Skip to main content

إِذْ عُرِضَ
சமர்ப்பிக்கப்பட்ட போது
عَلَيْهِ
அவருக்கு முன்
بِٱلْعَشِىِّ
மாலை நேரத்தில்
ٱلصَّٰفِنَٰتُ
குதிரைகள்
ٱلْجِيَادُ
விரைந்து ஓடக்கூடிய, அமைதியாக நிற்கக்கூடிய

Iz 'urida 'alaihi bil'ashiy yis saafinaatul jiyaad

(யுத்தத்திற்காகச் சித்தப்படுத்தப்பட்டிருந்த) உயர்ந்த குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில், அவர் முன் கொண்டு வரப்பட்டபொழுது (அதனைப் பார்த்துக் கொண்டிருந்ததனால், சூரியன் அஸ்தமித்து அவருடைய அஸர் தொழுகை தவறி விட்டது. அதற்கவர்:)

Tafseer

فَقَالَ
அவர் கூறினார்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَحْبَبْتُ
பிரியம் வைத்து விட்டேன்
حُبَّ
பிரியத்தை
ٱلْخَيْرِ
செல்வத்தின்
عَن ذِكْرِ
தொழுவதை விட்டு
رَبِّى
என் இறைவனை
حَتَّىٰ
இறுதியாக
تَوَارَتْ
மறைந்து விட்டது
بِٱلْحِجَابِ
திரையில்

Faqaala inneee ahbabtu hubbal khairi 'an zikri Rabbee hattaa tawaarat bilhijaab

"நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறைந்துவிடும் வரையில், அல்லாஹ்வின் திருப்பெயரை நினைவுகூர்வதை விட்டுப் பொருளை அதிகமாக அன்பு கொண்டு விட்டேன் (என்று மனம் வருந்தி,)

Tafseer

رُدُّوهَا
அவற்றை திரும்பக் கொண்டு வாருங்கள்
عَلَىَّۖ
என்னிடம்
فَطَفِقَ
ஆரம்பித்தார்
مَسْحًۢا
அவற்றைத் தடவ
بِٱلسُّوقِ
கெண்டை கால்களிலும்
وَٱلْأَعْنَاقِ
கழுத்துகளிலும்

Ruddoohaa 'alaiya fatafiqa masham bissooqi wal a'naaq

அவைகளை என்னிடம் கொண்டு வாருங்கள்" எனக் கூறி, அவைகளின் பின்னங்கால்களையும், கழுத்துக்களையும் (கையினால் நீவி) தடவிக் கொடுத்தார்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
فَتَنَّا
நாம் சோதித்தோம்
سُلَيْمَٰنَ
சுலைமானை
وَأَلْقَيْنَا
போட்டோம்
عَلَىٰ كُرْسِيِّهِۦ
அவருடை நாற்காலியில்
جَسَدًا
ஓர் உடலை
ثُمَّ
பிறகு
أَنَابَ
அவர் திரும்பிவிட்டார்

Wa laqad fatannaa Sulaimaana wa alqainaa 'alaa kursiyyihee jasadan summa anaab

நிச்சயமாக நாம் ஸுலைமானை (மற்றொரு விதத்திலும்) சோதனை செய்து, அவருடைய சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தை எறிந்தோம். உடனே, அவர் நம்மளவில் திரும்பிவிட்டார்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா!
ٱغْفِرْ لِى
என்னை மன்னிப்பாயாக!
وَهَبْ لِى
இன்னும் எனக்குத் தா
مُلْكًا
ஓர் ஆட்சியை
لَّا يَنۢبَغِى
தகுதியாகாத
لِأَحَدٍ
வேறு ஒருவருக்கும்
مِّنۢ بَعْدِىٓۖ
எனக்குப் பிறகு
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
ٱلْوَهَّابُ
மகா பெரிய கொடைவள்ளல்

Qaala Rabbigh fir lee wa hab lee mulkal laa yambaghee li ahadim mim ba'de inaka Antal Wahhab

ஆகவே, அவர் "என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பெரும் கொடையாளி" என்று பிரார்த்தனை செய்தார்.

Tafseer

فَسَخَّرْنَا
ஆகவே, நாம் கட்டுப்படுத்திக் கொடுத்தோம்
لَهُ ٱلرِّيحَ
அவருக்கு/காற்றை
تَجْرِى
அது வீசும்
بِأَمْرِهِۦ
அவருடைய கட்டளைக்கிணங்க
رُخَآءً
மென்மையாக
حَيْثُ أَصَابَ
அவர் விரும்புகின்ற இடத்திற்கு

Fasakhkharnaa lahur reeha tajree bi amrihee rukhaaa'an haisu asaab

ஆதலால், (அவர் விரும்பிய ஆட்சியைக் கொடுத்துக்) காற்றையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய கட்டளையின்படி, அவர் செல்லக்கூடிய இடங்களுக் கெல்லாம் மிக்க சௌகரியமாகவே (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.

Tafseer

وَٱلشَّيَٰطِينَ
இன்னும் ஷைத்தான்களை
كُلَّ
அனைவரையும்
بَنَّآءٍ
கட்டிட சிற்பிகள்
وَغَوَّاصٍ
இன்னும் முத்துக்குளிப்பவர்கள்

Wash Shayaateena kulla bannaaa'inw wa ghawwaas

அன்றி, ஷைத்தான்களில் உள்ள சிற்பிகள், முத்துக் குளிப்பவர்கள் ஆகிய அனைவரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.

Tafseer

وَءَاخَرِينَ
இன்னும் மற்றவர்களை
مُقَرَّنِينَ
பிணைக்கப்பட்ட(வர்கள்)
فِى ٱلْأَصْفَادِ
சங்கிலிகளில்

Wa aakhareena muqarraneena fil asfaad

அன்றி, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறு மூர்க்கர்கள் பலரையும் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்.

Tafseer

هَٰذَا
இது
عَطَآؤُنَا
நமது அருட்கொடையாகும்
فَٱمْنُنْ
ஆகவே நீர் கொடுப்பீராக!
أَوْ
அல்லது
أَمْسِكْ
நீரே வைத்துக்கொள்வீராக!
بِغَيْرِ حِسَابٍ
விசாரணை இருக்காது

Haazaa 'ataaa'unaa famnun aw amsik bighairi hisaab

பின்னர் (அவரை நோக்கி) "இவையெல்லாம் நாம் உங்களுக்கு அளித்த கொடைகளாகும். ஆகவே, (இவைகளை) நீங்கள் கணக்கின்றி (எல்லோருக்கும் கொடுத்து) நன்றி செய்யுங்கள். அல்லது (அவைகளை உங்களிடமே) நிறுத்திக் கொள்ளுங்கள். (அது உங்களது இஷ்டத்தைப் பொறுத்த விஷயம்" என்றோம்.)

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
لَهُۥ
அவருக்கு
عِندَنَا
நம்மிடம் இருக்கிறது
لَزُلْفَىٰ
நெருக்கமும்
وَحُسْنَ
அழகிய
مَـَٔابٍ
மீளுமிடமும்

Wa inna lahoo 'indanaa lazulfaa wa husna ma-aab

நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக்க நெருங்கிய மேலான பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு.

Tafseer