Skip to main content

يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
لِمَ تَلْبِسُونَ
ஏன் கலக்கிறீர்கள்
ٱلْحَقَّ
உண்மையை
بِٱلْبَٰطِلِ
பொய்யுடன்
وَتَكْتُمُونَ
இன்னும் மறைக்கிறீர்கள்
ٱلْحَقَّ
உண்மையை
وَأَنتُمْ تَعْلَمُونَ
நீங்கள் அறிந்து கொண்டே

Yaaa Ahalal Kitaabi lima talbisoonal haqqa bilbaatili wa taktumoonal haqqa wa antum ta'lamoon

வேதத்தையுடையவர்களே! உண்மையை பொய்யுடன் ஏன் கலக்கின்றீர்கள். நீங்கள் நன்கறிந்து கொண்டே உண்மையை ஏன் மறைக்கின்றீர்கள்.

Tafseer

وَقَالَت
கூறினர்
طَّآئِفَةٌ
ஒரு கூட்டத்தினர்
مِّنْ أَهْلِ
வேதக்காரர்களில்
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
بِٱلَّذِىٓ
எதை
أُنزِلَ
இறக்கப்பட்டது
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَجْهَ ٱلنَّهَارِ
பகலின் ஆரம்பம்
وَٱكْفُرُوٓا۟
இன்னும் நிராகரியுங்கள்
ءَاخِرَهُۥ
அதன் இறுதியில்
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்புவதற்காக

Wa qaalat taaa'ifatum min Ahlil Kitaabi aaminoo billazeee unzila 'alal lazeena aamanoo wajhan nahaari wakfurooo aakhirahoo la'alla hum yarji'oon

வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறுகின்றனர்: "நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தைக் காலையில் நம்பிக்கை கொண்டு மாலையில் (அதனை) நிராகரித்து விடுங்கள். (இதனால் நம்பிக்கை கொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் நம்பிக்கையிலிருந்து) விலகி விடக்கூடும்" (என்றும்)

Tafseer

وَلَا تُؤْمِنُوٓا۟
இன்னும் நம்பாதீர்கள்
إِلَّا
தவிர
لِمَن
எவரை
تَبِعَ
பின்பற்றினார்
دِينَكُمْ
உங்கள் மார்க்கத்தை
قُلْ
கூறுவீராக
إِنَّ
நிச்சயமாக
ٱلْهُدَىٰ
நேர்வழி
هُدَى
நேர்வழி
ٱللَّهِ
அல்லாஹ்வின்
أَن يُؤْتَىٰٓ
கொடுக்கப்படுவார்
أَحَدٌ
ஒருவர்
مِّثْلَ مَآ
போன்று/எது
أُوتِيتُمْ
கொடுக்கப்பட்டீர்கள்
أَوْ يُحَآجُّوكُمْ
அல்லது/உங்களோடு தர்க்கிப்பார்கள்
عِندَ
இடம்
رَبِّكُمْۗ
உங்கள் இறைவன்
قُلْ
கூறுவீராக
إِنَّ ٱلْفَضْلَ
நிச்சயமாக/அருள்
بِيَدِ
கையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يُؤْتِيهِ
அதை கொடுக்கின்றான்
مَن
எவருக்கு
يَشَآءُۗ
நாடுகிறான்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
وَٰسِعٌ
விசாலமானவன்
عَلِيمٌ
மிக அறிந்தவன்

Wa laa tu'minooo illaa liman tabi'a deenakum qul innal hudaa hudal laahi ai yu'taaa ahadum misla maaa ooteetum aw yuhaaajjookum 'inda Rabbikum, qul innal fadla biyadil laah; yu'teehi mai yashaaa'; wallaahu Waasi'un 'Aleem

"உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர்). இதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உண்மையான நேர்வழி அல்லாஹ்வின் நேர்வழிதான்." (அன்றி அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி) "உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று (வேதம்) மற்றெவருக்கும் கொடுக்கப்படும் என்பதையோ அல்லது அந்த நம்பிக்கையாளர்கள் உங்கள் இறைவன் முன்பாக தர்க்கித்து உங்களை வெற்றிக் கொள்வார்கள் என்பதையோ நம்பாதீர்கள்!" (என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(வேதம் என்னும்) பெரும்பாக்கியம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கின்றது. அதனை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், (மனிதர்களின் தகுதியை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَخْتَصُّ
சொந்தமாக்குகிறான்
بِرَحْمَتِهِۦ
தனது அருளுக்கு
مَن
எவரை
يَشَآءُۗ
நாடுகிறான்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
ذُو ٱلْفَضْلِ
அருளுடையவன்
ٱلْعَظِيمِ
மகத்தானது

Yakhtassu birahmatihee mai yashaaa'; wallaahu zulfadil 'azeem

அல்லாஹ் தான் விரும்பியவர்களை தன் அருளுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். அவன் மகத்தான கொடையாளி யாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَمِنْ أَهْلِ
வேதக்காரர்களில்
مَنْ
எவர்
إِن تَأْمَنْهُ
நீர் அவரை நம்பினால்
بِقِنطَارٍ
ஒரு பொற்குவியலில்
يُؤَدِّهِۦٓ
அதை நிறைவேற்றுவார்
إِلَيْكَ
உமக்கு
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
مَّنْ
எவர்
إِن تَأْمَنْهُ
(நீர்) அவரை நம்பினால்
بِدِينَارٍ
ஒரு நாணயத்தால்
لَّا يُؤَدِّهِۦٓ
அதை நிறைவேற்ற மாட்டார்
إِلَيْكَ
உமக்கு
إِلَّا
தவிர
مَا دُمْتَ
(நீர்) தொடர்ந்தால்
عَلَيْهِ
அவரிடம்
قَآئِمًاۗ
நிற்பவராக
ذَٰلِكَ
இது
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
قَالُوا۟
கூறினார்கள்
لَيْسَ
இல்லை
عَلَيْنَا
நம்மீது
فِى ٱلْأُمِّيِّۦنَ
பாமரர்கள்விஷயத்தில்
سَبِيلٌ
குற்றம்
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
ٱلْكَذِبَ
பொய்யை
وَهُمْ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்து கொண்டே

Wa min Ahlil Kitaabi man in taamanhu biqintaariny yu'addihee ilaika wa minhum man in taamanhu bideenaaril laa yu'addiheee ilaika illaa maa dumta 'alaihi qaaa' imaa; zaalika biannahum qaaloo laisa 'alainaa fil ummiyyeena sabeelunw wa yaqooloona 'alal laahil kaziba wa hum ya'lamoon

(நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (யாதொரு குறைவுமின்றி) உங்களிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீங்கள் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரையில் அதனைத் திரும்பக் கொடுக்க மாட்டார்கள். இதன் காரணம்: (தங்களையல்லாத) "பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தபோதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை" என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்.

Tafseer

بَلَىٰ
ஏனில்லை
مَنْ
எவர்
أَوْفَىٰ
நிறைவேற்றினார்
بِعَهْدِهِۦ
தன் வாக்குறுதியை
وَٱتَّقَىٰ
இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கிறான்
ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களை

Balaa man awfaa bi'ahdihee wattaqaa fainnal laaha yuhibbul muttaqeen

(உண்மை) அவ்வாறன்று. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கின்றார்களோ அவர்கள்தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) இறை அச்சம் உடையவர்களை நேசிக்கின்றான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
يَشْتَرُونَ
வாங்குகிறார்கள்
بِعَهْدِ
வாக்குறுதிக்குபகரமாக
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَأَيْمَٰنِهِمْ
இன்னும் அவர்களுடைய சத்தியங்கள்
ثَمَنًا
விலையை
قَلِيلًا
சொற்பமானது
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
لَا خَلَٰقَ
அறவே (நற்)பாக்கியமில்லை
لَهُمْ
அவர்களுக்கு
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
وَلَا يُكَلِّمُهُمُ
இன்னும் அவர்களுடன் பேசமாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَلَا يَنظُرُ
இன்னும் பார்க்கமாட்டான்
إِلَيْهِمْ
அவர்கள் பக்கம்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
وَلَا يُزَكِّيهِمْ
இன்னும் அவர்களைத் தூய்மைப்படுத்தமாட்டான்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது

Innal lazeena yashtaroona bi'ahdil laahi wa aymaanihim samanan qaleelan ulaaa'ika laa khalaaqa lahum fil Aakhirati wa laa yukallimuhumul laahu wa laa yanzuru ilaihim Yawmal Qiyaamati wa laa yuzakkeehim wa lahum 'azabun 'aleem

எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தங்களுடைய சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக யாதொரு (நற்)பாக்கியமுமில்லை. அன்றி அல்லாஹ் மறுமையில் அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான்; (அன்புடன்) அவர்களை இறுதிநாளில் திரும்பிப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைப் புனிதப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
مِنْهُمْ
அவர்களில்
لَفَرِيقًا
உறுதியாக ஒரு பிரிவினர்
يَلْوُۥنَ
கோணுகின்றனர்
أَلْسِنَتَهُم
தங்கள் நாவை
بِٱلْكِتَٰبِ
வேதத்தில்
لِتَحْسَبُوهُ
(நீங்கள்) அதை எண்ணுவதற்காக
مِنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
وَمَا
இன்னும் இல்லை
هُوَ مِنَ
அது/வேதத்தில்
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
هُوَ
அது
مِنْ عِندِ
அல்லாஹ்விடமிருந்து
وَمَا
இல்லை
هُوَ
அது
مِنْ
இருந்து
عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்
ٱلْكَذِبَ
பொய்
وَهُمْ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்து கொண்டே

Wa inna minhum lafaree qany yalwoona alsinatahum bil Kitaabi litahsaboohu minal Kitaab, wa maa huwa minal Kitaabi wa yaqooloon huwa min 'indillaahi wa maa huwa min 'indillaahi wa yaqooloona 'alal laahil kaziba wa hum ya'lamoon

நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். (அவர்கள்) வேதத்தை ஓதும்போது (அத்துடன் பல வாக்கியங் களைக் கலந்து, அதுவும்) வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக்கொள்வதற்காக தங்கள் நாவைக் கோணி உளறுகின்றனர். எனினும் அது வேதத்திலுள்ளது அல்ல. அன்றி "அது அல்லாஹ்விடமிருந்து வந்தது" என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் நன்கறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது இவ்வாறு பொய் கூறுகின்றனர்.

Tafseer

مَا كَانَ
உசிதமில்லை
لِبَشَرٍ
ஒரு மனிதருக்கு
أَن يُؤْتِيَهُ
அவருக்கு கொடுக்க
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْكِتَٰبَ
வேதத்தை
وَٱلْحُكْمَ
இன்னும் ஞானம்
وَٱلنُّبُوَّةَ
இன்னும் நபித்துவம்
ثُمَّ
பிறகு
يَقُولَ
கூறுவார்
لِلنَّاسِ
மக்களுக்கு
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
عِبَادًا
அடியார்களாக
لِّى
என்
مِن دُونِ
அல்லாஹ்வைத் தவிர்த்து
وَلَٰكِن
என்றாலும்
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
رَبَّٰنِيِّۦنَ
சீர்திருத்தம் செய்யும் இறையச்சமுள்ள நிர்வாகிகளாக
بِمَا كُنتُمْ
நீங்கள் இருப்பதால்
تُعَلِّمُونَ
கற்பிக்கிறீர்கள்
ٱلْكِتَٰبَ
வேதத்தை
وَبِمَا كُنتُمْ
இன்னும் நீங்கள் இருப்பதால்
تَدْرُسُونَ
கற்றுக் கொள்கிறீர்கள்

Maa kaana libasharin ai yu'tiyahul laahul Kitaaba walhukma wan Nubuwwata summa yaqoola linnaasi koonoo 'ibaadal lee min doonil laahi wa laakin koonoo rabbaaniy yeena bimaa kuntum tu'allimoonal Kitaaba wa bimaa kuntum tadrusoon

ஒரு மனிதருக்கு, வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி "அல்லாஹ்வை அன்றி என்னை வணங்குங்கள்" என்று கூறுவதற்கு இல்லை. ஆயினும் (மனிதர்களை நோக்கி) "நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதில் உள்ளவாறு) இறைவன் ஒருவனையே வணங்கும் மனிதர்களாக ஆகிவிடுங்கள்" என்றுதான் கூறுவார்.

Tafseer

وَلَا
அவர் ஏவுவது இல்லை
يَأْمُرَكُمْ
அவர் ஏவுவது இல்லை உங்களை
أَن تَتَّخِذُوا۟
நீங்கள்எடுத்துக்கொள்வது
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
وَٱلنَّبِيِّۦنَ
இன்னும் நபிமார்களை
أَرْبَابًاۗ
கடவுள்களாக
أَيَأْمُرُكُم
உங்களைஏவுவாரா?
بِٱلْكُفْرِ
நிராகரிக்கும்படி
بَعْدَ
பின்னர்
إِذْ أَنتُم
நீங்கள் ஆகிய
مُّسْلِمُونَ
முஸ்லிம்களாக

Wa laa yaamurakum an tattakhizul malaaa 'ikata wan Nabiyyeena arbaabaa; a yaamurukum bilkufri ba'da iz antum muslimoon

தவிர "மலக்குகளையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்றும் அவர் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார். என்னே! இறைவன் ஒருவனையே நீங்கள் அங்கீகரித்த பின்னர் (அவனை) நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா?

Tafseer