Skip to main content
bismillah

كٓهيعٓصٓ
காஃப் ஹா யா ஐன் ஸாத்

Kaaaf-Haa-Yaa-'Ayyyn-Saaad

காஃப்; ஹா; யா; ஐன்; ஸாத்.

Tafseer

ذِكْرُ
நினைவு கூர்வது
رَحْمَتِ
அருள் செய்ததை
رَبِّكَ
உமது இறைவன்
عَبْدَهُۥ
தன் அடியார்
زَكَرِيَّآ
ஸகரிய்யாவுக்கு

Zikru rahmati Rabbika 'abdahoo Zakariyya

(நபியே!) உங்களது இறைவன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருள் (இங்கு) கூறப்படுகிறது.

Tafseer

إِذْ نَادَىٰ
அவர் அழைத்தபோது
رَبَّهُۥ
தன் இறைவனை
نِدَآءً
அழைத்தல்
خَفِيًّا
மறைவாக

Iz naadaa Rabbahoo nidaaa'an khafiyyaa

அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் அழைத்து,

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா!
إِنِّى
நிச்சயமாக நான்
وَهَنَ
பலவீனமடைந்து விட்டது
ٱلْعَظْمُ
எலும்பு
مِنِّى
என்னில்
وَٱشْتَعَلَ
வெளுத்து விட்டது
ٱلرَّأْسُ
தலை
شَيْبًا
நரையால்
وَلَمْ أَكُنۢ
நான் ஆகமாட்டேன்
بِدُعَآئِكَ
உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில்
رَبِّ
என் இறைவா
شَقِيًّا
துர்பாக்கியவனாக

Qaala Rabbi innee wahanal'azmu minnee washta'alar raasu shaibanw wa lam akum bidu'aaa'ika Rabbi shaqiyyaa

"என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்துவிட்டது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கின்றாய்.)

Tafseer

وَإِنِّى
நிச்சயமாக நான்
خِفْتُ
பயப்படுகிறேன்
ٱلْمَوَٰلِىَ
உறவினர்களை
مِن وَرَآءِى
எனக்குப் பின்னால்
وَكَانَتِ
இன்னும் இருக்கிறாள்
ٱمْرَأَتِى
என் மனைவி
عَاقِرًا
மலடியாக
فَهَبْ
ஆகவே, தா!
لِى
எனக்கு
مِن لَّدُنكَ
உன் புறத்திலிருந்து
وَلِيًّا
ஒரு வாரிசை

Wa innee khiftul mawaa liya minw waraaa'ee wa kaana tim ra atee 'aairan fahab lee mil ladunka waliyyaa

நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளனைப் பற்றிப் பயப்படுகிறேன். என்னுடைய மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கு பாதுகாவலனை ( ஒரு பிள்ளையை) வழங்குவாயாக!

Tafseer

يَرِثُنِى
அவர் எனக்கும் வாரிசாக ஆகுவார்
وَيَرِثُ
இன்னும் வாரிசாக ஆகுவார்
مِنْ ءَالِ
கிளையினருக்கு
يَعْقُوبَۖ
யஃகூபுடைய
وَٱجْعَلْهُ
இன்னும் அவரை ஆக்கு
رَبِّ
என் இறைவா!
رَضِيًّا
பொருந்திக் கொள்ளப்பட்டவராக

Yarisunee wa yarisu min aali Ya'qoob, waj'alhu Rabbi radiyya

அவன் எனக்கும், யஃகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக்கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை" என்று பிரார்த்தித்தார்.

Tafseer

يَٰزَكَرِيَّآ
ஸகரிய்யாவே!
إِنَّا
நிச்சயமாக நாம்
نُبَشِّرُكَ
உமக்கு நற்செய்தி தருகிறோம்
بِغُلَٰمٍ
ஒரு ஆண் குழந்தையைக் கொண்டு
ٱسْمُهُۥ
அதன் பெயர்
يَحْيَىٰ
யஹ்யா
لَمْ نَجْعَل
நாம் படைக்கவில்லை
لَّهُۥ
அதற்கு
مِن قَبْلُ
இதற்கு முன்
سَمِيًّا
ஒப்பானவரை

Yaa Zakariyyaaa innaa nubashshiruka bighulaami nismuhoo Yahyaa lam naj'al lahoo min qablu samiyyaa

(அதற்கு இறைவன் அவரை நோக்கி) "ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் "யஹ்யா" என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உங்களுக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்.)

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா
أَنَّىٰ
எப்படி?
يَكُونُ
கிடைக்கும்
لِى
எனக்கு
غُلَٰمٌ
குழந்தை
وَكَانَتِ
இருக்கிறாள்
ٱمْرَأَتِى
என் மனைவி
عَاقِرًا
மலடியாக
وَقَدْ بَلَغْتُ
நானோ அடைந்து விட்டேன்
مِنَ ٱلْكِبَرِ
முதுமையின்
عِتِيًّا
எல்லையை

Qaala Rabbi annaa yakoonu lee ghulaamunw wa kaanatim ra atee aaqiranw wa qad balaghtu minal kibari 'itiyyaa

அதற்கவர் "என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என்னுடைய மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்துவிட்டேன்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினான்
كَذَٰلِكَ
அப்படித்தான்
قَالَ
கூறினான்
رَبُّكَ
உம் இறைவன்
هُوَ
அது
عَلَىَّ
எனக்கு
هَيِّنٌ
மிக எளிது
وَقَدْ
திட்டமாக
خَلَقْتُكَ
நான் உன்னைப் படைத்திருக்கிறேன்
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
وَلَمْ تَكُ
நீர் இருக்காதபோது
شَيْـًٔا
ஒரு பொருளாக

Qaala kazaalika qaala Rabbuka huwa 'alaiya haiyinunw wa qad khalaqtuka min qablu wa lam taku shai'aa

அதற்கவன் "(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அவ்வாறு செய்வது எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீங்கள் ஒன்றுமில்லாமலிருந்த சமயத்தில் நானே உங்களை படைத்தேன் என்று உங்களது இறைவனே கூறுகிறான்" என்றும் கூறினான்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா
ٱجْعَل لِّىٓ
எனக்கு ஏற்படுத்து
ءَايَةًۚ
ஓர் அத்தாட்சியை
قَالَ
அவன் கூறினான்
ءَايَتُكَ
உமக்கு அத்தாட்சியாகும்
أَلَّا تُكَلِّمَ
பேசாமல் இருப்பது தான்
ٱلنَّاسَ
மக்களிடம்
ثَلَٰثَ
மூன்று
لَيَالٍ
இரவுகள்
سَوِيًّا
நீர் சுகமாக இருக்க

Qaala Rabbij 'al leee Aayah; qaala Aayatuka allaa tukalliman naasa salaasa layaalin sawiyyaa

அதற்கவர் "என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி" என்று கேட்டார். (அதற்கு இறைவன்) "உங்களுக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது: நீங்கள் (சுகவாசியாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்" என்று கூறினான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து மர்யம்
القرآن الكريم:مريم
ஸஜ்தா (سجدة):58
ஸூரா (latin):Maryam
ஸூரா:19
வசனம்:98
Total Words:780
Total Characters:3700
Number of Rukūʿs:6
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:44
Starting from verse:2250