Skip to main content

لَهُم
அவர்களுக்கு
مِّن جَهَنَّمَ
நரகத்தில்
مِهَادٌ
ஒரு விரிப்பு
وَمِن فَوْقِهِمْ
இன்னும் அவர்களுக்கு மேல்
غَوَاشٍۚ
போர்வைகள்
وَكَذَٰلِكَ
இவ்வாறே
نَجْزِى
கூலி கொடுப்போம்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு

Lahum min jahannama mihaadunw wa min fawqihim ghawaash; wa kazaalika najziz zaalimeen

நரகத்தில் அவர்களுக்கு (நெருப்பாலான) விரிப்புகளும் உண்டு. அவர்கள் மேல் போர்த்திக்கொள்வதற்கும் (நெருப்பாலான) போர்வைகள் உண்டு. அநியாயக்காரர்களை இவ்வாறே நாம் தண்டிப்போம்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
لَا نُكَلِّفُ
சிரமப்படுத்த மாட்டோம்
نَفْسًا
ஓர் ஆன்மாவை
إِلَّا
தவிர
وُسْعَهَآ
அதன் சக்திக்குத் தக்கவாறே
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلْجَنَّةِۖ
சொர்க்கவாசிகள்
هُمْ
அவர்கள்
فِيهَا
அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Wallazeena aamanoo wa 'amilus saalihaati la nukallifu nafsan illaa wus'ahaaa ulaaa'ika Ashaabul jannati hum feehaa khaalidoon

எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்களால் இயன்ற வரையில்) நற்காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களில் ஒருவரையும் அவரது சக்தியின் அளவுக்கதிகமாக நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. இத்தகையவர்கள்தான் சுவனவாசிகள். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.

Tafseer

وَنَزَعْنَا
நீக்கி விடுவோம்
مَا فِى
எதை/அவர்களுடைய நெஞ்சங்களில்
مِّنْ غِلٍّ
குரோதத்தை
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهِمُ
அவர்களுக்குக் கீழ்
ٱلْأَنْهَٰرُۖ
நதிகள்
وَقَالُوا۟
இன்னும் கூறுவார்கள்
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
ٱلَّذِى هَدَىٰنَا
எவன்/ நேர்வழிபடுத்தினான்/எங்களை/இதற்கு
وَمَا كُنَّا
நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்
لَوْلَآ أَنْ
நேர்வழி செலுத்தி இருக்கவில்லையென்றால் /எங்களை
ٱللَّهُۖ
அல்லாஹ்
لَقَدْ جَآءَتْ
திட்டமாக/வந்தா(ர்க)ள்
رُسُلُ
தூதர்கள்
رَبِّنَا
எங்கள் இறைவனின்
بِٱلْحَقِّۖ
உண்மையைக் கொண்டு
وَنُودُوٓا۟
இன்னும் அழைக்கப்படுவார்கள்
أَن تِلْكُمُ
இந்த சொர்க்கம்
أُورِثْتُمُوهَا
இதற்கு வாரிசாக்கப்பட்டீர்கள்
بِمَا كُنتُمْ
நீங்கள் செய்து கொண்டிருந்ததனால்

Wa naza'naa maa fee sudoorihim min ghillin tajree min tahtihimul anhaaru wa qaalul hamdu lillaahil lazee hadaanaa lihaaza wa maa kunna linahtadiya law laaa ann hadaanal laahu laqad jaaa'at Rusulu Rabbinaa bilhaqq; wa noodoo an tilkumul jannnatu ooristumoohaa bimaa kuntum ta'maloon

அன்றி, (இவ்வுலகில் ஒருவரைப் பற்றி மற்றொருவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய தோழர்களாகி விடுவார்கள்.) அவர்(கள் பாதங்)களுக்கு அருகில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி அவர்கள் "இந்த (சுவனபதியை அடையக்கூடிய) நேரான வழியில் எங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். இவ்வழியில் அல்லாஹ் எங்களை செலுத்தியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் (இதனை) அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் (சந்தேகமற) சத்திய (மார்க்க)த்தையே (எங்களுக்குக்) கொண்டு வந்(து அறிவித்)தார்கள்" என்று கூறுவார்கள். (அதற்குப் பிரதியாக) "பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்" என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.

Tafseer

وَنَادَىٰٓ
அழைப்பார்(கள்)
أَصْحَٰبُ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகள்
أَصْحَٰبَ ٱلنَّارِ
நரகவாசிகளை
أَن قَدْ
என்று/பெற்றுக் கொண்டோம்
مَا وَعَدَنَا
எதை/வாக்களித்தான்/எங்களுக்கு
رَبُّنَا
எங்கள் இறைவன்
حَقًّا
உண்மையில்
فَهَلْ وَجَدتُّم
பெற்றீர்களா?
مَّا وَعَدَ
எதை/வாக்களித்தான்
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
حَقًّاۖ
உண்மையில்
قَالُوا۟
கூறுவார்கள்
نَعَمْۚ
ஆம்!
فَأَذَّنَ
ஆகவே அறிவிப்பார்
مُؤَذِّنٌۢ
ஓர் அறிவிப்பாளர்
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
أَن لَّعْنَةُ
நிச்சயமாக சாபம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَى ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள் மீது

Wa naadaa Ashaabul jannati ashaaban Naari an qad wajadnaa maa wa'adannaa Rabbunaa haqqan fahal wajattum maa wa'ada Rabbukum haqqan qaaloo na'am; fa azzana mu'azzinum bainahum al la'natul laahi 'alaz zaalimeen

(அந்நாளில்) சுவனவாசிகள் நரகவாசிகளை நோக்கி "எங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொண்டோம்; நீங்களும் உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா?" என்று (சப்தமிட்டுக்) கேட்பார்கள். அதற்கவர்கள் "ஆம்! (பெற்றுக் கொண்டோம்)" என்று கூறுவார்கள். அது சமயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு முனாதி (அறிவிப்பாளர்) கூறுவார்: "நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக!"

Tafseer

ٱلَّذِينَ يَصُدُّونَ
எவர்கள்/தடுத்தனர்
عَن سَبِيلِ
பாதையை விட்டு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَيَبْغُونَهَا
இன்னும் அதில்தேடுகிறார்கள்
عِوَجًا
கோணலை
وَهُم
அவர்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
كَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்

Allazeena yasuddoona 'an sabeelil laahi wa yabghoo nahaa 'iwajanw wa hum bil Aakhirati kaafiroon

(ஏனென்றால்,) அவர்கள் அல்லாஹ்வின் பாதையைத் தடுத்து அதனைக் கோணலாக்க விரும்பினார்கள். அன்றி, அவர்கள் மறுமையையும் நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்.’

Tafseer

وَبَيْنَهُمَا
அவ்விருவருக்குமிடையில்
حِجَابٌۚ
ஒரு மதில்
وَعَلَى
மீது
ٱلْأَعْرَافِ
சிகரங்கள்
رِجَالٌ
(சில) மனிதர்கள்
يَعْرِفُونَ
அறிவார்கள்
كُلًّۢا
ஒவ்வொருவரையும்
بِسِيمَىٰهُمْۚ
அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு
وَنَادَوْا۟
இன்னும் அழைப்பார்கள்
أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகளை
أَن سَلَٰمٌ
என்று/ஈடேற்றம்
عَلَيْكُمْۚ
உங்கள் மீது
لَمْ يَدْخُلُوهَا
அவர்கள் நுழையவில்லை/அதில்
وَهُمْ يَطْمَعُونَ
அவர்கள் ஆசைப்படுவார்கள்

Wa bainahumaa hijaab; wa 'alal A'raafi rijaaluny ya'rifoona kullam biseemaahum; wa naadaw Ashaabal jannati an salaamun 'alaikum; lam yadkhuloohaa wa hum yatma'oon

(நரகவாசிகளும் சுவர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சுவர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சுவர்க்கவாசிகளை நோக்கி "(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாகுக!" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சுவர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

Tafseer

وَإِذَا صُرِفَتْ
திருப்பப்பட்டால்
أَبْصَٰرُهُمْ
பார்வைகள் இவர்களின்
تِلْقَآءَ
பக்கம்
أَصْحَٰبِ
வாசிகளின்
ٱلنَّارِ
நரக(ம்)
قَالُوا۟
கூறுவார்கள்
رَبَّنَا
எங்கள் இறைவா
لَا تَجْعَلْنَا
எங்களை ஆக்கிவிடாதே
مَعَ ٱلْقَوْمِ
மக்களுடன்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Wa izaa surifat absaaruhum tilqaaa'a Ashaabin Naari qaalo Rabbanaa laa taj'alnaa ma'al qawmiz zaalimneen

இவர்களின் பார்வை நரகவாசிகளின் பக்கம் திருப்பப் பட்டால் (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) "எங்கள் இறைவனே! அநியாயக்கார இந்த மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்துவிடாதே!" என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.

Tafseer

وَنَادَىٰٓ
அழைப்பார்(கள்)
أَصْحَٰبُ ٱلْأَعْرَافِ
சிகரவாசிகள்
رِجَالًا
சில மனிதர்களை
يَعْرِفُونَهُم
அறிவார்கள் அவர்களை
بِسِيمَىٰهُمْ
முகஅடையாளத்தைக் கொண்டு/அவர்களின்
قَالُوا۟
கூறுவார்கள்
مَآ أَغْنَىٰ
பலனளிக்கவில்லை
عَنكُمْ
உங்களுக்கு
جَمْعُكُمْ
உங்கள் சேமிப்பு
وَمَا كُنتُمْ
நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும்

Wa naadaaa Ashaabul A'raffi rijaalany ya'rifoonahum biseemaahum qaaloo maaa aghnaa 'ankum jam'ukum wa maa kuntum tastakbiroon

அந்த சிகரங்களில் உள்ளவர்கள் அவர்களின் (முக) அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக்குள்ளானவர்கள் என தாங்கள் அறிந்த சில மனிதர்களை நோக்கி) "நீங்கள் (உலகத்தில் சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவைகளும், நீங்கள் எவைகளைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவைகளும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!" என்றும்,

Tafseer

أَهَٰٓؤُلَآءِ
இவர்கள்தானா?
ٱلَّذِينَ أَقْسَمْتُمْ
எவர்கள்/சத்தியம் செய்தீர்கள்
لَا يَنَالُهُمُ
அடையமாட்டான்/ அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
بِرَحْمَةٍۚ
கருணையைக் கொண்டு
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
لَا خَوْفٌ
பயமில்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَلَآ أَنتُمْ
நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்

A haaa'ulaaa'il lazeena aqsamtum laa yanaaluhumul laahu birahma; udkhulul Jannata laa khawfun 'alaikum wa laaa antum tahzanoon

(சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து) "அல்லாஹ் அருள் புரியமாட்டான் என்று (நரகவாசிகளாகிய) நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள் (இதோ சுவனபதியில் இருக்கும்) இவர்கள் அல்லவா?" (என்றும் கூறுவார்கள். பிறகு, சுவனவாசிகளை நோக்கி) "நீங்கள் சுவனபதி சென்றுவிடுங்கள். உங்களுக்கு எவ்வித பயமுமில்லை. நீங்கள் துக்கிக்கவும் மாட்டீர்கள் (என்று இறைவன் கூறிவிட்டான்) என்றும்" கூறுவார்கள்.

Tafseer

وَنَادَىٰٓ
அழைப்பார்
أَصْحَٰبُ ٱلنَّارِ
நரகவாசிகள்
أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகளை
أَنْ أَفِيضُوا۟
ஊற்றுங்கள் என்று
عَلَيْنَا
எங்கள் மீது
مِنَ ٱلْمَآءِ
நீரிலிருந்து
أَوْ
அல்லது
مِمَّا
எதிலிருந்து
رَزَقَكُمُ
உணவளித்தான்/உங்களுக்கு
ٱللَّهُۚ
அல்லாஹ்
قَالُوٓا۟
கூறுவார்கள்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
حَرَّمَهُمَا
தடைசெய்தான்/அவ்விரண்டையும்
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்கள் மீது

Wa naadaaa Ashaabun Naari Ashaabal jannati an afeedoo 'alainaa minal maaa'i aw mimma razaqakumul laah; qaaloo innal laaha harrama humaa 'alal kaafireen

நரகவாசிகள் சுவர்க்கவாசிகளை நோக்கி "எங்கள் மீது சிறிது நீரைக் கொட்டுங்கள். அல்லது இறைவன் உங்களுக்கு (புசிக்க) அளித்திருப்பவற்றில் (ஒரு சிறிதேனும்) எங்களுக்குத் தாருங்கள்" என்று (கெஞ்சிக்) கேட்பார்கள். அதற்கு அவர்கள் "நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இவ்விரண்டையும் விலக்கி விட்டான்" என்று பதிலளிப்பார்கள்.

Tafseer