Skip to main content

وَلَنُذِيقَنَّهُم
அவர்களுக்கு நிச்சயமாக நாம் சுவைக்க வைப்போம்.
مِّنَ ٱلْعَذَابِ
வேதனையை
ٱلْأَدْنَىٰ
சிறிய
دُونَ ٱلْعَذَابِ
வேதனைக்கு முன்னர்
ٱلْأَكْبَرِ
மிகப் பெரிய
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்புவதற்காக

Wa lanuzeeqan nahum minal 'azaabil ladnaa doonal 'azaabil akbari la'allahum yarji'oon

அவர்கள் (பாவங்களிலிருந்து) விலகிக்கொள்வதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்.

Tafseer

وَمَنْ
யார்?
أَظْلَمُ
பெரியஅநியாயக்காரன்
مِمَّن
ஒருவனைவிட
ذُكِّرَ
அறிவுரை கூறப்பட்டான்
بِـَٔايَٰتِ
வசனங்களினால்
رَبِّهِۦ
தனது இறைவனின்
ثُمَّ
பிறகு
أَعْرَضَ
புறக்கணித்தான்
عَنْهَآۚ
அவற்றை
إِنَّا
நிச்சயமாக நாம்
مِنَ ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளிடம்
مُنتَقِمُونَ
பழிவாங்குவோம்

Wa man azlamu mimman zukkira bi aayaati rabbihee summa a'rada 'anhaa; innaa minal mujrimeena muntaqimmon

(இவ்வாறு) இறைவனின் (எச்சரிக்கையான) அத்தாட்சியைக் கொண்டு மறுமையை ஞாபகமூட்டிய பின்னரும் இதனைப் புறக்கணித்து விடுபவனைவிட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் இத்தகைய குற்றவாளிகளை பழிவாங்கியே தீருவோம்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
مُوسَى
மூஸாவிற்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
فَلَا تَكُن
ஆகவே, நீர் இருக்க வேண்டாம்
فِى مِرْيَةٍ
சந்தேகத்தில்
مِّن لِّقَآئِهِۦۖ
அவரை சந்திப்பதில்
وَجَعَلْنَٰهُ
இன்னும் அதை ஆக்கினோம்
هُدًى
நேர்வழியாக
لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களுக்கு

Wa laqad aayainaa Moosal Kitaaba falaa takun fee miryatim mil liqaaa'ihee wa ja'alnaahu hudal li Baneee Israaa'eel

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து இருந்தோம். ஆகவே, (நபியே! அத்தகைய வேதம்) உங்களுக்குக் கிடைக்கும் என்பதைப் பற்றி நீங்கள் சந்தேகிக்காதீர்கள். நாம் (மூஸாவுக்குக் கொடுத்த) அதனை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு ஒரு வழிகாட்டியாக ஆக்கினோம்.

Tafseer

وَجَعَلْنَا
இன்னும் உருவாக்கினோம்
مِنْهُمْ
அவர்களில்
أَئِمَّةً
தலைவர்களை
يَهْدُونَ
நேர்வழி காட்டுகின்றனர்
بِأَمْرِنَا
நமது கட்டளையின்படி
لَمَّا صَبَرُوا۟ۖ
அவர்கள் பொறுமையாக இருந்தபோது
وَكَانُوا۟
இன்னும் அவர்கள் இருந்தனர்
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
يُوقِنُونَ
உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக

Wa ja'alnaa minhum a'immatany yahdoona bi amrinaa lammaa sabaroo wa kaanoo bi aayaatinaa yooqinoon

நம்முடைய கட்டளைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்த இஸ்ராயீலின் சந்ததிகளில் இருந்த ஒரு கூட்டத்தினரை அவர்களுக்கு வழி காட்டிகளாக அமைத்தோம். அவர்கள் நம் வசனங்களை முற்றிலும் உறுதியுடன் நம்பியவர்களாக இருந்தனர்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ هُوَ
உமது இறைவன்தான்
يَفْصِلُ
தீர்ப்பளிப்பான்
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
فِيمَا
எதில்
كَانُوا۟
இருந்தார்களோ
فِيهِ
அதில்
يَخْتَلِفُونَ
அவர்கள் கருத்து வேறுபட்டவர்களாக

Inna rabbaka huwa yafsilu bainahum yawmal qiyaamati feemaa kaanoo feehi yakhtalifoon

(நபியே! அவர்களுக்குப் பின்னர் வழிகாட்டியாக ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றி மறுமை நாளில் உங்களது இறைவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்.

Tafseer

أَوَلَمْ يَهْدِ
தெளிவுபடுத்தவில்லையா?
لَهُمْ
அவர்களுக்கு
كَمْ
எத்தனையோ
أَهْلَكْنَا
நாம் அழித்தது
مِن قَبْلِهِم
இவர்களுக்கு முன்னர்
مِّنَ ٱلْقُرُونِ
பல தலை முறையினர்களை
يَمْشُونَ
சுற்றித் திரிந்தனர்
فِى مَسَٰكِنِهِمْۚ
தங்கள் வசிப்பிடங்களில்
إِنَّ فِى
நிச்சயமாக இதில் உள்ளன
لَءَايَٰتٍۖ
பல அத்தாட்சிகள்
أَفَلَا يَسْمَعُونَ
அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?

Awalam yahdi lahum kam ahlaknaa min qablihim minal qurooni yamshoona fee zaalika la aayaatin afalaa yasma'oon

இவர்களுக்கு முன்னர் எத்தனையோ வகுப்பினரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்கள் வசித்திருந்த இடங்களின் மீதே இவர்கள் போய் வந்து கொண்டிருப்பதும் இவர்களுக்கு நேரான வழியைக் காட்டவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கும்) அவர்கள் செவிசாய்க்கமாட்டார்களா?

Tafseer

أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
أَنَّا
நிச்சயமாக நாம்
نَسُوقُ
ஓட்டிவருகிறோம்
ٱلْمَآءَ
மழை நீரை
إِلَى ٱلْأَرْضِ
பூமிக்கு
ٱلْجُرُزِ
காய்ந்த(து)
فَنُخْرِجُ
உற்பத்தி செய்கிறோம்
بِهِۦ
அதன் மூலம்
زَرْعًا
விளைச்சலை
تَأْكُلُ مِنْهُ
சாப்பிடுகின்றன/அதில்
أَنْعَٰمُهُمْ
அவர்களின் கால்நடைகளும்
وَأَنفُسُهُمْۖ
அவர்களும்
أَفَلَا يُبْصِرُونَ
அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?

Awalam yaraw annaa nasooqul maaa'a ilal lardil juruzi fanukhriju bihee zar'an taakulu minhu an'aamuhum wa anfusuhum afalaa yubsiroon

நிச்சயமாக நாமே வறண்ட பூமிகளின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும், இவர்களுடைய (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளும் புசிக்கக்கூடிய பயிர்களையும் வெளிப்படுத்துகின்றோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? (இதனைக் கூட) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?

Tafseer

وَيَقُولُونَ
அவர்கள் கூறுகின்றனர்
مَتَىٰ
எப்போது
هَٰذَا
இந்த
ٱلْفَتْحُ
தீர்ப்பு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Wa yaqooloona mataa haazal fat hu in kuntum saadiqeen

"(வாக்களிக்கப்பட்ட) தீர்ப்பு நாள் எப்பொழுது வரும்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அது வரும் காலத்தைக்) கூறுங்கள்" எனக் கேட்கின்றனர்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
يَوْمَ
நாளில்
ٱلْفَتْحِ
தீர்ப்பு
لَا يَنفَعُ
பலனளிக்காது
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பவர்களுக்கு
إِيمَٰنُهُمْ
அவர்களது ஈமான்
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்

Qul yawmal fat hi laa yanfa'ul lazeena kafarooo eemaanuhum wa laa hum yunzaroon

(அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அந்தத் தீர்ப்பு நாளின்போது (இந்) நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு (யாதொரு) பயனும் அளிக்காது. (வேதனையைத் தாமதப்படுத்த) அவர்கள் தவணையும் கொடுக்கப்படமாட்டார்கள்."

Tafseer

فَأَعْرِضْ
ஆகவே, நீர் புறக்கணிப்பீராக!
عَنْهُمْ
அவர்களை
وَٱنتَظِرْ
இன்னும் எதிர்பார்த்திருப்பீராக!
إِنَّهُم
நிச்சயமாக அவர்கள்
مُّنتَظِرُونَ
எதிர்பார்ப்பவர்கள்தான்

Fa a'rid 'anhum wantazir innahum muntazirron

ஆகவே, நீங்கள் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்த்து இருங்கள். நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Tafseer