Badee'us samaawaati wal ardi annnaa yakoonu lahoo waladunw wa lam takul lahoo saahibatunw wa khalaqa kulla shai'in 'Aleem
முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும்? அவனுக்கு மனைவியே கிடையாதே! அனைத்தையும் அவனே படைத்திருக்கின்றான். அன்றி, அவன் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
Zaalikumul laahu Rabbukum laaa ilaaha illaa huwa khaaliqu kulli shai'in fa'budooh; wa huwa 'alaa kulli shai'inw Wakeel
இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவன் அவனே.
Laa tudrikuhul absaaru wa Huwa yudrikul absaara wa huwal Lateeful Khabeer
பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கின்றான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன்; மிக்க அறிந்தவன்.
Qad jaaa'akum basaaa'iru mir Rabbikum faman absara falinafsihee wa man 'amiya fa'alaihaa; wa maaa ana 'alaikum bihafeez
உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குரிய பல) ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்து) பார்க்கின்றானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கின்றானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நான் உங்களைக் காப்பவன் அல்ல" (என்று கூறுங்கள்).
Wa kazaalika nusarriful Aayaati wa liyaqooloo darasta wa linubaiyinahoo liqawminy ya'lamoon
(இதனை) நீங்கள் (எங்களுக்கு) நன்கு ஓதிக்காண்பித்(து அறிவித்)தீர்கள் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறியக்கூடிய மக்களுக்கு நாம் இதனைத் தெளிவாக்குவதற்காகவும், (நம்முடைய) வசனங்களை இவ்வாறு பலவாறாக (அடிக்கடி) விவரிக்கின்றோம்.
ittabi' maaa oohiya ilaika mir Rabbika laaa ilaaha illaa Huwa wa a'rid 'anil mushrikeen
(நபியே!) உங்கள் இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீங்கள் பின்பற்றுங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனுக்கு) இணைவைப்பவர்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள்.
Wa law shaaa'al laahu maaa ashrakoo; wa maa ja'alnaaka 'alaihim hafeezanw wa maaa anta 'alaihim biwakeel
அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மீது காப்பாளராக நாம் உங்களை ஏற்படுத்தவில்லை. நீங்கள் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்புடையவருமல்ல.
Wa laa tasubbul lazeena yad'oona min doonil laahi fa yasubbul laaha 'adwam bighairi 'ilm; kazaalika zaiyannaa likulli ummatin 'amalahum summa ilaa Rabbihim marji'uhum fa yunabbi'uhum bimaa kaanooya'maloon
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கின்றோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்.
Wa aqsamoo billaahi jahda aimaanihim la'in jaaa'at hum Aayatul la yu'minunna bihaa; qul innamal Aayaatu 'indal laahi wa maa yush'irukum annahaaa izaa jaaa'at laa yu'minoon
(அவர்கள் விருப்பப்படி) யாதொரு அத்தாட்சி தங்களுக்காக வரும் சமயத்தில், "நிச்சயமாக நாங்கள் அதனை நம்புவோம்" என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். (அதற்கு நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நிச்சயமாக அத்தாட்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான். நீங்கள் விரும்புவது போன்றல்ல) என்று கூறுங்கள். (அவ்வாறு) அவர்களிடம் (அவர்கள் விரும்பியவாறே) வரும் சமயத்திலும் அதனை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா?
Wa nuqallibu af'idatahum wa absaarahum kamaa lam yu'minoo biheee awwala marratinw wa wa nazaruhum fee tughyaanihim ya'mahoon
முன்னர் அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தபடியே (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாது இருப்பதற்காக) நாம் அவர்களுடைய உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டி அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிந்து திரியும்படி விட்டிருக்கின்றோம்.