Skip to main content

قَالَ
கூறினார்
رَبِّ
என் இறைவா
ٱجْعَل لِّىٓ
ஆக்கு/எனக்கு
ءَايَةًۖ
ஓர் அத்தாட்சியை
قَالَ
கூறினான்
ءَايَتُكَ
உம் அத்தாட்சி
أَلَّا تُكَلِّمَ
நீர் பேசமால் இருப்பது
ٱلنَّاسَ
மக்களிடம்
ثَلَٰثَةَ أَيَّامٍ
மூன்று நாட்கள்
إِلَّا رَمْزًاۗ
தவிர/சாடையாக
وَٱذْكُر
இன்னும் நினைவு கூறுவீராக
رَّبَّكَ
உம் இறைவனை
كَثِيرًا
அதிகம்
وَسَبِّحْ
இன்னும் துதித்து தூய்மைப்படுத்துவீராக
بِٱلْعَشِىِّ
மாலையில்
وَٱلْإِبْكَٰرِ
இன்னும் காலையில்

Qaala Rabbij 'al leee Aayatan qaala Aaayatuka allaa tukalliman naasa salaasata ayyaamin illa ramzaa; wzkur Rabbaka kaseeranw wa sabbih bil'ashiyyi wal ibkaar

(அதற்கு) ஜகரிய்யா "என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக" என்று கேட்டார். அதற்கு (இறைவன்) "உங்களுக்களிக்கப்படும் அத்தாட்சியாவது மூன்று நாள்கள் வரையில் ஜாடையாகவே தவிர நீங்கள் மனிதர்களுடன் பேசமாட்டீர்கள். (அந்நாள்களில்) நீங்கள் உங்கள் இறைவனை அதிகமாக நினைத்துக் கொண்டும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதிசெய்து கொண்டும் இருங்கள்" என்று கூறினான்.

Tafseer

وَإِذْ
சமயம்
قَالَتِ
கூறினா(ர்க)ள்
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
يَٰمَرْيَمُ
மர்யமே!
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ٱصْطَفَىٰكِ
உம்மைத் தேர்ந்தெடுத்தான்
وَطَهَّرَكِ
இன்னும் உம்மைப் பரிசுத்தப்படுத்தினான்
وَٱصْطَفَىٰكِ
இன்னும் உம்மைத் தேர்ந்தெடுத்தான்
عَلَىٰ نِسَآءِ
பெண்களைவிட
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்

Wa iz qaalatil malaaa'ikatu yaa Ya Maryamu innal laahas tafaaki wa tahharaki wastafaaki 'alaa nisaaa'il 'aalameen

(நபியே! மர்யமை நோக்கி) மலக்குகள் கூறிய சமயத்தில் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உங்களைத் தேர்ந்தெடுத் திருக்கின்றான். உங்களை பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கின்றான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரையும்விட உங்களை மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றான், (என்றும்)

Tafseer

يَٰمَرْيَمُ
மர்யமே!
ٱقْنُتِى
பணிவீராக
لِرَبِّكِ
உம் இறைவனுக்கு
وَٱسْجُدِى
இன்னும் சிரம் தாழ்த்துவீராக
وَٱرْكَعِى
இன்னும் குனிவீராக
مَعَ
உடன்
ٱلرَّٰكِعِينَ
குனிபவர்களுடன்

Yaa Maryamuq nutee li Rabbiki wasjudee warka'ee ma'ar raaki'een

(ஆகவே) மர்யமே! நீங்கள் உங்களுடைய இறைவனுக்கு வழிப்பட்டு குனிந்து (சிரம் பணிந்து) வணங்குபவர்களுடன் நீங்களும் குனிந்து (சிரம் பணிந்து) வணங்குங்கள்!" (என்று கூறினார்கள்.)

Tafseer

ذَٰلِكَ
இவை
مِنْ
இருந்து
أَنۢبَآءِ
செய்திகள்
ٱلْغَيْبِ
மறைவானவை
نُوحِيهِ
இவற்றை வஹீ அறிவிக்கிறோம்
إِلَيْكَۚ
உமக்கு
وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
لَدَيْهِمْ
அவர்களிடம்
إِذْ يُلْقُونَ
போது/எறிகிறார்கள்
أَقْلَٰمَهُمْ
தங்கள் எழுது கோல்களை
أَيُّهُمْ
அவர்களில் யார்
يَكْفُلُ
பொறுப்பேற்பார்
مَرْيَمَ
மர்யமை
وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
لَدَيْهِمْ
அவர்களிடம்
إِذْ يَخْتَصِمُونَ
போது/ தர்க்கிக்கிறார்கள்

Zaalika min ambaaa'il ghaibi nooheehi ilaik; wa maa kunta ladaihim iz yulqoona aqlaamahum ayyuhum yakfulu Maryama wa maa kunta ladaihim iz yakhtasimoon

(நபியே!) இவை (அனைத்தும் நீங்கள் அறியாத) மறைவான விஷயங்களாகும். இவைகளை நாம் உங்களுக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். அன்றி, மர்யமை (வளர்க்க) யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும் நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை.

Tafseer

إِذْ قَالَتِ
கூறியசமயம்
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
يَٰمَرْيَمُ
மர்யமே!
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يُبَشِّرُكِ
உமக்கு நற்செய்தி கூறுகிறான்
بِكَلِمَةٍ
ஒரு வார்த்தையைக் கொண்டு
مِّنْهُ
அவனிடமிருந்து
ٱسْمُهُ
அதன் பெயர்
ٱلْمَسِيحُ
அல் மஸீஹ்
عِيسَى
ஈஸா
ٱبْنُ مَرْيَمَ
மர்யமுடைய மகன்
وَجِيهًا
கம்பீரமானவராக
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
وَٱلْءَاخِرَةِ
இன்னும் மறுமை
وَمِنَ ٱلْمُقَرَّبِينَ
நெருக்கமானவர்களில்

Iz qaalatil malaaa'ikatu yaa Maryamu innal laaha yubashshiruki bi Kalimatim minhus muhul Maseeh u 'Eesab nu Maryama wajeehan fid dunyaa wal Aakhirati wa minal muqarrabeen

(மேலும், மர்யமை நோக்கி) மலக்குகள் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகின்றான்" என்றும் "அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்" என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்" என்றும் கூறினார்கள்.

Tafseer

وَيُكَلِّمُ
இன்னும் பேசுவார்
ٱلنَّاسَ فِى
மக்களிடம்தொட்டிலில்
وَكَهْلًا
இன்னும் வாலிபராக
وَمِنَ ٱلصَّٰلِحِينَ
இன்னும் நல்லோரில்

Wa yukallimun naasa filmahdi wa kahlanw wa minassaaliheen

அன்றி "அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்" (என்றும் கூறினார்கள்.)

Tafseer

قَالَتْ
கூறினாள்
رَبِّ
என் இறைவா
أَنَّىٰ
எவ்வாறு
يَكُونُ
ஏற்படும்
لِى
எனக்கு
وَلَدٌ
குழந்தை
وَلَمْ يَمْسَسْنِى
என்னைத் தொடாமல் இருக்க
بَشَرٌۖ
ஓர் ஆடவர்
قَالَ
கூறினான்
كَذَٰلِكِ
இவ்வாறு
ٱللَّهُ
அல்லாஹ்
يَخْلُقُ
படைக்கிறான்
مَا
எதை
يَشَآءُۚ
நாடுகிறான்
إِذَا قَضَىٰٓ
(அவன்) முடிவு செய்தால்
أَمْرًا
ஒரு காரியத்தை
فَإِنَّمَا يَقُولُ
அவன் கூறுவதெல்லாம்
لَهُۥ
அதற்கு
كُن
ஆகுக
فَيَكُونُ
உடனே ஆகிவிடும்

Qaalat Rabbi annaa yakoonu ee waladunw wa lam yamsasnee basharun qaala kazaalikil laahu yakhluqu maa yashaaa'; izaa qadaaa amran fa innamaa yaqoolu lahoo kun fayakoon

(அதற்கு மர்யம், தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (மனிதர்களில்) ஒருவருமே என்னைத் தீண்டாதிருக்கும் போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டுவிடும்?" என்று கூறினார். (அதற்கு) "இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். அவன் ஒரு பொருளை (படைக்க) நாடினால் அதனை "ஆகுக" என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும்" என்று கூறினான்.

Tafseer

وَيُعَلِّمُهُ
இன்னும் அவருக்கு கற்பிப்பான்
ٱلْكِتَٰبَ
எழுதுவதை
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ
இன்னும் தவ்றாத்/இன்ஜீல்

Wa yu'allimuhul Kitaaba wal Hikmata wat Tawraata wal Injeel

மேலும் அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும், தவ்றாத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான்.

Tafseer

وَرَسُولًا
இன்னும் தூதராக
إِلَىٰ
பக்கம்
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்கள்
أَنِّى
நிச்சயமாக நான்
قَدْ جِئْتُكُم
உங்களிடம் வந்திருக்கின்றேன்
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
مِّن رَّبِّكُمْۖ
உங்கள் இறைவனிடமிருந்து
أَنِّىٓ
நிச்சயமாக நான்
أَخْلُقُ
படைப்பேன்
لَكُم
உங்களுக்கு
مِّنَ ٱلطِّينِ
களிமண்ணிலிருந்து
كَهَيْـَٔةِ
அமைப்பைப் போல்
ٱلطَّيْرِ
பறவையின்
فَأَنفُخُ فِيهِ
இன்னும் ஊதுவேன்/அதில்
فَيَكُونُ
(அது) ஆகிவிடும்
طَيْرًۢا
பறவையாக
بِإِذْنِ
அனுமதி கொண்டு
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
وَأُبْرِئُ
இன்னும் குணப்படுத்துவேன்
ٱلْأَكْمَهَ
பிறவிக் குருடரை
وَٱلْأَبْرَصَ
இன்னும் வெண்குஷ்டரை
وَأُحْىِ
இன்னும் உயிர்ப்பிப்பேன்
ٱلْمَوْتَىٰ
மரணித்தோரை
بِإِذْنِ
அனுமதி கொண்டு
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
وَأُنَبِّئُكُم
இன்னும் உங்களுக்கு அறிவிப்பேன்
بِمَا تَأْكُلُونَ
எதை/புசிக்கிறீர்கள்
وَمَا
இன்னும் எது
تَدَّخِرُونَ
சேமிக்கிறீர்கள்
فِى بُيُوتِكُمْۚ
உங்கள் வீடுகளில்
إِنَّ فِى
நிச்சயமாக/இதில்
لَءَايَةً
திட்டமாக ஓர் அத்தாட்சி
لَّكُمْ
உங்களுக்கு
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Wa Rasoolan ilaa Baneee Israaa'eela annee qad ji'tukum bi Aayatim mir Rabbikum annee akhluqu lakum minatteeni kahai 'atittairi fa anfukhu feehi fayakoonu tairam bi iznil laahi wa ubri'ul akmaha wal abrasa wa uhyil mawtaa bi iznil laahi wa unabbi'ukum bimaa taakuloona wa maa taddakhiroona fee buyootikum; inna fee zaalika la Aayatal lakum in kuntum mu'mineen

இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் ஆக்குவான் (என்றும் இறைவன் கூறினான். பின்னர், ஈஸா பிறந்து தன் வாலிபத்தை அடைந்து இஸ்ராயீலின் சந்ததிகளிடம் சென்றபொழுது அவர்களை நோக்கிக் கூறியதாவது:) "நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக) உங்களுக்கு ஒரு அத்தாட்சி கொண்டு வந்திருக் கின்றேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையைப் போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (பறக்கும்) பறவை ஆகிவிடும். பிறவிக் குருடனையும் வெண் குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித் தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவைகளையும், உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவைகளையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு (திருப்தி அளிக்கக்கூடிய) ஒரு அத்தாட்சி இருக்கின்றது (என்றும்,)

Tafseer

وَمُصَدِّقًا
இன்னும் உண்மைப்படுத்துபவராக
لِّمَا بَيْنَ
எனக்கு முன்னுள்ளதை
مِنَ ٱلتَّوْرَىٰةِ
தவ்றாத்திலிருந்து
وَلِأُحِلَّ
இன்னும் நான் ஆகுமாக்குவதற்காக
لَكُم
உங்களுக்கு
بَعْضَ
சிலவற்றை
ٱلَّذِى
எது
حُرِّمَ
தடுக்கப்பட்டது
عَلَيْكُمْۚ
உங்கள் மீது
وَجِئْتُكُم
இன்னும் உங்களிடம் வந்திருக்கிறேன்
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்

Wa musaddiqal limaa baina yadaiya minat Tawraati wa liuhilla lakum ba'dal lazee hurrima 'alaikum; wa ji'tukum bi Aayatim mir Rabbikum fattaqul laaha wa atee'oon

என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்ட வைகளில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற்காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னை பின்பற்றுங்கள்.

Tafseer