Iz qaala Rabbuka lilmalaaa'ikati innee khaaliqum basharam min teen
உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி, "நான் மனிதனைக் களிமண்ணால் படைக்கப் போகிறேன்" என்று கூறிய சமயத்தில்,
Fa-iza sawwaituhoo wa nafakhtu feehi mir roohee faqa'oo lahoo saajideen
நான் அவரைச் செப்பனிட்டு, அவருக்குள் (நாம் படைத்த) நம்முடைய உயிரையும் புகுத்தினால் அவருக்கு நீங்கள் சிரம் பணிந்து வழிபடுங்கள் என்றும் கூறினான்."
Fasajadal malaaa'ikatu kulluhum ajma'oon
(அச்சமயம்) மலக்குகள் அனைவருமே சிரம் பணிந்தார்கள்.
Illaaa Iblees; istakbara wa kaana minal kaafireen
இப்லீஸைத் தவிர, அவன் கர்வம்கொண்டு (நம் கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்.
Qaala yaaa Ibleesu maa man'aka an tasjuda limaa khalaqtu biyadai; astakbarta am kunta min 'aaleen
அதற்கு இறைவன், "இப்லீஸை! நானே என் இரு கரங்களால் படைத்தவற்றிற்கு நீ சிரம் பணியாது உன்னைத் தடை செய்தது என்ன? நீ உன்னை மிகப் பெரியவனாக மதித்துக் கொண்டாயா? அல்லது நீ, (என்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியக் கூடாத) உயர்ந்த பதவியுடையவனாகி விட்டாயா?" என்றான்.
Qaala ana khairum minah; khalaqtanee min naarinw wa khalaqtahoo min teen
அதற்கவன், "அவரைவிட நானே மேலானவன். என்னை நீயே நெருப்பால் படைத்தாய்; அவரை களிமண்ணால் படைத்தாய்" என்றான்.
Qaala fakhruj minhaa fainnaka rajeem
அதற்கு இறைவன், "அவ்வாறாயின், நீ இதிலிருந்து வெளிப்பட்டுவிடு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டு விட்டாய்.
Wa inna 'alaika la'nateee ilaa Yawmid Deen
உலகம் முடியும் வரை என்னுடைய சாபம் உன்மீது நிச்சயமாக நிலைத்திருக்கும்" என்றான்.
Qaala Rabbi fa anzirneee ilaa Yawmi yub'asoon
அதற்கவன், "என் இறைவனே! (மரணித்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரையில் எனக்கு அவகாசம் கொடு" என்றான்.
Qaala fa innaka minal munzareen
அதற்கு இறைவன், "நிச்சயமாக உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது.