Skip to main content

وَنَادَىٰ
அழைத்தான்
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
فِى قَوْمِهِۦ
தனது மக்களை
قَالَ
கூறினான்
يَٰقَوْمِ
என் மக்களே!
أَلَيْسَ
இல்லையா?
لِى
எனக்கு சொந்தமானது
مُلْكُ
ஆட்சி
مِصْرَ
எகிப்துடைய
وَهَٰذِهِ
இந்த
ٱلْأَنْهَٰرُ
ஆறுகள்
تَجْرِى
ஓடுகின்றன
مِن تَحْتِىٓۖ
எனக்கு முன்னால்
أَفَلَا تُبْصِرُونَ
நீங்கள் உற்று நோக்கவில்லையா?

Wa naadaa Fir'awnu fee qawmihee qaala yaa qawmi alaisa lee mulku Misra wa haazihil anhaaru tajree min tahtee afalaa tubsiroon

பின்னர், ஃபிர்அவ்ன் தன்னுடைய மக்களை நோக்கி, "என்னுடைய மக்களே! இந்த "மிஸ்ர்" தேசத்தின் ஆட்சி என்னுடையதல்லவா? (அதிலிருக்கும்) இந்த (நைல்) நதி(யின் கால்வாய்)கள் என் கட்டளைப்படி செல்வதை நீங்கள் பார்க்க வில்லையா?" என்று பறை சாற்றினான்.

Tafseer

أَمْ
?
أَنَا۠
நான்
خَيْرٌ
சிறந்தவன்
مِّنْ هَٰذَا
இவரை விட
ٱلَّذِى هُوَ
எவர்/அவர்/பலவீனமானவர்
وَلَا يَكَادُ
இன்னும் தெளிவாகப் பேசமாட்டார்

Am ana khairum min haazal lazee huwa maheenunw wa laa yuakaadu yubeen

"தவிர, நான் இந்த இழிவான மனிதரை விட சிறந்தவனாயிற்றே! தெளிவாகப் பேசவும் அவரால் முடிய வில்லையே!" (என்றும்,)

Tafseer

فَلَوْلَآ أُلْقِىَ
போடப்பட வேண்டாமா?
عَلَيْهِ
அவர் மீது
أَسْوِرَةٌ
காப்புகள்
مِّن ذَهَبٍ
தங்கத்தின்
أَوْ
அல்லது
جَآءَ
வர வேண்டாமா!
مَعَهُ
அவருடன்
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
مُقْتَرِنِينَ
சேர்ந்தவர்களாக

Falaw laa ulqiya 'alaihi aswiratum min zahabin awjaaa'a ma'ahul malaaa'ikatu muqtarineen

"(அவர் நம்மைவிட மேலாக இருந்தால், பரிசாக) அவருக்குப் பொற்காப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருடன் மலக்குகள் ஒன்று சேர்ந்து பரிவாரங்களாக வர வேண்டாமா?" (என்றும் கூறி,)

Tafseer

فَٱسْتَخَفَّ
அற்பமாகக் கருதினான்
قَوْمَهُۥ
தனது மக்களை
فَأَطَاعُوهُۚ
ஆக, அவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்தனர்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருந்தனர்
قَوْمًا
மக்களாக
فَٰسِقِينَ
பாவிகளான

Fastakhaffa qawmahoo fa ataa'ooh; innahum kaanoo qawman faasiqeen

அவன் தன்னுடைய மக்களை மயக்கி விட்டான். ஆதலால், அவர்களும் அவனுக்கு வழிப்பட்டு விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக பாவம் செய்யும் (சுபாவமுடைய) மக்களாக இருந்தனர்.

Tafseer

فَلَمَّآ ءَاسَفُونَا
அவர்கள் நமக்கு கோபமூட்டவே
ٱنتَقَمْنَا
நாம் பழிவாங்கினோம்
مِنْهُمْ
அவர்களிடம்
فَأَغْرَقْنَٰهُمْ
மூழ்கடித்தோம்/அவர்கள்
أَجْمَعِينَ
அனைவரையும்

Falammaaa aasafoonan taqamnaa minhum fa aghraqnaahum ajma'een

(இவ்வாறு அவர்கள்) நமக்குக் கோபமூட்டவே, அவர்களிடம் நாம் பழிவாங்கும் பொருட்டு, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்து விட்டோம்.

Tafseer

فَجَعَلْنَٰهُمْ
நாம் ஆக்கினோம்
سَلَفًا
முன்னோடிகளாக(வும்)
وَمَثَلًا
படிப்பினையாகவும்
لِّلْءَاخِرِينَ
மற்றவர்களுக்கு

Faja'alnaahum salafanw wa masalal lil aakhireen

இன்னும், அவர்களை (அழித்து) சென்றுபோன மக்களாக்கி (அவர்களுடைய சரித்திரத்தை) பிற்காலத்தில் உள்ளவர்களுக்கு உதாரணமாக்கினோம்.

Tafseer

وَلَمَّا ضُرِبَ
விவரிக்கப்பட்டபோது
ٱبْنُ
மகன்
مَرْيَمَ
மர்யமின்
مَثَلًا
ஓர் உதாரணமாக
إِذَا قَوْمُكَ
அப்போது உமது மக்கள்
مِنْهُ
அதனால்
يَصِدُّونَ
கூச்சல்போடுகின்றனர்

Wa lammaa duribab nu Maryama masalan izaa qawmu ka minhu yasidoon

(நபியே!) மர்யமுடைய மகனை உதாரணமாகக் கூறப்பட்ட சமயத்தில், அதைப்பற்றி உங்களுடைய மக்கள் (கொக்கரித்துக்) கைதட்டி, நகைக்க ஆரம்பித்து விட்டனர்.

Tafseer

وَقَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
ءَأَٰلِهَتُنَا
?/எங்கள் கடவுள்கள்
خَيْرٌ
சிறந்த(வர்களா)
أَمْ
அல்லது
هُوَۚ
அவர்
مَا ضَرَبُوهُ
அவரை உதாரணமாக அவர்கள் பேசவில்லை
لَكَ
உமக்கு
إِلَّا
தவிர
جَدَلًۢاۚ
தர்க்கம் செய்வதற்காகவே
بَلْ هُمْ
மாறாக/அவர்கள்
قَوْمٌ
மக்கள்
خَصِمُونَ
தர்க்கம் செய்கின்ற(வர்கள்)

Wa qaalooo 'a-aalihatunaa khairun am hoo; maa daraboohu laka illaa jadalaa; balhum qawmun khasimoon

"எங்களுடைய தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?" என்று கேட்கத் தலைப்பட்டனர். வீண் விதண்டாவாதத்திற் கன்றி உங்களுக்கு அவர்கள், அவரை உதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இவர்கள் வீண் தர்க்கம் செய்யும் மக்கள்தாம்.

Tafseer

إِنْ هُوَ
அவர் இல்லை
إِلَّا
தவிர
عَبْدٌ
ஓர் அடியாராகவே
أَنْعَمْنَا
அருள் புரிந்தோம்
عَلَيْهِ
அவர்மீது
وَجَعَلْنَٰهُ
அவரை ஆக்கினோம்
مَثَلًا
ஓர் அத்தாட்சியாக
لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களுக்கு

In huwa illaa 'abdun an'amnaa 'alaihi wa ja'alnaahu masalal li Baneee Israaa'eel

ஈஸாவோ, நம்முடைய அடிமையே தவிர, (அவர் கடவுளல்ல; நம்முடைய பிள்ளையுமல்ல; அவர் இவ்வாறு கூறவு மில்லை; இதனை மறுத்தே கூறியிருக்கின்றார்.) ஆயினும், அவர்மீது நாம் அருள்புரிந்து, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அவரை நாம் ஓர் உதாரணமாக்கினோம்.

Tafseer

وَلَوْ نَشَآءُ
நாம் நாடினால்
لَجَعَلْنَا
ஆக்கியிருப்போம்
مِنكُم
உங்களுக்குப் பதிலாக
مَّلَٰٓئِكَةً
வானவர்களை
فِى ٱلْأَرْضِ
இந்த பூமியில்
يَخْلُفُونَ
வழித்தோன்றி வருவார்கள்

Wa law nashaaa'u laja'alnaa minkum malaaa'ikatan fil ardi yakhlufoon

நாம் விரும்பினால் உங்களிலிருந்து மலக்குகளை படைத்து (உங்களை அழித்துப்) பூமியில் உங்களுக்குப் பதிலாக அவர்களை ஆக்கிவிடுவோம்.

Tafseer