Skip to main content

فَبَعَثَ
ஆகவே அனுப்பினான்
ٱللَّهُ
அல்லாஹ்
غُرَابًا
ஒரு காகத்தை
يَبْحَثُ
தோண்டுகிறது
فِى ٱلْأَرْضِ
பூமியில்
لِيُرِيَهُۥ
காட்டுவதற்காக/ அவனுக்கு
كَيْفَ
எவ்வாறு
يُوَٰرِى
மறைப்பான்
سَوْءَةَ
சடலத்தை
أَخِيهِۚ
தன் சகோதரனின்
قَالَ
கூறினான்
يَٰوَيْلَتَىٰٓ
என் நாசமே
أَعَجَزْتُ
இயலாமலாகி விட்டேனா?
أَنْ أَكُونَ
நான் ஆக
مِثْلَ
போன்று
هَٰذَا
இந்த
ٱلْغُرَابِ
காகம்
فَأُوَٰرِىَ
மறைத்திருப்பேனே
سَوْءَةَ
சடலத்தை
أَخِىۖ
என் சகோதரனின்
فَأَصْبَحَ
ஆகிவிட்டான்
مِنَ ٱلنَّٰدِمِينَ
துக்கப்படுபவர்களில்

Faba'asal laahu ghuraabai yabhasu fil ardi liyuriyahoo kaifa yuwaaree sawata akheeh; qaala yaa wailataaa a'ajaztu an akoona misla haazal ghuraabi fa uwaariya saw ata akhee fa asbaha minan naadimeen

பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி வைத்தான். அது (அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காண்பிப்பதற் காகப்) பூமியைத் தோண்டிற்று. (இதனைக் கண்ட) அவர் "அந்தோ! இந்தக் காகத்தைப்போல் (சொற்ப அறிவுடையவனாக) நான் இருந்தாலும் என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேனே! (அதுவும்) என்னால் முடியாமல் போய்விட்டதே!" என்று (அழுது) கூறித் துக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.

Tafseer

مِنْ أَجْلِ
காரணமாக
ذَٰلِكَ
அதன்
كَتَبْنَا
விதித்தோம்
عَلَىٰ
மீது
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்கள்
أَنَّهُۥ
நிச்சயமாக
مَن
எவன்
قَتَلَ
கொன்றார்
نَفْسًۢا
ஓர் உயிரை
بِغَيْرِ نَفْسٍ
ஓர்உயிரைக்கொலைசெய்ததற்குஅல்லாமல்
أَوْ
அல்லது
فَسَادٍ
விஷமம் செய்தல்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَكَأَنَّمَا
போலாவான்
قَتَلَ
கொன்றான்
ٱلنَّاسَ
மக்கள்
جَمِيعًا
அனைவரையும்
وَمَنْ
எவர்
أَحْيَاهَا
வாழவைத்தார்/அதை
فَكَأَنَّمَآ
போலாவார்
أَحْيَا
வாழவைத்தார்
ٱلنَّاسَ
மக்கள்
جَمِيعًاۚ
அனைவரையும்
وَلَقَدْ
திட்டமாக
جَآءَتْهُمْ
வந்தார்கள்/அவர்களிடம்
رُسُلُنَا
நம் தூதர்கள்
بِٱلْبَيِّنَٰتِ
அத்தாட்சிகளுடன்
ثُمَّ
பிறகு
إِنَّ
நிச்சயமாக
كَثِيرًا
அதிகமானவர்கள்
مِّنْهُم
அவர்களில்
بَعْدَ ذَٰلِكَ
அதன் பின்னர்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
لَمُسْرِفُونَ
வரம்புமீறுகிறார்கள்

min ajli zaalika katabnaa 'alaa Banee Israaa'eela annahoo man qatala nnafsam bighairi nafsin aw fasaadin fil ardi faka annnamaa qatalan fil ardi faka annammaa qatalan naasa jamee'anw wa man ahyaahaa faka annamaaa ahyan naasa jamee'aa; wa laqad jaaa'at hum Rusulunaa bilbaiyinaati summa inna kaseeram minhum ba'da zaalika fil ardi lamusrifoon

இதன் காரணமாகவே "எவனொருவன் மற்றொரு ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவோ அன்றி (அநியாயமாகக்) கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். அன்றி, எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்" என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். அன்றி, அவர்களிடம் நம்முடைய பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே நடந்து வந்தனர்.

Tafseer

إِنَّمَا جَزَٰٓؤُا۟
தண்டனையெல்லாம்
ٱلَّذِينَ
எவர்கள்
يُحَارِبُونَ
போரிடுவார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
وَيَسْعَوْنَ
இன்னும் முயற்சிக்கின்றனர்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَسَادًا
குழப்பம் செய்ய
أَن يُقَتَّلُوٓا۟
அவர்கள் கொல்லப்படுவது
أَوْ
அல்லது
يُصَلَّبُوٓا۟
அவர்கள் சிலுவையில் அறையப்படுவது
أَوْ
அல்லது
تُقَطَّعَ
வெட்டப்படுவது
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
وَأَرْجُلُهُم
இன்னும் அவர்களின் கால்கள்
مِّنْ خِلَٰفٍ
மாற்றமாக
أَوْ
அல்லது
يُنفَوْا۟
அவர்கள் கடத்தப்படுவது
مِنَ ٱلْأَرْضِۚ
இருந்து/நாடு
ذَٰلِكَ
இது
لَهُمْ
அவர்களுக்கு
خِزْىٌ
இழிவு
فِى ٱلدُّنْيَاۖ
இவ்வுலகத்தில்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
عَذَابٌ
வேதனை
عَظِيمٌ
பெரியது

Innamaa jazaaa'ul lazeena yuhaariboonal laaha wa Rasoolahoo wa yas'awna fil ardi fasaadan ai yuqattalooo aw yusallabooo aw tuqatta'a aideehim wa arjuluhum min khilaafin aw yunfaw minalard; zaalika lahum khizyun fid dunyaa wa lahum fil Aakhirati 'azaabun 'azeem

எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்துகொண்டும் திரிகின்றார்களோ, அவர்களுக்குரிய தண்டனை (அவர்களை) கொன்று விடுவது அல்லது சிலுவையில் அறைவது அல்லது மாறு கை(கள், மாறு) கால்களைத் துண்டிப்பது அல்லது (கைது செய்வது அல்லது) நாடு கடத்தி விடுவதுதான். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். அன்றி, மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்குண்டு.

Tafseer

إِلَّا
தவிர
ٱلَّذِينَ
எவர்கள்
تَابُوا۟
(மன்னிப்புக் கோரி) திருந்தி திரும்பினார்கள்
مِن قَبْلِ
முன்னர்
أَن تَقْدِرُوا۟
நீங்கள் ஆற்றல்பெறுவது
عَلَيْهِمْۖ
அவர்கள் மீது
فَٱعْلَمُوٓا۟
ஆகவே அறிந்துகொள்ளுங்கள்
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Illal lazeena taaboo min qabli an taqdiroo 'alaihim fa'lamooo annnal laaha Ghafoorur Raheem

எனினும், அவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாகவே அவர்களில் எவரும் கைசேதப்பட்(டு, தங்கள் விஷமத்தில் இருந்து விலகிக் கொண்)டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக மன்னித்துக் கிருபை புரிபவனாக இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱبْتَغُوٓا۟
இன்னும் தேடுங்கள்
إِلَيْهِ
அவனளவில்
ٱلْوَسِيلَةَ
நன்மையை
وَجَٰهِدُوا۟
இன்னும் போரிடுங்கள்
فِى سَبِيلِهِۦ
அவனுடைய பாதையில்
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றியடைவதற்காக

yaaa aiyuhal lazeena aamanut taqul laaha wabtaghooo ilaihil waseelata wa jaahidoo fee sabeelihee la'allakum tuflihoon

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அவனிடம் செல்வதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள். அவனுடைய பாதையில் (போர் செய்ய) பெரும் முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ كَفَرُوا۟
எவர்கள்/ நிராகரித்தார்கள்
لَوْ أَنَّ
நிச்சயமாக அவர்களுக்கு இருந்தால்
مَّا
எவை
فِى ٱلْأَرْضِ
இப்பூமியில்
جَمِيعًا
அனைத்தும்
وَمِثْلَهُۥ
இன்னும் அவை போன்றது
مَعَهُۥ
அத்துடன்
لِيَفْتَدُوا۟
அவர்கள் பினை கொடுப்பதற்காக
بِهِۦ
அதைக் கொண்டு
مِنْ
இருந்து
عَذَابِ
வேதனை
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளின்
مَا تُقُبِّلَ
அங்கீகரிக்கப்படாது
مِنْهُمْۖ
அவர்களிடமிருந்து
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது

Innal lazeena kafaroo law anna lahum maa fil ardi jamee'anw wa mislahoo ma'ahoo liyaftadoo bihee min 'azaabi Yawmil Qiyaamati maa tuqubbila minhum wa lahum azaabun aleem

நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு இப்பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதைப்போன்ற ஒரு பாகமும் (சொந்தமாக) இருந்து, அவர்கள் இவை யாவையும் (தாம்) மறுமை நாளில் படும் வேதனைக்குப் பிரதியாகக் கொடுத்தாலும் அவர் களிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. பின்னும் அவர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையே கிடைக்கும்.

Tafseer

يُرِيدُونَ
நாடுவார்கள்
أَن يَخْرُجُوا۟
அவர்கள் வெளியேற
مِنَ
இருந்து
ٱلنَّارِ
நரகம்
وَمَا
இல்லை
هُم
அவர்கள்
بِخَٰرِجِينَ
வெளியேறுபவர்களாக
مِنْهَاۖ
அதிலிருந்து
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
مُّقِيمٌ
நிலையானது

Yureedoona ai yakhrujoo minan Naari wa maa hum bikhaari jeena minhaa wa lahum 'azaabum muqeem

அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறவே விரும்புவார்கள். எனினும், அதிலிருந்து வெளியேற அவர்களால் (முடியவே) முடியாது. அன்றி, அவர்களுடைய வேதனை (என்றென்றுமே) நிலைத்திருக்கும்.

Tafseer

وَٱلسَّارِقُ
திருடன்
وَٱلسَّارِقَةُ
இன்னும் திருடி
فَٱقْطَعُوٓا۟
வெட்டுங்கள்
أَيْدِيَهُمَا
அவ்விருவரின் கரங்களை
جَزَآءًۢ
கூலியாக
بِمَا كَسَبَا
அவ்விருவர் செய்ததன் காரணமாக
نَكَٰلًا
தண்டனையாக
مِّنَ ٱللَّهِۗ
அல்லாஹ்விடமிருந்து
وَٱللَّهُ
அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Wassaariqu qassaariqatu faqta'oo aidiyahumma jazaaa'am bimaa kasabaa nakaalam minal laah; wallaahu 'Azeezun hakeem

ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

فَمَن
எவர்
تَابَ
திருந்தி திரும்பினார்
مِنۢ بَعْدِ
பின்னர்
ظُلْمِهِۦ
தன் தீமை
وَأَصْلَحَ
இன்னும் திருத்திக் கொண்டார்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَتُوبُ
பிழை பொறுப்பான்
عَلَيْهِۗ
அவர் மீது
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Faman taaba mim ba'di zulmihee wa aslaha fa innal laaha yatoobu 'alaih; innal laaha Ghafoorur Raheem

எவரேனும் தன்னுடைய (இத்) தீயச் செயலுக்குப் பின்னர் (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

أَلَمْ تَعْلَمْ
நீர் அறியவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَهُۥ
அவனுக்குரியதே
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியின்
يُعَذِّبُ
வேதனை செய்வான்
مَن
எவரை
يَشَآءُ
நாடுகிறான்
وَيَغْفِرُ
இன்னும் மன்னிப்பான்
لِمَن
எவரை
يَشَآءُۗ
நாடுகிறான்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாப் பொருள்கள் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Alam ta'lam annal laaha lahoo mulkus samaawaati wal ardi yu'az zibu many-yashaa'u wa yaghfiru limany-yashaaa'; wallaahu 'alaa kulli shai'in Qadeer

(நபியே!) நிச்சயமாக வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீங்கள் அறியவில்லையா? ஆகவே, அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அவன் விரும்பியவர்களுக்கு மன்னிப்பளிப்பான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.

Tafseer