Skip to main content
bismillah

الٓمٓ
அலிஃப், லாம், மீம்

Alif-Laam-Meeem

அலிஃப்; லாம்; மீம்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
இறைவன்
إِلَّا هُوَ
தவிர/அவன்
ٱلْحَىُّ
என்றும் உயிருள்ளவன்
ٱلْقَيُّومُ
நிலையானவன்

Allaahu laaa ilaaha illaa Huwal Haiyul Qaiyoom

அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் நிரந்தரமானவன்; என்றும் நிலையானவன்.

Tafseer

نَزَّلَ
இறக்கினான்
عَلَيْكَ
உம்மீது
ٱلْكِتَٰبَ
வேதத்தை
بِٱلْحَقِّ
சத்தியத்துடன்
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியதாக
لِّمَا بَيْنَ
தனக்கு முன்னுள்ளதை
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
ٱلتَّوْرَىٰةَ
தவ்றாத்தை
وَٱلْإِنجِيلَ
இன்னும் இன்ஜீலை

Nazzala 'alaikal Kitaaba bilhaqqi musaddiqal limaa baina yadaihi wa anzalat Tawraata wal Injeel

(நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உங்கள் மீது இறக்கி வைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்த தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.

Tafseer

مِن قَبْلُ
(இதற்கு) முன்னர்
هُدًى
நேர்வழியாக
لِّلنَّاسِ
மக்களுக்கு
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
ٱلْفُرْقَانَۗ
பிறித்தறிவிக்கக் கூடியதை
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
شَدِيدٌۗ
கடினமானது
وَٱللَّهُ
அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
ذُو ٱنتِقَامٍ
தண்டிப்பவன்

Min qablu hudal linnaasi wa anzalal Furqaan; innallazeena kafaroo bi Aayaatil laahi lahum 'azaabun shadeed; wallaahu 'azeezun zun tiqaam

(அன்றி, நன்மை தீமைகளைப்) பிறித்தறிவிக்கக் கூடிய (மற்ற)வைகளையும் அருள் புரிந்திருக்கின்றான். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய (அவ்)வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், (தீயவர்களைத்) தண்டிப்பவனுமாக இருக்கின்றான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يَخْفَىٰ
மறையாது
عَلَيْهِ
அவனுக்கு
شَىْءٌ
எதுவும்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَلَا فِى
இன்னும் வானத்தில்

Innal laaha laa yakhfaa 'alaihi shai'un fil ardi wa laa fis samaaa'

நிச்சயமாக பூமியிலோ, வானத்திலோ (உள்ள) எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று.

Tafseer

هُوَ ٱلَّذِى
அவன்/எவன்
يُصَوِّرُكُمْ
உங்களை உருவமைக்கிறான்
فِى ٱلْأَرْحَامِ
கர்ப்பப் பைகளில்
كَيْفَ
எவ்வாறு
يَشَآءُۚ
நாடுகிறான்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا
தவிர
هُوَ
அவன்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
ஞானவான்

Huwal lazee yusawwirukum fil arhaami kaifa yashaaa'; laa ilaaha illaa Huwal 'Azeezul Hakeem

அவன்தான் கர்ப்பப் பைகளில் தான் விரும்பியவாறு (ஆணாகவோ, பெண்ணாகவோ) உருவம் அமைக்கின்றான். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

Tafseer

هُوَ
அவன்
ٱلَّذِىٓ
எப்படிப்பட்ட
أَنزَلَ
இறக்கினான்
عَلَيْكَ
உம்மீது
ٱلْكِتَٰبَ
வேதத்தை
مِنْهُ ءَايَٰتٌ
அதில்/வசனங்கள்
مُّحْكَمَٰتٌ هُنَّ
பொருள் தெளிவானவை/அவை
أُمُّ ٱلْكِتَٰبِ
அடிப்படை/வேதம்
وَأُخَرُ
இன்னும் வேறு
مُتَشَٰبِهَٰتٌۖ
பொருள் தெரியாதவை
فَأَمَّا ٱلَّذِينَ
ஆகவே/எவர்கள்
فِى قُلُوبِهِمْ
தங்கள் உள்ளங்களில்
زَيْغٌ
கோணல்
فَيَتَّبِعُونَ
பின்பற்றுகிறார்கள்
مَا
எதை
تَشَٰبَهَ
பொருள் தெரிய முடி யாமல்ஆகிவிட்டது
مِنْهُ
அதில்
ٱبْتِغَآءَ
தேடி
ٱلْفِتْنَةِ
குழப்பத்தை
وَٱبْتِغَآءَ
இன்னும் தேடி
تَأْوِيلِهِۦۗ
அதன் விளக்கத்தை
وَمَا يَعْلَمُ
இன்னும் அறியமாட்டார்
تَأْوِيلَهُۥٓ
அதன் விளக்கத்தை
إِلَّا
தவிர
ٱللَّهُۗ
அல்லாஹ்
وَٱلرَّٰسِخُونَ
தேர்ச்சி அடைந்தவர்கள்
فِى ٱلْعِلْمِ
கல்வியில்
يَقُولُونَ
கூறுவார்கள்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
بِهِۦ
அதை
كُلٌّ
எல்லாம்
مِّنْ
இருந்து
عِندِ
இடம்
رَبِّنَاۗ
எங்கள் இறைவன்
وَمَا يَذَّكَّرُ
இன்னும் நல்லறிவுபெறமாட்டார்
إِلَّآ
தவிர
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
அறிவுள்ளவர்கள்

Huwal lazeee anzala 'alaikal Kitaaba minhu Aayaatum Muh kamaatun hunna Ummul Kitaabi wa ukharu Mutashaabihaatun faammal lazeena fee quloobihim ziyghun fa yattabi'oona ma tashaabaha minhubtighaaa 'alfitnati wabtighaaa'a taaweelih; wa maa ya'lamu taaweelahooo illal laah; warraasikhoona fil 'ilmi yaqooloona aamannaa bihee kullum min 'indi Rabbinaa; wa maa yazzakkaru illaaa ulul albaab

(நபியே!) அவனே இவ்வேதத்தையும் உங்கள்மீது இறக்கி வைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரிய முடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திகேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி ஒருவரும் அறிய மாட்டார்கள். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களையன்றி மற்ற எவரும் (இவைகளைக் கொண்டு) நல்லுபதேசம் அடைய மாட்டார்கள்.

Tafseer

رَبَّنَا
எங்கள் இறைவா
لَا تُزِغْ
கோணலாக்கி விடாதே
قُلُوبَنَا
எங்கள் உள்ளங்களை
بَعْدَ
பின்னர்
إِذْ هَدَيْتَنَا
எங்களைநேர்வழியில்செலுத்தினாய்
وَهَبْ
இன்னும் வழங்கு
لَنَا
எங்களுக்கு
مِن لَّدُنكَ
உன்னிடமிருந்து
رَحْمَةًۚ
கருணையை
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
ٱلْوَهَّابُ
வாரி வழங்குபவன்

Rabbanaa laa tuzigh quloobanaa ba'da iz hadaitanaa wa hab lanaa mil ladunka rahmah; innaka antal Wahhaab

(அன்றி அவர்கள்) "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!"

Tafseer

رَبَّنَآ
எங்கள் இறைவா
إِنَّكَ
நிச்சயமாக நீ
جَامِعُ
ஒன்று சேர்ப்பவன்
ٱلنَّاسِ
மக்களை
لِيَوْمٍ
ஒரு நாளில்
لَّا
அறவே இல்லை
رَيْبَ
சந்தேகம்
فِيهِۚ
அதில்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يُخْلِفُ
மாற்ற மாட்டான்
ٱلْمِيعَادَ
வாக்கை

Rabbanaaa innaka jaami 'un-naasi li Yawmil laa raibafeeh; innal laaha laa yukhliful mee'aad

"எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஒரு நாளில் மனிதர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். அ(ந்நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் தவறுபவனல்ல" (என்று கூறுவார்கள்.)

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
لَن تُغْنِىَ
அறவே தடுக்காது
عَنْهُمْ
அவர்களை விட்டும்
أَمْوَٰلُهُمْ
அவர்களுடைய செல்வங்கள்
وَلَآ أَوْلَٰدُهُم
இன்னும் அவர்களுடைய சந்ததிகள்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
شَيْـًٔاۖ
எதையும்
وَأُو۟لَٰٓئِكَ هُمْ
இன்னும் அவர்கள்தான்
وَقُودُ
எரிபொருள்கள்
ٱلنَّارِ
நரகத்தின்

Innal lazeena kafaroo lan tughniya 'anhum amwaaluhum wa laaa awlaaduhum minal laahi shai'anw wa ulaaa'ika hum waqoodun Naar

நிச்சயமாக எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (அந்நாளில்) அவர்களுடைய பொருளும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி) லிருந்து எதையும் அறவே தவிர்த்து விடமுடியாது. இவர்கள்தான் (உண்மையாகவே) நரகத்தின் எரிகட்டையாக இருக்கின்றனர்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல்ஆல இம்ரான்
القرآن الكريم:آل عمران
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Ali 'Imran
ஸூரா:3
வசனம்:200
Total Words:3480
Total Characters:14520
Number of Rukūʿs:20
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:89
Starting from verse:293