Skip to main content

إِن تَجْتَنِبُوا۟
நீங்கள் விலகிக் கொண்டால்
كَبَآئِرَ
பெரும் பாவங்களை
مَا تُنْهَوْنَ
எது/ தடுக்கப்படுகிறீர்கள்
عَنْهُ
அதை விட்டு
نُكَفِّرْ
அகற்றி விடுவோம்
عَنكُمْ
உங்களை விட்டு
سَيِّـَٔاتِكُمْ
சிறு பாவங்களை/உங்கள்
وَنُدْخِلْكُم
இன்னும் நுழைப்போம்/உங்களை
مُّدْخَلًا
இடத்தில்
كَرِيمًا
கண்ணியமான

In tajtaniboo kabaaa'ira maa tunhawna 'anhu nukaffir 'ankum saiyiaatikum wa nudkhilkum mudkhalan kareemaa

உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதனை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம்.

Tafseer

وَلَا تَتَمَنَّوْا۟
ஏங்காதீர்கள்
مَا
எதை
فَضَّلَ
மேன்மையாக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِهِۦ
அதைக் கொண்டு
بَعْضَكُمْ
உங்களில் சிலரை
عَلَىٰ
விட
بَعْضٍۚ
சிலர்
لِّلرِّجَالِ
ஆண்களுக்கு
نَصِيبٌ
ஒரு பங்கு
مِّمَّا
எதிலிருந்து
ٱكْتَسَبُوا۟ۖ
சம்பாதித்தார்கள்
وَلِلنِّسَآءِ
இன்னும் பெண்களுக்கு
نَصِيبٌ
ஒரு பங்கு
مِّمَّا
எதி லிருந்து
ٱكْتَسَبْنَۚ
சம்பாதித்தார்கள்
وَسْـَٔلُوا۟
கேளுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
مِن
இருந்து
فَضْلِهِۦٓۗ
அவனின் அருள்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمًا
நன்கறிந்தவனாக

Wa laa tatamannaw maa faddalal laahu bihee ba'dakum 'alaa ba'd; lirrijaali naseebum mimak tasaboo wa linnisaaa'i naseebum mimmak tasabna; was'alullaaha min fadlih; innal laaha kaana bikulli shai'in 'Aleemaa

உங்களில் சிலரை சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியனவே. (அவ்வாறே) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்குரியனவே. ஆகவே, (ஆண் பெண் ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம்) அல்லாஹ்வுடைய அருளைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

وَلِكُلٍّ
ஒவ்வொருவருக்கும்
جَعَلْنَا
ஆக்கினோம்
مَوَٰلِىَ
வாரிசுகளை
مِمَّا تَرَكَ
எதில்/விட்டுச்சென்றார்
ٱلْوَٰلِدَانِ
தாய், தந்தை
وَٱلْأَقْرَبُونَۚ
இன்னும் நெருங்கிய உறவினர்கள்
وَٱلَّذِينَ
எவர்கள்
عَقَدَتْ
ஒப்பந்தம் செய்தன
أَيْمَٰنُكُمْ
உங்கள் சத்தியங்கள்
فَـَٔاتُوهُمْ
கொடுத்து விடுங்கள்/அவர்களுக்கு
نَصِيبَهُمْۚ
பங்கை/அவர்களின்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ عَلَىٰ
இருக்கிறான்/மீது
كُلِّ شَىْءٍ
எல்லாம்/பொருள்
شَهِيدًا
சாட்சியாளனாக

Wa likullin ja'alnaa ma waaliya mimmaa tarakal waalidaani wal aqraboon; wallazeena 'aqadat aimaanukum fa aatoohum naseebahum; innal laaha kaana 'alaa kulli shai'in Shaheedaa

தாய், தந்தை, உறவினர்கள் அல்லது நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் விட்டுச் செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் (விகிதப்படி அவர்களுடைய சொத்தை அடையக்கூடிய) வாரிசுகளை நாம் குறிப்பிட்டே இருக்கின்றோம். ஆகவே, அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடவும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்து கொள்ளக் கூடியவனாகவே இருக்கின்றான்.

Tafseer

ٱلرِّجَالُ
ஆண்கள்
قَوَّٰمُونَ
நிர்வகிப்பவர்கள்
عَلَى ٱلنِّسَآءِ
பெண்களை
بِمَا
எதன் காரணமாக
فَضَّلَ
மேன்மையாக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
بَعْضَهُمْ
அவர்களில் சிலரை
عَلَىٰ
விட
بَعْضٍ
சிலர்
وَبِمَآ
எதன் காரணமாக
أَنفَقُوا۟
செலவழித்தார்கள்
مِنْ
இருந்து
أَمْوَٰلِهِمْۚ
தங்கள் செல்வங்கள்
فَٱلصَّٰلِحَٰتُ
நல்லபெண்கள்
قَٰنِتَٰتٌ
பணிந்தவர்கள்
حَٰفِظَٰتٌ
பாதுகாப்பவர்கள்
لِّلْغَيْبِ
மறைவில்
بِمَا
எதைக் கொண்டு
حَفِظَ
பாதுகாத்தான்
ٱللَّهُۚ
அல்லாஹ்
وَٱلَّٰتِى
எவர்கள்
تَخَافُونَ
பயப்படுகிறீர்கள்
نُشُوزَهُنَّ
அவர்கள் மாறுபாடு செய்வதை
فَعِظُوهُنَّ
உபதேசியுங்கள் அவர்களுக்கு
وَٱهْجُرُوهُنَّ
அப்புறப்படுத்துங்கள் அவர்களை
فِى ٱلْمَضَاجِعِ
படுக்கைகளில்
وَٱضْرِبُوهُنَّۖ
இன்னும் அடியுங்கள் அவர்களை
فَإِنْ أَطَعْنَكُمْ
அவர்கள் கீழ்ப்படிந்தால்/ உங்களுக்கு
فَلَا تَبْغُوا۟
தேடாதீர்கள்
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
سَبِيلًاۗ
ஒரு வழியை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
عَلِيًّا
உயர்ந்தவனாக
كَبِيرًا
பெரியவனாக

Arrijaalu qawwaamoona 'alan nisaaa'i bimaa fad dalallaahu ba'dahum 'alaa ba'dinw wa bimaaa anfoqoo min amwaalihim; fassaalihaatu qaanitaatun haafizaatul lil ghaibi bimaa hafizal laah; wallaatee takhaafoona nushoo zahunna fa 'izoohunna wahjuroohunna fil madaaji'i wadriboohunna fa in ata'nakum falaa tabghoo 'alaihinna sabeelaa; innallaaha kaana 'Aliyyan Kabeeraa

(ஆண், பெண் இருபாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும் மிகப் பெரியவனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
شِقَاقَ
பிளவை
بَيْنِهِمَا
அந்த இருவருக்குள்
فَٱبْعَثُوا۟
ஏற்படுத்துங்கள்
حَكَمًا
ஒரு தீர்ப்பாளரை
مِّنْ
இருந்து
أَهْلِهِۦ
அவனின் உறவினர்
وَحَكَمًا
இன்னும் ஒரு தீர்ப்பாளரை
مِّنْ
இருந்து
أَهْلِهَآ
அவளின் உறவினர்
إِن يُرِيدَآ
இருவரும் நாடினால்
إِصْلَٰحًا
சீர்திருத்தத்தை
يُوَفِّقِ
ஒற்றுமை ஏற்படுத்துவான்
ٱللَّهُ
அல்லாஹ்
بَيْنَهُمَآۗ
அந்த இருவருக்கிடையில்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
عَلِيمًا
நன்கறிந்தவனாக
خَبِيرًا
ஆழ்ந்தறிந்தவனாக

Wa in khiftum shiqaaqa baini himaa fab'asoo haka mam min ahlihee wa hakamam min ahlihaa; iny-yureedaaa islaah ai-yuwaffiqil laahu bainahumaa; innal laaha kaana 'Aleeman Khabeeraa

(கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவன் உறவினர்களில் ஒருவரையும், அவள் உறவினர்களில் ஒருவரையும் நடுவர்களாக நீங்கள் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் கணவன் மனைவி இவ்விருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனும், கவனிப்பவனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَٱعْبُدُوا۟
வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَلَا تُشْرِكُوا۟
இன்னும் இணையாக்காதீர்கள்
بِهِۦ
அவனுக்கு
شَيْـًٔاۖ
எதையும்
وَبِٱلْوَٰلِدَيْنِ
இன்னும் தாய் தந்தைக்கு
إِحْسَٰنًا
நன்மை செய்யுங்கள்
وَبِذِى ٱلْقُرْبَىٰ
இன்னும் உறவினருக்கு
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அநாதைகள்
وَٱلْمَسَٰكِينِ
இன்னும் ஏழைகள்
وَٱلْجَارِ
இன்னும் அண்டைவீட்டார்
ذِى ٱلْقُرْبَىٰ
உறவினர்
وَٱلْجَارِ
இன்னும் அண்டைவீட்டார்
ٱلْجُنُبِ
அந்நியர்
وَٱلصَّاحِبِ
இன்னும் நண்பர்
بِٱلْجَنۢبِ
அருகில் இருக்கும்
وَٱبْنِ ٱلسَّبِيلِ
இன்னும் பயணி(கள்)
وَمَا مَلَكَتْ
இன்னும் எவர்/ சொந்தமாக்கின
أَيْمَٰنُكُمْۗ
உங்கள் வலக்கரங்கள்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
مَن كَانَ
எவன்/இருக்கிறான்
مُخْتَالًا
கர்வமுடையவனாக
فَخُورًا
பெருமையுடையவனாக

Wa'budul laaha wa laa tushrikoo bihee shai'anw wa bilwaalidaini ihsaananw wa bizil qurbaa walyataamaa walmasaakeeni waljaari zilqurbaa waljaaril junubi wassaahibi biljambi wabnis sabeeli wa maa malakat aimaanukum; innal laaha laa yuhibbu man kaana mukhtaalan fakhooraa

அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்.) எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يَبْخَلُونَ
கருமித்தனம் செய்கிறார்கள்
وَيَأْمُرُونَ
இன்னும் ஏவுகிறார்கள்
ٱلنَّاسَ
மக்களுக்கு
بِٱلْبُخْلِ
கருமித்தனத்தை
وَيَكْتُمُونَ
இன்னும் மறைக்கிறார்கள்
مَآ
எதை
ءَاتَىٰهُمُ
கொடுத்தான்/அவர்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
مِن فَضْلِهِۦۗ
தன் அருளிலிருந்து
وَأَعْتَدْنَا
தயார்படுத்தினோம்
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களுக்கு
عَذَابًا
வேதனையை
مُّهِينًا
இழிவான

Allazeena yabkhaloona wa yaamuroonan naasa bilbukhli wa yaktumoona maaa aataahu mullaahu min fadlih; wa a'tadnaa lilkaafireena 'azaabam muheenaa

எவர்கள் (தாங்கள்) கருமித்தனம் செய்வதுடன் (மற்ற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கின்றார்களோ, அத்தகைய நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
يُنفِقُونَ
தர்மம் செய்கிறார்கள்
أَمْوَٰلَهُمْ
தங்கள் செல்வங்களை
رِئَآءَ
காண்பிப்பதற்காக
ٱلنَّاسِ
மக்களுக்கு
وَلَا يُؤْمِنُونَ
இன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَلَا بِٱلْيَوْمِ
இன்னும் இறுதி நாளை
وَمَن
எவருக்கு
يَكُنِ
ஆகிவிட்டான்
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
لَهُۥ
அவனுக்கு
قَرِينًا
நண்பனாக
فَسَآءَ
கெட்டுவிட்டான்
قَرِينًا
நண்பனால்

Wallazeena yunfiqoona amwaalahum ri'aaa'an naasi wa laa yu'minoona billaahi wa laa bil Yawmil Aakhir; wa mai yakunish shaitaanu lahoo qareenan fasaaa'a qareenaa

எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருளைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளா திருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கின்றானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன்.

Tafseer

وَمَاذَا
என்னதான்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
لَوْ ءَامَنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொண்டால்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ
இன்னும் நாளை
ٱلْءَاخِرِ
இறுதி
وَأَنفَقُوا۟
இன்னும் தர்மம் செய்தனர்
مِمَّا
எதிலிருந்து
رَزَقَهُمُ
வழங்கினான்/அவர்களுக்கு
ٱللَّهُۚ
அல்லாஹ்
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِهِمْ
அவர்களை
عَلِيمًا
நன்கறிந்தவனாக

Wa maazaa 'alaihim law aamanoo billaahi wal Yawmil Aakhiri wa anfaqoo mimmaa razaqahumul laah; wa kaanallaahu bihim Aaleemaa

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் இவர்களுக்கு அளித்தவற்றையும் தானம் செய்து வந்தால் அதனால் இவர்களுக்கு என்னதான் நஷ்டமேற்பட்டு விடும்? அல்லாஹ் இவர்களை நன்கறிந்தே இருக்கின்றான்.

Tafseer

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يَظْلِمُ
அநியாயம் செய்ய மாட்டான்
مِثْقَالَ ذَرَّةٍۖ
ஓர் அணு அளவு
وَإِن تَكُ
இருந்தால்
حَسَنَةً
நன்மையாக
يُضَٰعِفْهَا
அதை பன்மடங்காக்குவான்
وَيُؤْتِ
இன்னும் கொடுப்பான்
مِن لَّدُنْهُ
தன்னிடமிருந்து
أَجْرًا
கூலியை
عَظِيمًا
மகத்தான

Innal laaha laa yazlimu misqaala zarratinw wa in taku hasanatany yudaa'ifhaa wa yu'ti mil ladunhu ajran 'azeemaa

நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதனை இரட்டிப்பாக்கித் தன் அருளால் பின்னும் அதற்கு மகத்தான கூலியைக் கொடுக்கின்றான்.

Tafseer