Skip to main content

أُو۟لَٰٓئِكَ
هُمُ
அவர்கள்தான்
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
حَقًّاۚ
உண்மையில்
وَأَعْتَدْنَا
இன்னும் ஏற்படுத்தியுள்ளோம்
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
عَذَابًا
வேதனையை
مُّهِينًا
இழிவு தரும்

Ulaaa'ika humul kaafiroona haqqaa; wa a'tadnaa lilkaafireena 'azaabam muheenaa

இத்தகையவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்கள்தான். நிராகரிப்பவர்களுக்கு நாம் இழிவு தரும் வேதனையையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَرُسُلِهِۦ
இன்னும் அவனுடைய தூதர்களை
وَلَمْ يُفَرِّقُوا۟
இன்னும் பிரிவினை செய்யவில்லை
بَيْنَ
இடையில்
أَحَدٍ
ஒருவர்
مِّنْهُمْ
அவர்களில்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
سَوْفَ يُؤْتِيهِمْ
கொடுப்பான்/அவர்களுக்கு
أُجُورَهُمْۗ
கூலிகளை அவர்களுடைய
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
رَّحِيمًا
மகாகருணையாளனாக

Wallazeena aamanoo billaahi wa Rusulihee wa lam yufarriqoo baina ahadim minhum ulaaa'ika sawfa yu'teehim ujoorahum; wa kaanal laahu Ghafoorar Raheema

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கிடையில் பிரிவினை செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய கூலியை (அல்லாஹ் மறுமையில்) கொடுப்பான். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَسْـَٔلُكَ
கேட்கிறார்(கள்)/உம்மிடம்
أَهْلُ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்கள்
أَن تُنَزِّلَ
நீர் இறக்கும்படி
عَلَيْهِمْ
அவர்கள் மீது
كِتَٰبًا
ஒரு வேதத்தை
مِّنَ ٱلسَّمَآءِۚ
வானத்திலிருந்து
فَقَدْ
திட்டமாக
سَأَلُوا۟
கேட்டனர்
مُوسَىٰٓ
மூஸா(விடம்)
أَكْبَرَ
மிகப் பெரியதை
مِن ذَٰلِكَ
இதை விட
فَقَالُوٓا۟
கூறினர்
أَرِنَا
எங்களுக்குக் காண்பி
ٱللَّهَ
அல்லாஹ்வை
جَهْرَةً
கண்கூடாக
فَأَخَذَتْهُمُ
ஆகவே, அவர்களைப் பிடித்தது
ٱلصَّٰعِقَةُ
இடிமுழக்கம்
بِظُلْمِهِمْۚ
அவர்களின் அநியாயத்தினால்
ثُمَّ
பிறகு
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
مِنۢ بَعْدِ
பின்னர்
مَا جَآءَتْهُمُ
அவர்களிடம் வந்த(து)
ٱلْبَيِّنَٰتُ
தெளிவான அத்தாட்சிகள்
فَعَفَوْنَا
மன்னித்தோம்
عَن ذَٰلِكَۚ
அதை
وَءَاتَيْنَا
இன்னும் கொடுத்தோம்
مُوسَىٰ
மூஸாவிற்கு
سُلْطَٰنًا
சான்றை
مُّبِينًا
தெளிவான(து)

yas'aluka Ahlul Kitaabi an tunazzila 'alaihim Kitaabam minas samaaa'i faqad sa aloo Moosaa akbara min zaalika faqaaloo arinal laaha jahratan fa akhazat humus saa'iqatu bizulmihim; summat takhazul 'ijla mim ba'di maa jaa'at humul baiyinaatu fa'afawnaa 'ann zaalik; wa aatainaa Moosaa sultaanam mubeenaa

(நபியே!) வேதத்தையுடையவர்கள் (தாங்கள் விரும்புகின்ற படி) வானத்திலிருந்து தங்கள்மீது ஒரு வேதத்தை இறக்கி வைக்குமாறு உங்களிடம் கேட்கின்றனர். நிச்சயமாக இதைவிடப் பெரியதொன்றையே மூஸாவிடம் அவர்கள் கேட்டு "அல்லாஹ்வை எங்களுக்குக் கண்கூடாகக் காண்பியுங்கள்" என்று கூறினார்கள். ஆகவே, அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (இதுமட்டுமா?) அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னரும் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். இதனையும் நாம் மன்னித்து (அவர்களுடைய நபி) மூஸாவுக்கு (பின்னும்) தெளிவான அத்தாட்சியைக் கொடுத்தோம்.

Tafseer

وَرَفَعْنَا
மேலும் உயர்த்தினோம்
فَوْقَهُمُ
அவர்களுக்கு மேல்
ٱلطُّورَ
மலையை
بِمِيثَٰقِهِمْ
அவர்களுடைய வாக்குறுதியின் காரணமாக
وَقُلْنَا
இன்னும் கூறினோம்
لَهُمُ
அவர்களுக்கு
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
ٱلْبَابَ
வாசலில்
سُجَّدًا
தலை குணிந்தவர்களாக
وَقُلْنَا
இன்னும் கூறினோம்
لَهُمْ
அவர்களுக்கு
لَا تَعْدُوا۟
வரம்பு மீறாதீர்கள்
فِى ٱلسَّبْتِ
சனிக்கிழமையில்
وَأَخَذْنَا
இன்னும் எடுத்தோம்
مِنْهُم
அவர்களிடம்
مِّيثَٰقًا
வாக்குறுதியை
غَلِيظًا
உறுதியானது

Wa rafa'naa fawqahumut Toora bimeesaaqihim wa qulnaa lahumud khulul baaba sujjadanw wa qulnaa lahum laa ta'doo fis Sabti wa akhaznaa minhum meesaaqan ghaleezaa

அவர்களிடம் வாக்குறுதி வாங்குவதற்காகத் "தூர்" (ஸீனாய்) என்னும் மலையை அவர்கள் மீது உயர்த்திய சமயத்தில் "(இந்நகரத்தின்) வாயிலில் தலைகுனிந்து வணங்கியவர்களாகவே செல்லுங்கள்" என்று நாம் அவர்களுக்கு கூறினோம். (மீன் வேட்டையாட) சனிக்கிழமையில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறி (இவற்றிற்காகவும்) உறுதியான வாக்குறுதியை நாம் அவர்களிடம் பெற்றிருந்தோம். (எனினும் அவர்கள் மாறி விட்டனர்.)

Tafseer

فَبِمَا نَقْضِهِم
ஆகவே, அவர்கள் முறித்ததாலும்
مِّيثَٰقَهُمْ
தங்கள் வாக்குறுதியை
وَكُفْرِهِم
இன்னும் அவர்கள் நிராகரித்ததாலும்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَقَتْلِهِمُ
இன்னும் அவர்கள் கொலை செய்ததாலும்
ٱلْأَنۢبِيَآءَ
நபிமார்களை
بِغَيْرِ حَقٍّ
நியாயமின்றி
وَقَوْلِهِمْ
இன்னும் அவர்கள் கூறியதாலும்
قُلُوبُنَا
எங்கள் உள்ளங்கள்
غُلْفٌۢۚ
திரையிடப்பட்டுள்ளன
بَلْ
மாறாக
طَبَعَ
முத்திரையிட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهَا
அவற்றின் மீது
بِكُفْرِهِمْ
அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக
فَلَا يُؤْمِنُونَ
ஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்
إِلَّا قَلِيلًا
சிலரைத் தவிர

Fabimaa naqdihim meesaaqahum wa kufrihim bi Aayaatil laahi wa qatlihimul Ambiyaaa'a bighairi haqqinw wa qawlihim quloobunna ghulf; bal taba'al laahu 'alaihaa bikufrihim falaa yu'minoona illaa qaleelaa

ஆகவே, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளுக்கு மாறு செய்ததினாலும், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டிருந்ததாலும் "எங்களுடைய உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (ஆகவே, எவருடைய உபதேசமும் பலனளிக்காது) என்று அவர்கள் கூறிவந்ததாலும் (நாம் அவர்களைச் சபித்து விட்டோம்). அவர்கள் கூறியதைப்போல் அல்ல! மாறாக, அல்லாஹ்தான் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டான். ஆதலால் (அவர்களில் நல்லோர்) சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

Tafseer

وَبِكُفْرِهِمْ
இன்னும் அவர்கள் நிராகரித்ததாலும்
وَقَوْلِهِمْ
இன்னும் அவர்கள் கூறியதாலும்
عَلَىٰ
மீது
مَرْيَمَ
மர்யம்
بُهْتَٰنًا
அவதூறை
عَظِيمًا
மாபெரும்

Wa bikufrihim wa qawlihim 'alaa Maryama buh taanan 'azeema

அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் அவர்களை நாம் சபித்தோம்.

Tafseer

وَقَوْلِهِمْ
இன்னும் அவர்கள் கூறியதாலும்
إِنَّا
நிச்சயமாக நாம்
قَتَلْنَا
கொன்றோம்
ٱلْمَسِيحَ
மஸீஹை
عِيسَى ٱبْنَ
ஈஸா/மகன்
مَرْيَمَ
மர்யமுடைய
رَسُولَ
தூதர்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَمَا قَتَلُوهُ
அவர்கள் கொல்லவில்லை/ அவரை
وَمَا صَلَبُوهُ
இன்னும் அவர்கள் சிலுவையில் அறையவில்லை/அவரை
وَلَٰكِن
எனினும்
شُبِّهَ
தோற்றமாக்கப்பட்டான்
لَهُمْۚ
அவர்களுக்கு
وَإِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக/எவர்கள்
ٱخْتَلَفُوا۟
முரண்பட்டனர்
فِيهِ
அவர் விஷயத்தில்
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்தான்
مِّنْهُۚ
அதில்
مَا لَهُم
அவர்களுக்கு இல்லை
بِهِۦ
அதில்
مِنْ عِلْمٍ
ஓர் அறிவும்
إِلَّا ٱتِّبَاعَ
தவிர/பின்பற்றுவது
ٱلظَّنِّۚ
சந்தேகத்தை
وَمَا قَتَلُوهُ
அவர்கள் கொல்லவில்லை/ அவரை
يَقِينًۢا
உறுதியாக

Wa qawlihim innaa qatal nal maseeha 'Eesab-na-Maryama Rasoolal laahi wa maa qataloohu wa maa salaboohu wa laakin shubbiha lahum; wa innal lazeenakh talafoo fee lafee shakkim minh; maa lahum bihee min 'ilmin illat tibaa'az zann; wa maa qataloohu yaqeenaa

அன்றி "அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்து விட்டோம்" என்று அவர்கள் கூறியதனாலும் அவர்களைச் சபித்தோம். அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற் குள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்து விட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்று வதன்றி அதில் அவர்களுக்கு உண்மையான ஞான(ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை.

Tafseer

بَل
மாறாக
رَّفَعَهُ
உயர்த்தினான்/அவரை
ٱللَّهُ
அல்லாஹ்
إِلَيْهِۚ
தன்னளவில்
وَكَانَ
இன்னும் இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَزِيزًا
மிகைத்தவனாக
حَكِيمًا
மகா ஞானவானாக

Bar rafa'ahul laahu ilayh; wa kaanal laahu 'Azeezan Hakeemaa

எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَإِن
இல்லை (இருக்கமாட்டார்)
مِّنْ أَهْلِ
வேதக்காரர்களில் எவரும்
إِلَّا
தவிர
لَيُؤْمِنَنَّ
நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்
بِهِۦ
அவரை
قَبْلَ
முன்னர்
مَوْتِهِۦۖ
அவர் இறப்பதற்கு
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
இன்னும் மறுமை நாளில்
يَكُونُ
இருப்பார்
عَلَيْهِمْ
இவர்களுக்கு எதிராக
شَهِيدًا
சாட்சி கூறுபவராக

Wa im min Ahlil Kitaabi illaa layu'minanna bihee qabla mawtihee wa Yawmal Qiyaamati yakoonu 'alaihim shaheedaa

வேதத்தையுடையவர்களில் ஒவ்வொருவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. எனினும், மறுமை நாளில் இவர்களுக்கு எதிராகவே அவர் சாட்சியம் கூறுவார்.

Tafseer

فَبِظُلْمٍ
அநியாயத்தின் காரணமாக
مِّنَ ٱلَّذِينَ
யூதர்களின்
حَرَّمْنَا
விலக்கினோம்
عَلَيْهِمْ
அவர்களுக்கு
طَيِّبَٰتٍ
நல்லவற்றை
أُحِلَّتْ
அனுமதிக்கப்பட்டன
لَهُمْ
அவர்களுக்கு
وَبِصَدِّهِمْ
இன்னும் அவர்கள் தடுப்பது
عَن سَبِيلِ
பாதையை விட்டு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
كَثِيرًا
அதிகமானவர்களை

Fabizulmin minal lazeena haadoo harramnaa 'alaihim taiyibaatin uhillat lahum wa bisadihim 'an sabeelil laahi kaseeraa

யூதர்களின் (இத்தகைய) அநியாயங்களின் காரணமாகவும், (அவ்வாறே) அல்லாஹ்வின் பாதையில் (செல்ல முடியாதவாறு) பலரைத் தடுத்துக் கொண்டிருந்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவைகளில் நல்லவைகளை நாம் அவர்களுக்கு விலக்கி விட்டோம்.

Tafseer