Skip to main content

لَهُۥ
அவனுக்கு
مُعَقِّبَٰتٌ
பின் தொடரக் கூடியவர்கள்
مِّنۢ بَيْنِ
அவனுக்கு முன்
وَمِنْ خَلْفِهِۦ
இன்னும் அவனுக்குப் பின்
يَحْفَظُونَهُۥ
பாதுகாக்கின்றனர்/அவனை
مِنْ
இருந்து
أَمْرِ
கட்டளை
ٱللَّهِۗ
அல்லாஹ்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يُغَيِّرُ
மாற்றமாட்டான்
مَا بِقَوْمٍ
ஒரு சமுதாயத்திடம் உள்ளதை
حَتَّىٰ يُغَيِّرُوا۟
அவர்கள் மாற்றுகின்றவரை
مَا بِأَنفُسِهِمْۗ
தங்களிடமுள்ளதை
وَإِذَآ أَرَادَ
நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
بِقَوْمٍ
ஒரு சமுதாயத்திற்கு
سُوٓءًا
அழிவை
فَلَا
அறவே முடியாது
مَرَدَّ
தடுப்பது
لَهُۥۚ
அதை
وَمَا لَهُم
அவர்களுக்கு இல்லை
مِّن دُونِهِۦ
அவனையன்றி
مِن وَالٍ
உதவியாளர் எவரும்

Lahoo mu'aqqibaatum mim baini yadaihi wa min khalfihee yahfazoonahoo min amril laah; innal laaha laa yughaiyiru maa biqawmin hattaa yughaiyiroo maa bianfusihim; wa izaaa araadal laahu biqawmin sooo'an falaa maradda lah; wa maa lahum min dooniheeminw waal

(மனிதன் எந்நிலைமையிலிருந்த போதிலும்) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) பலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவனை பாதுகாக்கின்றார்கள். மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையை விட்டு) தங்களை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை. அல்லாஹ் யாதொரு வகுப்பாரையும் வேதனை செய்ய நாடினால், அதனைத் தடுப்பவர்கள் ஒருவரும் இல்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் அவனையன்றி வேறு யாரும் இல்லை.

Tafseer

هُوَ
அவன்
ٱلَّذِى
எத்தகையவன்
يُرِيكُمُ
காட்டுகின்றான்/உங்களுக்கு
ٱلْبَرْقَ
மின்னலை
خَوْفًا
பயமாக
وَطَمَعًا
இன்னும் ஆசையாக
وَيُنشِئُ
இன்னும் கிளப்புகின்றான்
ٱلسَّحَابَ
மேகங்களை
ٱلثِّقَالَ
கனமானவை

Huwal lazee yureekumul barqa khawfanw wa tama'anw wa yunshi'us sahaabas siqaal

(உங்களுக்கு) பயத்தையும் ஆதரவையும் தரக்கூடிய மின்னலை அவனே உங்கள் முன் பிரகாசிக்கச் செய்கிறான். (மழையைச் சுமந்த) பளுவான மேகங்களையும் அவனே கிளப்புகிறான்.

Tafseer

وَيُسَبِّحُ
துதிக்கின்றனர்
ٱلرَّعْدُ
இடி
بِحَمْدِهِۦ
அவனைப் புகழ்ந்து
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
مِنْ خِيفَتِهِۦ
அவனுடைய பயத்தால்
وَيُرْسِلُ
அனுப்புகிறான்
ٱلصَّوَٰعِقَ
அபாயங்களை
فَيُصِيبُ
வேறறுக்கிறான்
بِهَا
அவற்றைக் கொண்டு
مَن يَشَآءُ
எவர்களை/நாடுகிறான்
وَهُمْ
அவர்களோ
يُجَٰدِلُونَ
தர்க்கிக்கிறார்கள்
فِى ٱللَّهِ
அல்லாஹ்வை பற்றி
وَهُوَ
அவன்
شَدِيدُ ٱلْمِحَالِ
கடுமையானவன்/பிடி

Wa yusabbihur ra'du bihamdihee walmalaaa'ikatu min kheefatihee wa yursilus sawaa'iqa fa yuseebu bihaa mai yashaaa'u wa hum yujaadiloona fil laahi wa Huwa shadeedul mihaal

இடிகளும் மற்ற மலக்குகளும் அவனுக்குப் பயந்து அவனைத் துதி செய்து புகழ்கின்றனர். அவனே இடிகளை விழச் செய்து, அதைக்கொண்டு அவன் நாடியவர்களைத் தாக்குகிறான். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி (உங்களிடம்) தர்க்கிக்கின்றனர். அவனோ (அவர்களைத் தண்டிக்கக் கருதினால் அவர்கள்) நழுவாது மிக்க பலமாகப் பிடித்துக் கொள்பவன்.

Tafseer

لَهُۥ
அவனுக்கே
دَعْوَةُ
பிரார்த்தனை
ٱلْحَقِّۖ
உண்மை
وَٱلَّذِينَ
எவர்கள்
يَدْعُونَ
அழைக்கிறார்கள்
مِن دُونِهِۦ
அவனையன்றி
لَا يَسْتَجِيبُونَ
பதில் தர மாட்டார்கள்
لَهُم
அவர்களுக்கு
بِشَىْءٍ إِلَّا
எதையும்/தவிர
كَبَٰسِطِ
விரிப்பவனைப் போன்றே
كَفَّيْهِ
தன் இரு கைகளை
إِلَى ٱلْمَآءِ
பக்கம்/தண்ணீர்
لِيَبْلُغَ
அது அடைவதற்காக
فَاهُ
தன் வாயை
وَمَا هُوَ
இல்லை/அதுவோ
بِبَٰلِغِهِۦۚ
அடையாது/அதை
وَمَا دُعَآءُ
இல்லை/பிரார்த்தனை
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களின்
إِلَّا فِى
வழிகேட்டில் தவிர

Lahoo da'watul haqq; wallazeena yad'oona min doonihee laa yastajeeboona lahum bishai'in illaa kabaasiti kaffaihi ilal maaa'i liyablugha faahu wa maa huwa bibaalighih; wa maa du'aaa'ul aafireena illaa fee dalaal

(நாம் பிரார்த்தனை செய்து) உண்மையாக அழைக்கத் தகுதி உடையவன் அவனே. எவர்கள் அவனையன்றி (மற்ற பொய்யான தெய்வங்களைப் பிரார்த்தனை செய்து) அழைக்கின்றார்களோ அவர்களுக்கு, அவை யாதொன்றையும் கொடுத்து விடாது. (அல்லாஹ்வையன்றி மற்றவற்றை அழைப்பவர்களின் உதாரணம்:) தண்ணீர் (தானாகவே) தன் வாயில் சென்றுவிட வேண்டுமென்று கருதி, தன் இரு கைகளையும் (நீட்டி அள்ளிக் குடிக்காமல்) விரித்துக்கொண்டே இருப்பவனைப் போல் இருக்கிறது. (அதனை அவன் தன் கையைக்கொண்டு அள்ளிக் குடிக்கும் வரையில் அவனுடைய) வாயை அது அடைந்துவிடாது. (பொய்யான தெய்வங்களிடம்) நிராகரிப்பவர்கள் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேடாகவே இருக்கிறது.

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்வுக்கு
يَسْجُدُ
சிரம் பணிகின்றனர்
مَن فِى
எவர்/வானங்களில்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
طَوْعًا
ஆசையாக
وَكَرْهًا
இன்னும் நிர்பந்தமாக
وَظِلَٰلُهُم
அவர்களின் நிழல்களும்
بِٱلْغُدُوِّ
காலையில்
وَٱلْءَاصَالِ۩
இன்னும் மாலைகளில்

Wa lillaahi yasjudu man fis samaawaati wal ardi taw 'anw wa karhanw wa zilaaluhum bilghuduwwi wal aasaal

வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வழிபட்டே தீரும். காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்களும் (அவனுடைய கட்டளைக்கு வழிப்பட்டே முன் பின் செல்கின்றன).

Tafseer

قُلْ
கூறுவீராக
مَن
யார்?
رَّبُّ
இறைவன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
قُلِ
கூறுவீராக
ٱللَّهُۚ
அல்லாஹ்
قُلْ
கூறுவீராக
أَفَٱتَّخَذْتُم
நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்?
مِّن دُونِهِۦٓ
அவனையன்றி
أَوْلِيَآءَ
பாதுகாவலர்களை
لَا يَمْلِكُونَ
உரிமை பெறமாட்டார்கள்
لِأَنفُسِهِمْ
தங்களுக்கே
نَفْعًا
நன்மை செய்வதற்கு
وَلَا ضَرًّاۚ
தீங்கு செய்வதற்கு
قُلْ
கூறுவீராக
هَلْ يَسْتَوِى
சமமாவார்களா?
ٱلْأَعْمَىٰ
குருடன்
وَٱلْبَصِيرُ
இன்னும் பார்வையுடையவன்
أَمْ
அல்லது
هَلْ تَسْتَوِى
சமமாகுமா?
ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُۗ
இருள்கள்/இன்னும் ஒளி
أَمْ
அல்லது?
جَعَلُوا۟
ஆக்கினார்கள்
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
شُرَكَآءَ
இணைகளை
خَلَقُوا۟
படைத்தார்கள்
كَخَلْقِهِۦ
அவனுடைய படைப்பைப் போன்று
فَتَشَٰبَهَ
அதனால் குழப்பமடைந்தது
ٱلْخَلْقُ
படைப்பது
عَلَيْهِمْۚ
இவர்கள் மீது
قُلِ
கூறுவீராக
ٱللَّهُ
அல்லாஹ்தான்
خَٰلِقُ
படைப்பாளன்
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
وَهُوَ ٱلْوَٰحِدُ
அவன்/ஒருவன்
ٱلْقَهَّٰرُ
அடக்கி ஆளுபவன்

Wul mar Rabbus samaawaati wal ard; qulillaah; qul afattakhaztum min dooniheee awliyaaa'a laa yamlikoona li anfusihim naf'anw wa laa darraa; qul hal yastawil a'maa wal baseeru am hal tastawiz zulumaatu wannoor; am ja'aloo lillaahi shurakaaa'a khalaqoo kakhalqihee fatashaa bahal khalqu 'alaihim; qulil laahu Khaaliqu kulli shai'inw wa Huwal Waahidul Qahhar

(நபியே! அவர்களை நோக்கி) "வானங்களையும், பூமியையும் படைத்து நிர்வகிப்பவன் யார்?" என்று நீங்கள் கேளுங்கள். (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன!) நீங்களே (அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான்" என்று கூறுங்கள். அவ்வாறிருக்க "அவனை அன்றி (பொய்யான தெய்வங்களை) பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக் கொள்கின்றீர்களா? அவை தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவைகளாய் இருக்கின்றன" என்றும் கூறுங்கள். (பின்னும் அவர்களை நோக்கி) "குருடனும், பார்வை உடையவரும் சமமாவாரா? அல்லது இருளும் பிரகாசமும் சமமாகுமா?" என்று கேளுங்கள். அல்லது "அவர்கள் (இறைவனுக்கு) இணையாக்கிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதனையும் படைத்திருக் கின்றனவா?" (என்றும் கேளுங்கள்.) அவ்வாறாயின் (இந்த உலகைப்) படைத்தவன் (யாரென்பதில்) அவர்களுக்குள் சந்தேகமே ஏற்பட்டிருக்கலாம். (அவ்வாறும் இல்லையே! ஆகவே, அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: (இவ்வுலகிலுள்ள) ஒவ்வொன்றையும் படைப்பவன் அல்லாஹ்தான். அவன் ஒருவனே! (அவனுக்கு இணை துணையில்லை.) அவனே (உலகிலுள்ள அனைத்தையும்) அடக்கி ஆளுகின்றான்.

Tafseer

أَنزَلَ
அவன் இறக்கினான்
مِنَ
இருந்து
ٱلسَّمَآءِ
மேகம்
مَآءً
மழையை
فَسَالَتْ
ஓடின
أَوْدِيَةٌۢ
ஓடைகள்
بِقَدَرِهَا
அவற்றின் அளவிற்கு
فَٱحْتَمَلَ
சுமந்தது
ٱلسَّيْلُ
வெள்ளம்
زَبَدًا
நுரைகளை
رَّابِيًاۚ
மிதக்கக்கூடிய(து)
وَمِمَّا
இன்னும் எதிலிருந்து
يُوقِدُونَ
பழுக்கவைக்கிறார்கள்
عَلَيْهِ
அதன் மீது
فِى ٱلنَّارِ
நெருப்பில்
ٱبْتِغَآءَ
நாடி
حِلْيَةٍ
ஓர் ஆபரணத்தை
أَوْ
அல்லது
مَتَٰعٍ
ஒரு பொருளை
زَبَدٌ
நுரை
مِّثْلُهُۥۚ
அது போன்ற
كَذَٰلِكَ
இப்படித்தான்
يَضْرِبُ
விவரிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْحَقَّ
சத்தியத்தை
وَٱلْبَٰطِلَۚ
இன்னும் அசத்தியத்தை
فَأَمَّا
ஆகவே
ٱلزَّبَدُ
நுரை
فَيَذْهَبُ
செல்கிறது
جُفَآءًۖ
வீணானதாக
وَأَمَّا
ஆகவே
مَا
எது
يَنفَعُ
பலனளிக்கிறது
ٱلنَّاسَ
மக்களுக்கு
فَيَمْكُثُ
தங்குகிறது
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
كَذَٰلِكَ
இவ்வாறே
يَضْرِبُ
விவரிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْأَمْثَالَ
உவமைகளை

Anzala minas samaaa'i maaa'an fasaalat awdiyatum biqadarihaa fahtamalas sailu zabadar raabiyaa; wa mimmmaa yooqidoona 'alaihi fin naarib tighaaa'a bilyatin aw mataa'in zabadum misluh; kazaalika yadribul laahul haqqa wal baatil; fa ammaz zabadu fa yazhabu jufaaa'aa; wa ammaa maa yanfa'un naasa fa yamkusu fil ard; kazaalika yadribul laahul amsaal

"அவன்தான் மேகத்திலிருந்து மழையைப் பொழிவிக்கிறான். (அது பொழிகின்ற) நீருக்குத்தக்கவாறு (சிறிய பெரிய) ஓடைகளாக ஓடுகிறது. (அவ்வோடைகளில்) வெள்ளம் நுரைகளை மேல் சுமந்து செல்கிறது. இவ்வாறே ஆபரணங்களுக்காகவோ அல்லது மற்ற சாமான்களுக்காகவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும்பொழுதும் அதைப் போன்ற (அழுக்கு) நுரை மிதக்கிறது. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் இதனை உதாரணமாகக் கூறுகிறான். ஏனெனில், (அழுக்கு) நுரையோ பயனற்றதாக (இருப்பதால்) அழிந்து (மறைந்து) விடுகிறது. மனிதனுக்குப் பயனளிக்கக் கூடியவையோ பூமியில் (சேர்த்து வைக்கப்பட்டு) நிலையாக இருக்கின்றன. இவ்வாறே (நம்பிக்கை அற்றவர்களை அழுக்கு நுரைக்கும், நம்பிக்கையாளர்களை பூமியில் சேர்த்து வைக்கப்படும் பயன்தரும் பொருள்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் உதாரணம் கூறுகிறான்.

Tafseer

لِلَّذِينَ
எவர்களுக்கு
ٱسْتَجَابُوا۟
பதிலளித்தார்கள்
لِرَبِّهِمُ
தங்கள் இறைவனுக்கு
ٱلْحُسْنَىٰۚ
மிக அழகிய நன்மை
وَٱلَّذِينَ
எவர்கள்
لَمْ يَسْتَجِيبُوا۟
அவர்கள் பதிலளிக்கவில்லை
لَهُۥ
அவனுக்கு
لَوْ أَنَّ
நிச்சயமாகஇருந்திருந்தால்
لَهُم
அவர்களுக்கு
مَّا فِى
பூமியிலுள்ளவை
جَمِيعًا
அனைத்தும்
وَمِثْلَهُۥ
இன்னும் அதுபோன்றது
مَعَهُۥ
அதனுடன்
لَٱفْتَدَوْا۟ بِهِۦٓۚ
அதை பிணை கொடுத்திருப்பார்கள்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
لَهُمْ
அவர்களுக்கு
سُوٓءُ
கடினமானது
ٱلْحِسَابِ
விசாரணை
وَمَأْوَىٰهُمْ
இன்னும் தங்குமிடம் அவர்களுடைய
جَهَنَّمُۖ
நரகம்தான்
وَبِئْسَ
மிகக் கெட்டுவிட்டது
ٱلْمِهَادُ
தங்குமிடத்தால்

Lillazeenas tajaaboo lirabbihimul husnaa; wallazeena lam yastajeeboo lahoo law anna lahum maa fil ardi jamee'anw wa mislahoo ma'ahoo laftadaw bih; ulaaa'ika lahum sooo'ul hisaab; wa maawaahum Jahannamu wa bi'sal mihaad

எவர்கள் தங்கள் இறைவனுடைய அழைப்பை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (அது) முற்றிலும் நன்மையாகும். அன்றி, எவர்கள் அவன் அழைப்புக்குப் பதில் கூறவில்லையோ அது அவர்களுக்கு(க் கேடாகும். ஏனென்றால்) பூமியிலுள்ள பொருள்கள் அனைத்தும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் (அவர்களிடம்) இருந்தால் (மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய) வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள இவை அனைத்தையும் தங்களுக்குப் பிரதியாகக் கொடுத்து விடவே விரும்புவார்கள். (எனினும், அது ஆகாத காரியம்!) அன்றி, அவர்களிடம் மிகக் கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்கப்படும். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது.

Tafseer

أَفَمَن
எவர்?
يَعْلَمُ
அறிகின்றார்
أَنَّمَآ
எல்லாம்
أُنزِلَ
இறக்கப்பட்டது
إِلَيْكَ
உமக்கு
مِن رَّبِّكَ
உம் இறைவனால்
ٱلْحَقُّ
உண்மைதான்
كَمَنْ
போன்று/எவர்
هُوَ أَعْمَىٰٓۚ
அவர்/குருடர்
إِنَّمَا يَتَذَكَّرُ
நல்லுபதேசம் பெறுவதெல்லாம்
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
அறிவுடையவர்கள்தான்

Afamai ya'lamu annamaaa unzila ilaika mir Rabbikal haqqu kaman huwa a'maa; innamaa yatazakkaru ulul albaab

உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட (வேதத்)தை (அது) உண்மைதான் என்று உறுதியாக நம்புபவன் (பார்வையிழந்த) குருடனுக்கு ஒப்பானவனா? (ஆகமாட்டான்.) நிச்சயமாக (இதனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவரெல்லாம் அறிவுடையவர்கள்தாம்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يُوفُونَ
நிறைவேற்றுகிறார்கள்
بِعَهْدِ
ஒப்பந்தத்தை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلَا يَنقُضُونَ
இன்னும் முறிக்க மாட்டார்கள்
ٱلْمِيثَٰقَ
உடன்படிக்கையை

Allazeena yoofoona bi'ahdil laahi wa laa yanqu doonal meesaaq

அவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்களே அன்றி (தாங்கள்) செய்த உடன்படிக்கையை முறித்து விடமாட்டார்கள்.

Tafseer