Iqtaraba linnaasi hisaa buhum wa hum fee ghaflatim mu'ridoon
மனிதர்களை (நாம்) கேள்வி கணக்கு(க் கேட்கும் நாள்) நெருங்கிக் கொண்டே வருகின்றது; எனினும், அவர்களோ அதனைப் புறக்கணித்துக் கவலை அற்றவர்களாக இருக்கின்றனர்.
Maa yaateehim min zikrim mir Rabbihim muhdasin illas tama'oohu wa hum yal'aboon
தங்கள் இறைவனிடமிருந்து புதிதாக யாதொரு நல்லுபதேசம் வரும்போதெல்லாம் அதனை அவர்கள் (நம்பாது) பரிகாசம் செய்துகொண்டே கேட்கின்றார்கள்.
Laahiyatan quloobuhum; wa asarrun najwal lazeena zalamoo hal haazaa illaa basharum mislukum afataa toonas sihra wa antum tubsiroon
அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. அன்றி, இத்தகைய அநியாயக்காரர்கள் (நம்முடைய தூதரைப் பற்றி) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறென்ன? நீங்கள் பார்த்துக்கொண்டே (அவருடைய) சூனியத்தில் சிக்க வருகின்றீர்களா?" என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர்.
Qaala Rabbee ya'lamul qawla fis samaaa'i wal ardi wa Huwas Samee'ul Aleem
"வானங்களிலோ பூமியிலோ (ரகசியமாகவும், வெளிப்படை யாகவும் பேசப்படும்) எல்லா வாக்கியங்களையும் என் இறைவன் நன்கறிவான். ஏனென்றால், அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்" என்று (நமது தூதர்) பதில் கூறினார்.
Bal qaalooo adghaasu ahlaamim balif taraahu bal huwa shaa'irun falyaatinaa bi Aayatin kamaa ursilal awwaloon
(தவிர, அவர்கள் நம்முடைய வசனங்களைப் பற்றி) "இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்கள்) என்றும், நம்முடைய தூதர் இதனைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் வந்த தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர்!
Maaa aaamanat qablahum min qaryatin ahlaknaahaa a-fahum yu'minoon
இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்ட ஊராரில் ஒருவருமே (அவர்கள் விரும்பிய அத்தாட்சிகளைக் கண்ட பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. (அவ்வாறிருக்க) இவர்கள்தாமா நம்பிக்கை கொள்ளப் போகின்றனர்!
Wa maaa arsalnaa qablaka illaa rijaalan nooheee ilaihim fas'aloo ahlaz zikri in kuntum laa ta'lamoon
(நபியே!) உங்களுக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை. (உங்களுக்கு அறிவிப்பது போன்றே நம்முடைய கட்டளைகளை) அவர்களுக்கும் வஹீ (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்: இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் முன்னுள்ள வேதத்தை உடையவரிடத்தில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
Wa maa ja'alnaahum jasadal laa yaakuloonat ta'aama wa maa kaanoo khaalideen
அன்றி, அவர்களுக்கு நாம் உணவே உட்கொள்ளாத உடலைக் கொடுக்கவில்லை. தவிர, அவர்கள் (பூமியில் என்றுமே மரணிக்காத) நிரந்தரம் பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
summa sadaqnaa humul wa'da fa-anjainaahum wa man nashaaa'u wa ahlaknal musrifeen
பின்னர், (அவர்களை பாதுகாத்துக் கொள்வதாக நாம்) அவர்களுக்களித்த வாக்குறுதியை உண்மையாக்கும் பொருட்டு அவர்களையும், நாம் விரும்பிய மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டு வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம்.
Laqad anzalnaaa ilaikum Kitaaban feehi zikrukum afalaa ta'qiloon
உங்களுக்கு(ப் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கின்றோம். இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
القرآن الكريم: | الأنبياء |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Anbiya' |
ஸூரா: | 21 |
வசனம்: | 112 |
Total Words: | 1168 |
Total Characters: | 4890 |
Number of Rukūʿs: | 7 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 73 |
Starting from verse: | 2483 |