Skip to main content

وَٱتْلُ
ஓதுவீராக
عَلَيْهِمْ
அவர்களுக்கு
نَبَأَ
சரித்திரத்தை
نُوحٍ
நூஹூடைய
إِذْ قَالَ
சமயத்தை/அவர்கள் கூறினார்
لِقَوْمِهِۦ
தன் சமுதாயத்தை நோக்கி
يَٰقَوْمِ
என் சமுதாயமே
إِن كَانَ
இருந்தால்
كَبُرَ
பாரமாக
عَلَيْكُم
உங்கள் மீது
مَّقَامِى
நான் தங்குவது
وَتَذْكِيرِى
இன்னும் நான்உபதேசிப்பது
بِـَٔايَٰتِ
வசனங்களைக் கொண்டு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَعَلَى ٱللَّهِ
மீது/அல்லாஹ்
تَوَكَّلْتُ
நான் நம்பிக்கை வைத்தேன்
فَأَجْمِعُوٓا۟
ஆகவேமுடிவுசெய்யுங்கள்
أَمْرَكُمْ
காரியத்தை உங்கள்
وَشُرَكَآءَكُمْ
இன்னும் இணை தெய்வங்களை உங்கள்
ثُمَّ
பிறகு
لَا يَكُنْ
ஆகிவிடவேண்டாம்
أَمْرُكُمْ
காரியம் உங்கள்
عَلَيْكُمْ
உங்கள் மீது
غُمَّةً
குழப்பமானதாக
ثُمَّ
பிறகு
ٱقْضُوٓا۟
நிறைவேற்றுங்கள்
إِلَىَّ
என் பக்கம்
وَلَا تُنظِرُونِ
நீங்கள் அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு

Watlu 'alaihim naba-a-Noohin iz qaala liqawmihee yaa qawmi in kaana kabura 'alaikum maqaamee wa tazkeeree bi Aayaatil laahi fa'alal laahi tawakkaltu fa ajmi'ooo amrakum wa shurakaaa'akum summa laa yakun amrukum 'alaikum ghummatan summmaq dooo ilaiya wa laa tunziroon

(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பியுங்கள். அவர் தன் மக்களை நோக்கி, "என்னுடைய மக்களே! நான் (உங்களிடத்தில்) இருப்பதும், நான் (உங்களுக்கு) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (அதற்காக நீங்கள் எனக்கு ஏதும் தீங்கு செய்யக் கருதினால், நான் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறேன். நீங்கள் குறைவு செய்துவிட்டதாக பின்னர் உங்களுக்குக் கவலை ஏற்படாதவாறு நீங்கள் உங்கள் சகாக்களையும் சேர்த்துக்கொண்டு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (எனக்குத் தீங்கிழைக்க) ஒரு காரியத்தை முடிவு செய்துகொண்டு (அம்முடிவின்படி) எனக்குச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் தாமதிக்க வேண்டாம்" என்று கூறினார்.

Tafseer

فَإِن تَوَلَّيْتُمْ
நீங்கள் திரும்பினால்
فَمَا سَأَلْتُكُم
நான் கேட்கவில்லை/உங்களிடம்
مِّنْ أَجْرٍۖ
எந்த கூலியையும்
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
إِلَّا
தவிர
عَلَى
மீதே
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
وَأُمِرْتُ
இன்னும் கட்டளையிடப் பட்டேன்
أَنْ أَكُونَ
நான் ஆகவேண்டுமென
مِنَ ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களில்

Fa in tawallaitum famaa sa altukum min ajrin in ajriya illaa 'alal laahi wa umirtu an akoona minal muslimeen

(அன்றி,) பின்னும் நீங்கள் (என்னைப்) புறக்கணித்(து நிராகரித்)தால் (அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் எதிர்பார்க்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (மற்றெவரிடமும்) இல்லை. நான் அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டு நடக்கும்படியாகவே கட்டளையிடப்பட்டுள்ளேன்" (என்று கூறினார்.)

Tafseer

فَكَذَّبُوهُ
அவர்கள் பொய்ப்பித்தனர்
فَنَجَّيْنَٰهُ
அவரை
وَمَن
ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
مَّعَهُۥ
இன்னும் அவருடன் இருந்தவர்களை
فِى ٱلْفُلْكِ
கப்பலில்
وَجَعَلْنَٰهُمْ
இன்னும் அவர்களை ஆக்கினோம்
خَلَٰٓئِفَ
பிரதிநிதிகளாக
وَأَغْرَقْنَا
இன்னும் மூழ்கடித்தோம்
ٱلَّذِينَ
எவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
بِـَٔايَٰتِنَاۖ
நம் வசனங்களை
فَٱنظُرْ
ஆகவே கவனிப்பீராக
كَيْفَ
எவ்வாறு
كَانَ
ஆகிவிட்டது
عَٰقِبَةُ
முடிவு
ٱلْمُنذَرِينَ
எச்சரிக்கப்பட்டவர்களின்

Fakazzaboohu fanajjainaahu wa mamm'ahoo fil fulki wa ja'alnaahum khalaaa'ifa wa aghraqnal lazeena kazzaboo bi aayaatinaa fanzur kaifa kaana 'aaqibatul munzareen

(எனினும்) அவர்களோ (பின்னும்) அவரைப் பொய்யரென்றே கூறினார்கள். ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். அவர்களுக்குப் பதிலாக (அவர்களுடைய பூமியில் நாம் பாதுகாத்துக் கொண்ட) இவர்களை அதிபதிகளாக ஆக்கினோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களுடைய முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
بَعَثْنَا
அனுப்பினோம்
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
رُسُلًا
தூதர்களை
إِلَىٰ قَوْمِهِمْ
சமுதாயத்திற்கு/அவர்களுடைய
فَجَآءُوهُم
அவர்கள் வந்தார்கள் அவர்களிடம்
بِٱلْبَيِّنَٰتِ
அத்தாட்சிகளைக் கொண்டு
فَمَا كَانُوا۟
அவர்கள் இருக்கவில்லை
لِيُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக
بِمَا كَذَّبُوا۟
அவர்கள் பொய்ப்பித்தவற்றை
بِهِۦ
அதை
مِن قَبْلُۚ
முன்னர்
كَذَٰلِكَ
இவ்வாறே
نَطْبَعُ
முத்திரையிடுகிறோம்
عَلَىٰ
மீது
قُلُوبِ
உள்ளங்கள்
ٱلْمُعْتَدِينَ
வரம்புமீறிகளின்

Summma ba'asnaa mim ba'dihee Rusulan ilaa qawmihim fajaaa'oohum bilbaiyinaati famaa kaanoo liyu'minoo bimaa kazzaboo bihee min qabl; kazaalika natba'u 'alaa quloobil mu'tadeen

அவருக்குப் பின்னர் தோன்றிய மக்களுக்கும், (நாம்) தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். அத்தூதர்களும் தெளிவான பல அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். ஆயினும், இவர்களுக்கு முன்னர் (இவர்களுடைய மூதாதைகள்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவை(களான உண்மை)களை இவர்களும் நம்பிக்கைக் கொள்பவர்களாக இருக்கவில்லை. வரம்பு மீறும் இத்தகையவர் களுடைய உள்ளங்கள் மீது (அவர்களின் பாவத்தின் காரணமாக) இவ்வாறே நாம் முத்திரையிட்டு விடுகிறோம்.

Tafseer

ثُمَّ
பிறகு
بَعَثْنَا
அனுப்பினோம்
مِنۢ
பின்னர்
بَعْدِهِم
பின்னர் இவர்களுக்கு
مُّوسَىٰ
மூஸாவை
وَهَٰرُونَ
இன்னும் ஹாரூனை
إِلَىٰ
பக்கம்
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
وَمَلَإِي۟هِۦ
இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்
بِـَٔايَٰتِنَا
நம் அத்தாட்சிகளுடன்
فَٱسْتَكْبَرُوا۟
அவர்கள் கர்வம் கொண்டனர்
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
قَوْمًا
சமுதாயமாக
مُّجْرِمِينَ
குற்றம் புரிகின்றவர்கள்

Summa ba'asnaa mim ba'dihim Moosaa Wa Haaroona ilaa Fir'awna wa mala'ihee bi aayaatinaa fastakbaroo wa kaanoo qawmam mujrimeen

இவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் நம்முடைய அத்தாட்சிகளுடன் (நம்முடைய தூதராக) ஃபிர்அவ்னிடமும், அவனுடைய மக்களிடமும் அனுப்பி வைத்தோம். எனினும், அவர்கள் கர்வம்கொண்டு (சத்தியத்தை நிராகரித்து) குற்றம் செய்யும் மக்களாகவே ஆனார்கள்.

Tafseer

فَلَمَّا
போது
جَآءَهُمُ
வந்தது அவர்களுக்கு
ٱلْحَقُّ
உண்மை
مِنْ
இருந்து
عِندِنَا
நம்மிடம்
قَالُوٓا۟
கூறினார்கள்
إِنَّ
நிச்சயமாக
هَٰذَا
இது
لَسِحْرٌ
சூனியம்தான்
مُّبِينٌ
தெளிவானது

Falammaa jaaa'ahumul haqqu min 'indinaa qaalooo inna haazaa lasihrum mubeen

அவர்களிடம் நம்முடைய உண்மை(யான அத்தாட்சி) வந்தபொழுது "நிச்சயமாக இது தெளிவான சூனியம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
مُوسَىٰٓ
மூஸா
أَتَقُولُونَ
கூறுகிறீர்களா?
لِلْحَقِّ
உண்மையை
لَمَّا
போது
جَآءَكُمْۖ
வந்த உங்களிடம்
أَسِحْرٌ
சூனியமா?
هَٰذَا
இது
وَلَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்கள்
ٱلسَّٰحِرُونَ
சூனியக்காரர்கள்

Qaalaa Moosaaa ataqooloona lilhaqqi lammmaa jaaa'a kum asihrun haazaa wa laa yuflihus saabiroon

அதற்கு மூஸா (அவர்களை நோக்கி) "உங்களிடம் வந்த உண்மையை பார்த்தா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? சூனியமா இது? (அறவே இது சூனியம் இல்லை) சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்" என்று கூறினார்.

Tafseer

قَالُوٓا۟
கூறினார்கள்
أَجِئْتَنَا
நீர் எங்களிடம் வந்தீரா?
لِتَلْفِتَنَا
நீர் திருப்புவதற்கு / எங்களை
عَمَّا
விட்டு/எதை
وَجَدْنَا
நாங்கள் கண்டோம்
عَلَيْهِ
அதில்
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
وَتَكُونَ
இன்னும் ஆகிவிடுவதற்கு
لَكُمَا
உங்கள் இருவருக்கும்
ٱلْكِبْرِيَآءُ
மகத்துவம்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَمَا نَحْنُ
நாங்கள் இல்லை
لَكُمَا
உங்கள் இருவரையும்
بِمُؤْمِنِينَ
நம்பிக்கை கொள்பவர்களாக

Qaaloo aji'tanaa litalfitanaa 'ammaa wajadnaa 'alaihi aabaaa'anaa wa takoona lakumal kibriyaaa'u fil ardi wa maa nahnu lakumaa bimu' mineen

அதற்கவர்கள் "எங்கள் மூதாதையர்கள் எதில் இருக்க நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இப்புவியில் நீங்கள் இருவரும் பெரியவர்களாகி விடவுமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? உங்கள் இருவரையும் (இறைவனின் தூதர்களென்று) நாங்கள் நம்பவே மாட்டோம்" என்று கூறினார்கள்.

Tafseer

وَقَالَ
இன்னும் கூறினான்
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
ٱئْتُونِى
வாருங்கள்/என்னிடம்
بِكُلِّ
எல்லோரையும் கொண்டு
سَٰحِرٍ
சூனியக்காரர்
عَلِيمٍ
நன்கறிந்த

Wa qaala Fir'awnu' toonee bikulli saahirin 'aleem

பின்னர், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி) "சூனியத்தில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான்.

Tafseer

فَلَمَّا جَآءَ
வந்த போது
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
قَالَ
கூறினார்
لَهُم
அவர்களுக்கு
مُّوسَىٰٓ
மூஸா
أَلْقُوا۟
எறியுங்கள்
مَآ أَنتُم
எதை/நீங்கள்
مُّلْقُونَ
எறியக்கூடியவர்கள்

Falammaa jaaa'assa haratu qaala lahum Moosaaa alqoo maaa antum mulqoon

(பல இடங்களிலுமுள்ள) சூனியக்காரர்கள் (குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு) வந்து சேரவே, மூஸா அவர்களை நோக்கி "நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறி(ந்து உங்கள் சூனியத்தைச் செய்)யுங்கள்" என்று கூறினார்.

Tafseer