Skip to main content

وَلَا تَنكِحُوا۟
மணக்காதீர்கள்
ٱلْمُشْرِكَٰتِ
இணைவைக்கும் பெண்களை
حَتَّىٰ
வரை
يُؤْمِنَّۚ
அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
وَلَأَمَةٌ
திட்டமாக ஓர் அடிமைப் பெண்
مُّؤْمِنَةٌ
(பெண்) நம்பிக்கையாளர்
خَيْرٌ
சிறந்தவள்
مِّن
விட
مُّشْرِكَةٍ
இணைவைப்பவள்
وَلَوْ أَعْجَبَتْكُمْۗ
அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே!
وَلَا تُنكِحُوا۟
இன்னும் மணமுடித்துக் கொடுக்காதீர்கள்
ٱلْمُشْرِكِينَ
இணை வைப்பவர்களுக்கு
حَتَّىٰ يُؤْمِنُوا۟ۚ
அவர்கள் நம்பிக்கை கொள்கிறவரை
وَلَعَبْدٌ
திட்டமாக ஓர்அடிமை
مُّؤْمِنٌ
நம்பிக்கையாளர்
خَيْرٌ
சிறந்தவர்
مِّن
விட
مُّشْرِكٍ
இணைவைப்பவன்
وَلَوْ أَعْجَبَكُمْۗ
அவன் கவர்ந்தாலும் சரியே/உங்களை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يَدْعُونَ
அழைக்கிறார்கள்
إِلَى ٱلنَّارِۖ
நரகத்திற்கு
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
يَدْعُوٓا۟
அழைக்கிறான்
إِلَى ٱلْجَنَّةِ
சொர்க்கத்திற்கு
وَٱلْمَغْفِرَةِ
இன்னும் மன்னிப்பு
بِإِذْنِهِۦۖ
அவனின் கட்டளைக் கொண்டு
وَيُبَيِّنُ
இன்னும் விவரிக்கிறான்
ءَايَٰتِهِۦ
தன் வசனங்களை
لِلنَّاسِ
மக்களுக்கு
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் உபதேசம் பெறுவதற்காக

Wa laatankihul mushrikaati hattaa yu'minn; wa la amatum mu'minatun khairum mim mushrikatinw wa law a'jabatkum; wa laa tunkihul mushrikeena hattaa yu'minoo; wa la'abdummu'minun khairum mimmushrikinw wa law 'ajabakum; ulaaa'ika yad'oona ilan Naari wallaahu yad'ooo ilal Jannati walmaghfirati biiznihee wa yubaiyinu Aayaatihee linnaasi la'allahum yatazakkaroon

(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணைவைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் அவர்களுக்கு (நம்பிக்கையாளர் களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஒரு ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்) இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்னுடைய) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கின்றான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன்னுடைய வசனங்களை (மேலும்) விவரிக்கின்றான்.

Tafseer

وَيَسْـَٔلُونَكَ
இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்
عَنِ ٱلْمَحِيضِۖ
மாதவிடாய் பற்றி
قُلْ
கூறுவீராக
هُوَ
அது
أَذًى
ஓர் இடையூறு
فَٱعْتَزِلُوا۟
எனவே விலகிவிடுங்கள்
ٱلنِّسَآءَ
பெண்களைவிட்டு
فِى ٱلْمَحِيضِۖ
மாதவிடாயில்
وَلَا تَقْرَبُوهُنَّ
இன்னும் அவர்களுடன் உறவுகொள்ளாதீர்கள்
حَتَّىٰ يَطْهُرْنَۖ
அவர்கள் தூய்மையாகும் வரை
فَإِذَا تَطَهَّرْنَ
அவர்கள் முழுமையாக சுத்தமாகிவிட்டால்
فَأْتُوهُنَّ
அவர்களிடம் வாருங்கள்
مِنْ حَيْثُ
முறைப்படி
أَمَرَكُمُ
உங்களை ஏவினான்
ٱللَّهُۚ
அல்லாஹ்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கிறான்
ٱلتَّوَّٰبِينَ
பாவத்திலிருந்து மீளுபவர்களை
وَيُحِبُّ
இன்னும் நேசிக்கிறான்
ٱلْمُتَطَهِّرِينَ
பரிசுத்தமானவர்களை

Wa yas'aloonaka 'anil maheedi qul huwa azan fa'tazilun nisaaa'a fil maheedi wa laa taqraboo hunna hattaa yathurna fa-izaa tathharna faatoohunna min haisu amarakumul laah; innallaaha yuhibbut Tawwaabeena wa yuhibbul mutatahhireen

(நபியே!) மாதவிடாயைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றார்கள். நீங்கள் கூறுங்கள்: "அது (அசுத்தமான) ஓர் இடையூறு. எனவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி, அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை அணுகாதீர்கள். சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தை விட்டு) வருத்தப்பட்டு மீளுகிறவர்களையும், பரிசுத்தவான்களையும் விரும்புகிறான்.

Tafseer

نِسَآؤُكُمْ
உங்கள் மனைவிகள்
حَرْثٌ
விளை நிலங்கள்
لَّكُمْ
உங்களுக்கு
فَأْتُوا۟
ஆகவே வாருங்கள்
حَرْثَكُمْ
உங்கள் விளை நிலங்களுக்கு
أَنَّىٰ
எவ்வாறு
شِئْتُمْۖ
நாடினீர்கள்
وَقَدِّمُوا۟
இன்னும் முற்படுத்துங்கள்
لِأَنفُسِكُمْۚ
உங்களுக்காக
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
أَنَّكُم
நிச்சயமாக நீங்கள்
مُّلَٰقُوهُۗ
அவனைச் சந்திக்கக் கூடியவர்கள்
وَبَشِّرِ
இன்னும் நற்செய்தி கூறுவீராக
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Nisaaa'ukum harsullakum faatoo harsakum annaa shi'tum wa qaddimoo li anfusikum; wattaqul laaha wa'lamooo annakum mulaaqooh; wa bash shirilmu 'mineen

உங்கள் மனைவிகள் உங்கள் விளைநிலங்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று உங்களுடைய பிற்காலத்திற்கு (வேண்டிய சந்ததியை)த் தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள் என்பதையும் உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். (நபியே! நேர்மையுள்ள) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

وَلَا تَجْعَلُوا۟
ஆக்காதீர்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
عُرْضَةً
வலுவாக
لِّأَيْمَٰنِكُمْ
உங்கள் சத்தியங்களுக்கு
أَن تَبَرُّوا۟
நீங்கள் நன்மைசெய்ய மாட்டீர்கள்
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள்
وَتُصْلِحُوا۟
இன்னும் நீங்கள் சீர்திருத்தம் செய்ய மாட்டீர்கள்
بَيْنَ ٱلنَّاسِۗ
மக்களுக்கு மத்தியில்
وَٱللَّهُ
அல்லாஹ்
سَمِيعٌ
செவியுறுபவன்
عَلِيمٌ
மிக அறிபவன்

Wa laa taj'alul laaha 'urdatal li aymaanikum an tabarroo wa tattaqoo wa tuslihoo bainan naas; wallaahu Samee'un 'Aleem

நீங்கள் நன்மை செய்வதற்கோ அல்லது இறைவனை அஞ்சிக்கொள்வதற்கோ அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைப்பதற்கோ உங்களுக்குத் தடையாக ஏற்படக்கூடிய விதத்தில் நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வை இலக்காக்காதீர்கள். அல்லாஹ் (சத்தியத்தை) செவியுறுபவனாகவும், (மனதில் உள்ளதை) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَّا يُؤَاخِذُكُمُ
தண்டிக்கமாட்டான் / உங்களை
ٱللَّهُ
அல்லாஹ்
بِٱللَّغْوِ
வீணானவற்றிற்காக
فِىٓ أَيْمَٰنِكُمْ
உங்கள் சத்தியங்களில்
وَلَٰكِن
எனினும்
يُؤَاخِذُكُم
தண்டிப்பான்/உங்களை
بِمَا
எதற்காக
كَسَبَتْ
செய்தவற்றிற்காக
قُلُوبُكُمْۗ
உங்கள் உள்ளங்கள்
وَٱللَّهُ غَفُورٌ
அல்லாஹ் மகா மன்னிப்பாளன்
حَلِيمٌ
பெரும் சகிப்பாளன்

Laa yu'aakhi zukumul laahu billaghwi feee aymaa nikum wa laakiny yu'aakhi zukum bimaa kasabat quloo bukum; wallaahu Ghafoorun Haleem

(மனதில் நாட்டமின்றி அடிக்கடி நீங்கள் செய்யும்) வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பதில்லை. ஆனால், உங்களுடைய உள்ளங்கள் (உறுதியுடன்) செய்யும் சத்தியங்களுக்காக, (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களை குற்றம் பிடிப்பான். பின்னும், அல்லாஹ் (குற்றங்களை) மிக்க மன்னிப்பவனும் அதிகம் பொறுமை உடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

لِّلَّذِينَ
எவர்களுக்கு
يُؤْلُونَ
ஈலா செய்கிறார்கள்
مِن نِّسَآئِهِمْ
தங்கள் மனைவிகளிடம்
تَرَبُّصُ
எதிர்பார்ப்பது
أَرْبَعَةِ
நான்கு
أَشْهُرٍۖ
மாதங்கள்
فَإِن فَآءُو
அவர்கள் மீண்டுவிட்டால்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Lillazeena yu'loona min nisaaa'ihim tarabbusu arba'ati ashhurin fain faaa'oo fa innal laaha Ghafoorur Raheem

தங்கள் மனைவிகளுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு மாதங்கள் தாமதிக்க அனுமதியுண்டு. ஆகவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்து) கொண்டால் (அல்லாஹ் அவர்களை மன்னித்திடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَإِنْ عَزَمُوا۟
அவர்கள் உறுதிப்படுத்தினால்
ٱلطَّلَٰقَ
விவாகரத்தை
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
سَمِيعٌ
செவியுறுபவன்
عَلِيمٌ
மிக அறிபவன்

Wa in 'azamut talaaqa fa innal laaha Samee'un 'Aleem

ஆனால், அவர்கள் (தவணைக்குள் சேராமல்) திருமண முறிவை உறுதிப்படுத்திக் கொண்டால், (அத்தவணைக்குப் பின் "தலாக்" விவாகரத்து ஏற்பட்டுவிடும்.) நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய சத்தியத்தை) செவியுறுபவனாகவும், (அவர்கள் கருதிய "தலாக்"கை) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَٱلْمُطَلَّقَٰتُ
விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள்
يَتَرَبَّصْنَ
அவர்கள் எதிர்பார்ப்பார்கள்
بِأَنفُسِهِنَّ
தங்களுக்கு
ثَلَٰثَةَ
மூன்று
قُرُوٓءٍۚ
மாதவிடாய்களை
وَلَا يَحِلُّ
இன்னும் ஆகுமானதில்லை
لَهُنَّ
அவர்களுக்கு
أَن يَكْتُمْنَ
அவர்கள் மறைப்பது
مَا
எது
خَلَقَ
படைத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
فِىٓ أَرْحَامِهِنَّ
அவர்களுடைய கர்ப்பப்பைகளில்
إِن كُنَّ
அவர்கள் இருந்தால்
يُؤْمِنَّ
நம்பிக்கை கொள்கிறார்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۚ
இன்னும் இறுதி நாள்
وَبُعُولَتُهُنَّ
இன்னும் அவர்களின் கணவர்கள்
أَحَقُّ
மிக உரிமை உடையவர்(கள்)
بِرَدِّهِنَّ
அவர்களை மீட்டிக் கொள்வதற்கு
فِى ذَٰلِكَ
அதில்
إِنْ أَرَادُوٓا۟
அவர்கள் விரும்பினால்
إِصْلَٰحًاۚ
இணக்கத்தை
وَلَهُنَّ
இன்னும் அவர்களுக்கு
مِثْلُ
போன்றே
ٱلَّذِى
எது
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
بِٱلْمَعْرُوفِۚ
நல்ல முறையில்
وَلِلرِّجَالِ
இன்னும் ஆண்களுக்கு
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
دَرَجَةٌۗ
ஓர் உயர்வு
وَٱللَّهُ
அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Walmutallaqaatu yatarab basna bi anfusihinna salaasata qurooo'; wa laa yahillu lahunna ai yaktumna maa khalaqal laahu feee arhaaminhinna in kunna yu'minna billaahi wal yawmil aakhir; wa bu'oola tuhunna ahaqqu biraddihinna fee zaalika in araadooo islaahaa; wa lahunna mislul lazee 'araihinna bilma'roof; wa lirrijjaali 'alaihinna daraja; wallaahu 'Azeezun Hakeem

"தலாக்" கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று (மாத) விடாய்கள் வரும் வரையில் எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதி கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப் பையில் (சிசுவை) படைத்திருந்தால் அதனை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. தவிர ("ரஜயி"யான தலாக்குக் கூறப்பட்ட) பெண்களின் கணவர்கள் பின்னும் (சேர்ந்து வாழக்கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள கணவர்கள் மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர்பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவனும், நுண்ணறிவு உடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

ٱلطَّلَٰقُ
விவாகரத்து
مَرَّتَانِۖ
இருமுறை
فَإِمْسَاكٌۢ
தடுத்து வைத்தல்
بِمَعْرُوفٍ
நல்ல முறையில்
أَوْ
அல்லது
تَسْرِيحٌۢ
விட்டுவிடுதல்
بِإِحْسَٰنٍۗ
அழகிய முறையில்
وَلَا يَحِلُّ
ஆகுமானதல்ல
لَكُمْ
உங்களுக்கு
أَن تَأْخُذُوا۟
நீங்கள் எடுத்துக்கொள்வது
مِمَّآ
எவற்றிலிருந்து
ءَاتَيْتُمُوهُنَّ
அவர்களுக்கு கொடுத்தீர்கள்
شَيْـًٔا إِلَّآ
எதையும்/தவிர
أَن يَخَافَآ
இருவரும் அஞ்சுவது
أَلَّا يُقِيمَا
(இருவர்) நிலைநிறுத்த மாட்டார்கள் என
حُدُودَ
சட்டங்களை
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
فَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
أَلَّا يُقِيمَا
இருவரும் நிலைநிறுத்த மாட்டார்கள்
حُدُودَ
சட்டங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
عَلَيْهِمَا
அவ்விருவர் மீது
فِيمَا
எதில்
ٱفْتَدَتْ
விடுவித்தாள்
بِهِۦۗ
அதன் மூலம்
تِلْكَ
இவை
حُدُودُ
சட்டங்கள்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَلَا تَعْتَدُوهَاۚ
எனவே இவற்றை மீறாதீர்கள்
وَمَن
இன்னும் எவர்(கள்)
يَتَعَدَّ
மீறுகிறார்(கள்)
حُدُودَ
சட்டங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Attalaaqu marrataani fa imsaakum bima'roofin aw tasreehum bi ihsaan; wa laa yahillu lakum an taakhuzoo mimmaaa aataitumoohunna shai'an illaaa ai yakhaafaaa alla yuqeemaa hudoodallahi fa in khiftum allaa yuqeemaa budoodal laahi falaa junaaha 'Alaihimaa feemaf tadat bihee tilka hudoodul laahi falaa ta'tadoohaa; wa mai yata'adda hudoodal laahi fa ulaaa'ika humuzzaa limoon

(ரஜயியாகிய) இந்தத் தலாக்(கை) இருமுறைதான் (கூறலாம்). பின்னும் (தவணைக்குள்) முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக் கொள்ளலாம். அல்லது (அவர்கள் மீது யாதொரு குற்றமும் சுமத்தாமல்) நன்றியுடன் விட்டுவிடலாம். தவிர, நீங்கள் அவர்களுக்கு (வெகுமதியாகவோ, மஹராகவோ) கொடுத்தவைகளிலிருந்து யாதொன்றையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. (அன்றி இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முற்பட்டபோதிலும்) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புக்குள் நிலைத்திருக்க முடியாதென்று இருவருமே பயப்படும் சமயத்தில் (இதற்குப் பஞ்சாயத்தாக இருக்கும்) நீங்களும் அவ்வாறு மெய்யாக பயந்தால் அவள் (கணவனிடமிருந்து) பெற்றுக் கொண்டதிலிருந்து எதையும் (விவாகரத்து நிகழ) பிரதியாகக் கொடுப்பதிலும் (அவன் அதைப் பெற்றுக் கொள்வதிலும்) அவ்விருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். ஆதலால் நீங்கள் இவற்றை மீறாதீர்கள். எவரேனும் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறினால் நிச்சயமாக அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.

Tafseer

فَإِن طَلَّقَهَا
அடுத்து அவளை அவன் விவாகரத்து செய்தால்
فَلَا تَحِلُّ
ஆகுமாக மாட்டாள்
لَهُۥ
அவனுக்கு
مِنۢ بَعْدُ
(அதன்) பிறகு
حَتَّىٰ تَنكِحَ
அவள் மணம் புரியும் வரை
زَوْجًا
ஒரு கணவனை
غَيْرَهُۥۗ
அவனல்லாதவன்
فَإِن طَلَّقَهَا
அவன் அவளை விவாகரத்து செய்தால்
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
عَلَيْهِمَآ
அவ்விருவரின் மீது
أَن يَتَرَاجَعَآ
அவ்விருவரும் மீளுவது
إِن ظَنَّآ
அவ்விருவரும் எண்ணினால்
أَن يُقِيمَا
இருவரும் நிலை நாட்டுவார்கள்
حُدُودَ
சட்டங்களை
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
وَتِلْكَ
இன்னும் இவை
حُدُودُ
சட்டங்கள்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يُبَيِّنُهَا
அவற்றைவிவரிக்கிறான்
لِقَوْمٍ
மக்களுக்கு
يَعْلَمُونَ
அறிவார்கள்

Fa in tallaqahaa falaa tahillu lahoo mim ba'du hattaa tankiha zawjan ghairah; fa in tallaqahaa falaa junaaha 'alaihimaaa ai yataraaja'aaa in zannaaa ai yuqeemaa hudoodal laa; wa tilka hudoodul laahi yubaiyinuhaa liqawminy ya'lamoon

(இரண்டு தலாக்குச் சொல்லிய) பின்னர் (மூன்றாவதாகவும்) அவளை அவன் தலாக்குச் சொல்லிவிட்டால் அவனல்லாத (வேறு) கணவனை அவள் மணந்துகொள்ளும் வரையில் அவள் அவனுக்கு ஆகுமானவளல்ல. (ஆனால், அவனல்லாத வேறொருவன் அவளை திருமணம் செய்து) அவனும் அவளைத் தலாக்குக் கூறிவிட்டால், அதன்பின் (அவளும் முதல் கணவனும் ஆகிய) இருவரும் (சேர்ந்து) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பை நிலை நிறுத்திவிடலாம் என்று எண்ணினால் அவர்கள் இருவரும் (திரும்பவும் திருமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீண்டுகொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். அறிந்து கொள்ளும் மக்களுக்காக இவற்றை அவன் விவரிக்கின்றான்.

Tafseer