Skip to main content

ٱلَّذِينَ
எவர்கள்
إِن مَّكَّنَّٰهُمْ
அவர்களுக்கு நாம் இடமளித்தால்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
أَقَامُوا۟
நிறைவேற்றுவார்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتَوُا۟
இன்னும் கொடுப்பார்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَأَمَرُوا۟
இன்னும் ஏவுவார்கள்
بِٱلْمَعْرُوفِ
நன்மையை
وَنَهَوْا۟
இன்னும் தடுப்பார்கள்
عَنِ ٱلْمُنكَرِۗ
தீமையிலிருந்து
وَلِلَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
عَٰقِبَةُ
முடிவு
ٱلْأُمُورِ
எல்லாக் காரியங்களின்

Allazeena im makkan naahum fil ardi aqaamus Salaata wa aatawuz Zakaata wa amaroo bilma'roofi wa nahaw 'anil munkar; wa lillaahi 'aaqibatul umoor

இவர்கள் எத்தகையவரென்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையானவைகளை ஏவி, பாவமானவைகளைத் தடை செய்வார்கள். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.

Tafseer

وَإِن يُكَذِّبُوكَ
உம்மை இவர்கள் பொய்ப்பித்தால்
فَقَدْ
திட்டமாக
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
قَوْمُ
மக்களும்
نُوحٍ
நூஹூடைய
وَعَادٌ
இன்னும் ஆது
وَثَمُودُ
ஸமூது சமுதாயமும்

Wa iny yukazzibooka faqad kazzabat qablahum qawmu Nooinw wa Aadunw wa Samood

(நபியே! நிராகரிக்கும்) இவர்கள் உங்களைப் பொய்யாக்கினால் (அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனென்றால்) இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய மக்களும், ஆது, ஸமூது என்னும் மக்களும் (தங்கள் நபிமார்களை) நிச்சயமாக பொய்யாக்கியே இருந்தனர்.

Tafseer

وَقَوْمُ
மக்களும்
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுடைய
وَقَوْمُ
மக்களும்
لُوطٍ
லூத்துடைய

Wa qawmu Ibraaheema wa qawmu Loot

(இவ்வாறே) இப்ராஹீமுடைய மக்கள் (இப்ராஹீமையும்), லூத்துடைய மக்கள் (லூத்தையும்) பொய்யாக்கினார்கள்.

Tafseer

وَأَصْحَٰبُ
வாசிகளும்
مَدْيَنَۖ
மத்யன்
وَكُذِّبَ
பொய்ப்பிக்கப்பட்டார்
مُوسَىٰ
மூஸாவும்
فَأَمْلَيْتُ
நான் அவகாசம் அளித்தேன்
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
ثُمَّ
பிறகு
أَخَذْتُهُمْۖ
நான் அவர்களைப் பிடித்தேன்
فَكَيْفَ
ஆகவே, எப்படி?
كَانَ
இருந்தது
نَكِيرِ
எனது மறுப்பு

Wa as haabu Madyana wa kuzziba Moosaa fa amlaitu lilkaafireena summa akhaztuhum fakaifa kaana nakeer

(அவ்வாறே) மத்யன்வாசிகளும் (தங்கள் நபியைப் பொய்யாக்கினர். இவ்வாறே) மூஸாவும் (தன் மக்களால்) பொய்யாக்கப்பட்டார். ஆகவே, நிராகரித்த இவர்கள் அனைவருக்கும் நாம் சிறிது அவகாசம் கொடுத்து பின்னர் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். (நம்முடைய) வேதனை எவ்வாறு இருந்தது (என்பதை நீங்கள் கவனித்தீர்களா?)

Tafseer

فَكَأَيِّن
எத்தனையோ
مِّن قَرْيَةٍ
ஊர்களை
أَهْلَكْنَٰهَا
நாம் அவற்றை அழித்தோம்
وَهِىَ
அவை
ظَالِمَةٌ
அநியாயம் புரிபவையாக இருக்க
فَهِىَ
அவை
خَاوِيَةٌ
வீழ்ந்துள்ளன
عَلَىٰ
மீது
عُرُوشِهَا
தமது முகடுகள்
وَبِئْرٍ
கிணறுகள்
مُّعَطَّلَةٍ
விடப்பட்ட
وَقَصْرٍ
மாளிகைகளை
مَّشِيدٍ
சுண்ணாம்புக் கலவைகளைக் கொண்டு கட்டப்பட்ட

Faka ayyim min qaryatin ahlaknaahaa wa hiya zaalimatun fahiya khaawiyatun 'alaa 'urooshihaa wa bi'rim mu'at talatinw wa qasrim masheed

அநியாயக்காரர்கள் வசித்திருந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம். அவற்றுடைய முகடுகள் இடிந்து குட்டிச் சுவராகிக் கிடக்கின்றன. அவற்றின் (எத்தனையோ) கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன. அவற்றின் மாட மாளிகைகள் (மக்கள் வசிக்காது) பாழாய் கிடக்கின்றன.

Tafseer

أَفَلَمْ يَسِيرُوا۟
அவர்கள் பயணம் செய்ய வேண்டாமா?
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَتَكُونَ
உண்டாகும்
لَهُمْ
அவர்களுக்கு
قُلُوبٌ
உள்ளங்களும்
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்றனர்
بِهَآ
அவற்றின் மூலம்
أَوْ
அல்லது
ءَاذَانٌ
காதுகளும்
يَسْمَعُونَ
செவிமடுக்கின்ற
بِهَاۖ
அவற்றின் மூலம்
فَإِنَّهَا
ஏனெனில் நிச்சயமாக
لَا تَعْمَى
குருடாகுவதில்லை
ٱلْأَبْصَٰرُ
பார்வைகள்
وَلَٰكِن
எனினும்
تَعْمَى
குருடாகி விடுகின்றன
ٱلْقُلُوبُ
உள்ளங்கள்தான்
ٱلَّتِى فِى
நெஞ்சங்களில் உள்ள

Afalam yaseeroo fil ardi fatakoona lahum quloobuny ya'qiloona bihaaa aw aazaanuny yasm'oona bihaa fa innahaa laa ta'mal absaaru wa laakin ta'mal quloobul latee fissudoor

ஆகவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவைகளைப்) பார்க்க வேண்டாமா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய உள்ளங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக் கூடிய செவி அவர்களுக்கு உண்டாகி விடும். நிச்சயமாக அவர்களுடைய (வெளிக்) கண்கள் குருடாகி விடவில்லை. எனினும், நெஞ்சுகளில் இருக்கும் (அவர்களுடைய அகக்) கண்கள்தாம் குருடாகி விட்டன.

Tafseer

وَيَسْتَعْجِلُونَكَ
அவர்கள் உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர்
بِٱلْعَذَابِ
வேதனையை
وَلَن يُخْلِفَ
அறவே மாற்ற மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَعْدَهُۥۚ
தனது வாக்கை
وَإِنَّ
நிச்சயமாக
يَوْمًا
ஒரு நாள்
عِندَ رَبِّكَ
உமது இறைவனிடம்
كَأَلْفِ
ஆயிரம் போன்று
سَنَةٍ
ஆண்டுகளை
مِّمَّا تَعُدُّونَ
நீங்கள் எண்ணக்கூடியவற்றிலிருந்து

Wa yasta'juloonaka bil'azaabi wa lany yukhlifal laahu wa'dah; wa inna yawman 'inda Rabbika ka'alfi sanatim mimmaa ta'uddoon

(நபியே!) அவர்கள் வேதனையைத் தேடி உங்களிடம் அவசரப்படுகின்றனர். (நீங்கள் கூறுங்கள்: உங்கள் மீது வேதனை இறக்குவதாக) அல்லாஹ் செய்த வாக்குறுதியை அவன் மாற்ற மாட்டான். நிச்சயமாக உங்களது இறைவனிடத்தில் ஒரு நாள் நீங்கள் எண்ணும் (உங்களுடைய) ஆயிரம் வருடங்களுக்குச் சமமாகும்.

Tafseer

وَكَأَيِّن
எத்தனையோ
مِّن قَرْيَةٍ
ஊர்கள்
أَمْلَيْتُ
நான் அவகாசம் அளித்தேன்
لَهَا
அவற்றுக்கு
وَهِىَ
அவை
ظَالِمَةٌ
அநியாயம் செய்பவையாக இருக்க
ثُمَّ
பிறகு
أَخَذْتُهَا
அவற்றைப்பிடித்தேன்
وَإِلَىَّ
என் பக்கமே
ٱلْمَصِيرُ
மீளுதல் இருக்கிறது

Wa ka ayyim min qaryatin amlaitu lahaa wa hiya zaalimatun summa akhaztuhaa wa ilaiyal maseer

நாம் எத்தனையோ ஊரார்களுக்கு அவகாசமளித்தோம். (திருந்தாது) பின்னும் அவர்கள் அநியாயமே செய்யத் தலைப் பட்டார்கள். ஆதலால், நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். அவர்கள் (இறந்த பின்னரும்) நம்மிடம் தான் வரவேண்டியது இருக்கின்றது.

Tafseer

قُلْ
கூறுவீராக
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
إِنَّمَآ أَنَا۠
நிச்சயமாக நான் எல்லாம்
لَكُمْ
உங்களுக்கு
نَذِيرٌ
எச்சரிப்பாளர்தான்
مُّبِينٌ
தெளிவான

Qul yaaa ayyuhan naasu innamaaa ana lakum nazeerum mubeen

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே(யன்றி வேறில்லை).""

Tafseer

فَٱلَّذِينَ
ஆகவே, எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகள்
لَهُم
அவர்களுக்கு உண்டு
مَّغْفِرَةٌ
பாவமன்னிப்பு(ம்)
وَرِزْقٌ
உணவும்
كَرِيمٌ
கண்ணியமான

Fallazeena aamanoo wa 'amilu saalihaati lahum maghfiratunw wa rizqun kareem

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு.

Tafseer