Amit takhazooo aalihatam minal ardi hum yunshiroon
பூமியில் உள்ளவற்றை இவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அவை (மரணித்தவர்களை) உயிர்ப்பிக்குமா?
Law kaana feehimaaa aalihatun illal laahu lafasadataa; fa-Subhaanal laahi Rabbil 'Arshi 'ammaa yasifoon
வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன்.
Laa yus'alu 'ammaa yaf'alu wa hum yus'aloon
அவன் செய்பவைகளைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன்.) எனினும், அவனோ அனைவரையும் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கக் கூடியவன்.
Amit takhazoo min doonihee aalihatan qul haatoo burhaanakum haaza zikru mam ma'iya wa zikru man qablee; bal aksaruhum laa ya'lamoonal haqqa fahum mu'ridoon
(நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளைத் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) "என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்னுள்ளவர்களின் வேதமும் இதோ இருக்கின்றன. (இவற்றிலிருந்து இதற்கு) உங்களுடைய அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்" என்று கூறுங்கள். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையை அறிந்துகொள்ள சக்தி அற்றவர்கள். ஆதலால் அவர்கள் (இவ்வேதத்தையும்) புறக்கணிக்கின்றனர்.
Wa maaa arsalnaa min qablika mir Rasoolin illaa nooheee ilaihi annahoo laaa ilaaha illaaa Ana fa'budoon
உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம் "நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவனில்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
Wa qaalut takhazar Rahmaanu waladan Subhaanah; bal 'ibaadum mkkramoon
(அவ்வாறிருந்தும்) இவர்கள் ரஹ்மான் (மலக்குகளை தனக்குப் பெண்) சந்ததியாக்கிக் கொண்டான் என்று கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். (மலக்குகள் அவனுடைய சந்ததிகளன்று, எனினும், அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள்.
Laa yasbiqoonahoo bil qawli wa hum bi amrihee ya'maloon
(அவன் சந்நிதியில்) இ(வ்வான)வர்கள் யாதொரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டு இருப்பார்கள்.
Ya'lamu maa baina aideehim wa maa khalfahum wa laa yashfa'oona illaa limanir tadaa wa hum min khash yatihee mushfiqoon
அவர்களுக்கு முன்னிருப்பவைகளையும், பின்னிருப்ப லிவைகளையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர் லிகளுக்கன்றி மற்றெவருக்கும் இவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள். அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்.
Wa mai yaqul minhum inneee ilaahum min doonihee fazaalika najzeehi Jahannam; kazaalika najziz zaalimeen
அவர்களில் எவரேனும் "அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் ஒரு வணக்கத்திற்குரிய இறைவன்தான்" என்று (அந்த மலக்குகள்) கூறினால், அவர்களுக்கும் நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அநியாயக்காரர்களுக்கு நாம் கூலி கொடுக்கும் அவ்வாறே (அவர்களுக்கும் கூலி) கொடுப்போம்.
Awalam yaral lazeena kafarooo annas samaawaati wal arda kaanataa ratqan faftaqnaahumaa wa ja'alnaa minal maaa'i kulla shai'in haiyin afalaa yu'minoon
(ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து (வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அந்த மழை) நீரைக் கொண்டு (உயிருள்ள) ஒவ்வொன்றையும் வாழ்ந்திருக்கச் செய்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்த்தேனும் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா?