Skip to main content

يُنۢبِتُ
முளைக்கவைக்கிறான்
لَكُم
உங்களுக்கு
بِهِ
அதைக் கொண்டு
ٱلزَّرْعَ
பயிர்களை
وَٱلزَّيْتُونَ
இன்னும் ஜைதூனை
وَٱلنَّخِيلَ
இன்னும் பேரீச்ச மரத்தை
وَٱلْأَعْنَٰبَ
இன்னும் திராட்சைகளை
وَمِن
இன்னும் இருந்து
كُلِّ
எல்லா
ٱلثَّمَرَٰتِۗ
கனிவர்க்கங்கள்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இவற்றில்
لَءَايَةً
அத்தாட்சி
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்றார்கள்

Yumbitu lakum bihiz zar'a wazzaitoona wanna kheela wal-a'naaba wa min kullis samaraat, inna fee zaalika la Aayatal liqawminy yatafakkaroon

அதனைக் கொண்டே விவசாயப் பயிர்களையும், ஜைத்தூன், பேரீச்சை, திராட்சை ஆகிய எல்லா கனிவர்க்கங்களையும் அவன் உங்களுக்கு உற்பத்தி செய்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

Tafseer

وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلَّيْلَ
இரவை
وَٱلنَّهَارَ
இன்னும் பகலை
وَٱلشَّمْسَ
இன்னும் சூரியனை
وَٱلْقَمَرَۖ
இன்னும் சந்திரனை
وَٱلنُّجُومُ
இன்னும் நட்சத்திரங்கள்
مُسَخَّرَٰتٌۢ
வசப்படுத்தப்பட்டவை
بِأَمْرِهِۦٓۗ
அவனுடைய கட்டளையைக் கொண்டு
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இவற்றில்
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்றனர்

Wa sakkhkhara lakumul laila wannahaara wash shamsa walqamara wannujoomu musakhkharaatum bi amrih; inna fee zaalika la Aayaatil liqawminy ya'qiloon

அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக (படைத்துத்) தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) நட்சத்திரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. நிச்சயமாக இதிலும் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَمَا
இன்னும் எது?
ذَرَأَ
படைத்தான்
لَكُمْ
உங்களுக்காக
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مُخْتَلِفًا
மாறுபட்டது
أَلْوَٰنُهُۥٓۗ
அதன் நிறங்கள்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில்
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَذَّكَّرُونَ
நல்லுபதேசம் பெறுகின்றனர்

Wa maa zara a lakum fil ardi mukhtalifan alwaanuh; inna fee zaalika la Aayatal liqawminy yazakkaroon

பூமியில் உங்களுக்காக அவன் படைத்திருப்பவைகள் விதவிதமான நிறங்களும் (வகைகளும்) உடையவைகளாக இருக்கின்றன. நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நிச்சயமாக இதிலும் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
سَخَّرَ
வசப்படுத்தினான்
ٱلْبَحْرَ
கடலை
لِتَأْكُلُوا۟
நீங்கள் புசிப்பதற்காக
مِنْهُ
அதிலிருந்து
لَحْمًا
ஒரு மாமிசத்தை
طَرِيًّا
பசுமையானது, மென்மையானது, புதியது, சதையுடையது
وَتَسْتَخْرِجُوا۟
இன்னும் வெளியெடுப்பதற்காக
مِنْهُ
அதிலிருந்து
حِلْيَةً
ஆபரணங்களை
تَلْبَسُونَهَا
அணிகிறீர்கள் / அவற்றை
وَتَرَى
இன்னும் பார்க்கிறீர்
ٱلْفُلْكَ
கப்பல்களை
مَوَاخِرَ
பிளந்து செல்பவையாக
فِيهِ
அதில்
وَلِتَبْتَغُوا۟
இன்னும் நீ தேடுவதற்காக
مِن فَضْلِهِۦ
அவனுடைய அருளை
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Wa Huwal lazee sakhkharal bahra litaakuloo minhu lahman tariyyanw wa tastakhrijoo minhu hilyatan talbasoonahaa wa taral fulka mawaakhira feehi wa litabtaghoo min fadlihee wa la'allakum tashkuroon

அவன்தான் நீங்கள் மீன்களைப் (பிடித்துச் சமைத்துப்) புசிக்கவும், நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக்கொள்ளவும் கடலை (உங்களுக்கு) வசதியாக்கித் தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு (கடலில் பயணம் செய்யும்பொழுது) கப்பல் கடலைப் பிளந்துகொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருப்பீர்களாக!

Tafseer

وَأَلْقَىٰ
அவன் அமைத்தான்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
رَوَٰسِىَ
மலைகளை
أَن تَمِيدَ
அசையாதிருப்பதற்காக
بِكُمْ
உங்களைக் கொண்டு
وَأَنْهَٰرًا
இன்னும் நதிகளை
وَسُبُلًا
இன்னும் பாதைகளை
لَّعَلَّكُمْ تَهْتَدُونَ
நீங்கள் வழி பெறுவதற்காக

Wa alqaa fil ardi rawaasiya an tameeda bikum wa anhaaranw wa sublulal la 'allakum tahtadoon

உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான். நீங்கள் (உங்கள் போக்குவரத்துக்கு) ஆறுகளையும் நேரான வழிகளையும் அறிவதற்காகப் பல பாதைகளை அமைத்தான்.

Tafseer

وَعَلَٰمَٰتٍۚ
இன்னும் பல அடையாளங்களை
وَبِٱلنَّجْمِ هُمْ
இன்னும் நட்சத்திரங்களைக் கொண்டு/அவர்கள்
يَهْتَدُونَ
வழி பெறுகின்றனர்

Wa 'alaamaat; wa bin najmi hum yahtadoon

(பகலில் திசைகளை அறிவிக்கக்கூடிய மலைகள் போன்ற) அடையாளங்களைக் கொண்டும் (இரவில்) நட்சத்திரங்களைக் கொண்டும் (பயணிகள்) தங்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்.

Tafseer

أَفَمَن
ஆவானா?/எவன்
يَخْلُقُ
படைப்பான்
كَمَن
எவனைப் போல்
لَّا يَخْلُقُۗ
படைக்கமாட்டான்
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?

Afamany yakhluqu kamallaa yakhluq; afalaa tazak karoon

(இணைவைத்து வணங்குபவர்களே! இவை அனைத்தையும்) படைத்த வல்லவன் (நீங்கள் வணங்கும்) ஒன்றையுமே படைக்க முடியாதவைகளைப் போலாவானா! இவ்வளவு கூட நீங்கள் கவனிக்க வேண்டாமா?

Tafseer

وَإِن تَعُدُّوا۟
நீங்கள் எண்ணினால்
نِعْمَةَ ٱللَّهِ
அருளை/ அல்லாஹ்வின்
لَا تُحْصُوهَآۗ
நீங்கள் எண்ணி முடிக்கமாட்டீர்கள்/அதை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Wa in ta'uddoo ni'matal laahi laa tuhsoohaa; innal laaha la Ghafoorur Raheem

அல்லாஹ்வின் அரு(ள்க)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை உங்களால் எண்ணிட முடியாது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَٱللَّهُ يَعْلَمُ
அல்லாஹ் நன்கறிவான்
مَا تُسِرُّونَ
எதை/மறைக்கிறீர்கள்
وَمَا تُعْلِنُونَ
எதை/வெளிப்படுத்துகிறீர்கள்

Wallaahu ya'lamu maa tusirroona wa maa tu'linoon

நீங்கள் மனதில் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) நீங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
يَدْعُونَ
அழைக்கிறார்கள்
مِن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்
لَا يَخْلُقُونَ
படைக்க மாட்டார்கள்
شَيْـًٔا
எதையும்
وَهُمْ
அவர்களோ
يُخْلَقُونَ
படைக்கப்படுகிறார்கள்

Wallazeena yad'oona min doonil laahi laa yakhluqoona shai'anw wa hum yukhlaqoon

(நபியே!) அல்லாஹ்வையன்றி எவற்றை அவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவற்றால் யாதொன்றையும் படைக்க முடியாது. அவைகளும் (அவனால்) படைக்கப் பட்டவைகளாகும்.

Tafseer