Skip to main content

لَّقَدْ سَمِعَ
திட்டமாக கேட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
قَوْلَ
கூற்றை
ٱلَّذِينَ
எவர்கள்
قَالُوٓا۟
கூறினார்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
فَقِيرٌ
ஏழை
وَنَحْنُ
இன்னும் நாங்கள்
أَغْنِيَآءُۘ
சீமான்கள்
سَنَكْتُبُ
பதிவு செய்வோம்
مَا قَالُوا۟
எதை/கூறினார்கள்
وَقَتْلَهُمُ
இன்னும் கொலை செய்ததை/அவர்கள்
ٱلْأَنۢبِيَآءَ
நபிமார்களை
بِغَيْرِ حَقٍّ
நியாயமின்றி
وَنَقُولُ
இன்னும் கூறுவோம்
ذُوقُوا۟
சுவையுங்கள்
عَذَابَ
வேதனையை
ٱلْحَرِيقِ
எரிக்கக் கூடியது

Laqad sami'al laahu qawlal lazeena qaalooo innal laaha faqeerunw wa nahnu aghniyaaa'; sanaktubu maa qaaloo wa qatlahumul Ambiyaa'a bighairi haqqinw wa naqoolu zooqoo 'azaaba Ihreeq

எவர்கள் "நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் சீமான்கள்" என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். (இவ்வாறு) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நிச்சயமாக நாம் பதிவு செய்து கொண்டிருக் கின்றோம். (ஆகவே, மறுமையில் அவர்களை நோக்கி) "எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" என நாம் கூறுவோம்.

Tafseer

ذَٰلِكَ
அது
بِمَا قَدَّمَتْ
எதன் காரணத்தால்/ முற்படுத்தியது
أَيْدِيكُمْ
உங்கள் கரங்கள்
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَيْسَ
இல்லை
بِظَلَّامٍ
அநீதியிழைப்பவன்
لِّلْعَبِيدِ
அடியார்களுக்கு

Zaalika bimaa qaddamat aideekum wa annal laaha laisa bizallaamil lil'abeed

(அன்றி) "நீங்கள் உங்கள் கையால் தேடிக் கொண்டதுதான் இதற்குக் காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்வதில்லை" (என்றும் கூறுவோம்.)

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
قَالُوٓا۟
கூறினார்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَهِدَ
உறுதிமொழி வாங்கினான்
إِلَيْنَآ
எங்களிடம்
أَلَّا نُؤْمِنَ
நாங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று
لِرَسُولٍ
ஒரு தூதருக்கு
حَتَّىٰ
வரை
يَأْتِيَنَا
வருவார்/எங்களிடம்
بِقُرْبَانٍ
ஒரு பலியைக்கொண்டு
تَأْكُلُهُ
சாப்பிடும்/அதை
ٱلنَّارُۗ
நெருப்பு
قُلْ
கூறுவீராக
قَدْ
திட்டமாக
جَآءَكُمْ
வந்தார்(கள்) உங்களிடம்
رُسُلٌ
பல தூதர்கள்
مِّن قَبْلِى
எனக்கு முன்னர்
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
وَبِٱلَّذِى قُلْتُمْ
இன்னும் எதைக்கொண்டு/கூறினீர்கள்
فَلِمَ قَتَلْتُمُوهُمْ
ஆகவே ஏன்?/கொலை செய்தீர்கள்/அவர்களை
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Allazeena qaalooo innal laaha 'ahida ilainaaa allaa nu'mina liRasoolin hatta yaa tiyanaa biqurbaanin taa kuluhun naar; qul qad jaaa'akum Rusulum min qablee bilbaiyinaati wa billazee qultum falima qataltumoohum in kuntum saadiqeen

(அன்றி) இவர்கள் "எத்தூதராயினும், அவர் கொடுக்கும் பலியை நெருப்பு (கரித்து) புசிப்பதை அவர் நமக்குக் காட்டும் வரையில் அவரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக் கூடாதென்று நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியிருக் கின்றான்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த நபிமார்களில் பலர் நீங்கள் கேட்ட இதனையும் (வேறு பல) தெளிவான அத்தாட்சி களையும் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருக்க உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?’

Tafseer

فَإِن كَذَّبُوكَ
ஆகவே அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
فَقَدْ كُذِّبَ
திட்டமாகபொய்பிக்கப் பட்டார்(கள்)
رُسُلٌ
தூதர்கள்
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
جَآءُو
வந்தார்கள்
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
وَٱلزُّبُرِ
இன்னும் வேத நூல்கள்
وَٱلْكِتَٰبِ
இன்னும் வேதம்
ٱلْمُنِيرِ
ஒளி வீசக்கூடியது

Fa in kaz zabooka faqad kuz ziba Rusulum min qablika jaaa'oo bilbaiyinaati waz Zuburi wal Kitaabil Muneer

(இதற்குப்) பின்னரும் அவர்கள் உங்களைப் பொய்யரெனக் கூறினால் (அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்,) உங்களுக்கு முன்னர் வந்த பல தூதர்களையும் அவர்கள் (இவ்வாறே) பொய்யரெனக் கூறினார்கள். அவர்களோ தெளிவான அத்தாட்சிகளையும், வேத நூல்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டுவந்தே இருந்தனர்.

Tafseer

كُلُّ
ஒவ்வொரு
نَفْسٍ
ஆன்மா
ذَآئِقَةُ
சுவைக்கக் கூடியது
ٱلْمَوْتِۗ
மரணத்தை
وَإِنَّمَا
எல்லாம்
تُوَفَّوْنَ
முழுமையாக நிறைவேற்றப்படுவீர்கள்
أُجُورَكُمْ
உங்கள் கூலிகளை
يَوْمَ ٱلْقِيَٰمَةِۖ
மறுமை நாளில்
فَمَن
ஆகவே, எவர்
زُحْزِحَ
தூரமாக்கப்பட்டார்
عَنِ ٱلنَّارِ
நெருப்பி லிருந்து
وَأُدْخِلَ
இன்னும் நுழைக்கப்பட்டார்
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
فَقَدْ فَازَۗ
திட்டமாக வெற்றிபெற்றார்
وَمَا
இன்னும் இல்லை
ٱلْحَيَوٰةُ
வாழ்க்கை
ٱلدُّنْيَآ
இவ்வுலகம்
إِلَّا مَتَٰعُ
தவிர/இன்பம்
ٱلْغُرُورِ
மயக்கக் கூடியது

Kulu nafsin zaaa'iqatul mawt; wa innamaa tuwaffawna ujoorakum Yawmal Qiyaamati faman zuhziha 'anin Naari waudkhilal Jannata faqad faaz; wa mal hayaatud dunyaaa illaa mataa'ul ghuroor

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை.

Tafseer

لَتُبْلَوُنَّ
நிச்சயம் சோதிக்கப்படுவீர்கள்
فِىٓ أَمْوَٰلِكُمْ
செல்வங்களில்/உங்கள்
وَأَنفُسِكُمْ
இன்னும் ஆன்மாக்கள்/ உங்கள்
وَلَتَسْمَعُنَّ
இன்னும் நிச்சயமாகசெவியுறுவீர்கள்
مِنَ
இருந்து
ٱلَّذِينَ
எவர்கள்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
ٱلْكِتَٰبَ
வேதம்
مِن قَبْلِكُمْ
முன்னர்/உங்களுக்கு
وَمِنَ
இன்னும் இருந்து
ٱلَّذِينَ
எவர்கள்
أَشْرَكُوٓا۟
இணைவைத்தார்கள்
أَذًى
வசை மொழியை
كَثِيرًاۚ
அதிகமானது
وَإِن تَصْبِرُوا۟
நீங்கள் பொறுத்தால்
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள்அஞ்சினால்
فَإِنَّ ذَٰلِكَ
நிச்சயமாக அதுதான்
مِنْ
இல்
عَزْمِ
உறுதிமிக்க
ٱلْأُمُورِ
காரியங்கள்

Latublawunna feee amwaalikum wa anfusikum wa latasma'unna minal lazeena ootul Kitaaba min qablikum wa minal lazeena ashrakooo azan kaseeraa; wa in tasbiroo wa tattaqoo fa inna zaalika min 'azmil umoor

(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசைமொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (இத்தகைய கஷ்டங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்து அல்லாஹ்வை பயந்தவர்களாக வாழ்ந்து வந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்.) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும்.

Tafseer

وَإِذْ أَخَذَ
வாங்கினான்/சமயம்
ٱللَّهُ
அல்லாஹ்
مِيثَٰقَ
உறுதிமொழியை
ٱلَّذِينَ
எவர்கள்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
ٱلْكِتَٰبَ
வேதம்
لَتُبَيِّنُنَّهُۥ
நிச்சயமாக நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்/அதை
لِلنَّاسِ
மக்களுக்கு
وَلَا تَكْتُمُونَهُۥ
இன்னும் நீங்கள் மறைக்கக் கூடாது/அதை
فَنَبَذُوهُ
எறிந்தனர்/அதை
وَرَآءَ
பின்னால்
ظُهُورِهِمْ
முதுகுகள் அவர்களுடைய
وَٱشْتَرَوْا۟
இன்னும் வாங்கினர்
بِهِۦ ثَمَنًا
அதற்குப் பகரமாக/கிரயத்தை
قَلِيلًاۖ
சொற்பம்
فَبِئْسَ
மிகக் கெட்டது
مَا يَشْتَرُونَ
எது/வாங்குகிறார்கள்

Wa iz akhazal laahu meesaaqal lazeena ootul Kitaaba latubaiyinunnahoo linnaasi wa laa taktumoona hoo fanabazoohu waraaa'a zuhoorihim washtaraw bihee samanan qaleelan fabi'sa maa yashtaroon

வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் "(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது" என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதி மொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் பெற்றுக் கொண்டது மகா கெட்டதாகும்.

Tafseer

لَا تَحْسَبَنَّ
நிச்சயம் எண்ணாதீர்
ٱلَّذِينَ
எவர்கள்
يَفْرَحُونَ
மகிழ்ச்சி அடைகிறார்கள்
بِمَآ أَتَوا۟
எதை செய்தார்கள்
وَّيُحِبُّونَ
இன்னும் விரும்புகிறார்கள்
أَن يُحْمَدُوا۟
அவர்கள் புகழப்படுவதை
بِمَا لَمْ
எதன் மூலம்/அவர்கள் செய்யவில்லை
فَلَا تَحْسَبَنَّهُم
ஆகவே நிச்சயமாக எண்ணாதீர்/அவர்களை
بِمَفَازَةٍ
பாதுகாப்பில்
مِّنَ
இருந்து
ٱلْعَذَابِۖ
வேதனை
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது

Laa tahsabannal lazeena yafrahoona bimaaa ataw wa yuhibbona ai yuhmadoo bimaa lam yaf'aloo falaa tahsabunnahum bimafaazatim minal 'azaabi wa lahum 'azaabun aleem

(நபியே!) எவர்கள் தாங்கள் செய்த (அற்ப) காரியத்தைப் பற்றி மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாத (நன்மையான) காரியங் களைப் பற்றியும், (தாம் செய்ததாக மக்கள்) தம்மைப் புகழ்வதை விரும்புகின்றார்களோ அவர்கள் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று நிச்சயமாக (ஒரு காலமும்) நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்விற்கு
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமி
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ
மீது
كُلِّ شَىْءٍ
எல்லா பொருள்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wa lillaahi mulkus samaawaati wal ard; wallaahu 'alaa kulli shai'in Qadeer

வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
فِى خَلْقِ
படைத்திருப்பதில்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَٱخْتِلَٰفِ
இன்னும் மாறுவது
ٱلَّيْلِ وَٱلنَّهَارِ
இரவு/இன்னும் பகல்
لَءَايَٰتٍ
திட்டமாக அத்தாட்சிகள்
لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவுடையவர்களுக்கு

Inna fee khalqis samaawati wal ardi wakhtilaafil laili wannahaari la Aayaatil liulil albaab

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer