Skip to main content

وَمَنْ
யார்
أَظْلَمُ
மகா அநியாயக்காரன்
مِمَّنِ
எவரைவிட
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினான்
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்வின்
كَذِبًا
ஒரு பொய்யை
أَوْ
அல்லது
كَذَّبَ
பொய்ப்பித்தான்
بِـَٔايَٰتِهِۦٓۗ
அவனுடைய வசனங்களை
إِنَّهُۥ
நிச்சயமாக
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்(கள்)
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Wa man azlamu mim manif tara 'alal laahi kaziban aw kazzaba bi Aayaatih; innahoo laa yuflihuz zaalimoon

அல்லாஹ்வைப் பற்றிக் கற்பனையாகப் பொய் கூறியவனை விடவோ, அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவனைவிடவோ அநியாயக்காரன் யார்? நிச்சயமாக இந்த அநியாயக்காரர்கள் வெற்றி அடையமாட்டார்கள்.

Tafseer

وَيَوْمَ
நாள்
نَحْشُرُهُمْ
ஒன்று திரட்டுவோம் அவர்கள்
جَمِيعًا
அனைவரையும்
ثُمَّ
பிறகு
نَقُولُ
கூறுவோம்
لِلَّذِينَ
எவர்களுக்கு
أَشْرَكُوٓا۟
இணைவைத்தனர்
أَيْنَ
எங்கே
شُرَكَآؤُكُمُ
இணைகள் உங்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
كُنتُمْ تَزْعُمُونَ
நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்

Wa yawma nahshuruhum jamee'an summa naqoolu lillazeena ashrakooo ayna shurakaaa' ukumul lazeena kuntum taz'umoon

நாம் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் (இவர்களில்) இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி "(ஆண்டவனுக்கு) இணையானவை என நீங்கள் எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவை எங்கே?" என்று நாம் கேட்போம்.

Tafseer

ثُمَّ
பிறகு
لَمْ تَكُن
இருக்காது
فِتْنَتُهُمْ
அவர்களுடைய சோதனை
إِلَّآ
தவிர
أَن قَالُوا۟
அவர்கள் கூறுவதை
وَٱللَّهِ
அல்லாஹ் மீது சத்தியமாக
رَبِّنَا
எங்கள் இறைவா
مَا كُنَّا
நாங்கள் இருக்கவில்லை
مُشْرِكِينَ
இணைவைப்பவர்களாக

Summa lam takun fitnatuhum illaaa an qaaloo wallaahi Rabbinaa maa kunnaa mushrikeen

(அது சமயம்) அவர்கள் "அல்லாஹ்தான் எங்கள் இறைவன்; நாங்கள் (அவனுக்கு யாதொன்றையும்) இணையாக்கவில்லையே!" என்று (பொய்யாகப்) புகல் கூறுவதைத் தவிர (பதில்) வேறொன்றுமிராது.

Tafseer

ٱنظُرْ
கவனிப்பீராக
كَيْفَ
எவ்வாறு
كَذَبُوا۟
பொய் கூறினர்
عَلَىٰٓ
மீதே
أَنفُسِهِمْۚ
தங்கள்
وَضَلَّ
இன்னும் மறைந்துவிட்டன
عَنْهُم
அவர்களை விட்டு
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
يَفْتَرُونَ
இட்டுக் கட்டுகிறார்கள்

Unzur kaifa kazaboo 'alaaa anfusihim, wa dalla 'anhum maa kaanoo yaftaroon

தங்களைப் பற்றியே அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (ஆண்டவனுக்கு இணையானவை என்று) அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.

Tafseer

وَمِنْهُم
அவர்களில்
مَّن
எவர்
يَسْتَمِعُ
செவி சாய்ப்பார்
إِلَيْكَۖ
உம் பக்கம்
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
أَكِنَّةً
திரைகளை
أَن يَفْقَهُوهُ
அதை புரிந்துகொள்வதற்கு
وَفِىٓ ءَاذَانِهِمْ
இன்னும் காதுகளில்/அவர்களுடைய
وَقْرًاۚ
செவிட்டை
وَإِن يَرَوْا۟
அவர்கள் பார்த்தாலும்
كُلَّ
எல்லா(ம்)
ءَايَةٍ
அத்தாட்சி(களையும்)
لَّا يُؤْمِنُوا۟
நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்/அவற்றை
حَتَّىٰٓ
முடிவாக
إِذَا جَآءُوكَ
அவர்கள் வந்தால்/உம்மிடம்
يُجَٰدِلُونَكَ
தர்க்கித்தவர்களாக/உம்மிடம்
يَقُولُ
கூறுவார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
إِنْ
இல்லை
هَٰذَآ
இவை
إِلَّآ
தவிர
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகளை
ٱلْأَوَّلِينَ
முன்னோர்கள்

Wa minhum mai yastami'u ilaika wa ja'alnaa 'alaa quloobihim akinnatan ai yafqahoohu wa feee aazaanihim waqraa; wa ai yaraw kulla Aayatil laa yu'minoo bihaa; hattaaa izaa jaaa'oka yujaadiloonaka yaqoolul lazeena kafaroo in haazaa illaaa asaateerul awwaleen

(நபியே! உங்களுக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீங்கள் கூறுவதைக் கேட்க) உங்களுக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதனை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்தி விட்டோம். ஆகவே, (இத்தகையவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் யாவையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உங்களிடம் வந்த போதிலும், உங்களுடன் தர்க்கித்து "இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.

Tafseer

وَهُمْ
அவர்கள்
يَنْهَوْنَ
தடுக்கின்றனர்
عَنْهُ
இதிலிருந்து
وَيَنْـَٔوْنَ
இன்னும் தூரமாகின்றனர்
عَنْهُۖ
இதை விட்டு
وَإِن يُهْلِكُونَ
அவர்கள் அழித்துக் கொள்வதில்லை
إِلَّآ
தவிர
أَنفُسَهُمْ
தங்களை
وَمَا يَشْعُرُونَ
உணர மாட்டார்கள்

Wa hum yanhawna 'anhu wa yan'awna 'anhu wa iny yuhlikoona illaa anfusahum wa maa yash'uroon

அன்றி அவர்கள் (மற்றவர்களையும்) இ(தைக்கேட்ப)தில் இருந்து தடுத்துத் தாங்களும் இதைவிட்டு வெருண்டோடுவார்கள். (இதனால்) அவர்கள் தங்களையே நாசமாக்கிக் கொள்கிறார்கள். (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்ளவே மாட்டார்கள்.

Tafseer

وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
إِذْ
போது
وُقِفُوا۟
நிறுத்தப்பட்டனர்
عَلَى ٱلنَّارِ
நரகத்தின் முன்
فَقَالُوا۟
கூறுவார்கள்
يَٰلَيْتَنَا نُرَدُّ
நாங்கள் திருப்பப்பட வேண்டுமே
وَلَا نُكَذِّبَ
பொய்ப்பிக்க மாட்டோமே
بِـَٔايَٰتِ
வசனங்களை
رَبِّنَا
எங்கள் இறைவனின்
وَنَكُونَ
இன்னும் ஆகிவிடுவோமே
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்

Wa law taraaa iz wauqifoo 'alan Naari faqaaloo yaa laitanaa nuraddu wa laa nukaz ziba bi Aayaati Rabbinaa wa nakoona minal mu'mineen

(நரக) நெருப்பின் முன் அவர்கள் நிறுத்தப்படும் பொழுது, (நபியே!) நீங்கள் (அவர்களைப்) பார்த்தால் "நாங்கள் (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப் படவேண்டுமே! (அவ்வாறாயின்) எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்யாக்காமல், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்" என்று அவர்கள் புலம்புவார்கள்.

Tafseer

بَلْ
அல்ல
بَدَا لَهُم
வெளிப்படும்/ அவர்களுக்கு
مَّا كَانُوا۟
எது/இருந்தனர்
يُخْفُونَ
மறைக்கிறார்கள்
مِن قَبْلُۖ
முன்னர்
وَلَوْ رُدُّوا۟
அவர்கள் திருப்பப்பட்டால்
لَعَادُوا۟
மீளுவார்கள்
لِمَا نُهُوا۟
எதற்கு/ தடுக்கப்பட்டனர்
عَنْهُ
அதை விட்டு
وَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்

Bal badaa lahum maa kaanoo yukhfoona min qablu wa law ruddoo la'aadoo limaa nuhoo 'anhu wa innahum lakaaziboon

(இதுவும் அவர்கள் மனமாறக் கூறுவது) அன்று! இதற்கு முன்னர் (அவர்கள் தங்களுக்குள்) மறைத்து வைத்திருந்ததுதான் அவர்களிடம் தென்பட்டது. (ஏனென்றால்,) அவர்கள் (இவ்வுலகத்திற்குத்) திரும்ப அனுப்பப்பட்டால், அவர்களுக்குத் தடை செய்திருந்தவற்றின் பக்கமே மீண்டும் செல்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களாகவே இருக்கின்றனர்.

Tafseer

وَقَالُوٓا۟
இன்னும் கூறினர்
إِنْ هِىَ
இல்லை/இது
إِلَّا
தவிர
حَيَاتُنَا
நம் வாழ்க்கை
ٱلدُّنْيَا
உலகம்
وَمَا نَحْنُ
இன்னும் இல்லை/நாம்
بِمَبْعُوثِينَ
எழுப்பப்படுபவர்களாக

Wa qaalooo in hiya illaa hayaatunad dunyaa wa maa nahnu bimab'ooseen

அன்றி "இவ்வுலகத்தில் நாம் வாழ்வதைத் தவிர (இறந்த பின் வேறு வாழ்க்கை) இல்லை; ஆகவே (இறந்தபின்) நாம் உயிர்ப்பிக்கப்பட மாட்டோம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்!

Tafseer

وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
إِذْ وُقِفُوا۟
போது/ நிறுத்தப்பட்டனர்
عَلَىٰ رَبِّهِمْۚ
தங்கள் இறைவனுக்கு முன்
قَالَ
கூறுவான்
أَلَيْسَ
இல்லையா?
هَٰذَا
இது
بِٱلْحَقِّۚ
உண்மை
قَالُوا۟
கூறுவர்
بَلَىٰ
ஏனில்லை
وَرَبِّنَاۚ
எங்கள் இறைவன் சத்தியமாக
قَالَ
கூறுவான்
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
ٱلْعَذَابَ
வேதனையை
بِمَا كُنتُمْ
நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால்

Wa law taraa iz wuqifoo 'alaa Rabbihim; qaala alaisa haazaa bilhaqq; qaaloo balaa wa Rabbinaa; qaala fazooqul 'azaaba bimaa kuntum takfuroon

(இவ்வாறு கூறும்) அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) தங்கள் இறைவனின் சந்நிதியில் நிறுத்தப்படும்பொழுது (நபியே! நீங்கள் அவர்களைக்) காண்பீராயின், (அது சமயம் இறைவன் அவர்களை நோக்கி "விசாரணை நாளாகிய) இது உண்மையல்லவா?" என்று கேட்பான். (அதற்கு) அவர்கள் "எங்கள் இறைவனே! உண்மைதான்" எனக் கூறுவார்கள். (அதற்கு) அவன் ("இதனை) நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (நரகத்தின்) வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" என்று கூறுவான்.

Tafseer