய்யுரைத்தனர்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
وَرَسُولَهُۥۚ
இன்னும் அவனுடைய தூதர்
سَيُصِيبُ
அடையும்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
مِنْهُمْ
இவர்களில்
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தும்

Wa jaaa'al mu'az ziroona minal A'raabi liyu'zana lahum wa qa'adal lazeena kazabul laaha wa Rasoolah; sayuseebul lazeena kafaroo minhum 'azaabun aleem

கிராமத்து அரபிகளில் சிலர், (போருக்குச் செல்லாதிருக்க) அனுமதி கோரி (உங்களிடம்) வந்து புகல் கூறுகின்றனர். எனினும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பொய்யாக்கியவர்களோ (அனுமதி கோராமலேயே வீட்டில்) உட்கார்ந்து கொண்டனர். ஆகவே, இவர்களிலுள்ள (இந்)நிராகரிப்பவர்களை அதிசீக்கிரத்தில் மிகத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.

Tafseer