Nahnu awliyaaa'ukum fil hayaatid dunyaa wa fil Aakhirati wa lakum feehaa maa tashtaheee anfusukum wa lakum feehaa ma tadda'oon
"நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாக இருந்தோம்; மறுமையிலும் (உங்களுக்கு உதவியாளர்களே.) சுவனபதியில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்" என்றும்,
Nuzulam min Ghafoorir Raheem
"பாவங்களை மன்னித்துக் கிருபை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்" என்றும் (மலக்குகள்) கூறுவார்கள்.
Wa man ahsanu qawlam mimman da'aaa ilal laahi wa 'amila saalihanw wa qaala innanee minal muslimeen
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து "நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில் ஒருவன்" என்றும் கூறுகின்றாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்?
Wa laa tastawil hasanatu wa las saiyi'ah; idfa' billatee hiya ahsanu fa'izal lazee bainaka wa bainahoo 'adaawatun ka'annahoo waliyun hameem
நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறாயின், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்கள்.
Wa maa yulaqqaahaaa illal lazeena sabaroo wa maa yulaqqaahaaa illaa zoo hazzin 'azeem
பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி, பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள்.
Wa immaa yanzaghannaka minash Shaitaani nazghun fasta'iz billaahi innahoo Huwas Samee'ul 'Aleem
(நபியே!) ஷைத்தானுடைய யாதொரு ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உங்களைத் தூண்டும் சமயத்தில் (உங்களை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ் விடத்தில் நீங்கள் கோருவீராக! நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், அவன் உங்களை பாதுகாத்துக் கொள்வான்.)
Wa min Aayaatihil lailu wannahaaru washshamsu walqamar; laa tasjudoo lishshamsi wa laa lilqamari wasjudoo lillaahil lazee khala qahunna in kuntum iyyaahu ta'budoon
"இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் (இறைவனை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளாயிருக்கின்றன. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும், (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவைகளை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்" (என்றும் நபியே! நீங்கள் கூறுங்கள்.)
Fa inis-takbaroo fallazee na 'inda Rabbika yusabbihoona lahoo billaili wannnahaari wa hum laa yas'amoon
(நபியே!) பின்னும், இவர்கள் கர்வம் (கொண்டு இறைவனை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், (அதனால் அவனுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை.) உங்களது இறைவனிடத்தில் உள்ளவர்(களாகிய மலக்கு)கள் இரவும் பகலும் அவனைத் துதி செய்து புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (இதில்) அவர்கள் சோர்வடைவதே இல்லை.
Wa min Aayaatiheee annaka taral arda khaashi'atan fa izaaa anzalna 'alaihal maaa'ah tazzat wa rabat; innal lazeee ahyaahaa lamuhiyil mawtaa; innahoo 'alaa kulli shai-in Qadeer
(நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீங்கள் காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன்மீது நாம் மழையை பொழியச் செய்தால், அதில் (முளை கிளம்பிப்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்துபோன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன் மரணித்தவர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) ஆற்றலுடையவன்.
Innal lazeena yulhidoona feee Aayaatina laa yakhfawna 'alainaa' afamai yulqaa fin Naari khayrun am mai yaateee aaminai Yawmal Qiyaamah; i'maloo ma shi'tum innahoo bimaa ta'maloona Baseer
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் தப்பர்த்தங்களை(த் தங்கள் தீய செயல்களுக்கு ஆதாரமாக)க் கற்பிக் கின்றார்களோ, அவர்களுடைய செயல்களில் (ஒன்றுமே) நிச்சயமாக நமக்கு மறைந்துவிடாது. மறுமையில் நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது எத்தகைய பயமற்றவனாக(ச் சுவனபதிக்கு) வருபவன் மேலானவனா? (மனிதர்களே!) நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவைகளை நிச்சயமாக அவன் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.