Skip to main content

وَقَالُوا۟
அவர்கள் கூறுகின்றனர்
لَوْلَا نُزِّلَ
இறக்கப்பட வேண்டாமா!
هَٰذَا ٱلْقُرْءَانُ
இந்த குர்ஆன்
عَلَىٰ رَجُلٍ
மனிதர் மீது
مِّنَ ٱلْقَرْيَتَيْنِ
இந்த இரண்டு ஊர்களில் உள்ள
عَظِيمٍ
ஒரு பெரிய(வர்)

Wa qaaloo law laa nuzzila haazal Quraanu 'alaa rajulim minal qaryataini 'azeem

அன்றி (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள யாதொரு பெரிய மனிதன் மீது இந்தக் குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதனை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர்.

Tafseer

أَهُمْ يَقْسِمُونَ
அவர்கள் பங்கு வைக்கின்றனரா?
رَحْمَتَ
அருளை
رَبِّكَۚ
உமது இறைவனின்
نَحْنُ
நாம்தான்
قَسَمْنَا
பங்குவைத்தோம்.
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
مَّعِيشَتَهُمْ
அவர்களது வாழ்க்கையை
فِى ٱلْحَيَوٰةِ
இவ்வுலக வாழ்வில்
وَرَفَعْنَا
இன்னும் உயர்வாக்கினோம்
بَعْضَهُمْ
அவர்களில் சிலரை
فَوْقَ
மேலாக
بَعْضٍ
சிலருக்கு
دَرَجَٰتٍ
தகுதிகளால்
لِّيَتَّخِذَ
எடுத்துக் கொள்வதற்காக
بَعْضُهُم
அவர்களில் சிலர்
بَعْضًا
சிலரை
سُخْرِيًّاۗ
பணியாளராக
وَرَحْمَتُ
அருள்தான்
رَبِّكَ
உமது இறைவனின்
خَيْرٌ
மிகச் சிறந்ததாகும்
مِّمَّا يَجْمَعُونَ
அவர்கள் சேகரிப்பதைவிட

Ahum yaqsimoona rahmata Rabbik; Nahnu qasamnaa bainahum ma'eeshatahum fil hayaatid dunyaa wa rafa'naa ba'dahum fawqa ba'din darajaatil liyattakhiza ba'duhum ba'dan sukhriyyaa; wa rahmatu Rabbika khairum mimmaa yajma'oon

(நபியே!) உங்களின் இறைவனின் அருளைப் பங்கிடுபவர்கள் இவர்கள் தாமா? இவ்வுலகத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை அவர்களுக்கிடையில் நாமே பங்கிட்டு, அவர்களில் சிலருடைய பதவியை சிலரைவிட நாம்தான் உயர்த்தினோம். அவர்களில் சிலர், சிலரை (வேலைக்காரர்களாக) ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காக, (நபித்துவம் என்னும்) உங்களது இறைவனின் அருளோ, அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் பொருளைவிட மிக மேலானதாகும். (அதனை அவன் விரும்பிய தன் அடியாருக்குத்தான் அளிப்பான்.)

Tafseer

وَلَوْلَآ
இல்லையெனில்
أَن يَكُونَ
ஆகிவிடுவார்கள் என்று
ٱلنَّاسُ
மக்கள்
أُمَّةً
சமுதாயமாக
وَٰحِدَةً
ஒரே ஒரு
لَّجَعَلْنَا
ஆக்கியிருப்போம்
لِمَن يَكْفُرُ
நிராகரிப்பவர்களுக்கு
بِٱلرَّحْمَٰنِ
ரஹ்மானை
لِبُيُوتِهِمْ
அவர்களின் வீடுகளுக்கு
سُقُفًا
முகடுகளை(யும்)
مِّن فِضَّةٍ
வெள்ளியினால் ஆன
وَمَعَارِجَ
ஏணிகளையும்
عَلَيْهَا
அவற்றின் மீது
يَظْهَرُونَ
ஏறுவார்கள்

Wa law laaa any yakoonan naasu ummatanw waahidatal laja'alnaa limany yakfuru bir Rahmaani libu yootihim suqufam min fiddatinw wa ma'aarija 'alaihaa yazharoon

(இந்நிராகரிப்பவர்களின் செல்வ செழிப்பைக் கண்டு, ஆசை கொண்ட மற்ற) மனிதர்கள் அனைவருமே (அவர்களைப் போல் நிராகரிக்கும்) ஒரே வகுப்பினராக ஆகிவிடுவார்கள் என்று இல்லாதிருப்பின் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானை நிராகரிப்ப வர்களின் வீட்டு முகடுகளையும் அதன்மீது அவர்கள் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளையும் கூட நாம் வெள்ளியினால் ஆக்கி விடுவோம்.

Tafseer

وَلِبُيُوتِهِمْ
இன்னும் அவர்களின் வீடுகளுக்கு
أَبْوَٰبًا
கதவுகளையும்
وَسُرُرًا
கட்டில்களையும்
عَلَيْهَا
அவற்றின் மீது
يَتَّكِـُٔونَ
அவர்கள் சாய்ந்து படுப்பார்கள்

Wa libu yootihim abwaabanw wa sururan 'alaihaa yattaki'oon

அவர்களுடைய வீடுகளின் வாயில்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் கூட (வெள்ளியினால்) ஆக்கி இருப்போம்.

Tafseer

وَزُخْرُفًاۚ
இன்னும் தங்கத்தையும்
وَإِن كُلُّ
எல்லாம் இல்லை
ذَٰلِكَ
இவை
لَمَّا مَتَٰعُ
இன்பங்களே தவிர
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۚ
உலக வாழ்க்கையின்
وَٱلْءَاخِرَةُ
மறுமை
عِندَ رَبِّكَ
உமது இறைவனிடம்
لِلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு

Wa zukhrufaa; wa in kullu zaalika lammaa mataa'ul hayaatid dunyaa; wal aakhiratu 'inda Rabbika lilmuttaqeen

(வெள்ளி என்ன! இவைகளைத்) தங்கத்தாலேயே (அலங்கரித்தும் விடுவோம்.) ஏனென்றால், இவை அனைத்துமே இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (அழிந்துவிடக் கூடிய) அற்ப இன்பங்களே அன்றி வேறில்லை. உங்களது இறைவனிடம் இருக்கும் மறுமை(யின் நிலையான இன்ப வாழ்க்கையோ, மிக மேலானதும் நிலையானதுமாகும். அது) இறைவனுக்குப் பயந்து நடப்பவர்களுக்குத்தான் சொந்தமானது.

Tafseer

وَمَن يَعْشُ
யார் புறக்கணிப்பாரோ
عَن ذِكْرِ
நினைவு கூர்வதை
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனை
نُقَيِّضْ
நாம் சாட்டிவிடுவோம்
لَهُۥ
அவருக்கு
شَيْطَٰنًا
ஒரு ஷைத்தானை
فَهُوَ لَهُۥ
அவன் அவருக்கு
قَرِينٌ
நண்பனாக

Wa mai ya'shu 'an zikrir Rahmaani nuqaiyid lahoo Shaitaanan fahuwa lahoo qareen

எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக்கொள்கிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நண்பனாகச்) சாட்டிவிடுவோம். அவன் அவனுக்கு இணைபிரியாத தோழனாகி விடுகிறான்.

Tafseer

وَإِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
لَيَصُدُّونَهُمْ
அவர்களை தடுக்கின்றனர்
عَنِ ٱلسَّبِيلِ
பாதையிலிருந்து
وَيَحْسَبُونَ
இன்னும் எண்ணுகிறார்கள்
أَنَّهُم
நிச்சயமாக தாங்கள்
مُّهْتَدُونَ
நேர்வழி நடப்பவர்கள்தான்

Wa innahum la yasuddoo nahum 'anis sabeeli wa yahsaboona annahum muhtadoon

நிச்சயமாக (அந்த ஷைத்தான்கள்தாம்) அவர்களை நேரான பாதையில் இருந்து தடுத்து விடுகின்றனர். எனினும், அவர்களோ தாங்கள் நேரான பாதையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்.

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا
அவன் வரும் போது
جَآءَنَا
அவன் வரும் போது நம்மிடம்
قَالَ
கூறுவான்
يَٰلَيْتَ
இருக்க வேண்டுமே!
بَيْنِى
எனக்கு மத்தியிலும்
وَبَيْنَكَ
உனக்கு மத்தியிலும்
بُعْدَ
இடைப்பட்ட தூரம்
ٱلْمَشْرِقَيْنِ
கிழக்கிற்கும் மேற்கிற்கும்
فَبِئْسَ ٱلْقَرِينُ
அவன் மிகக் கெட்ட நண்பன்

Hattaaa izaa jaaa'anaa qaala yaa laita bainee wa bainaka bu'dal mashriqaini fabi'sal qareen

நம்மிடம் (வரும் வரையில்தான் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பார்கள்.) அவர்கள் (நம்மிடம்) வந்த பின்னரோ (அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி) "எனக்கும் உமக்கு மிடையில் கீழ் திசைக்கும், மேல் திசைக்கும் உள்ள தொலைதூரமாக இருந்திருக்க வேண்டாமா?" என்றும், "(எங்களை வழிகெடுத்த எங்களுடைய) இந்தத் தோழன் மிகப் பொல்லாதவன்" என்றும் கூறுவார்கள்.

Tafseer

وَلَن يَنفَعَكُمُ
உங்களுக்கு அறவே பலனளிக்காது
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
إِذ ظَّلَمْتُمْ
நீங்கள் அநியாயம் செய்த காரணத்தால்
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
فِى ٱلْعَذَابِ
வேதனையில்
مُشْتَرِكُونَ
இணைந்திருப்பது

Wa lai yanfa'akumul Yawma iz zalamtum annakum fil 'azaabi mushtarikoon

(அதற்கு அவர்களை நோக்கி) "நீங்கள் வரம்பு மீறி பாவம் செய்ததன் காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு (எதுவுமே) பயனளிக்காது. நிச்சயமாக நீங்கள் வேதனையை அனுபவிப்பதில் (அந்த ஷைத்தான்களுக்குக்) கூட்டானவர்கள்தாம்" (என்றும் கூறப்படும்).

Tafseer

أَفَأَنتَ تُسْمِعُ
நீர் செவி ஏற்க வைக்க முடியுமா?
ٱلصُّمَّ
அந்த செவிடர்களை
أَوْ
அல்லது
تَهْدِى
நீர் நேர்வழி நடத்திட முடியுமா?
ٱلْعُمْىَ
அந்த குருடர்களை
وَمَن كَانَ
இன்னும் இருப்பவர்களை
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
مُّبِينٍ
தெளிவான

Afa anta tusmi'us summa aw tahdil 'umya wa man kaana fee dalaalim mubeen

(நபியே!) நீங்கள் செவிடனைக் கேட்கும்படி செய்து விடுவீர்களா? அல்லது குருடனை (அல்லது மனமுரண்டாகவே) பகிரங்கமான வழிகேட்டிலிருப்பவனை நேரான வழியில் நீங்கள் செலுத்தி விடுவீர்களா?

Tafseer