Skip to main content
bismillah

يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
عَنِ ٱلْأَنفَالِۖ
அன்ஃபால் பற்றி
قُلِ
கூறுவீராக
ٱلْأَنفَالُ
(போரில் கிடைத்த) வெற்றிப் பொருள்கள்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
وَٱلرَّسُولِۖ
இன்னும் தூதருக்கு
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَأَصْلِحُوا۟
இன்னும் சீர்திருத்தம் செய்யுங்கள்
ذَاتَ بَيْنِكُمْۖ
உங்களுக்கு மத்தியில்
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
وَرَسُولَهُۥٓ
இன்னும் அவனுடைய தூதருக்கு
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்/நம்பிக்கையாளர்களாக

Yas'aloonaka 'anil anfaali qulil anfaalu lillaahi war Rasooli fattaqul laaha wa ahlihoo zaata bainikum wa atee'ul laaha wa Rasoolahooo in kuntum mu'mineen

(நபியே!) "அன்ஃபால்" (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அன்ஃபால்" அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ் வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் யாதொன்றையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள்.

Tafseer

إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள் எல்லாம்
ٱلَّذِينَ
எவர்கள்
إِذَا ذُكِرَ
நினைவுகூரப்பட்டால்
ٱللَّهُ
அல்லாஹ்வை
وَجِلَتْ
நடுங்கும்
قُلُوبُهُمْ
உள்ளங்கள்/அவர்களுடைய
وَإِذَا تُلِيَتْ
இன்னும் ஓதப்பட்டால்
عَلَيْهِمْ
அவர்கள் முன்
ءَايَٰتُهُۥ
வசனங்கள்/அவனுடைய
زَادَتْهُمْ
அவை அதிகப்படுத்தும்/அவர்களுக்கு
إِيمَٰنًا
இறை நம்பிக்கையை
وَعَلَىٰ رَبِّهِمْ
இன்னும் தங்கள் இறைவன் மீதே
يَتَوَكَّلُونَ
நம்பிக்கை வைப்பார்கள்

Innamal mu'minoonal lazeena izaa zukiral laahu wajilat quloobuhum wa izaa tuliyat 'alaihim Aayaatuhoo zaadat hum eemaananw wa 'alaa Rabbihim yatawakkaloon

உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يُقِيمُونَ
நிலைநிறுத்துவார்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَمِمَّا
இன்னும் எதிலிருந்து
رَزَقْنَٰهُمْ
கொடுத்தோம்/அவர்களுக்கு
يُنفِقُونَ
தர்மம் புரிவார்கள்

Allazeena yuqeemoonas Salaata wa mimmaa razaqnaahum yunfiqoon

அவர்கள் தொழுகையையும் கடைபிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
هُمُ
அவர்கள்தான்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
حَقًّاۚ
உண்மையில்
لَّهُمْ
அவர்களுக்கு
دَرَجَٰتٌ
பல பதவிகள்
عِندَ رَبِّهِمْ
அவர்களின் இறைவனிடம்
وَمَغْفِرَةٌ
இன்னும் மன்னிப்பு
وَرِزْقٌ
இன்னும் உணவு
كَرِيمٌ
கண்ணியமானது

Ulaaa'ika humul mu'minoona haqqaa; lahum darajaatun 'inda Rabbihim wa magh firatunw wa rizqun kareem

இத்தகையவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; அன்றி, கண்ணியமான உணவும் உண்டு.

Tafseer

كَمَآ
போன்றே
أَخْرَجَكَ
வெளியேற்றினான்/உம்மை
رَبُّكَ
உம் இறைவன்
مِنۢ
இருந்து
بَيْتِكَ
உம் இல்லம்
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
وَإِنَّ
நிச்சயமாக
فَرِيقًا
ஒரு பிரிவினர்
مِّنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
لَكَٰرِهُونَ
வெறுப்பவர்களே

Kaamaaa akhrajaka Rabbuka mim baitika bilhaqq; wa inna fareeqam minal mu'mineena lakaarihoon

(நபியே!) உங்களது இறைவன் உங்கள் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உங்களை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உங்களுடன் வர) விரும்பாதவாறே,

Tafseer

يُجَٰدِلُونَكَ
தர்க்கிக்கின்றனர்/உம்முடன்
فِى ٱلْحَقِّ
உண்மையில்
بَعْدَمَا تَبَيَّنَ
பின்னர் தெளிவானது
كَأَنَّمَا
போன்று
يُسَاقُونَ
ஓட்டிச் செல்லப்படுகிறார்கள்
إِلَى
பக்கம்
ٱلْمَوْتِ
மரணம்
وَهُمْ
அவர்கள் இருக்க
يَنظُرُونَ
பார்ப்பவர்களாக

Yujaadiloonaka fil haqqi ba'da maa tabaiyana kaannamaa yasaaqoona ilal mawti wa hum uanzuroon

(போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உங்களுடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்ணால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்!

Tafseer

وَإِذْ
சமயம்
يَعِدُكُمُ
வாக்களித்தான்/உங்களுக்கு
ٱللَّهُ إِحْدَى
அல்லாஹ்/ஒன்றை
ٱلطَّآئِفَتَيْنِ
இரு கூட்டங்களில்
أَنَّهَا
நிச்சயம் அது
لَكُمْ
உங்களுக்கு
وَتَوَدُّونَ
விரும்பினீர்கள்
أَنَّ
நிச்சயமாக
غَيْرَ
அல்லாதது
ذَاتِ
உடையது
ٱلشَّوْكَةِ
ஆயுதம் (பலம்)
تَكُونُ
ஆகவேண்டும்
لَكُمْ
உங்களுக்கு
وَيُرِيدُ
இன்னும் நாடுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَن يُحِقَّ
உண்மைப்படுத்த
ٱلْحَقَّ
உண்மையை
بِكَلِمَٰتِهِۦ
தன் வாக்குகளைக் கொண்டு
وَيَقْطَعَ
இன்னும் துண்டித்துவிட
دَابِرَ
வேரை
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்கள்

Wa iz ya'idukumul laahu ihdat taaa'ifataini annahaa lakum wa tawaddoona anna ghaira zaatish shawkati takoonu lakum wa yureedul laahu ai yuhiqqal haqqa bikalimaatihee wa taqta'a daabiral kaafireen

(எதிரிகளின்) இரு கூட்டங்களில் ஒன்று, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துவிடுமென்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த சமயத்தில் நீங்கள் (அவ்விரண்டில்) பலமில்லாத (வர்த்தகக்) கூட்டத்தை (அடைய) விரும்பினீர்கள். எனினும், அல்லாஹ்வோ தன் வாக்கின்படி உண்மையை நிலைநாட்டி நிராகரிப்பவர்களின் வேரை அறுத்துவிடவே நாடினான்.

Tafseer

لِيُحِقَّ
அவன் உண்மைப்படுத்த
ٱلْحَقَّ
உண்மையை
وَيُبْطِلَ
இன்னும் அழித்துவிட, பெய்ப்பித்து விட
ٱلْبَٰطِلَ
பொய்யை
وَلَوْ كَرِهَ
வெறுத்தாலும்
ٱلْمُجْرِمُونَ
பாவிகள், குற்றவாளிகள்

Liyuhiqqal haqqa wa tubtilal baatila wa law karihal mujrimoon

அன்றி, அவன் பாவிகள் வெறுத்தபோதிலும் பொய்யை அழித்து உண்மையை நிலைநாட்(டவே நா)டினான்.

Tafseer

إِذْ تَسْتَغِيثُونَ
சமயம்/நீங்கள் பாதுகாப்புத் தேடுகிறீர்கள்
رَبَّكُمْ
உங்கள் இறைவனிடம்
فَٱسْتَجَابَ
பதிலளித்தான்
لَكُمْ
உங்களுக்கு
أَنِّى
நிச்சயமாக நான்
مُمِدُّكُم
உதவுவேன் உங்களுக்கு
بِأَلْفٍ
ஆயிரத்தைக்கொண்டு
مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களில்
مُرْدِفِينَ
தொடர்ந்து வரக்கூடியவர்கள்

Iz tastagheesoona Rabbakum fastajaaba lakum annee mumiddukum bi alfim minal malaaa'ikati murdifeen

(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது "அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்" என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.

Tafseer

وَمَا جَعَلَهُ
ஆக்கவில்லை/அதை
ٱللَّهُ
அல்லாஹ்
إِلَّا
தவிர
بُشْرَىٰ
ஒரு நற்செய்தியாக
وَلِتَطْمَئِنَّ
இன்னும் நிம்மதி பெறுவதற்காக
بِهِۦ
அதன் மூலம்
قُلُوبُكُمْۚ
உங்கள் உள்ளங்கள்
وَمَا ٱلنَّصْرُ
இல்லை/உதவி
إِلَّا
தவிர
مِنْ
இருந்தே
عِندِ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Wa maa ja'alahul laahu illaa bushraa wa litatma'inna bihee quloobukum; wa man nasru illaa min 'indil laah; innal laaha Azeezun Hakeem

உங்கள் உள்ளங்கள் திருப்தியடைவதற்காக ஒரு நற்செய்தியாகவே இதனை அல்லாஹ் (உங்களுக்கு) ஆக்கி வைத்தான். அல்லாஹ்விடம் இருந்தேயன்றி (உங்களுக்கு) இவ்வுதவி கிடைத்து விடவில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் அன்ஃபால்
القرآن الكريم:الأنفال
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Anfal
ஸூரா:8
வசனம்:75
Total Words:1075
Total Characters:5080
Number of Rukūʿs:10
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:88
Starting from verse:1160