Wa la ya'lamannal laahul lazeena aamanoo wa la ya'lamannal munaafiqeen
ஆகவே, இவர்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் எவர்கள் என்பதையும் அவன் நன்கறிவான்.
Wa qaalal lazaeena kafaroo lillazeena aamanut tabi'oo sabeelanaa walnahmil khataayaakum wa maa hum bihaamileena min khataa yaahum min shai'in innahum lakaaziboon
நிராகரிப்பவர்கள், நம்பிக்கையாளர்களை நோக்கி "நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றுங்கள். (அதனால் ஏதும் குற்றங் குறைகள் ஏற்பட்டால்) உங்களுடைய குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கின்றோம்" என்று கூறுகின்றனர். எனினும், உங்களுடைய குற்றங்களிலிருந்து எதனையுமே அவர்கள் சுமந்து கொள்ள மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
Wa la yahmilunna asqaa lahum wa asqaalam ma'a asqaalihim wa la yus'alunna Yawmal Qiyaamati 'ammaa kaanoo yaftaroon
ஆயினும், அவர்கள் தங்கள் பாவச்சுமைகளுடன் (மனிதர்களை வழி கெடுத்த) பாவச்சுமையையும் நிச்சயமாக சுமப்பார்கள். அன்றி, அவர்கள் இவ்வாறு பொய்யாகக் கற்பனை செய்து கூறிக்கொண்டிருந்ததைப் பற்றியும் நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் கேட்கப்படுவார்கள்.
Wa laqad arsalnaa Noohan ilaa qawmihee falabisa feehim alfa sanatin illaa khamseena 'aaman fa akhazahumut toofaanu wa hum zaalimoon
நூஹ் நபியை நம்முடைய தூதராக அவருடைய மக்களிடம் நாம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே இருந்தார். (இவ்வளவு காலமிருந்தும் அவரை அவருடைய மக்களில் சிலரைத் தவிர பெரும் பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்ததனால் வெள்ளப்பிரளயம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.
Fa anjainaahu wa as haabas safeenati wa ja'alnaahaaa Aayatal lil'aalameen
எனினும், அவரையும் அவருடைய கப்பலில் இருந்தவர்களையும் நாம் பாதுகாத்துக் கொண்டு இச்சம்பவத்தை உலகத்தாருக்கு நாம் ஒரு படிப்பினை ஆக்கினோம்.
Wa Ibraheema iz qaala liqawmihi' budul laaha wattaqoohu zaalikum khayrul lakum in kuntum ta'lamoon
இப்ராஹீமை (நம்முடைய தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்த சமயத்தில்) அவர் தன்னுடைய மக்களை நோக்கி "நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்கி அவனையே நீங்கள் அஞ்சி நடங்கள். (நீங்கள் சிந்தித்துப் பார்த்தால்) இதுவே உங்களுக்கு மிக்க நல்லதாகும்" என்பதை அறிந்து கொள்வீர்கள்.
Innamaa ta'ubdoona min doonil laahi awsaananw-wa takhluqoona ifkaa; innal lazeena ta'budoona min doonil laahi laa yamlikoona lakum rizqan fabtaghoo 'indal laahir rizqa fabtaghoo 'indal laahir rizqa wa'budoohu washkuroo lahooo ilaihi turja'oon
தவிர, அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கும் சிலைகளெல்லாம் நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டவைதாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் இவை உங்களுக்கு உணவளிக்க சிறிதும் சக்தியற்றவை. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே கோரி, அவ(ன் ஒருவ)னையே வணங்கி, அவனுக்கு நன்றி செலுத்தியும் வாருங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்" என்றும் கூறினார்.
Wa in tukazziboo faqad kazzaba umamum min qablikum wa maa'alar Rasooli illal balaaghul mubeen
(இப்ராஹீமே! மக்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "நீங்கள் (என்னைப்) பொய்யாக்கினால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னுள்ள மக்களும் (தங்களிடம் வந்த தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கி இருக்கின்றனர். அவர் நம்முடைய தூதை (மக்களுக்கு)ப் பகிரங்கமாக எடுத்துரைப்பதை தவிர அவர்(களை நிர்ப்பந்திப்பது அத்தூதர்) மீது கடமையில்லை.
Awa lam yaraw kaifa yubdi'ul laahul khalqa summa yu'eeduh; inna zaalika 'alal laahi yaseer
(ஒன்றுமில்லாதிருந்த) படைப்புகளை அல்லாஹ் எவ்வாறு ஆரம்பத்தில் வெளியாக்கினான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? (அவ்வாறே மரணித்த) பின்னரும் அவைகளை மீள வைப்பான். நிச்சயமாக இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!" (என்றும் கூறினார்).
Qul seeroo fil ardi fanzuroo kaifa baa al khalqa summal laahu yunshi''un nash atal Aakhirah; innal laaha 'alaa kulli shai'in Qadeer
(பின்னும் மனிதர்களை நோக்கிக் கூறும்படி இப்ராஹீமுக்கு கட்டளையிட்டோம்.) பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். ஆரம்பத்தில் படைப்புகளை எவ்வாறு உற்பத்தி செய்கிறான். (அவ்வாறே மரணித்த) பின்னரும் அல்லாஹ் (மறுமையில்) மறுமுறையும் உற்பத்தி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவன்.