Skip to main content

قُلْ
கூறுவீராக!
إِنِّىٓ أُمِرْتُ
நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்
أَنْ أَعْبُدَ
நான் வணங்க வேண்டும் என்று
ٱللَّهَ مُخْلِصًا
அல்லாஹ்வை/தூய்மையாக செய்யவேண்டும்
لَّهُ
அவனுக்கு
ٱلدِّينَ
வழிபாடுகளை

Qul inneee umirtu an a'budal laaha mukhlisal lahud deen

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன்.

Tafseer

وَأُمِرْتُ
நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்
لِأَنْ أَكُونَ
நான் இருக்க வேண்டும்
أَوَّلَ
முதலாமவனாக
ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களில்

Wa umirtu li an akoona awwalal muslimeen

அன்றி, அவனுக்கு வழிப்பட்டவர்களில் முதன்மையான வனாக இருக்குமாறும் ஏவப்பட்டுள்ளேன்" (என்றும் கூறுங்கள்).

Tafseer

قُلْ
கூறுவீராக!
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
إِنْ عَصَيْتُ
மாறுசெய்தால்
رَبِّى
என் இறைவனுக்கு
عَذَابَ
வேதனையை
يَوْمٍ
நாளின்
عَظِيمٍ
மகத்தான

Qul inneee akhaafu in 'asaitu Rabbee 'azaaba Yawmin 'azeem

பின்னும் கூறுங்கள்: "என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான ஒருநாளின் வேதனைக்கு நிச்சயமாக நான் பயப்படுகின்றேன்" (என்றும்),

Tafseer

قُلِ
கூறுவிராக
ٱللَّهَ
அல்லாஹ்வைத்தான்
أَعْبُدُ
நான் வணங்குவேன்
مُخْلِصًا
பரிசுத்தப்படுத்தியவனாக
لَّهُۥ
அவனுக்கு
دِينِى
என் வழிபாட்டை

Qulil laaha a'budu mukhlisal lahoo deenee

"அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன், அவனுக்கே என்னுடைய வணக்கம் அனைத்தும் உரித்தானது என்று" (நபியே) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

فَٱعْبُدُوا۟
வணங்குங்கள்
مَا شِئْتُم
நீங்கள் நாடியவர்களை
مِّن دُونِهِۦۗ
அவனையன்றி
قُلْ
கூறுவீராக!
إِنَّ
நிச்சயமாக
ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகள்
ٱلَّذِينَ خَسِرُوٓا۟
நஷ்டமிழைத்தவர்கள்தான்
أَنفُسَهُمْ
தங்களுக்கு(ம்)
وَأَهْلِيهِمْ
தங்கள் குடும்பத்தாருக்கும்
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமையில்
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
ذَٰلِكَ هُوَ
இதுதான்
ٱلْخُسْرَانُ
நஷ்டமாகும்
ٱلْمُبِينُ
மிகத்தெளிவான

Fa'budoo maa shi'tum min doonih; qul innal khaasireenal lazeena khasirooo anfusahum wa ahleehim yawmal qiyaamah; alaa zaalika huwal khusraanul mubeen

"அல்லாஹ்வையன்றி நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்." (அதற்குரிய தண்டனையை அடைவீர்கள். நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மெய்யாகவே நஷ்டமடைந்தவர்கள் யாரென்றால், (இறைவனுக்கு மாறுசெய்து) தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமையில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள்தாம்." இது தெளிவான நஷ்டமல்லவா?

Tafseer

لَهُم
அவர்களுக்கு
مِّن فَوْقِهِمْ
அவர்களின் மேலிருந்து(ம்)
ظُلَلٌ
நிழல்களும்
مِّنَ ٱلنَّارِ
நரகத்தின்
وَمِن تَحْتِهِمْ
அவர்களுக்கு கீழிருந்தும்
ظُلَلٌۚ
நிழல்களும்
ذَٰلِكَ
இது
يُخَوِّفُ
பயமுறுத்துகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِهِۦ
இதன் மூலம்
عِبَادَهُۥۚ
தனது அடியார்களை
يَٰعِبَادِ
என் அடியார்களே!
فَٱتَّقُونِ
என்னை பயந்துகொள்ளுங்கள்!

Lahum min fawqihim zulalum minan Naari wa min tahtihim zulal; zaalika yukhaw wiful laahu bihee 'ibaadah; yaa 'ibaadi fattaqoon

(மறுமை நாளில்) "இவர்களின் (தலைக்கு) மேலும் நெருப்பு சூழ்ந்து கொள்ளும். இவர்களின் (பாதங்களின் கீழும் (நெருப்பு) சூழ்ந்து கொள்ளும்" இதைப் பற்றியே, அல்லாஹ் தன் அடியார் களை நோக்கி, "என் அடியார்களே! எனக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறி பயமுறுத்துகின்றான்.

Tafseer

وَٱلَّذِينَ ٱجْتَنَبُوا۟
எவர்கள்/ விலகினார்கள்
ٱلطَّٰغُوتَ
தாகூத்துகளை
أَن يَعْبُدُوهَا
இவர்களை வணங்குவதை விட்டு
وَأَنَابُوٓا۟
இன்னும் திரும்பினார்கள்
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلْبُشْرَىٰۚ
நற்செய்தி
فَبَشِّرْ
ஆகவே, நற்செய்தி சொல்லுங்கள்
عِبَادِ
என் அடியார்களுக்கு

Wallazeenaj tanabut Taaghoota ai ya'budoohaa wa anaabooo ilal laahi lahumul bushraa; fabashshir 'ibaad

(ஆகவே,) "எவர்கள் ஷைத்தான்களை வணங்காது, அவைகளிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வையே நோக்கு கின்றார்களோ, அவர்களுக்குத்தான் நற்செய்தி. ஆகவே, (நபியே!) நீங்கள் நம்முடைய (நல்ல) அடியார்களுக்கு நற்செய்தி கூறுங்கள்."

Tafseer

ٱلَّذِينَ يَسْتَمِعُونَ
எவர்கள்/செவியுறுவார்கள்
ٱلْقَوْلَ
பேச்சுகளை
فَيَتَّبِعُونَ
பின்பற்றுவார்கள்
أَحْسَنَهُۥٓۚ
அதில் மிக அழகானதை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
ٱلَّذِينَ هَدَىٰهُمُ
எவர்கள்/நேர்வழிகாட்டினான்/அவர்களுக்கு
ٱللَّهُۖ
அல்லாஹ்
وَأُو۟لَٰٓئِكَ هُمْ
இன்னும் அவர்கள்தான்
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
அறிவாளிகள்

Allazeena yastami'oonal qawla fayattabi'oona ahsanah; ulaaa'ikal lazeena hadaahumul laahu wa ulaaa'ika hum ulul albaab

அவர்கள் எத்தகையவர்கள் என்றால், பேச்சை செவியுற்று, அதில் மிக அழகியதை (மட்டும்) பின்பற்றி நடக்கின்றனர். இத்தகையவர்களையே, அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகின்றான். இவர்கள்தாம் (உண்மையில்) அறிவுடையவர்கள் ஆவார்கள்.

Tafseer

أَفَمَنْ
எவர்?
حَقَّ
உறுதியாகிவிட்டது
عَلَيْهِ
அவர் மீது
كَلِمَةُ
வாக்கு
ٱلْعَذَابِ
வேதனையின்
أَفَأَنتَ تُنقِذُ
நீர் பாதுகாப்பீரா?
مَن فِى
நரகத்தில் இருப்பவரை

Afaman haqqa 'alaihi kalimatul 'azaab; afa anta tunqizu man fin Naar

(நபியே!) "எவன் (பாவம் செய்து) வேதனைக்குத் தகுதியுடையவனாகி விட்டானோ (அவன் நரகம் சென்றே தீருவான்.) நரகத்திலிருக்கும் அவனை நீங்கள் காப்பாற்றி விடுவீர்களா?"

Tafseer

لَٰكِنِ
எனினும்
ٱلَّذِينَ
எவர்கள்
ٱتَّقَوْا۟
அஞ்சினார்களோ
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
لَهُمْ
அவர்களுக்கு
غُرَفٌ
மாடி அறைகள்
مِّن فَوْقِهَا
அவற்றுக்கு மேல்
غُرَفٌ
அறைகள்
مَّبْنِيَّةٌ
கட்டப்பட்ட(து)
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றைச் சுற்றி
ٱلْأَنْهَٰرُۖ
நதிகள்
وَعْدَ ٱللَّهِۖ
அல்லாஹ்வின்வாக்கு
لَا يُخْلِفُ
அல்லாஹ் மாற்றமாட்டான்
ٱلْمِيعَادَ
வாக்கை

Laakinil lazeenat taqaw Rabbahum lahum ghurafum min fawqihaa ghurafum mabniyyatun tajree min tahtihal anhaar; wa'dal laah; laa yukhliful laahul mee'aad

எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்பட்டு நடக்கின் றார்களோ அவர்களுக்கு, (சுவனபதியில்) மேல்மாடிகள் உண்டு. அதற்கு மென்மேலும் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். (இவ்வாறே அவர்களுக்கு) அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் மாறமாட்டான்.

Tafseer