Skip to main content

يَٰصَىٰحِبَىِ
என் இரு தோழர்களே
ٱلسِّجْنِ
சிறை
أَمَّآ
ஆக
أَحَدُكُمَا
உங்களிருவரில் ஒருவன்
فَيَسْقِى
புகட்டுவான்
رَبَّهُۥ
தன் எஜமானனுக்கு
خَمْرًاۖ
மது
وَأَمَّا
ஆக
ٱلْءَاخَرُ
மற்றவன்
فَيُصْلَبُ
கழுமரத்தில் அறையப்படுவான்
فَتَأْكُلُ
தின்னும்
ٱلطَّيْرُ
பறவைகள்
مِن رَّأْسِهِۦۚ
அவனுடையதலையில்
قُضِىَ
விதிக்கப்பட்டது
ٱلْأَمْرُ
காரியம்
ٱلَّذِى
எது
فِيهِ
அதில்
تَسْتَفْتِيَانِ
விளக்கம் கேட்கிறீர்கள்

Yaa saahibayis sijni ammaaa ahadukumaa fa yasqee rabbahoo khamranw wa ammal aakharu fa yuslabu fataakulut tairu mir raasih; qudiyal amrul lazee feehi tastaftiyaan

(பின்னும் அவர்களை நோக்கி) "சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) "உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன் முன் செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன் போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானங்கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்" என்று கூறினார்.)

Tafseer

وَقَالَ
இன்னும் கூறினார்
لِلَّذِى
எவருக்கு
ظَنَّ
எண்ணினார்
أَنَّهُۥ
நிச்சயமாக எவர்
نَاجٍ
தப்பிப்பவர்
مِّنْهُمَا
அவ்விருவரில்
ٱذْكُرْنِى
நினைவுகூரு/என்னை
عِندَ
இடம்
رَبِّكَ
உன் எஜமான்
فَأَنسَىٰهُ
அவருக்கு மறக்கடித்தான்
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
ذِكْرَ
நினைவு கூருவதை
رَبِّهِۦ
தன் இறைவனை
فَلَبِثَ
ஆகவே தங்கினார்
فِى ٱلسِّجْنِ
சிறையில்
بِضْعَ سِنِينَ
சில ஆண்டுகள்

Wa qaala lillazee zanna annahoo najim minhumaz kurnee 'inda rabbika fa-ansaahush Shaitaanu zikra Rabbihee falabisa fis sijni bad'a sineen

அன்றி, அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னார். எனினும் (சிறைக்கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான் மறக்கடித்து விட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார்.

Tafseer

وَقَالَ
கூறினார்
ٱلْمَلِكُ
அரசர்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَرَىٰ
கனவில் கண்டேன்
سَبْعَ
ஏழு
بَقَرَٰتٍ
பசுக்கள்
سِمَانٍ
கொழுத்தவை
يَأْكُلُهُنَّ
புசிக்கின்றன/அவற்றை
سَبْعٌ
ஏழு
عِجَافٌ
இளைத்தவை
وَسَبْعَ
இன்னும் ஏழு
سُنۢبُلَٰتٍ
கதிர்களை
خُضْرٍ
பசுமையானவை
وَأُخَرَ
இன்னும் வேறு
يَابِسَٰتٍۖ
காய்ந்தவை
يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ
பிரமுகர்களே
أَفْتُونِى
விளக்கம் தாருங்கள்/எனக்கு
فِى رُءْيَٰىَ
என் கனவில்
إِن كُنتُمْ
இருந்தீர்களானால்
لِلرُّءْيَا
கனவிற்கு
تَعْبُرُونَ
வியாக்கியானம் கூறுகிறீர்கள்

Wa qaalal maliku inneee araa sab'a baqaraatin simaaniny yaakuluhunna sab'un 'ijaafunw wa sab'a sumbulaatinkhudrinw wa ukhara yaabisaat; yaaa ayuhal mala-u aftoonee fee nu'yaaya in kuntum lirru'yaa ta'buroon

(ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) "என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான ஏழு) வேறு கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக் கூடியவர்களாக இருந்தால் என்னுடைய இக்கனவின் பலனை அறிவியுங்கள்" என்று கூறினார்.

Tafseer

قَالُوٓا۟
கூறினார்கள்
أَضْغَٰثُ
பொய்யானவை
أَحْلَٰمٍۖ
கனவுகள்
وَمَا
இல்லை
نَحْنُ
நாங்கள்
بِتَأْوِيلِ
விளக்கத்தை
ٱلْأَحْلَٰمِ
கனவுகளுக்குரிய
بِعَٰلِمِينَ
அறிந்தவர்களாக

Qaalooo adghaasu ahlaa minw wa maa nahnu bitaaweelil ahlaami bi'aalimeen

அதற்கவர்கள், "இது (அஜீரணத்தாலும்) சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட (வீணான) கனவுதான். (இத்தகைய வீண்) கனவுகளுக்குரிய விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்ல" என்று கூறினார்கள்.

Tafseer

وَقَالَ
கூறினான்
ٱلَّذِى
எவன்
نَجَا
தப்பித்தான்
مِنْهُمَا
அவ்விருவரில்
وَٱدَّكَرَ
இன்னும் நினைவு கூர்ந்தான்
بَعْدَ أُمَّةٍ
பின்னர்/சில ஆண்டு
أَنَا۠
நான்
أُنَبِّئُكُم
அறிவிப்பேன்/ உங்களுக்கு
بِتَأْوِيلِهِۦ
அவருடைய விளக்கத்தை
فَأَرْسِلُونِ
ஆகவே அனுப்புங்கள்/என்னை

Wa qaalal lazee najaa minhumaa waddakara ba'da ummatin ana unabbi'ukum bitalweelihee fa-arsiloon

(யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக்கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) "அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்" என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பி வைத்தார்.)

Tafseer

يُوسُفُ
யூஸுஃபே!
أَيُّهَا ٱلصِّدِّيقُ
உண்மையாளரே!
أَفْتِنَا
விளக்கம் தருவீராக/எங்களுக்கு
فِى سَبْعِ
ஏழுபசுக்கள்பற்றியும்
سِمَانٍ
கொழுத்தவை
يَأْكُلُهُنَّ
புசிக்கின்றன/அவற்றை
سَبْعٌ
ஏழு
عِجَافٌ
இளைத்தவை
وَسَبْعِ
இன்னும் ஏழு
سُنۢبُلَٰتٍ
கதிர்கள்
خُضْرٍ
பசுமையானவை
وَأُخَرَ
இன்னும் மற்றவை
يَابِسَٰتٍ
காய்ந்தவை
لَّعَلِّىٓ أَرْجِعُ
நான் திரும்பி செல்லவேண்டும்
إِلَى ٱلنَّاسِ
மக்களிடம்
لَعَلَّهُمْ يَعْلَمُونَ
அவர்கள் அறியவேண்டும்

Yoosufu ayyuhas siddee qu aftinaa fee sab'i baqaraatin simaaniny yaakuluhunna sab'un 'ijaafunw wa sabi'i sumbulaatin khudrinw wa ukhara yaabisaatil la'alleee arj'u ilan naasi la'allahum ya'lamoon

(அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி "கனவுகளுக்கு) உண்மை (யான வியாக்கியானம்) கூறுங்கள். யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதனை) நீங்கள் எமக்கு அறிவியுங்கள் (என்னை அனுப்பிய) மக்கள் (இதனைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கின்றது" என்று கூறினான்.

Tafseer

قَالَ
கூறினார்
تَزْرَعُونَ
விவசாயம்செய்வீர்கள்
سَبْعَ سِنِينَ
ஏழு ஆண்டுகள்
دَأَبًا
வழக்கமாக
فَمَا حَصَدتُّمْ
எதை/அறுவடை செய்தீர்
فَذَرُوهُ
விட்டு விடுங்கள்/அதை
فِى سُنۢبُلِهِۦٓ
அதன் கதிரிலேயே
إِلَّا قَلِيلًا
கொஞ்சத்தை தவிர
مِّمَّا تَأْكُلُونَ
நீங்கள் புசிப்பதற்குத் தேவையான

Qaala tazra'oona sab'a sineena da aban famaa basattum fazaroohu fee sumbu liheee illaa qaleelam mimmaa taakuloon

அதற்கவர் கூறியதாவது: "தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
يَأْتِى
வரும்
مِنۢ بَعْدِ
பின்னர்
ذَٰلِكَ سَبْعٌ
அதற்கு/ஏழு
شِدَادٌ
கடினமானவை
يَأْكُلْنَ
அவை தின்னும்
مَا
எவற்றை
قَدَّمْتُمْ
முற்படுத்தினீர்கள்
لَهُنَّ
அவற்றுக்காக
إِلَّا قَلِيلًا
கொஞ்சத்தை தவிர
مِّمَّا تُحْصِنُونَ
நீங்கள் பத்திரப்படுத்தியதிலிருந்து

Summa yaatee mim ba'di zaalika sab'un shidaaduny yaa kulna maa qaddamtum lahunna illaa qaleelam mimma tuhsinoon

அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சத்தையுடைய) ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்த வைகளில் (விதைப்புக்கு வேண்டிய) சொற்ப அளவைத் தவிர, (நீங்கள் சேகரித்திருந்த) அனைத்தையும் (அப்பஞ்சம்) தின்றுவிடும்.

Tafseer

ثُمَّ
பிறகு
يَأْتِى
வரும்
مِنۢ بَعْدِ
பின்னர்
ذَٰلِكَ
அதற்கு
عَامٌ
ஓர் ஆண்டு
فِيهِ
அதில்
يُغَاثُ
மழை பொழியப்படுவார்(கள்)
ٱلنَّاسُ
மக்கள்
وَفِيهِ
இன்னும் அதில்
يَعْصِرُونَ
பிழிவார்கள்

Summa yadtee mim ba'di zaalika 'aamun feehi yughaa sun naasu wa feehi ya'siroon

அதற்குப் பின்னர் ஒரு ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிந்துகொண்டு (சுகமாக) இருப்பார்கள்" (என்றும் கூறினார்).

Tafseer

وَقَالَ
கூறினார்
ٱلْمَلِكُ
அரசர்
ٱئْتُونِى
வாருங்கள்/என்னிடம்
بِهِۦۖ
அவரைக் கொண்டு
فَلَمَّا
வந்த போது
جَآءَهُ
வந்த போது அவரிடம்
ٱلرَّسُولُ
தூதர்
قَالَ
கூறினார்
ٱرْجِعْ
நீ திரும்பிச் செல்
إِلَىٰ رَبِّكَ
உன் எஜமானனிடம்
فَسْـَٔلْهُ
கேள்/அவரை
مَا بَالُ
விஷயமென்ன?
ٱلنِّسْوَةِ
பெண்களின்
ٱلَّٰتِى قَطَّعْنَ
எவர்கள்/வெட்டினர்
أَيْدِيَهُنَّۚ
தங்கள் கைகளை
إِنَّ رَبِّى
நிச்சயமாக என் இறைவன்
بِكَيْدِهِنَّ
சூழ்ச்சியை அவர்களின்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa qaalal maliku'toonee bihee falammaa jaaa'ahur rasoolu qaalar-ji ilaa rabbika fas'alhu maa baalun niswatil laatee qatta'na aydiyahunn; inna Rabbee bikaidihinna 'Aleem

(யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் "(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) "நீங்கள் உங்கள் எஜமானனிடம் திரும்பி சென்று, தங்களுடைய கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேளுங்கள். நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்" என்று கூறினார்.

Tafseer