Skip to main content

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
رَبِّى
என் இறைவன்
وَرَبُّكُمْ
இன்னும் உங்கள் இறைவன்
فَٱعْبُدُوهُۗ
ஆகவே அவனை வணங்குங்கள்
هَٰذَا صِرَٰطٌ
இது/ஒரு வழி
مُّسْتَقِيمٌ
நேர்

Innal laaha Rabbee wa Rabbukum fa'budooh; haazaa Siraatum Mustaqeem

நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள். இதுதான் நேரான வழி" (என்றும் கூறினார்.)

Tafseer

فَلَمَّآ
போது
أَحَسَّ
உணர்ந்தார்
عِيسَىٰ
ஈஸா
مِنْهُمُ
அவர்களில்
ٱلْكُفْرَ
நிராகரிப்பை
قَالَ
கூறினார்
مَنْ
யார்
أَنصَارِىٓ
என் உதவியாளர்கள்
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்விற்காக
قَالَ
கூறினார்
ٱلْحَوَارِيُّونَ
தோழர்கள்
نَحْنُ
நாங்கள்
أَنصَارُ
உதவியாளர்கள்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱشْهَدْ
சாட்சி அளிப்பீராக
بِأَنَّا
நிச்சயமாக நாங்கள்
مُسْلِمُونَ
முஸ்லிம்கள்

Falammaaa ahassa 'Eesaa minhumul kufra qaala man ansaaree ilal laahi qaalal Hawaariyyoona nahnu ansaarul laahi aamannaa billaahi washhad bi annaa muslimoon

அவர்களில் பலர் (தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த பொழுது (அவர்களை நோக்கி) "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?" எனக் கேட்டார். (அதற்கு) அவருடைய தோழர்கள் "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்களுக்கு) உதவி செய்கின்றோம். மெய்யாகவே! அல்லாஹ்வை நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். (ஆதலால்) நிச்சயமாக நாங்கள் முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டோம் என்பதாக நீங்கள் சாட்சி கூறுங்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

رَبَّنَآ
எங்கள் இறைவா
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
بِمَآ
எதை
أَنزَلْتَ
நீ இறக்கினாய்
وَٱتَّبَعْنَا
இன்னும் பின்பற்றினோம்
ٱلرَّسُولَ
தூதர்
فَٱكْتُبْنَا
ஆகவே எங்களை பதிவு செய்
مَعَ ٱلشَّٰهِدِينَ
சாட்சியாளர்களுடன்

Rabbanaaa aamannaa bimaaa anzalta wattaba'nar Rasoola faktubnaa ma'ash shaahideen

(அன்றி) "எங்கள் இறைவனே! நீ அருட்செய்த (வேதத்)தை நாங்கள் நம்புகின்றோம். (உன்னுடைய) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கின்றோம். ஆதலால், (அவரை) உண்மைப் படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" (என்றும் அந்தத் தோழர்கள் பிரார்த்தித்தனர்.)

Tafseer

وَمَكَرُوا۟
சதி செய்தார்கள்
وَمَكَرَ
இன்னும் சதி செய்தான்
ٱللَّهُۖ
அல்லாஹ்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
خَيْرُ
மிக மேலானவன்
ٱلْمَٰكِرِينَ
சதி செய்பவர்களில்

Wa makaroo wa makaral laahu wallaahu khairul maakireen

(ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன்.

Tafseer

إِذْ
சமயம்
قَالَ
கூறினான்
ٱللَّهُ
அல்லாஹ்
يَٰعِيسَىٰٓ
ஈஸாவே
إِنِّى
நிச்சயமாக நான்
مُتَوَفِّيكَ
உம்மை கைப்பற்றுவேன்
وَرَافِعُكَ
இன்னும் உம்மை உயர்த்துவேன்
إِلَىَّ
என் பக்கம்
وَمُطَهِّرُكَ
இன்னும் உம்மை பரிசுத்தப்படுத்துவேன்
مِنَ ٱلَّذِينَ
இருந்து/எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَجَاعِلُ
இன்னும் ஆக்குவேன்
ٱلَّذِينَ
எவர்களை
ٱتَّبَعُوكَ
உம்மைப் பின்பற்றினார்கள்
فَوْقَ ٱلَّذِينَ
மேல்/எவர்கள்
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
إِلَىٰ
வரை
يَوْمِ ٱلْقِيَٰمَةِۖ
மறுமை நாள்
ثُمَّ إِلَىَّ
பிறகு/என் பக்கம்
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
فَأَحْكُمُ
இன்னும் தீர்ப்பளிப்பேன்
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
فِيمَا
எதில்
كُنتُمْ
இருந்தீர்கள்
فِيهِ
அதில்
تَخْتَلِفُونَ
தர்க்கம் செய்கிறீர்கள்

Iz qaalal laahu yaa 'Eesaaa innee mutawaffeeka wa raafi'uka ilaiya wa mutah hiruka minal lazeena kafaroo wa jaa'ilul lazeenattaba ooka fawqal lazeena kafarooo ilaa Yawmil Qiyaamati summa ilaiya marji'ukum fa ahkumu bainakum feemaa kuntum feehi takhtaliifoon

(ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துங்கள்: "ஈஸாவே நிச்சயமாக நான் உங்களுக்கு (உங்களுடைய) ஆயுளை முழுமைபடுத்துவேன். உங்களை நம்மளவில் உயர்த்திக் கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதிநாள் வரையில் மேலாக்கியும் வைப்பேன்" (என்று கூறி, ஈஸாவே! அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் பின்னும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவைகளைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்" (என்றும் கூறினான்.)

Tafseer

فَأَمَّا ٱلَّذِينَ
ஆகவே/எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
فَأُعَذِّبُهُمْ
அவர்களை வேதனை செய்வேன்
عَذَابًا
வேதனையால்
شَدِيدًا
கடினமானது
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
وَٱلْءَاخِرَةِ
இன்னும் மறுமையில்
وَمَا
இன்னும் இல்லை
لَهُم
அவர்களுக்கு
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்களில் எவரும்

Fa ammal lazeena kafaroo fa u'az zibuhum 'azaaban shadeedan fiddunyaa wal Aakhirati wa maa lahum min naasireen

ஆகவே, (அவர்களில்) எவர்கள் (உங்களை) நிராகரிக் கின்றார்களோ அவர்களை நான் இம்மையிலும் மறுமையிலும் கடினமாக வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

Tafseer

وَأَمَّا
ஆக
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
فَيُوَفِّيهِمْ
முழுமையாக வழங்குவான்/அவர்களுக்கு
أُجُورَهُمْۗ
கூலிகளை அவர்களின்
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை

Wa ammal lazeena aamanoo wa 'amilus saalihaati fa yuwaffeehim ujoorahum; wallaahu laa yuhibbuz zaalimeen

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கின்றார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்குப் முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை.

Tafseer

ذَٰلِكَ
இது
نَتْلُوهُ
இதை ஓதுகிறோம்
عَلَيْكَ
உம்மீது
مِنَ
இருந்து
ٱلْءَايَٰتِ
வசனங்கள்
وَٱلذِّكْرِ
இன்னும் உபதேசம்
ٱلْحَكِيمِ
ஞானமிகுந்தது

Zaalika natloohu 'alaika minal Aayaati wa Zikril Hakeem

(நபியே!) நாம் உங்கள்மீது ஓதிய இவை (இறைவனுடைய) வசனங்களாகவும், ஞான(ம் நிறைந்த) உபதேசங்களாகவும் இருக்கின்றன.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
مَثَلَ
உதாரணம்
عِيسَىٰ
ஈஸாவின்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
كَمَثَلِ
உதாரணத்தைப் போன்று
ءَادَمَۖ
ஆதம்
خَلَقَهُۥ
அவரைப் படைத்தான்
مِن تُرَابٍ
இருந்து/மண்
ثُمَّ قَالَ
பிறகு/கூறினான்
لَهُۥ
அவருக்கு
كُن
ஆகு
فَيَكُونُ
ஆகிவிட்டார்

Inna masala 'Eesaa 'indal laahi kamasali Aadama khalaqahoo min turaabin summa qaala lahoo kun fayakoon

நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்திச் செய்து (மனிதனாக) "ஆகு" என்று கூறினான். உடனே (அவ்வாறு) ஆகிவிட்டது.

Tafseer

ٱلْحَقُّ مِن
உண்மை/இருந்து
رَّبِّكَ
உம் இறைவன்
فَلَا تَكُن
ஆகவே ஆகிவிடாதீர்
مِّنَ ٱلْمُمْتَرِينَ
சந்தேகிப்பவர்களில்

Alhaqqu mir Rabbika falaa takum minal mumtareen

(நபியே! ஈஸாவைப் பற்றி) உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த இவ்விஷயங்கள்தான் உண்மையானவை. ஆகவே (இதைப்பற்றி) சந்தேகப்படுபவர்களில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்.

Tafseer