Skip to main content

جُندٌ
இராணுவம்தான்
مَّا هُنَالِكَ
அந்த விஷயத்தில்
مَهْزُومٌ
தோற்கடிக்கப்படுகின்ற(வர்)
مِّنَ ٱلْأَحْزَابِ
கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள்

Jundum maa hunaalika mahzoomum minal Ahzaab

(கேவலம்!) இங்கிருக்கும் இவர்களுடைய கூட்டத்தினர் (எம்மாத்திரம்?) மற்ற கூட்டத்தினர்களைப் போலவே இவர்களும் முறியடிக்கப்படுவார்கள்.

Tafseer

كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
قَوْمُ
மக்களும்
نُوحٍ
நூஹூடைய
وَعَادٌ
ஆதும்
وَفِرْعَوْنُ
ஃபிர்அவ்னும்
ذُو ٱلْأَوْتَادِ
ஆணிகளை உடைய

Kazzabat qablahum qawmu Lootinw-wa 'Aadunw wa Fir'awnu zul awtaad

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், "ஆத்" என்னும் மக்களும், பெரும் படையுடைய ஃபிர்அவ்னும், (நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கினார்கள்.

Tafseer

وَثَمُودُ
ஸமூதும்
وَقَوْمُ
மக்களும்
لُوطٍ
லூத்துடைய
وَأَصْحَٰبُ لْـَٔيْكَةِۚ
தோட்டமுடையவர்களும்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
ٱلْأَحْزَابُ
கோஷ்டிகள்

Wa Samoodu wa qawmu Lootinw wa Ashaabul 'Aykah; ulaaa'ikal Ahzaab

அவ்வாறே "ஸமூத்" என்னும் மக்களும், லூத்துடைய மக்களும், (மத்யன்) தோப்புவாசிகளும் (பொய்யாக்கினார்கள்). இவர்கள்தாம் (முறியடிக்கப்பட்ட) அந்தக் கூட்டத்தினர்கள்.

Tafseer

إِن
இல்லை
كُلٌّ
எல்லோரும்
إِلَّا
தவிர
كَذَّبَ
பொய்ப்பித்தார்(கள்)
ٱلرُّسُلَ
தூதர்களை
فَحَقَّ
ஆகவே, உறுதியானது
عِقَابِ
எனது தண்டனை

In kullun illaa kazzabar Rusula fahaqqa 'iqaab

இவர்கள் ஒவ்வொரு கூட்டத்தினரும் தூதர்களைப் பொய்யாக்காமல் இருந்ததில்லை. (ஆகவே, அவர்களை) வேதனை செய்வது நியாயமாயிற்று.

Tafseer

وَمَا يَنظُرُ
எதிர்பார்க்கவில்லை
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
إِلَّا
தவிர
صَيْحَةً
சப்தத்தை
وَٰحِدَةً
ஒரே ஒரு
مَّا لَهَا
அதற்கு இருக்காது
مِن فَوَاقٍ
துண்டிப்பு, இடைவெளி

Wa maa yanzuru haaa ulaaa'i illaa saihatanw waahidatam maa lahaa min fawaaq

ஆகவே, (அரபிகளாகிய) இவர்களும் (தங்களை அழிக்கக் கூடிய) ஒரே ஒரு சப்தத்தைத் தவிர (வேறெதனை) எதிர்பார்க் கின்றனர். (அது வரும் சமயம்) அதனைத் தாமதப்படுத்தவும் வழி இருக்காது.

Tafseer

وَقَالُوا۟
அவர்கள் கூறினர்
رَبَّنَا
எங்கள் இறைவா!
عَجِّل
தீவிரப்படுத்து
لَّنَا
எங்களுக்கு
قِطَّنَا
எங்கள் பத்திரத்தை, ஆவணத்தை
قَبْلَ
முன்பாக
يَوْمِ ٱلْحِسَابِ
விசாரணை நாளுக்கு

Wa qaaloo Rabbanaa 'ajjil lanaa qittanaa qabla Yawmil Hisaab

இவர்கள், கேள்வி கணக்குக் கேட்கும் நாள் வருவதற்கு முன்னதாகவே, "எங்கள் இறைவனே! எங்களுடைய (வேதனையின்) பாகத்தை எங்களுக்குக் கொடுத்துத் தீர்த்துவிடு!" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றார்கள்.

Tafseer

ٱصْبِرْ
சகிப்பீராக!
عَلَىٰ مَا
அவர்கள் கூறுவதை
وَٱذْكُرْ
இன்னும் நினைவு கூறுவீராக
عَبْدَنَا
நமது அடியார்
دَاوُۥدَ
தாவூதை
ذَا ٱلْأَيْدِۖ
மிக வலிமை, உறுதி உடைய
إِنَّهُۥٓ
நிச்சயமாக அவர்
أَوَّابٌ
முற்றிலும் திரும்பக்கூடியவர்

Isbir 'alaa maa yaqooloona wazkur 'abdanaa Daawooda zal aidi aidi innahooo awwaab

(நபியே!) இவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையாக சகித்துக்கொண்டு இருங்கள். அன்றி, மிக பலசாலியாகிய நமது அடியார் தாவூதை நினைத்துப் பாருங்கள். நிச்சயமாக அவர் (எத்தகைய கஷ்டத்திலும்) நம்மையே நோக்கி நின்றார்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
سَخَّرْنَا
வசப்படுத்தினோம்
ٱلْجِبَالَ
மலைகளை
مَعَهُۥ
அவருடன்
يُسَبِّحْنَ
(அவை) துதிக்கும்
بِٱلْعَشِىِّ
மாலையிலும்
وَٱلْإِشْرَاقِ
காலையிலும்

Innaa sakhkharnal jibaala ma'ahoo yusabbihna bil'ashaiyi wal ishraaq

நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்தித் தந்தோம். காலையிலும், மாலையிலும் அவை அவருடன் சேர்ந்து துதி செய்து கொண்டிருந்தன.

Tafseer

وَٱلطَّيْرَ
இன்னும் பறவைகளை
مَحْشُورَةًۖ
ஒன்று சேர்க்கப்பட்ட
كُلٌّ لَّهُۥٓ
அவை எல்லாம் அவருக்கு
أَوَّابٌ
கீழ்ப்படிபவையாக

Wattayra mahshoorah; kullul lahooo awwaab

பறவைகளின் கூட்டத்தையும், (நாம் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்.) அவை, அவருடைய சப்தத்தைப் பின்பற்றி அவரை சூழ்ந்து (அவ்வாறே) சப்தமிட்டன.

Tafseer

وَشَدَدْنَا
பலப்படுத்தினோம்
مُلْكَهُۥ
அவருடைய ஆட்சியை
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்கு கொடுத்தோம்
ٱلْحِكْمَةَ
ஞானத்தை
وَفَصْلَ
இன்னும் மிகத்தெளிவான, மிக உறுதியான
ٱلْخِطَابِ
பேச்சை(யும்)

Wa shadadnaa mulkahoo wa aatainaahul Hikmata wa faslal khitaab

அவருடைய ஆட்சியை நாம் பலப்படுத்தி, அவருக்கு ஞானத்தையும் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தியையும் கொடுத்தோம்.

Tafseer