Innaaa arsalnaa Noohan ilaa qawmihee an anzir qawmaka min qabli any yaatiyahum 'azaabun aleem
நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி) "நீங்கள் உங்களுடைய மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு அதனைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்" என்று கட்டளையிட்டோம்.
Qaala yaa qawmi innee lakum nazeerum mubeen
(அவரும் அவ்வாறே அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்" என்றும்,
Ani'udul laaha watta qoohu wa atee'oon
"அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கே நீங்கள் பயப்படுங்கள். எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள்" என்றும்,
Yaghfir lakum min zunoobikum wa yu'akhkhirkum ilaaa ajalim musammaa; innaa ajalal laahi izaa jaaa'a laa yu'akhkhar; law kuntum ta'lamoon
"(அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்களுடைய குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை (அமைதியாக வாழ) விட்டுவைப்பான். நிச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது என்றும் (இதனை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா?" என்றும் கூறினார்.
Qaala rabbi innee da'awtu qawmee lailanw wa naharaa
(அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதனை மறுத்து அவரைப் புறக்கணித்துவிடவே, அவர் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக நான் என்னுடைய மக்களை இரவு பகலாக அழைத்தேன்.
Falam yazid hum du'aaa 'eee illaa firaaraa
வெருண்டோடுவதையே தவிர, (வேறொன்றையும்) என்னுடைய அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
Wa inee kullamaa da'awtuhum litaghfira lahum ja'alooo asaabi'ahum fee aazaanihim wastaghshaw siyaabahum wa asaarroo wastakbarus tikbaaraa
நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க (உன் பக்கம்) நான் அவர்களை அழைத்தபோதெல்லாம், தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களைப் புகுத்தி அடைத்துக்கொண்டு, (என்னைப் பார்க்காது) தங்கள் ஆடைகளைக் கொண்டும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். பெரும் அகங்காரம் கொண்டு, (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தார்கள்.
Summa innee da'aw tuhum jihaara
பின்னும் நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமிட்டு (அதட்டியும்) அழைத்தேன்.
Summaa inneee a'lantu lahum wa asrartu lahum israaraa
அன்றி, நான் அவர்களுக்குப் பகிரங்கமாகவும் கூறினேன்; இரகசியமாகவும் அவர்களுக்குக் கூறினேன்.
Faqultus taghfiroo Rabakam innahoo kaana Ghaffaaraa
"உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்" என்றும் கூறினேன்.
القرآن الكريم: | نوح |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Nuh |
ஸூரா: | 71 |
வசனம்: | 28 |
Total Words: | 224 |
Total Characters: | 999 |
Number of Rukūʿs: | 2 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 71 |
Starting from verse: | 5419 |