Wallazee nazzala minas samaaa'i maaa'am biqadarin fa anshamaa bihee baldatam maitaa' kazaalika tukhrajoon
அவன் தான் மேகத்திலிருந்து மழையைத் தனது திட்டப்படி இறக்கி வைக்கின்றான். (இவ்வாறு செய்கின்ற அல்லாஹ்வாகிய) நாம்தாம், பின்னர் அதனைக் கொண்டு (மழையை பொழியச் செய்து) வறண்டுபோன பூமியை உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் சமாதிகளிலிருந்து உயிர் கொடுத்து) வெளி யேற்றப்படுவீர்கள்.
Wallazee khalaqal azwaaja kullahaa wa ja'ala lakum minal fulki wal-an'aami maa tarkaboon
அவன்தான் சகலவற்றையும் (ஆணும் பெண்ணும் கலந்த) ஜோடி ஜோடியாக படைத்து, நீங்கள் ஏறிச் செல்லக்கூடிய கால் நடைகளையும் கப்பல்களையும் அமைத்தான்.
Litastawoo 'alaa zuhoorihee summa tazkuroo ni'mata Rabbikum izastawaitum 'alaihi wa taqooloo Subhaanal lazee sakhkhara lana haaza wa maa kunnaa lahoo muqrineen
ஆகவே, அவைகளின் முதுகுகளின் மீது நீங்கள் (ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.) திருப்தியாக அதன்மீது நீங்கள் அமர்ந்து கொண்டால், உங்கள் இறைவன் புரிந்த இவ்வருளை நினைத்து, இதற்காக நீங்கள் அவனை நினைவு கூர்ந்து "இதன் மீது (ஏற) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித் தந்தவன் மிக்க பரிசுத்தவான்" என்றும்,
Wa innaaa ilaa Rabbinaa lamunqaliboon
"நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோம்" என்றும் கூறுவீர்களாக!
Wa ja'aloo lahoo min 'ibaadihee juz'aa; innal insaana lakafoorum mubeen
(இணைவைத்து வணங்கும்) அவர்கள் இறைவனுடைய அடியார்க(ளில் உள்ள மலக்குக)ளை அவனுடைய (பெண்) சந்ததி என்று கூறுகின்றார்கள். நிச்சயமாக (இவ்வாறு கூறுகின்ற) மனிதன் பகிரங்கமாகவே பெரும் நன்றி கெட்டவனாவான்.
Amit takhaza mimmaa yakhluqu banaatinw wa asfaakum bilbaneen
(இறைவன்) தான் படைத்த (மலக்குகளாகிய) இவர்களை(த் தனக்குப்) பெண் மக்களாக எடுத்துக்கொண்டு (தன்னைவிட உங்களை கௌரவப்படுத்துவதற்காக) உங்களுக்கு ஆண் மக்களை அளித்தானோ?
Wa izaa bushshira ahaduhum bimaa daraba lir Rahmaani masalan zalla wajhuhoo muswaddanw wa hua kazeem
(அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்கு (அவனுடைய சந்ததி என்று) அவர்கள் கற்பனை செய்யும் (பெண்) மக்கள் அவர்களில் எவருக்கும் (பிறந்ததாக) நற்செய்தி கூறப்பட்டால், (பெண் மக்களை இழிவாகக் கருதும்) அவருக்கு ஏற்படும் கோபத்தால் அவருடைய முகம் கருத்து விடுகின்றது.
Awa mai yunashsha'u fil hilyati wa huwa fil khisaami ghairu mubeen
என்னே! தன் விவகாரத்தைத் தெளிவாக எடுத்துக் கூற சக்தியற்று ஆபரணத்திலும், (சிங்காரிப்பிலும்) வளர்ந்து வரும் (அவர்கள் இழிவாகக் கருதும் பெண்களையா அவனுக்குச் சந்ததி என்று கூறுகின்றனர்?)
Wa ja'alul malaaa'ikatal lazeena hum 'ibaadur Rahmaani inaasaa; a shahidoo khalaqhum; satuktabu shahaa datuhum wa yus'aloon
தவிர, ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளைப் பெண்கள் என்று கூறுகின்றனரே! (நாம்) அவர்களை படைக்கும் போது இவர்கள் (நம்மோடிருந்து) பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்கள் (பொய்யாகக் கற்பனை செய்து) கூறுகின்ற இவைகளெல்லாம் (நம்முடைய பதிவுப் புத்தகத்தில்) எழுதப்பட்டு (அதனைப் பற்றிக்) கேள்வி கேட்கப்படுவார்கள்.
Wa qaaloo law shaaa'ar Rahmaanu maa 'abadnaahum; maa lahum bizaalika min 'ilmin in hum illaa yakhrusoon
தவிர, ரஹ்மான் நாடியிருந்தால் அவனையன்றி நாம் (மலக்குகளை) வணங்கியே இருக்கமாட்டோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு வீண் தர்க்கவாதம் செய்பவர்களேயன்றி, (செயலைப் பற்றி) அவர்களுக்கு யாதொரு அறிவும் இல்லை.