Skip to main content

ٱلَّذِينَ
எவர்கள்
يَذْكُرُونَ
நினைவுகூர்வார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
قِيَٰمًا
நின்றவர்களாக
وَقُعُودًا
இன்னும் உட்கார்ந்தவர்களாக
وَعَلَىٰ
இன்னும் மீது
جُنُوبِهِمْ
விலாக்கள்/ அவர்களுடைய
وَيَتَفَكَّرُونَ
இன்னும் சிந்திப்பார்கள்
فِى خَلْقِ
படைக்கப் பட்டிருப்பதில்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
رَبَّنَا
எங்கள் இறைவா
مَا خَلَقْتَ
நீ படைக்கவில்லை
هَٰذَا بَٰطِلًا
இதை/வீணாக
سُبْحَٰنَكَ
தூய்மைப்படுத்துகிறோம்/உன்னை
فَقِنَا
ஆகவே காப்பாற்று/எங்களை
عَذَابَ
வேதனையிலிருந்து
ٱلنَّارِ
(நரக) நெருப்பின்

Allazeena yazkuroonal laaha qiyaamaiw-wa qu'oodanw-wa 'alaa juno obihim wa yatafakkaroona fee khalqis samaawaati wal ardi Rabbanaa maa khalaqta haaza baatilan Subhaanak faqinaa 'azaaban Naar

இத்தகையவர்கள் (தங்கள்) நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், "எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக!

Tafseer

رَبَّنَآ
எங்கள்இறைவா
إِنَّكَ
நிச்சயமாக நீ
مَن
எவரை
تُدْخِلِ
நுழைக்கிறாய்
ٱلنَّارَ
நரக நெருப்பில்
فَقَدْ
திட்டமாக
أَخْزَيْتَهُۥۖ
இழிவு படுத்தினாய்/அவரை
وَمَا
இன்னும் இல்லை
لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
مِنْ أَنصَارٍ
உதவியாளர்களில்

Rabbanaaa innaka man tudkhilin Naara faqad akhzai tahoo wa maa lizzaalimeena min ansaar

எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவர்களை (நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ அவர்களை நிச்சயமாக நீ இழிவுபடுத்திவிட்டாய். (அத்தகைய) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவரும்) இல்லை.

Tafseer

رَّبَّنَآ
எங்கள் இறைவா
إِنَّنَا
நிச்சயமாக நாங்கள்
سَمِعْنَا
செவிமடுத்தோம்
مُنَادِيًا
ஓர் அழைப்பாளரை
يُنَادِى
அழைக்கிறார்
لِلْإِيمَٰنِ
நம்பிக்கையின் பக்கம்
أَنْ ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள் என்று
بِرَبِّكُمْ
உங்கள் இறைவனை
فَـَٔامَنَّاۚ
ஆகவே நம்பிக்கை கொண்டோம்
رَبَّنَا
எங்கள் இறைவா
فَٱغْفِرْ لَنَا
ஆகவே மன்னி/எங்களுக்கு
ذُنُوبَنَا
எங்கள் பாவங்களை
وَكَفِّرْ
இன்னும் அகற்றிடு
عَنَّا
எங்களை விட்டு
سَيِّـَٔاتِنَا
தீமைகளை/எங்கள்
وَتَوَفَّنَا
இன்னும் மரணத்தைத் தா/எங்களுக்கு
مَعَ
உடன்
ٱلْأَبْرَارِ
நல்லோர்

Rabbanaaa innanaa sami'naa munaadiyai yunaadee lil eemaani an aaminoo bi Rabbikum fa aamannaa; Rabbanaa faghfir lanaa zunoobanaa wa kaffir 'annaa saiyi aatina wa tawaffanaa ma'al abraar

எங்கள் இறைவனே! (உன் தூதரின்) அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின் பக்கம் அழைத்து "உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப் பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படிச் செய்வாயாக!

Tafseer

رَبَّنَا
எங்கள் இறைவா
وَءَاتِنَا
இன்னும் தா/எங்களுக்கு
مَا وَعَدتَّنَا
எதை/நீ வாக்களித்தாய்/எங்களுக்கு
عَلَىٰ
மூலம்
رُسُلِكَ
உன் தூதர்கள்
وَلَا
இழிவுபடுத்தாதே
تُخْزِنَا
இழிவுபடுத்தாதே எங்களை
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
إِنَّكَ
நிச்சயமாக நீ
لَا تُخْلِفُ
மாற்றமாட்டாய்
ٱلْمِيعَادَ
வாக்குறுதியை

Rabbanaa wa aatinaa maa wa'attanaa 'alaa Rusulika wa laa tukhzinaa Yawmal Qiyaamah; innaka laa tukhliful mee'aad

எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு தந்தருள்புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்திவிடாதே! நிச்சயமாக நீ வாக்குறுதி தவறுபவனல்ல" (என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.)

Tafseer

فَٱسْتَجَابَ
பதிலளித்தான்
لَهُمْ
அவர்களுக்கு
رَبُّهُمْ
அவர்களுடைய இறைவன்
أَنِّى
நிச்சயமாக நான்
لَآ أُضِيعُ
வீணாக்கமாட்டேன்
عَمَلَ
(நற்)செயலை
عَٰمِلٍ
(நற்)செயல்புரிபவரின்
مِّنكُم
உங்களில்
مِّن
இருந்து
ذَكَرٍ
ஆண்
أَوْ
அல்லது
أُنثَىٰۖ
பெண்கள்
بَعْضُكُم
உங்களில் சிலர்
مِّنۢ
இருந்து
بَعْضٍۖ
சிலர்
فَٱلَّذِينَ
எவர்கள்
هَاجَرُوا۟
ஹிஜ்ரா சென்றார்கள்
وَأُخْرِجُوا۟
இன்னும் வெளியேற்றப்பட்டார்கள்
مِن
இருந்து
دِيَٰرِهِمْ
ஊர்கள்/தங்கள்
وَأُوذُوا۟
இன்னும் துன்புறுத்தப் பட்டார்கள்
فِى سَبِيلِى
எனது பாதையில்
وَقَٰتَلُوا۟
இன்னும் போர்செய்தார்கள்
وَقُتِلُوا۟
இன்னும் கொல்லப்பட்டார்கள்
لَأُكَفِّرَنَّ
நிச்சயமாக அகற்றிடுவேன்
عَنْهُمْ
அவர்களை விட்டு
سَيِّـَٔاتِهِمْ
தீமைகளை/ அவர்களுடைய
وَلَأُدْخِلَنَّهُمْ
இன்னும் நிச்சயம் அவர்களை நுழைப்பேன்
جَنَّٰتٍ تَجْرِى
சொர்க்கங்கள்/ஓடும்
مِن
இருந்து
تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
ثَوَابًا
நன்மை
مِّنْ
இருந்து
عِندِ ٱللَّهِۗ
அல்லாஹ்விடம்
وَٱللَّهُ
அல்லாஹ்
عِندَهُۥ
அவனிடத்தில்தான்
حُسْنُ ٱلثَّوَابِ
அழகிய/நற்கூலி

Fastajaaba lahum Rabbuhum annee laaa Udee'u 'amala 'aamilim minkum min zakarin aw unsaa ba'dukum mim ba'din fal lazeena haajaroo wa ukhrijoo min diyaarihim wa oozoo fee sabeelee wa qaataloo wa qutiloo la ukaffiranna 'anhum saiyi aatihim wa la udkhilanna hum Jannnatin tajree min tahtihal anhaaru sawaabam min 'indil laah; wallaahu 'indahoo husnus sawaab

ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன் "உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர்கள் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிட மாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணோ பெண்ணோ) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர்தான். (ஆகவே, கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை. உங்களில்) எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என்னுடைய பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் நிச்சயமாக நாம் அவர்களை நுழைய வைப்போம்" (என்று கூறுவான். இது) அல்லாஹ்வினால் (அவர்களுக்குக்) கொடுக்கப்படும் நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் (இன்னும் இதனைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கின்றது.

Tafseer

لَا يَغُرَّنَّكَ
நிச்சயம் மயக்கிட வேண்டாம்/உம்மை
تَقَلُّبُ
சுற்றித்திரிவது
ٱلَّذِينَ كَفَرُوا۟
எவர்கள்/ நிராகரித்தார்கள்
فِى ٱلْبِلَٰدِ
நகரங்களில்

Laa yaghurrannaka taqal lubul lazeena kafaroo fil bilaad

(நபியே!) நிராகரிப்பவர்கள் (பெரும் வியாபாரிகளாகவும் செல்வந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது உங்களை மயக்கி (ஏமாற்றி) விடவேண்டாம்.

Tafseer

مَتَٰعٌ
ஓர் இன்பம்
قَلِيلٌ
அற்பம்
ثُمَّ
பிறகு
مَأْوَىٰهُمْ
தங்குமிடம் அவர்களுடைய
جَهَنَّمُۚ
நரகம்
وَبِئْسَ
இன்னும் கெட்டது
ٱلْمِهَادُ
தங்குமிடம்

Mataa'un qaleelun summa maawaahum Jahannam; wa bi'sal mihaad

(இது) அற்ப சுகமாகும். இதற்குப் பின்னர் அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக்கெட்டது.

Tafseer

لَٰكِنِ
எனினும்
ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
எவர்கள்/அஞ்சினர்
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
لَهُمْ
அவர்களுக்கு
جَنَّٰتٌ
சொர்க்கங்கள்
تَجْرِى
ஓடும்
مِن
இருந்து
تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَا
அதில்
نُزُلًا
விருந்தோம்பலாக
مِّنْ
இருந்து
عِندِ
இடம்
ٱللَّهِۗ
அல்லாஹ்
وَمَا
இன்னும் எது
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
خَيْرٌ
சிறந்தது
لِّلْأَبْرَارِ
நல்லோருக்கு

Laakinil lazeenat taqaw Rabbahum lahum Jannnaatun tajree min tahtihal anhaaru khaalideena feehaa nuzulammin 'indil laah; wa maa 'indal laahi khairul lil abraar

ஆயினும், எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கின்றார்களோ அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளுண்டு. அதில் அல்லாஹ்வின் விருந்தினராக (என்றென்றுமே) தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும்.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
مِنْ أَهْلِ
வேதக்காரர்களில்
لَمَن
திட்டமாக எவர்
يُؤْمِنُ
நம்பிக்கைகொள்கிறார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَمَآ أُنزِلَ
இன்னும் எது/இறக்கப்பட்டது
إِلَيْكُمْ
உங்களுக்கு
وَمَآ أُنزِلَ
இன்னும் எது/இறக்கப்பட்டது
إِلَيْهِمْ
அவர்களுக்கு
خَٰشِعِينَ
பணிந்தவர்களாக
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
لَا يَشْتَرُونَ
வாங்க மாட்டார்கள்
بِـَٔايَٰتِ
வசனங்களுக்கு பகரமாக
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ثَمَنًا
கிரயத்தை
قَلِيلًاۗ
சொற்பம்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
لَهُمْ
அவர்களுக்கு
أَجْرُهُمْ
கூலி/அவர்களுடைய
عِندَ رَبِّهِمْۗ
அவர்களின் இறைவனிடம்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
سَرِيعُ
மிக விரைவானவன்
ٱلْحِسَابِ
கணக்கெடுப்பதில்

Wa inna min Ahlil Kitaabi lamai yu minu billaahi wa maaa unzila ilaikum wa maaa unzila ilaihim khaashi 'eena lillaahi laa yashtaroona bi Aayaatil laahi samanan qaleelaa; ulaaa'ika lahum ajruhum 'inda Rabbihim; innal laaha saree'ul hisaab

(நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இத்தகையவர்களும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வைகளையும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வுக்கும் பயந்து நடக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கொடுத்து சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொள்வதுமில்லை. இத்தகையவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களது இறைவனிடத்தில் (மகத்தானதாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
ٱصْبِرُوا۟
பொறுங்கள்
وَصَابِرُوا۟
இன்னும் அதிகம் பொறுத்துக் கொள்ளுங்கள்
وَرَابِطُوا۟
இன்னும் போருக்குத் தயாராகுங்கள்
وَٱتَّقُوا۟ ٱللَّهَ
இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக

Yaaa aiyuhal lazeena aamanus biroo wa saabiroo wa raabitoo wattaqul laaha la'allakum tuflihoon

நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஒருவருக்கொருவர் சகித்துக் கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள்.

Tafseer