A-lakumuz zakaru wa lahul unsaa
என்னே! உங்களுக்கு ஆண் மக்கள், அவனுக்குப் பெண் மக்களா?
Tilka izan qismatun deezaa
அவ்வாறாயின், அது மிக்க அநியாயமான பங்கீடாகும்.
In hiya illaaa asmaaa'un sammaitumoohaaa antum wa aabaaa'ukum maaa anzalal laahu bihaa min sultaan; inyyattabi'oona illaz zanna wa maa tahwal anfusu wa laqad jaaa'ahum mir Rabbihimul hudaa
இவைகளெல்லாம் நீங்களும், உங்கள் மூதாதைகளும் வைத்துக்கொண்ட வெறும் பெயர்களேயன்றி (உண்மையில் அவை) ஒன்றுமில்லை. அ(வை தெய்வம் என்ப)தற்காக அல்லாஹ் உங்களுக்கு யாதொரு ஆதாரத்தையும் (முந்திய எந்த வேதத்திலும்) இறக்கிவைக்கவில்லை. அவர்கள் (தங்கள்) சரீர இச்சைகளின் பொருட்டு, வீண் சந்தேகத்தைப் பின்பற்றுகின்றனரே அன்றி, (வேறு) இல்லை. நிச்சயமாக அவர்கள் இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கின்றது. (எனினும், அதனை அவர்கள் பின்பற்றுவதில்லை.)
Am lil insaani maa taman naa
மனிதன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடுமா?
Falillaahil aakhiratu wal oolaa
(ஏனென்றால்) இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக் குறியனவே! (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்.)
Wa kam mim malakin fissamaawaati laa tughnee shafaa'atuhum shai'an illaa mim ba'di anyyaazanal laahu limany yashaaa'u wa yardaa
வானத்தில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர். (எவருக்காகவும்) அவர்கள் பரிந்து பேசுவது யாதொரு பயனும் அளிக்காது. ஆயினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர, (அவர் பேசுவது பயனளிக்கும்).
innal lazeena laa yu'minoona bil aakhirati la yusammoonal malaaa'ikata tasmiyatal unsaa
நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ள வில்லையோ, அவர்கள் மலக்குகளுக்குப் பெண் பெயர் சூட்டுகின்றனர்.
Wa maa lahum bihee min 'ilmin iny yattabi'oona illaz zanna wa innaz zanna laa yughnee minal haqqi shai'aa
இதைப் பற்றி அவர்களுக்கு யாதொரு ஞானமும் கிடையாது. (ஆதாரமற்ற) வீண் சந்தேகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. வீண் சந்தேகம் யாதொன்றையும் உறுதிப்படுத்தாது.
Fa a'rid 'am man tawallaa 'an zikrinaa wa lam yurid illal hayaatad dunyaa
(நபியே!) எவன் என்னைத் தியானிக்காது விலகி, இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கின்றானோ, அவனை நீங்கள் புறக்கணித்து விடுங்கள்.
Zalika mablaghuhum minal 'ilm; inna rabbaka huwa a'lamu biman dalla 'an sabee lihee wa huwa a'lamu bimanih tadaa
இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரம்தான் செல்கின்றது. (இதற்கு மேல் செல்வதில்லை.) நிச்சயமாக உங்களது இறைவன், தன்னுடைய வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான்.