Wazkur 'abdanaaa Ayyoob; iz naada Rabbahooo annee massaniyash Shaitaanu binus binw wa 'azaab
(நபியே!) நமது அடியார் அய்யூபை நினைத்துப் பாருங்கள். அவர் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபொழுது "நிச்சயமாக எனக்கு ஷைத்தான் துன்பத்தையும் வேதனையையும் கொடுத்து விட்டான்" (என்று கூறினார்.)
Urkud birijlika haaza mughtasalum baaridunw wa sharaab
(அதற்கு நாம்) "உங்களுடைய காலை(ப் பூமியில்) தட்டுங்கள்" (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித் தோடியது. அவரை நோக்கி) "இதோ நீங்கள் குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உங்களது) பானமுமாகும்" என்று கூறினோம். (அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன.)
Wa wahabnaa lahoo ahlahoo wa mislahum ma'ahum rahmatam minna wa zikraa li ulil albaab
பின்னர், நம்முடைய அருளாகவும் அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு(ப் பிரிந்திருந்த) அவருடைய குடும்பத்தாரையும் அதைப் போன்றதையும் கொடுத்து அருள்புரிந்தோம்.
Wa khuz biyadika dighsan fadrib bihee wa laa tahnas, innaa wajadnaahu saabiraa; ni'mal 'abd; innahooo awwaab
"ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதனைக் கொண்டு (உங்களது மனைவியை) அடியுங்கள். நீங்கள் உங்களுடைய சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை" என்று கூறினோம். நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார்.
Wazkur 'ibaadanaaa Ibraaheema wa Is-haaqa wa Ya'qooba ulil-aydee walabsaar
(நபியே!) நமது அடியார்கள் இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூபையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் கொடையாளி களாகவும், அகப்பார்வை உடையவர்களாகவும் இருந்தார்கள்.
Innaaa akhlasnaahum bi khaalisatin zikrad daar
மறுமையை (மக்களுக்கு) எந்நேரமும் ஞாபகமூட்டுவதற்காக அவர்களை நாம் பிரத்யேகப்படுத்தினோம்.
Wa innahum 'indanaa laminal mustafainal akhyaar
அவர்கள், நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடி யார்களில் உள்ளவர்களாகவே இருந்தனர்.
Wazkur Ismaa'eela wal Yasa'a wa Zal-Kifli wa kullum minal akhyaar
(நபியே!) இஸ்மாயீல், அல்யஸவு, துல்கிஃப்லு இவர்களையும் கவனித்துப் பாருங்கள். இவர்களனைவரும் நல்லடியார்களில் உள்ளவர்கள்தாம்.
Haazaa zikr; wa inna lilmuttaqeena lahusna ma aab
(மேற்கூறிய) இவைகளெல்லாம் (நம்பிக்கையாளர்களுக்கு) நல்ல உதாரணங்களாகும். நிச்சயமாக (இத்தகைய) இறை அச்சமுடையவர்களுக்கு (நல்ல) இருப்பிடமுண்டு.
Jannaati 'adnim mufat tahatal lahumul abwaab
அது நிலையான சுவனபதியில் இருக்கிறது. அதன் வாசல்கள் (எந்நேரமும்) திறக்கப்பட்டிருக்கும்.