Qaaloo Subhaanaka Anta waliyyunaa min doonihim bal kaanoo ya'budoonal jinna aksaruhum bihim mu'minoon
அதற்கவர்கள் "(எங்கள் இறைவனே!) நீ மிகப் பரிசுத்தமானவன். நீதான் எங்கள் இறைவன்; அவர்களன்று. (இவர்கள் எங்களை) அல்ல! ஜின்களையே வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களையே (அந்த ஜின்களையே) நம்பிக்கை கொண்டும் இருந்தார்கள்" என்று கூறுவார்கள்.
Fal Yawma laa yamliku ba'dukum liba'din naf'anw wa laa darraa; wa naqoolu lilzeena zalamoo zooqoo 'azaaban Naaril latee kuntum bihaa tukazziboon
அந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்றவராக இருப்பார். அன்றி (அச்சமயம்) அவ்வக்கிரமக்காரர்களை நோக்கி "நீங்கள் (நம்முடைய வேதனையைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக இந்நரக வேதனையைச் சுவைத்துப் பாருங்கள்" எனக் கூறுவோம்.
Wa izaa tutlaa 'alaihim Aayaatunaa baiyinaatin qaaloo maa haazaa illaa rajuluny yureedu ai-yasuddakum 'ammaa kaana ya'budu aabaaa'ukum wa qaaloo maa haazaaa illaaa ifkum muftaraa; wa qaalal lazeena kafaroo lilhaqqi lammaa jaaa'ahum in haazaaa illaa sihrum mubeen
அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் (நம் தூதரைப் பற்றி) "இவர் ஒரு சாதாரண மனிதரே அன்றி வேறில்லை. உங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவைகளிலிருந்து உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்றும் (நம்முடைய தூதர் கூறுகிற) "இது வெறும் கட்டுக்கதையேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். அன்றி "(திருக்குர்ஆனாகிய) இந்த உண்மை வந்த சமயத்தில், இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் இந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
Wa maaa aatainaahum min Kutubiny yadrusoonahaa wa maaa arsalnaaa ilaihim qablaka min nazeer
(நபியே! இதற்கு முன்னர்) நாம் (உங்களை நிராகரிக்கும் அரபிகளாகிய) இவர்களுக்கு, இவர்கள் ஓதக்கூடிய யாதொரு வேதத்தையும் கொடுக்கவும் இல்லை; அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய யாதொரு தூதரையும் உங்களுக்கு முன்னர் நாம் அவர்களிடம் அனுப்பவுமில்லை. (இவ்வாறிருந்தும் அவர்கள் நிராகரிக்கின்றனர்.)
Wa kazzabal lazeena min qablihim wa maa balaghoo mi'shaara maaa aatainaahum fakazzaboo Rusulee; fakaifa kaana nakeer
இவர்களுக்கு முன்னிருந்த (அரபிகளல்லாத)வர்களும் (அவர்களிடம் அனுப்பப்பட்ட நம்முடைய தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கினார்கள். அவர்களுக்கு நாம் கொடுத்திருந்ததில் பத்தில் ஒரு பாகத்தையும் இவர்கள் அடைந்து விடவில்லை. (அதற்குள் ளாகவே) இவர்கள் எனது தூதர்களைப் பொய்யாக்க முற்பட்டு இருக்கின்றனர். (இவர்களுக்கு முன்னர் நமது தூதர்களை நிராகரித்து பொய்யாக்கியவர்களை) நான் தண்டித்தது எவ்வாறாயிற்று? (என்பதை இவர்கள் கவனிப்பார்களா?)
Qul innamaaa a'izukum biwaahidatin an taqoomoo lillaahi masnaa wa furaadaa summa tatafakkaroo; maa bisaahibikum min jinnah; in huwa illaa nazeerul lakum baina yadai 'azaabin shadeed
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நான் உங்களுக்கு உபதேசிப்ப தெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். நீங்கள் ஒவ்வொருவராகவோ, இரண்டிரண்டு பேர்களாகவோ அல்லாஹ்வுக்காகச் சிறிது பொறுத்திருந்து, பின்னர் (உங்களுக்குள்) ஆலோசித்துப் பாருங்கள். உங்களுடைய சிநேகிதராகிய எனக்கு எத்தகைய பைத்தியமும் இல்லை. (நான் உங்களுக்குக்) கடினமான வேதனை வருவதற்கு முன்னர் (அதனைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவ னேயன்றி வேறில்லை.
Qul maa sa-altukum min ajrin fahuwa lakum in ajriya illaa 'alal laahi wa Huwa 'alaa kullin shai-in Shaheed
(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நான் உங்களிடத்தில் யாதொரு கூலியைக் கேட்டிருந்தால் அது உங்களுக்கே சொந்தம் ஆகட்டும். என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை. அவன் அனைத்தையும் அறியக் கூடியவனாக இருக்கின்றான்.
Qul inna Rabbee yaqzifu bilhaqq 'Allaamul Ghuyoob
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக எனது இறைவன் (பொய்யை அழிப்பதற்காக) மெய்யைத் தெளிவாக்குகின்றான். மறைவானவை அனைத்தையும் அவன் நன்கறிந்தவன்.
Qul jaaa'al haqqu wa maa yubdi'ul baatilu wa maa yu'eed
(அன்றி) நீங்கள் கூறுங்கள்: "உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக ஒன்றையும் (இதுவரையில்) செய்துவிடவில்லை. இனியும் செய்யப்போவதில்லை."
Qul in dalaltu fainnamaaa adillu 'alaa nafsee wa inih-tadaitu fabimaa yoohee ilaiya Rabbee; innahoo Samee'un Qareeb
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நான் வழி தவறியிருந்தால் அது எனக்கே நஷ்டமாகும். நான் நேரான வழியை அடைந்து இருந்தால் அது என் இறைவன் எனக்கு வஹீ மூலமாக அறிவித் ததன் காரணமாகவேயாகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் (அனைத்திற்கும்) சமீபமானவனாகவும் இருக்கின்றான்.