Skip to main content

وَلَوْ كَانُوا۟
அவர்கள் இருந்திருந்தால்
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்பவர்களாக
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلنَّبِىِّ
இன்னும் நபியை
وَمَآ أُنزِلَ
எது / இறக்கப்பட்டது
إِلَيْهِ
அவருக்கு
مَا
எடுத்திருக்க மாட்டார்கள்
ٱتَّخَذُوهُمْ
எடுத்திருக்க மாட்டார்கள் அவர்களை
أَوْلِيَآءَ
நண்பர்களாக
وَلَٰكِنَّ
என்றாலும்
كَثِيرًا
அதிகமானோர்
مِّنْهُمْ
அவர்களில்
فَٰسِقُونَ
பாவிகள்

Wa law kaanoo yu'minoona billaahi wan nabiyyi wa maaa unzila ilaihi attakhazoohum awliyaaa'a wa laakinna kaseeram minhum faasiqoon

அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு அருளப்பட்ட (வேதத்)தையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் (நிராகரித்த) அவர்களைத் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் பாவிகளாகவே இருக்கின்றனர்.

Tafseer

لَتَجِدَنَّ
(நீர்) காண்பீர்
أَشَدَّ
கடுமையானவர்களாக
ٱلنَّاسِ
மக்களில்
عَدَٰوَةً
பகைமையினால்
لِّلَّذِينَ
எவர்களுக்கு
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
ٱلْيَهُودَ
யூதர்களை
وَٱلَّذِينَ
இன்னும் எவர்களை
أَشْرَكُوا۟ۖ
இணைவைத்தனர்
وَلَتَجِدَنَّ
இன்னும் நிச்சயமாக காண்பீர்
أَقْرَبَهُم
அவர்களில் மிக நெருங்கியவர்களாக
مَّوَدَّةً
நேசத்தில்
لِّلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களுக்கு
ٱلَّذِينَ
எவர்களை
قَالُوٓا۟
கூறினார்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
نَصَٰرَىٰۚ
கிறித்தவர்கள்
ذَٰلِكَ
அது
بِأَنَّ
காரணம்/நிச்சயமாக
مِنْهُمْ
அவர்களில்
قِسِّيسِينَ
குருக்கள்
وَرُهْبَانًا
இன்னும் துறவிகள்
وَأَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَا يَسْتَكْبِرُونَ
பெருமை கொள்ள மாட்டார்கள்

Latajidanna ashad dan naasi 'adaawatal lillazeena aamanul Yahooda wallazeena ashrakoo wa latajidanna aqrabahum mawaddatal lil lazeena aamanul lazeena qaalooo innaa Nasaaraa; zaalika bi anna mminhum qiseeseena wa ruhbaananw wa annahum laa yastakbiroon

(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீங்கள் காண்பீர்கள்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். அன்றி, அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை.

Tafseer

وَإِذَا سَمِعُوا۟
அவர்கள் செவியுற்றால்
مَآ أُنزِلَ
எது/இறக்கப்பட்டது
إِلَى ٱلرَّسُولِ
பக்கம்/தூதர்
تَرَىٰٓ
காண்பீர்
أَعْيُنَهُمْ
அவர்களின் கண்களை
تَفِيضُ
நிரம்பி வழியக்கூடியதாக
مِنَ ٱلدَّمْعِ
கண்ணீரால்
مِمَّا عَرَفُوا۟
எதன் காரணமாக/அறிந்தனர்
مِنَ ٱلْحَقِّۖ
உண்மையை
يَقُولُونَ
கூறுகின்றனர்
رَبَّنَآ
எங்கள் இறைவா
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
فَٱكْتُبْنَا
ஆகவே பதிவு செய்/எங்களை
مَعَ
உடன்
ٱلشَّٰهِدِينَ
சாட்சியாளர்கள்

Wa izaa sami'oo maaa unzila ilar Rasooli taraaa a'yunahum tafeedu minad dam'i mimmmaa 'arafoo minalhaqq; yaqooloona Rabbanaaa aamannaa faktubnaa ma'ash shaahideen

தவிர, (இத்தகையவர்களில் பலர் நம்முடைய) தூதர் மீது அருளப்பட்டவைகளை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர்கள். அன்றி "எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர்.

Tafseer

وَمَا لَنَا
என்ன/எங்களுக்கு
لَا نُؤْمِنُ
நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَمَا
இன்னும் எது
جَآءَنَا
வந்தது நமக்கு
مِنَ ٱلْحَقِّ
சத்தியம்
وَنَطْمَعُ
நாங்கள் ஆசைப்படாமல் இருக்கவும்
أَن يُدْخِلَنَا
எங்களை/அவன் சேர்ப்பதை
رَبُّنَا
எங்கள் இறைவன்
مَعَ
உடன்
ٱلْقَوْمِ
மக்கள்
ٱلصَّٰلِحِينَ
நல்லவர்கள்

Wa maa lanaa laa nu'minu billaahi wa maa jaaa'anaa minal haqqi wa natma'u ai yudkhilanaa Rabbunaa ma'al qawmis saaliheen

"அன்றி, அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது? (நற்செயல்கள் செய்த) நல்லவர்களுடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை கொள்கின்றோம்" என்றும் (கூறுகின்றனர்.)

Tafseer

فَأَثَٰبَهُمُ
ஆகவே பிரதிபலனாகஅளித்தான்/அவர்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
بِمَا
எதன் காரணமாக
قَالُوا۟
கூறினார்கள்
جَنَّٰتٍ
சொர்க்கங்களை
تَجْرِى
ஓடுகிறது
مِن
இருந்து
تَحْتِهَا
அதன் கீழே
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَاۚ
அதில்
وَذَٰلِكَ
இது
جَزَآءُ
கூலி
ٱلْمُحْسِنِينَ
நல்லறம்புரிபவர்களுடைய

Fa asaabahumul laahu bimaa qaaloo Jannnaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaa; wa zaalika jazaaa'ul muhsineen

அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளிப்பான். அவைகளில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள். இதுவே நன்மை செய்பவர் களுக்குரிய கூலியாகும்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَآ
நம் வசனங்களை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلْجَحِيمِ
நரகவாசிகள்தான்

Wallazeena kafaroo wa kazzaboo bi Aayaatinaaa ulaaa'ika Ashaabul Jaheem

எவர்கள் (நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களையும் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நரகவாசிகளே!

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تُحَرِّمُوا۟
ஆகாதவையாக ஆக்காதீர்கள்
طَيِّبَٰتِ
நல்லவற்றை
مَآ أَحَلَّ
எவை/ ஆகுமாக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْ
உங்களுக்கு
وَلَا تَعْتَدُوٓا۟ۚ
இன்னும் வரம்புமீறாதீர்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلْمُعْتَدِينَ
வரம்புமீறிகளை

Yaaa aiyuhal lazeena aamanoo laa tuharrimoo taiyibaati maaa ahallal laahu lakum wa laa ta'tadooo; innal laaha laa yuhibbul mu'tadeen

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவைகளை நீங்கள் ஆகாதவைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அன்றி, நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை.

Tafseer

وَكُلُوا۟
இன்னும் புசியுங்கள்
مِمَّا
எதிலிருந்து
رَزَقَكُمُ
வழங்கினான்/ உங்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
حَلَٰلًا
அனுமதிக்கப்பட்டதை
طَيِّبًاۚ
நல்லது
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
ٱلَّذِىٓ
எவன்
أَنتُم بِهِۦ
நீங்கள்/அவனை
مُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறீர்கள்

Wa kuloo mimmaa razaqakumul laahu halaalan taiyibaa; wattaqul laahallazeee antum bihee mu'minon

அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் (நீங்கள் புசிக்க) அனுமதிக்கப்பட்ட நல்லவைகளையே புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்.

Tafseer

لَا يُؤَاخِذُكُمُ
தண்டிக்கமாட்டான் / உங்களை
ٱللَّهُ
அல்லாஹ்
بِٱللَّغْوِ
வீணானதற்காக
فِىٓ أَيْمَٰنِكُمْ
சத்தியங்களில்/உங்கள்
وَلَٰكِن يُؤَاخِذُكُم
எனினும்/உங்களைத் தண்டிப்பான்
بِمَا
எதற்காக
عَقَّدتُّمُ
உறுதிப்படுத்தினீர்கள்
ٱلْأَيْمَٰنَۖ
சத்தியங்களை
فَكَفَّٰرَتُهُۥٓ
அதற்குப் பரிகாரம்
إِطْعَامُ
உணவளிப்பது
عَشَرَةِ
பத்து
مَسَٰكِينَ
ஏழைகளுக்கு
مِنْ
இருந்து
أَوْسَطِ
நடுத்தரமானது
مَا تُطْعِمُونَ
எது/ உணவளிக்கிறீர்கள்
أَهْلِيكُمْ
உங்கள் குடும்பத்திற்கு
أَوْ
அல்லது
كِسْوَتُهُمْ
அவர்களுக்கு ஆடையளிப்பது
أَوْ
அல்லது
تَحْرِيرُ
விடுதலையிடுவது
رَقَبَةٍۖ
ஓர் அடிமை
فَمَن
எவர்
لَّمْ يَجِدْ
பெறவில்லையெனில்
فَصِيَامُ
நோன்பிருத்தல்
ثَلَٰثَةِ
மூன்று
أَيَّامٍۚ
நாட்களுக்கு
ذَٰلِكَ
இது
كَفَّٰرَةُ
பரிகாரம்
أَيْمَٰنِكُمْ
உங்கள் சத்தியங்களின்
إِذَا حَلَفْتُمْۚ
நீங்கள் சத்தியம் செய்தால்
وَٱحْفَظُوٓا۟
காப்பாற்றுங்கள்
أَيْمَٰنَكُمْۚ
உங்கள் சத்தியங்களை
كَذَٰلِكَ
இவ்வாறு
يُبَيِّنُ
விவரிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْ
உங்களுக்கு
ءَايَٰتِهِۦ
தன் வசனங்களை
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Laa yu'aakhizukumul laahu billaghwi feee aimaanikum wa laakiny ya'aakhizukum bimaa 'aqqattumul aimaana fakaf faaratuhooo it'aamu 'asharati masaakeena min awsati maa tut'imoona ahleekum aw kiswatuhum aw tahreeru raqabatin famallam yajid fa Siyaamu salaasati aiyaam; zaalika kaffaaratu aimaanikum izaa halaftum; wahfazooo aimaanakum; kazaalika yubaiyinul laahu lakum Aayaatihee la'allakum tashkuroon

உங்களின் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (யாதொன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான். (அதில் தவறு ஏற்பட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்து வரும் உணவில் மத்திய தரமான உணவை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்; அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். (பரிகாரமாகக் கொடுக்கக்கூடிய இவைகளில் எதனையும்) எவரும் பெற்றிருக்காவிட்டால் அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். எனினும், நீங்கள் உங்கள் சத்தியங்களை (மிக எச்சரிக்கையுடன் பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக அவன் தன்னுடைய வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரி(த்து)க் (கூறு)கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
إِنَّمَا ٱلْخَمْرُ
நிச்சயமாக மது
وَٱلْمَيْسِرُ
இன்னும் சூது
وَٱلْأَنصَابُ
இன்னும் சிலைகள்
وَٱلْأَزْلَٰمُ
இன்னும் அம்புகள்
رِجْسٌ
அருவருக்கத்தக்கவை
مِّنْ عَمَلِ
செயல்களில்
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானின்
فَٱجْتَنِبُوهُ
ஆகவே, விட்டு விலகுங்கள்/இவற்றை
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக

yaaa aiyuhal lazeena aamanooo innamal khamru walmaisiru wal ansaabu wal azlaamu rijsum min 'amalish shaitaani fajtaniboohu la'al lakum tuflihoon

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.

Tafseer